Showing posts with label நா.கண்ணன். Show all posts
Showing posts with label நா.கண்ணன். Show all posts

Thursday, January 11, 2007

32. காத்திருப்பேன் கண்ணா! - இப்படிக்கு, கண்ணன்!

முனைவர் நா.கண்ணன், கண்ணன் பேரில் யாத்த கவிதை ஒன்று இன்றைய கண்ணன் பாட்டில்;
அதைக் கனடாவின் ஆர்.எஸ்.மணி அவர்கள், இசை அமைத்து அவரே பாடுகிறார்!
தனிமையின் அமைதியில் கேட்டுப் பாருங்கள், உள்ளம் உருகும்!
இதோ சுட்டி!


காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக


தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ....தெல்லாம்
தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ...தெல்லாம்


நீவருவாய் என்று
நானறிவேன் அதனால்
தினம்தினம் மணியோசை
கேட்டிட மனம்நாடி


வீற்றிருப்பேன் வாயில் முன்னே கண்ணா
வீற்றிருப்பேன் வாயில் முன்னே
காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

செம்பவழ மாலையிலே
வைத்த கரு முத்தினைபோல்
செம்மைநிற மாலைநேரம்
உன்னுருவம் தோன்றும்வரை


தாயினது கழுத்தினிலே
ஆடும்மணி யோசைகேட்க
கொட்டிலிலே துடித்திருக்கும்
சின்னஞ்சிறு கன்றினைப்போல்


காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக


மார்கழி 28 - கறவைகள் பின் சென்று - இருபத்தி எட்டாம் பாமாலை.

நாளை உத்தம புத்திரன் படத்தில் இருந்து ஒரு பாடல். என்ன பாடல் என்று யூகித்து வையுங்கள்!



மேற்கண்ட பாடல், மீனா அவர்களின் வாசக(ர்)சாலை-இல் இருந்து கண்ணன் பாட்டு வலைப்பூவிற்காக ஒரு மீள்பதிவு!

நா.கண்ணன் அவர்களின் வலைப்பூக்கள்:
*
ஆழ்வார்க்கடியான் - இதில் பாசுர மடல்கள் அருமையாகப் பயின்று வருகின்றன!
**
கவினுலகம்

நா.கண்ணன் அவர்களின் வலைத்தளம்:
இ-மொழி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP