கண்ணன் பாட்டில பதிவிட்டு ரொம்ப நாளாயிரிச்சி போல! முருகனருள் மோகத்திலேயே இருந்தா எப்படி? :) பொறந்த வீட்டையும் கொஞ்சம் பார்க்கணும்-ல்ல? :))இதோ...மிகவும் பிரபலமான பாட்டு, பிரபலமான பாடகர், பிரபலமான கவிஞர்! இது ஒரு வைகறைப் பாட்டு! விடியற்காலைப் பாட்டு! அதுவும் எம்.எஸ்.அம்மா குரலில் கேட்டால்...நள்ளிரவு கேட்டாலும் சிற்றஞ் சிறுகாலே தான்! எனக்கு மிகவும் பிடித்த எளிமையான பாட்டு!
மேற்சொன்ன த்வய மந்திரத்தை, அன்னமய்யா இசை வடிவில் எழுதி வச்சாப் போலவே இருக்கும் பாட்டு! பாடல்: ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண! குரல்: எம்.எஸ்.சுப்புலட்சுமி வரிகள்: அன்னமாச்சார்யர்
ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண! ஸ்ரீமன் நாராயண நீ ஸ்ரீபாதமே சரணம்!
தாமரை யாள் அவன், தாமரை முகம்-அகம்! தாமரை வேள், செந் தாமரைக் கண்ணா! தாமரை யில் உறை, கருடனின் மேல் நிறை தாமரை உந்தி, உந்தன் மலரடிகளே சரணம்! (திருநாரணன் திரு)
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் - இது பாரதியார் பாடல்-ன்னு பலருக்கும் தெரியும்! ஆனால், சினிமாவில், இதை இரண்டு பெரும் பாடகிகள் பாடியுள்ளனர் என்று தெரியுமா? = எம்.எல்.வசந்தகுமாரி (ஸ்ரீவித்யா அவர்களின் தாயார்) & எஸ்.ஜானகி!
இருவரும், அவர்களுக்கே உரித்தான குரல் வெளிச் சோலைகளில்! கேட்டீங்க-ன்னா உங்களுக்கே தெரியும்! ஒன்று கம்பீரக் குரல், ஒன்று கண்ண்ணன்ன்ன் என்னும் மென் குரல்! :) சரி, அது என்ன தங்கமே தங்கம்? யார் அது? பாரதியார் யாரைத் "தங்கமே தங்கம்"-ன்னு கூப்பிடுகிறார்? = கண்ணனையா? ராதையையா? ரெண்டு பேரையுமே இல்லை! யாரை-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
இந்தப் பாட்டை, கண்ணன் பாட்டுக் குழுவில் ஒருவரான ராதாமோகன் அவர்களுக்குச் சமர்பிக்கின்றேன்! :) அவரு தான் அடிக்கடி தங்கமே தங்கம்-ன்னு மின்னஞ்சல் போடுவாரு! நாங்க வெள்ளியே வெள்ளி-ன்னு பதில் போடுவோம்! சரி தானே இராகவ்? :)
ஜானகி பாடுவது: கண்ண்ண்ண்ண்ண்ண்ணன்-ன்னு குழையும் போது, குழலோசை மட்டும் கேட்கும்! அப்படியே தந்தி இழுக்க...வீணை இசையைக் கேட்கத் தவறாதீர்கள்! அதே போல், தங்கம்ம்ம்ம்-ன்னு முடிக்கும் போது, டொய்ங்க்-ன்னு ஒத்தை இழுப்பு வீணைத் தந்தியும் மறவாது கேளுங்கள்!
கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் எண்ணம் உரைத்துவிடில் தங்கமே தங்கம் - பின்னர் ஏதெனிலும் செய்வோமடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
ஆற்றங்கரை அதனில் முன்னம் ஒருநாள் - எனை அழைத்துத் தனி இடத்தில் பேசியதெல்லாம் தூற்றி நகர் முரசு சாற்றுவேன் என்று சொல்லி வருவாயடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
சோரம் இழைத்து இடையர் பெண்களுடனே - அவன் சூழ்ச்சித் திறமை பல காட்டுவ தெல்லாம் வீர மறக் குலத்து மாதரிடத்தே வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!
பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் - மிகப் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதி வந்திட்டான் - அதைப் பற்றி மறக்கு தில்லை பஞ்சை உள்ளமே.
நேர முழுதிலும் அப்பாவி தன்னையே - உள்ளம் நினைந்து மறுகுதடி தங்கமே தங்கம் தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால் பின்பு தெய்வம் இருக்குதடி தங்கமே தங்கம்! (கண்ணன் மனநிலையை..)
மரபிசையில்...நித்ய ஸ்ரீ பாடுவது:
இவை பாரதியாரின் "கண்ணன் என் காதலன்" பாடல்கள்!
"தங்கமே தங்கம்" யாரு-ன்னு கண்டு புடிச்சாச்சா? அவள் தான், தூது செல்லும் உற்ற தோழி! அவள் பேர் என்ன? தன் பாங்கியை (தோழியை) அனுப்பப் பார்க்கிறாள்! தோழியோ தயங்குகிறாள்! "தங்கமே தங்கம்" என்று அவளைக் கெஞ்சி, சென்று, பார்த்து வரச் சொல்கிறாள்! கண்ணனின் மனநிலை எப்படி இருக்கு என்று கண்டு வரச் சொல்கிறாள்! அய்யய்யோ, கண்ணனோட மனநிலையா? மனநிலை சரியில்லாதவன் ஆயிட்டானா என்ன கண்ணன்?
ஹா ஹா ஹா! அடிப் பாவி, நீ தான்டி மனநிலை சரியில்லாதவளா ஆயிட்ட! ஒரு நாளைக்கு ஒரு வேளை - மதிய வேளை உணவு மட்டும் தான்! உறக்கம் இல்லை! விழிப்பும் இல்லை! ஒப்புக்கு வாழ்ந்துகிட்டு இருக்க! கண்களிலோ தினப்படிக்கு வற்றாத குற்றாலம்! அவன் பழைய மடல்களை எல்லாம் தேடித் தேடி எடுத்துப் படிச்சிக்கிட்டு இருக்க!
இதுல உன் மனநிலையைத் தான் முதலில் செக் பண்ணனும்! நீ என்னடா-ன்னா கண்ணன் மனநிலையைக் கண்டு வரச் சொல்லுறியே! ஏய், இனி என்னடீ பண்ணப் போற நீயி?
இன்னிக்கி கண்ணன் பாட்டுக்குள்ள ஒரு "கண்ணன் பாட்டு"! பாரதியாரின் கண்ணன் பாட்டு நூலில் இருந்து சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா என்னும் சூப்பர் பாட்டு! * இதைச் சினிமாவிலும் பாடுவாங்க! கர்நாடக சங்கீதத்திலும் பாடுவாங்க! * தமிழ் இசையிலும் பாடுவாங்க! மெல்லிசைக் கச்சேரியிலும் பாடுவாங்க! அப்படி என்ன தான் இருக்கு இந்தப் பாட்டில்? பார்க்கலாமா?
"சரி...மொதல்ல இது கண்ணன் பாட்டு தானா?"
"அட என்ன கேள்வி இது? பாரதியாரின் கண்ணன் பாட்டு என்னும் தொகுப்பில் தானே இருக்கு! கண்ணன் பாட்டே தான்!"
"இல்லை! இது பராசக்தி பாட்டு!"
"அடிங்க! இதைக் கண்ணன் பாட்டில் தானே பாரதி பாடுறான்? * இதுக்கு முந்தன பாட்டு = கண்ணன் என் சத்குரு! * இதுக்கு அடுத்த பாட்டு = தீராத விளையாட்டுப் பிள்ளை! அப்புறம் எப்படி இது பராசக்தி பாட்டு ஆகும்? கொழப்பம் பண்றதே பொழைப்பாப் போச்சு கேஆரெஸ் ஒனக்கு! "
"ஹிஹி! ஆனால் பாரதியார், இதுக்கு முன்னுரை எழுதும் போது, "பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு"-ன்னு எழுதறாரே!"
"ஆகா! அப்படியா சேதி! இது எனக்குத் தெரியாதே! கண்ணன் பாட்டுத் தொகுப்பில் பராசக்தி எங்கே வந்தா? எப்படி வந்தா?"
"அப்படிக் கேளு! அதை விட்டுப்போட்டு, கொழப்பம் பண்றேன், கொய்யாப் பழம் பண்றேன்-ன்னு சொன்னா எப்படி?" :)
"சரி, சரி...கோச்சிக்காதே! சொல்லுடா"
"இது பாரதியார் எழுதினாப் போல, "பராசக்தியைக் குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு" தான்! எதுக்கு அவர் கண்ணன் பாட்டில் பராசக்தியைப் பாடணும்?"
கண்ணனுடன் பிறந்த குழந்தை பராசக்தி! * அவன் கிருஷ்ணன் என்றால், இவள் கிருஷ்ணை! * அவன் சியாமளன் என்றால், இவள் சியாமளை! * அவன் கருப்பன் என்றால், இவள் கருப்பி!
கண்ணன், ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஒருத்தி மகனாய் ஒளிந்து விளையாடினான்! ஆனால் அவள்? பெற்ற தாயான யசோதை, பார்க்கக் கூடக் கொடுத்து வைக்காமல், கை மாறிய குழந்தை!
பெண் குழந்தையாச்சே விட்டுருவான் என்று நினைத்தார்கள் அடியவர்கள்! ஆனால் கருத்துப் பிழை கொண்ட கம்சன் விடுவானா என்ன? மூர்க்கத்தனமான பிடிப்புக்கு ஆண் என்ன? பெண் என்ன? குழந்தையைக் கொல்ல உசரத் தூக்கினான்! உதை வாங்கினான்! கம்சன் கையில் சிக்காமல், வானில் பறந்தாள் மாயா! காத்யாயினி! காற்றில் தெய்வமாய்க் கலந்தாள்!
இன்னிக்கும் ஆயர்/கோனார் வீடுகளில் (எங்க வீட்டில் உட்பட), மணம் ஆகாமல் மறைந்து போகும் இளம் பெண்களுக்கு, ஆண்டு தோறும் மாட்டுப் பொங்கல் அன்று படையல் போடுவார்கள்! புதுப் புடவையை ஒரு பொண்ணு போல சுத்தி, அதற்கு காதோலை-கருக மணி மாட்டி, நகை போட்டு, அதன் மடியில் தேங்காய் பூ பழம் வச்சி, பூசை போடுவார்கள்!
பாரதியும் அதையே செய்கிறான்! பாரதியின் கண்ணன் பாட்டில் கண்ணக் குழந்தை ஓடி விளையாடுகிறது! ஓடி விளையாடு பாப்பா, ஒரு குழந்தையை வையாதே பாப்பா அல்லவா? எனவே இன்னொரு குழந்தையான, இரவில் இடம் மாறிய பராசக்திக் குழந்தையை, கண்ணனின் தங்கச்சியை, கண்ணனுடன் ஓடி விளையாடச் செய்கிறான்! சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா! செல்வக் களஞ்சியமே! என்னைக் கலி தீர்த்தே, உலகில் ஏற்றம் புரிய வந்தாய்!
சின்னஞ்சிறு கிளியான ஒரு குழந்தை பாடுவது...பேத்துவது :)) Dont Miss!
பிடிச்சமான ஒரு சுட்டியைக் கேட்டுக்கிட்டே படிங்க! பதிவின் கீழே இன்னும் பல சுட்டிகள், அசைபடங்கள் இருக்கு!
தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)
தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை (தாயே)
காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான் காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்
பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை மாலையிட்டவன் போல் வாயில் முட்டமிட்டாண்டி பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன் நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக ஆகுதடி (தாயே)
முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் ஒரு பந்தளவாகிலும் வெண்ணை தந்தால்தான் விடுவேன் என்று முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்
அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா! மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து சுந்தர முகத்தைக் கண்டு சிந்தை மயங்கும் நேரம் அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான் அடி! (தாயே)
இந்தப் பாடல் இன்னும் பல பத்திகள் (சரணங்கள்) கொண்டு உள்ளது; மொத்தம் ஆறு சரணங்கள் என்றாலும், மிகப் பிரபலமாகப் பாடப் படும் சரணங்களே மேலே கொடுக்கப்பட்டுள்ளன. முழுதும் அறிய இங்கே செல்லவும்.