Showing posts with label PB ஸ்ரீநிவாஸ். Show all posts
Showing posts with label PB ஸ்ரீநிவாஸ். Show all posts

Friday, March 23, 2007

40. சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ?

கவிஞர் கண்ணதாசன் பவுடர் போடுவாரா?
தெரியாது! :-)
ஆனால் ஒரு பாட்டில், ஒரு குழந்தைக்குப் பவுடர் போடுவது போல்
மெல்லிய சொற்களால் ஒத்தி ஒத்தி எடுக்கிறார்!
என்ன பாடல்? -
சின்னச்சின்னக் கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ?


(பதிவிலேயே கேட்க, மேலே Play button-ஐச் சொடுக்கவும்)

Real Player-இல் கேட்க
Cool Goose-இல் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள

Priya%20Baby%20Krishna

சின்னச்சின்னக் கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ
கண்ணிரண்டும் தாமரையோ

கன்னம்மின்னும் என்தன்கண்ணா

பால்மணக்கும் பருவத்திலே
உன்னைப்போல் நான்இருந்தேன்
பட்டாடைத் தொட்டிலிலே
சிட்டுபோல் படுத்திருந்தேன்
அந்நாளை நினைக்கையிலே
என்வயது மாறுதடா
உன்னுடன் ஆடிவர
உள்ளமே தாவுதடா
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)

ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே
விளைவது மழலையடா
ஈரேழு மொழிகளிலே
என்னமொழி பிள்ளைமொழி
கள்ளமற்ற வெள்ளைமொழி
தேவன் தந்த தேவமொழி
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)

இவ்வளவு நேரம் கொஞ்சிக் கொஞ்சி வந்த பாடல், ஒரு நொடியில்
நெஞ்சில் உள்ள சோகத்தையும் சேர்த்துச் சொல்வதாக மாறி விடுகிறது!
ஒரே பாடலில் இரு வேறு ரசனைகள்!
மழலை மகிழ்ச்சி, பின்பு தத்துவ நெகிழ்ச்சி!
அது எப்படி கண்ணதாசனுக்கு மட்டும் இந்த கைவந்த கலை? :-)


பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா
பொல்லாத கண்களடா
புன்னகையும் வேஷமடா
நன்றிகெட்ட மாந்தரடா
நானறிந்த பாடமடா
பிள்ளையாய் இருந்துவிட்டால்
இல்லைஒரு துன்பமடா
(கண்ணிரண்டும் தாமரையோ கன்னம்மின்னும் என்தன்கண்ணா
சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ)

28e48ff4-0a52-49b9-b4a7-1c3dc5100395




படம்: வாழ்க்கைப் படகு
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
குரல்: PB ஸ்ரீநிவாஸ்
(பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ்) - தகவலுக்கு நன்றி: ஜி.ரா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்

Wednesday, January 10, 2007

31. காற்று வெளியிடைக் கண்ணம்மா!

மகாகவியின் பாடலை, ஜி.ராமநாதனின் இசையில் அமுதமாகக் கேட்க, இங்கே சொடுக்கவும்!
பிபிசி வானொலியில் இந்தப் பாடலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது! இசைஞானி இளையராஜா பேசுகிறார், இங்கே. (Real Player)


Radha%20Krsna

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து


மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்


வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே

கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்

(காற்று)

மார்கழி 27 - கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா - இருபத்தேழாம் பாமாலை


பாடல்: காற்று வெளியிடைக் கண்ணம்மா
படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்
குரல்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை: ஜி.ராமநாதன்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP