Sunday, December 10, 2006

3. திருமலை உறைந்திடும் கருமுகிலே!

பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்

வருக வருகவே திருமலை உறைந்திடும்
கருமுகிலே அருள் பொழிக பொழிகவே (வருக வருகவே)

மறையுடையோன் ஏறு விடையுடையோன் ஆறு
முகமுடையோன்
பணியும் திருவுடையோன் (வருக வருகவே)




மோகன முறுவல் முகம் கண்டு - பிறவி
சோகம் தவிர்க்கும் விழி அருளை உண்டு - உன்
தாள் மலர் தழுவிடத் தாகம் கொண்டு - நாளும்
தவித்திடும் எனக்கு உன் தரிசனம் தந்திட (வருக வருகவே)



பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
இராகம்: மோகனம்
தாளம்: ஆதி

20 comments :

Anonymous said...

பாடல்களுக்கு மிக்க நன்றிங்க.
"குறையொன்று மில்லை" என்ற
பாடலை இருந்தா போடுங்களேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அனானிமஸ் வாங்க!
இந்தப் பாடல் வரிகளைக் குமரன் முன்பே போட்டிருக்கார்!

இன்று மாலை வந்து பாத்தீங்கனா, இங்கும் இருக்கும்!
http://madhavipanthal.blogspot.com

ஏன் என்றால் டிச12 எம்.எஸ் அம்மாவின் நினைவு நாள்! ஒரு சிறப்புப் பதிவு காத்துள்ளது.
அதில் அவர் பதிவுக்குச் சுட்டியும் கொடுத்துள்ளேன்!

ஓகை said...

திறந்த அருளே!
பிறந்த பயனே!!
நிறைந்த மனிதம்,
சிறந்த சேவை!!!


நேயர் விருப்பம்:
ஏன் பள்ளி கொண்டீர் ஐயா....

ENNAR said...

நாம் இனி ஓகையை கவிஞர் ஓகை என்றே அழைக்கலாம் இம் என்றால் கவி அம் என்றால் கவியாக எழுதுகிறார் முதலில் அவருக்கு எனது பாராட்டுகள்.
மறையுடையவன் சரி (வேதம்)
திருவுடையோன் சரி (செல்வம்)
விடையுடையோன்--யார்? சிவனல்லவா!!
விளக்கமுடியுமா?

Anonymous said...

அம்மாவின் குரலில் எல்லாமே அமுதே!!
யோகன் பாரிஸ்

G.Ragavan said...

ஆகா. குமரன் தொடங்கி விட்டார். பாமாலைகளைக் கண்ணனுக்குப் பூமாலைகளாக் சூட்டி அழகு செய்யும் கலியுக ஆண்டாள்களுக்குக் கண்ணன் அருள் கிட்டாமல் போகாது. வாழ்க வளர்க.

குமரன், ஒரு வேண்டுகோள்...நீங்களே பாடல்களையும் புனைந்தால் இன்னும் மகிழ்வோம். பிறகு, ஆழ்வார்ப் பாசுரங்களும் திருப்பாவைப் பூக்களும் கூடக் கிடைக்குமானால் மெத்த மகிழ்ச்சி.

குமரன் (Kumaran) said...

ஓகை ஐயா. 'ஏன் பள்ளி கொண்டீர் ஐயா' பாடாலைத் தேடிப் பார்க்கிறோம். கிடைத்தால் எங்களில் ஒருவர் அந்தப் பாடலை இங்கே இடுகிறோம். தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

உண்மை என்னார் ஐயா. இனிமேல் கவிஞர் ஓகை என்றே அழைக்கலாம். :-)

மறையுடையோன் - வேதங்களை உடைய பிரமன்
ஏறு விடையுடையோன் - எருதில் ஏறும் சிவபெருமான்
ஆறு முகமுடையோன் - முருகப்பெருமான்

பணியும் திருவுடையோன் - இங்கே இதற்குப் பொருள் 'பணியும் பெருமையை உடையவன்'

குமரன் (Kumaran) said...

உண்மை யோகன் ஐயா. பல நாட்களாக இந்தப் பாடலை வலையில் இடவேண்டும் என்ற ஆவல் இருந்தது. இரவிசங்கர் இந்த வலைப்பூவைப் பற்றி சொன்னவுடன் அடியேனின் முதல் பாடலாக இந்தப் பாடலை இடலாம் என்று எண்ணி இட்டேன். தற்செயலாக அது சுப்புலக்ஷ்மி அம்மாவின் நினைவு நாளாகவும் அமைந்துவிட்டது. எல்லாம் குறையொன்றும் இல்லாத கோவிந்தன் அருள்.

