என்னை விட்டுப் போன கண்ணன் வரக் காணேனே!
பொழுது மிகவாச்சுதே சகியே என்னை விட்டுப்
போன கண்ணன் வரக் காணேனே (பொழுது)
குழலோசை கேட்டு கூடிடும் மங்கையர்
விழியால் வலை வீசி அழைத்துச் சென்றனரோ (பொழுது)
புழுவென நான் இங்கு புலம்பித் துடிக்கையிலே
பூவையருடன் அங்கு பேசிச் சிரிக்கப் போமோ?
பைங்கிளி உனைக்கணம் பிரியேன் என்ற
பேசும் மறந்தானோ பேதையைத் துறந்தானோ? (பொழுது)
இயற்றியவர்: அம்புஜம் கிருஷ்ணா
இராகம்: ரேவதி
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ


