பெரியாழ்வார் பிறந்தநாள்: பல்லாண்டு பல்லாண்டு!
"பல்லாண்டு பல்லாண்டு" = இந்தப் பாட்டு தெரியுமா?
ஓ... ஆழ்வார் படத்தில், தல அஜீத் பாடுவாரே! அந்தச் சினிமாப் பாட்டு தானே?
அதே அதே!
* ஆனா பாட்டுக்குத் தலை அசைத்தது மட்டுமே = தல!
* மத்தபடி, பாட்டைப் பாடினது = தல-யை விடப் பெரிய தல!:)
பெரிய "தல" = பெரிய ஆழ்வார்
இயற்பெயர்: விட்டு சித்தன்; தெக்கத்தி வில்லிபுத்தூர்க்காரரு; simpleஆச் சொல்லணும்-ன்னா..
நம்ம தோழி ஆண்டாளோட (வளர்ப்பு) அப்பா! = தன் மகளைச் "சான்றோள்" எனக் கேட்ட தந்தை!
என் காதல் முருகனையும் பாடிய சில ஆழ்வார்களுள் ஒருவர் - வள்ளி கொழுநன்;
"டேய் கண்ணா, ஒழுங்காத் தேய்ச்சிக் குளி; இல்ல, உன் ஆளு ஒன்னையப் பாத்துச் சிரிப்பா"-ன்னு பயமுறுத்தியவரு:) = நப்பின்னை காணில் சிரிக்கும்
அவரோட பிறந்த நாள் தான் இன்னிக்கி - ஆனியில் சுவாதி (Jun 20)
ஆனி மாசம் சுவாதி = அவரு; ஆடி மாசம் சுவாதி = நானு:)
சரி... அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லீருவோம்; "ஒரு குறையும் இல்லாம, நல்லா இரு" -ன்னு ஆண்டவனையே வாழ்த்துனவரு ஆச்சே!
*Happy Birthday Periazhwar!
*இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியாழ்வாரே!
வாழ்த்த வயதில்லை; வணங்குகிறேன் -ன்னு... இன்னிக்கி அவனவன் வயசைக் கொறைச்சிக்கிறான்:)
ஆனா வாழ்த்த = "வயசு" தேவையில்ல; "மனசு" தான் தேவை!
அதான், ஆண்டவனை விட.. வயசில், கல்வியில், செல்வத்தில், அதிகாரத்தில்..
எல்லாத்திலுமே சின்னவரான ஆழ்வார்,
பெரியவரான இறைவனையே = "நல்லா இரு" -ன்னு வாழ்த்துறாரு!
ஆனா... இறைவனை விட ஒன்றே ஒன்றில் மட்டும் இவரு பெரியவரு; எதில்? = அன்பில்!
(... -பொங்கும்,
பரிவாலே வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்)
"பல்லாண்டு பல்லாண்டு" = இந்த 1000 yr song, பலருக்கும் தெரிஞ்சிருக்கும்! ஆனா, இதே பாட்டை..
*சினிமா,
*Dance
*தமிழ்ப் பண்ணிசை,
*கோயில் ஓதல்,
* SPB -ன்னு, பலப்பல குரலில் கேட்போம் இன்னிக்கி!
----------
* AP Nagarajan இயக்கிய திருமால் பெருமை படத்தில், சீர்காழியார்
இசை: கேவி. மகாதேவன்
குரல்: சீர்காழி கோவிந்தராஜன்
படம்: திருமால் பெருமை
வரிகள்: பெரியாழ்வார்
பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்!!
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்வி திருக்காப்பு!!
(உன் தோள் வலிமை = மல் (எ) வலிமை;
ஆனா உனக்கும்-எங்களுக்கும், காப்பு = தோள் அல்ல! திருவடிகளே!)
அடியோமோடும் நின்னோடும்
பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு! = (நானும் நீயும்)
வடிவாய் நின் வல மார்பினில்
வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு! = (அன்னை திருமகளும்)
வடிவார் சோதி வலத்து உறையும்
சுடர் ஆழியும் பல்லாண்டு! = (சக்கரமும்)
படை போர் புக்கு முழுங்கும் - அப்
பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே!! = (சங்கும்)
* ஆழ்வார் படத்தில்... (உன்னி கிருஷ்ணன் & செந்தில் தாஸ்; Music by Srikanth Deva)
வடைமாலை கோக்கும் போது, அஜீத் தங்கை நைசா ஒரு வடை உருவ,
சாமிக் குத்தம் -ன்னு அஜீத் அவளை ஓங்கித் தட்டிட்டு, Sideல தான் வாயில் லபக்கும் காட்சி - so cute Ajeeth!:)
* SPB குரலில் (album) கேட்க, இங்கே
* "அரையர் சேவை" வடிவில் - அரையர் ஸ்ரீராம பாரதி & துணைவியார்
* கோயிலில் வேதம் ஓதும் "தொனியில்"... தமிழ் ஓதல்
* பல்லாயிரத்தாண்டு = x1,000
* பல கோடி = x10,000,000
* நூறாயிரம் = 100,000
சுவைக் குறிப்பு (Tid bits):
1. தமிழில், "லட்சம்" (இலட்சம்) என்ற சொல் இல்லை; நூறாயிரம் என்பதே சரி
2. திவ்ய பிரபந்தம் என்ற பெயர் பின்னாளில் வந்தது; ஆழ்வார்கள் யாரும் அந்தப் பெயரை வைக்கவில்லை;
திவ்ய பிரபந்தம் = "அருளிச் செயல்" என்பதே தூய தமிழ்ப் பெயர்;
3. காலத்தால் மூத்த முதலாழ்வார் (பொய்கை ஆழ்வார்), "உலகம்" -ன்னு வச்சி தொடங்குன பாட்டு தான், முதல் பாசுரம் (வையம் தகளியா வார்கடலே) !
ஆனா, எல்லாப் பாசுரங்களையும் பின்னாளில் வரிசைப்படுத்தும் போது, "பல்லாண்டு" -ன்னு மங்களகரமா வரிசைப்படுத்தியதால்...
பெரியாழ்வாரின் இந்தக் கவிதையே, திவ்யப் பிரபந்தத்தில், முதல் பாட்டாக அமைந்து விடுகிறது!
(எப்படி வேதத்துக்கு = "ஓம்" என்பது துவக்கமோ,
தமிழ் வேதத்துக்குப் = "பல்லாண்டு" என்பது துவக்கம்!
வேதத்துக்கு ஓமென்னுமாப் போலே, உள்ளதுக்கெல்லாம் சுருக்காய். தான் மங்கலம் ஆதலால்..ன்னு அருளிச் செயல் ஈடு!)
After a year looong gap, writing in Kannan Songs;
TMS triggered it; Dank u புல்லாங்குழல் குடுத்த TMS குரலே!