குமரன் (Kumaran) said...

இராகவன்.

தமிழை ஆண்ட கோதை ஆண்டாளும் கலியுகத்தைச் சேர்ந்தவர் தான். :-)

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

பாடல்கள் புனைவதா? பார்க்கலாம். அது தானாக வரவேண்டும். அதற்கென்று உட்காரும் போது தானாகப் பொழிந்தால் நன்றாக இருக்கும். திருமலை உறைந்திடும் கருமுகில் தானே தன்னைப் பாடுவித்துக் கொள்வான்.

பெருமாளையும் அவன் அவதாரங்களையும் பொருளாகக் கொண்ட எந்தப் பாடலும் இந்த வலைப்பூவில் வரும். அதனால் நீங்கள் கேட்டவையும் வரும்.

VSK said...

சமய ஒற்றுமைக்குக் கட்டியம் கூறும் பொருத்தமான பாடல்!

மிகவும் நன்று!

VSK said...

சமய ஒற்றுமைக்குக் கட்டியம் கூறும் பொருத்தமான பாடல்!

மிகவும் நன்று!

குமரன் (Kumaran) said...

நன்கு சொன்னீர்கள் எஸ்.கே. :-)

இது வரை வேறு பொருள் கொண்டிருந்தேன். நீங்கள் இப்படி சொன்னவுடன் வேறு பொருள் தோன்றுகிறது. :-)

இதுவரை கொண்டிருந்த பொருள்:

பிரமனும் சிவபெருமானும் முருகனும் வணங்கும் பெருமையை உடையவன் திருமலையான்.

இப்போது எஸ்.கே.யால் தோன்றும் பொருள்:

பிரமனும் திருமலையானே. சிவபெருமானும் திருமலையானே. முருகனும் திருமலையானே. தன்னைப் பணியும் திருவாகிய திருமகளை உடையவனும் திருமலையானே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
இராகவன்.
தமிழை ஆண்ட கோதை ஆண்டாளும் கலியுகத்தைச் சேர்ந்தவர் தான். :-)//

ஜிரா, ஆண்டாளைக் கண்ணனோடு சேர்த்தே பார்த்து பார்த்து, அவள் துவாபர யுகமாகத் தெரிகின்றாள் போலும்!

வலைப்பூவில் கண்ணனிடம் மயங்குபவர் எல்லாம், ஆண்டாள்களாகத் தெரிகிறார்கள் போலும்!

அப்படியே ஆகட்டும் கோதை ராகவா!:-))

Sivabalan said...

எம்.எஸ். பாடலை கொடுத்தமைக்கு நன்றி

மதுமிதா said...

அருமையான பாடலுக்கு நன்றி.

திருமலையானைக் குறித்த ஒரு பாடல் இருக்கிறது. தேடி எடுக்க வேண்டும் என்னும் வேட்கையை இப்பாடல் அளித்துள்ளது.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவபாலன்.

குமரன் (Kumaran) said...

கூடிய விரைவில் தேடி எடுத்துக் கொடுங்கள் மதுமிதா அக்கா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
கூடிய விரைவில் தேடி எடுத்துக் கொடுங்கள் மதுமிதா அக்கா.//

குமரன்,
மதுமிதா அக்கா, கண்ணன் பாடலைத் தனி மடலில் அனுப்பி உள்ளார்கள்; பாடல் வரிகள் அருமை! அவர் எழுதிய கவிதை! வானொலியில் பாடப்பட்டதாம்!

மார்கழி 1 அன்று பதிவில் இட்டு விடுகிறேன்;

ஒலி வடிவம் இல்லை! அக்கா, அதுவும் கிடைக்குமா? :-)
தங்கள் மடலுக்கும் மாலை பதில் அனுப்புகிறேன்!

Unknown said...

ரொம்ப அருமையா இருக்கு. ரொம்பவும் அருமையான collections. உங்களுடைய உழைப்பு இதில் தெரிகிறது. அம்புஜம் கிருஷ்ணாவின் " சின்ன சின்ன பதம் வைத்து.." காணோமே...

அன்பன்,
பிரசன்ன வெங்கடேசன்

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP