34. கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை!
வீரமணியின் கணீர் குரலில், கவிஞர் கண்ணதாசன் பாடலைக் கேட்க இங்கு சொடுக்கவும்! மார்கழி மாதத்தில் இந்தப் பாடல் இல்லாமலா? அதுவும் சபரி கிரி வாசனின் விழாவின் போது, எல்லா ஐயப்ப பூஜைகளிலும் இந்தப் பாட்டை ஒலிக்க விடுவார்களே!
![]() | ![]() |
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்
(கோதையின் திருப்பாவை)
வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்
ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்
பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்
ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
(கோதையின் திருப்பாவை)
மார்கழி 30 - வங்கக் கடல் கடைந்த - முப்பதாம் பாமாலை
இத்துடன் மார்கழி மாதம் - தினம் ஒரு பாமாலைகள் - நிறைந்தன!
இனிய போகித் திருநாள் வாழ்த்துக்கள்!
மேளம், பிளாஸ்டிக் குடுகுடுப்பை எல்லாம் அடிச்சாச்சா? :-)
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ஒலி: K.வீரமணி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்


