10. கோபியர் கொஞ்சும் ரமணா!
இப்பதிவு நம் ஐயா ஞானவெட்டியான் அவர்களின் சார்பாக!
மேலும் சில அழகான பாடல் ஒலி (ஆடியோ), அனுப்பி உள்ளார்; ஒவ்வொன்றாகப் பதிவில் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
இன்று, "கோபியர் கொஞ்சும் ரமணா"
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் கண்ணதாசன் எழுதி, TMS அவர்கள் பாடியது, K.V. மகாதேவன் இசையில்
படம்: திருமால் பெருமை
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
(கோபியர் கொஞ்சும் ரமணா)
மாபாரதத்தின் கண்ணா
மாயக்கலையின் மன்னா
மாதவா கார்மேக வண்ணா - மதுசூதனா!
(கோபியர் கொஞ்சும் ரமணா)
தாயின் கருணை உள்ளம்
தந்தையின் அன்பு நெஞ்சம்
தந்தவன் நீயே முகுந்தா
ஸ்ரீ வைகுந்தா
(கோபியர் கொஞ்சும் ரமணா)

மார்கழி 6 - புள்ளும் சிலம்பின காண் - ஆறாம் பாமாலை
பாடியவர்: டி.எம்.எஸ்
எழுதியவர்: கண்ணதாசன்
படம்: திருமால் பெருமை
11 comments :
கோபியர் கொஞ்சும் ரமணா
கோபால கிருஷ்ணா
அன்பர்களின் நாயகனே
அரவணைக்க வா,வா!
SP.VR. சுப்பையா
அருமையான பாடல்..நன்றிங்கண்ணா....
//krishna mukuntha muraare
Jaya Krishna mukuntha murare.
karuna saagara
kamal naayaka
kanakaambarathaari
gopaalaaa
kanakambarathaari//
Sorry Ravi to post comment in
english.
அன்பு இரவி,
மிக்க நன்றி.
கள்வனின் படத்தைத் திருடிக்கொண்டேன்.
நன்றி சுப்பையா சார்!
மெளலி சார், நன்றி ஞானவெட்டியான் ஐயாவுக்குத் தான்!
//வல்லிசிம்ஹன் said...
//krishna mukuntha muraare//
அடுத்த பாடலுக்கு ஐடியா கொடுத்துட்டீங்க வல்லியம்மா:-)
//ஞானவெட்டியான் said...
அன்பு இரவி,
மிக்க நன்றி.//
நாங்க தான் ஐயா சொல்லணும் உங்களுக்கு!
//கள்வனின் படத்தைத் திருடிக்கொண்டேன்//
பாட்டும் நீரே! படமும் நுமதே!!
அழகான பாடல்.
நன்றிகள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல். அடிக்கடி கேட்டு ரசிக்கும் பக்திப் பாடல்களில் இதுவும் ஒன்று. மிகச் சிறப்பு. கேட்க மட்டுமல்ல. பார்க்கவுந்தான். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே அருமையாக இருக்கும்.
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்
பறவைகள் எல்லாம் ஒலி எழுப்பத் தொடங்கிவிட்டன பார். கருடனின் தலைவனான பெருமாளின் கோயிலில்
வெண்ணிற சங்கின் பெரிம் ஓசை கேட்கவில்லையா?
சிறு பெண்ணே எழுந்திடுவாய். பேயின் முலைப்பாலை உண்டு
கள்ளமாக வந்த சகடத்தை அது நொறுங்கிப் போகும்படி காலால் உதைத்து
பாற்கடலில் பாம்பணை மேல் துயில் கொண்ட உலகங்களுக்கெல்லாம் விதை போன்றவனை
உள்ளத்தில் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெதுவாக எழுந்து ஹரி ஹரி என்று சொல்லும் பெரும் ஒலி
உள்ளம் புகுந்து குளிர்விக்கிறது.