Showing posts with label வித்யாசாகர். Show all posts
Showing posts with label வித்யாசாகர். Show all posts

Sunday, December 30, 2007

79. சிநேகிதியே(லேடீஸ் ஒன்லி): ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ?

ஹீரோவே இல்லாம ஒரு படம் தமிழ் சினிமாவில் வந்திருக்கா?
ஹீரோயின் இல்லாமத் தான் படம் வரக் கூடாது!
ஹீரோ இருந்தா என்ன, இல்லாட்டி என்ன-ன்னு யாருப்பா அங்கன சவுண்ட் வுடறது? :-)
எதுவா இருந்தாலும் நம்ம கானா பிரபா அண்ணாச்சி கிட்ட போயி கேளுங்க! ஏன்னா அவரு தான் இந்த லேடீஸ் ஒன்லி பாட்டைப் போடணும் ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டாரு! :-)

Y2K போது, நம்ம சோதிகா அக்கா நடிச்சி ஒரு படம் வந்திச்சி!
சிநேகிதியே-ன்னு படம் பேரு!
அவங்க கூட இஷிதா, ஷப்ரானி முகர்ஜி, தபு-ன்னு ஒரே பொண்ணுங்க கூட்டம் தான் படம் ஃபுல்லா!
இயக்குனர்: பிரியதர்ஷன் (அதாங்க காலாபாணி, கோபுர வாசலிலே எல்லாம் பண்ணாரே! அவரே தான்! மலையாள எழுத்தாளர்-இயக்குனர்)

படத்துல சோதிகா அக்கா, அவிங்க சிநேகிதி ஷப்ரானியைக் காப்பாத்த ஒரு கப்சா விடுவாங்க! ஒரு லண்டன் பையன் ஷப்ரானியைக் காதலிக்கிறதா. ஆனா அது நெசமாலுமே நெசம் ஆகிடும்! வலைக்குள் சிக்கிய இதயம் கணக்கா, ஒரு பையன் மாட்டிக்குவான்!

ஓட்டலுக்கு பொண்ணு பாக்க வந்த பையன் கொலை செய்யப்படுவான்!
பழி நம்ம சோதிகா மேல! தபு, ACP போலீஸ் ட்ரெஸ்ஸூல வந்து விஜாரணையெல்லாம் தூள் கெளப்புவாங்க!
பொண்ணுங்க எஸ்கேப்புக்கு ஓட, போலீஸ் துரத்த, கடைசீல பாத்தாக்கா...ACP தபு தான் கொலைகாரக் கட்டழகி! :-)

இது இந்தில வேறு, Friendshipன்னு டப் பண்ணி வந்துச்சு!
ஆனா ரெண்டுத்தலேயும் பெருசா ஓடினா மாதிரி தெரியலை! ஹீரோ, பஞ்ச டயலாக் எல்லாம் இல்லாம, வெறும் நாயகிகளை மட்டுமே வெச்சு ஓட்ட முடியுமா-ன்னு கேக்குறீங்களா? அது என்னமோ சரி தான்!:-)
படத்துலயும் ஏகப்பட்ட ஓட்டைகள்! பிரியதர்ஷன் படமா இது என்று கேட்கும்படி ஆனது!

ஆனா சும்மா ஜாலி டைம்-பாசுக்கு ஓக்கே தான்!
அதெல்லாம் கிடக்கட்டும்...இப்போ எதுக்கு கண்ணன் பாட்டுல சோதிகாவுக்கு இம்புட்டு பில்டப்பு-ன்னு தானே பாக்கறீங்க? வெயிட்டீஸ்!



படத்துல ஒரு சூப்பர் கண்ணன்-ராதை பாட்டு! என்னமா ஒரு பீட்டு!
ஒரு பஞ்சாபி பாங்க்ரா போல் துவங்கும்!
ஆனா நம்ம மரபிசை போலத் தான் பாடல் வரிகள் ஒலிக்கும்! Song to Dance என்பார்களே! அதான் இது!
சும்மா, அத்தனை இசைக்கருவியும் இந்தப் பாட்டுல கொட்டி இருக்காங்க!
புல்லாங்குழல், ட்ரம்ஸ், தபேலா, Bansuri Flute, ஜலதரங்கம் இன்னும் என்னென்னமோ...தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா!

ஒரு Opera இசை மாதிரி, நடுவுல ஒரு பிட்டு வந்து வந்து போகும்!
Bass Guitar, Violin, Piano, Long Flute, Xylophone...ன்னு மேற்கத்தி வாத்தியங்களும் பிச்சி உதறும்! நீங்களே கேளுங்க! உங்களுக்கு மிகவும் பிடித்துப் போகும்!

நேயர் விருப்பம்: கானா பிரபா அண்ணாச்சி, முனைவர் நா.கண்ணன் ஐயா



பாடலை இங்கே கேட்கவும்! இல்லையென்றால் கீழே தரவிறக்கம் செய்தும் கொள்ளலாம்!

Tamilmp3world.Com ...

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ?
கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க!
கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க!


கொள்ளை நிலவடிக்கும் - வெள்ளை ராத்திரியில் - கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டிலொரு - கானம் கசிந்தவுடன் - மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்தவழி - ஆடை பறந்ததையும் - பாவை மறந்து தொலைத்தாள்
நெஞ்சை மூடிக்கொள்ள - ஆடை தேவையென்று - நிலவின் ஒளியை எடுத்தாள்.


நெஞ்சின் ஓசை ஒடுங்கி விட்டாள், நிழலைக் கண்டு நடுங்கி விட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள், தன்னைத் தொலைத்து மயங்கி விட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில், நிழலையும் தொடவில்லை - எங்கே? எங்கே?? சொல்! சொல்!!
கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க
கண் ரெண்டும் தந்தியடிக்க, கண்ணா வா கண்டுபிடிக்க
(ராதை மனதில் ராதை மனதில்)


கண்ணன் ஊதும் குழல் - காற்றில் தூண்டி விட்டுக் - காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் - மறைந்து கொள்ளுவது - மாயக் கண்ணன் வழக்கம்
காடு இருண்டு விட - கண்கள் சிவந்து விட - காதல் ராதை அலைந்தாள்
அவனைத் தேடி அவள் - தன்னைத் தொலைத்துவிட்டு - ஆசை நோயில் விழுந்தாள்

உதடு துடிக்கும் பேச்சு இல்லை, உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை, போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால், பேதை ராதை ஜீவன் கொள்வாள் - கண்ணா எங்கே? வா வா!
கண்ணீரில் உயிர் துடிக்க, கண்ணா வா உயிர் கொடுக்க!
கண்ணீரில் உயிர் துடிக்க, கண்ணா வா உயிர் கொடுக்க!

(ராதை மனதில் ராதை மனதில்)


கன்னம் தீண்டியதும் - கண்ணன் என்று அந்தக் - கன்னி கண்ணை விழித்தாள்
கன்னம் தீண்டியதும் - கண்ணன் இல்லை வெறும் - காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக் கொண்டு - கண்ணன் பேரைச் சொல்லிக் - கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட - கண்ணின் நீர்த்துளியை - எங்கு கண்டு பிடிப்பாள்?


விழியின் சிறகை வாங்கிக் கொண்டு, கிழக்கை நோக்கிச் சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக் கொண்டு, கூவிக் கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கரையும் முன், உடல் மண்ணில் சரியும் முன், கண்ணா கண்ணா நீ வா!
கண்ணீரில் உயிர் துடிக்க, கண்ணா வா உயிர் கொடுக்க!


(பாடலின் இறுதியில் Opera போல் இசையைத் தவறாது கேளுங்க! நம்ம வித்யாசாகரா இப்படி? கலக்கீட்டீங்க வித்யா!)

குரல்: சித்ரா, சங்கீதா சஜீத், சுஜாதா
இசை: வித்யாசாகர்
வரிகள்: வைரமுத்து
படம்: சிநேகிதியே

நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
Wish you a very Happy New Year, 2008!
புது மணத் தம்பதிகளுக்கு கண்ணன்-ராதை சார்பாக, Happy Thala New Year :-)

Friday, June 22, 2007

57. "தல" அஜீத் படத்தில் "ரண்டக்க" பாடும் கண்ணன் பாட்டு!

"தல" அஜீத்குமார், லைலா நடித்து வந்த படம் பரமசிவன்!
பி.வாசு நம்ம தல-ய இயக்குகிறார்!

கல்யாணி மேனன் - இவங்க ஏற்கனவே மார்னிங் ராகா படத்துல பிரபலமாகி இருந்தாங்க! அலை பாயுதே பாட்டில் அலை பாயுதே-ன்னு இவங்களும் பாடுவாங்க!
சைந்தவி-இவங்க நான் கேள்விப்பட்ட வரைக்கும் +2 மாணவி...
இதுக்கு மேல விவரமானவங்க வந்து சொல்லுங்கப்பூ!
இவங்க ரண்டக்க ரண்டக்க பாட்டின் பிரபலம்!


இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து பாடும் பாட்டு!
ஒரு கண்ணன் பாட்டு...
சின்னப் பாட்டு தான் என்றாலும் சிறப்பான பாட்டு...உங்களுக்கும் பிடிக்கும், கேட்டுப் பாருங்க!

மலைநாடான் ஐயாவுக்குப் பிடித்தமான பாடல் என்று நேற்று பேசும் போது சொன்னார்!
மாயன் கண்ணன் முல்லை நாட்டின் தெய்வம்.
முல்லைத் திணை வைத்த பதிவருக்கு, இதோ கண்ணன் பாட்டிலே நேயர் விருப்பம்! - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!

கேட்டு மகிழ இதோ சுட்டி

பாட்டைப் பார்க்கணுமா? இந்தாங்கோவ்!


playing-vina



கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ!
மன்னன் மழை வண்ணன் - அவன் மகிமை எளிய தாமோ!

ஆயன் அலங் காரன் - கடல் பாயில் துயிலானோ
மாயன் மலர் தூயன் - என் இசைக்கே இசையானோ

(கண்ணன் மணி வண்ணன்)

பாற்கடலில் அவன் இருக்க
பாம்பணையாய் நான் இருப்பேன்
துவாரகையில் அவன் வசிக்க
துளசி வனம் ஆயிருப்பேன்


கீதையினை அவன் விதைக்க
பாதையிலே விழுந்திருப்பேன்
யமுனை நதி தீரத்திலே
ராதை எனக் காத்திருப்பேன்


வெண்ணைய் திருடும்
பூவிரல் என்னைத் தழுவ
ஆசையில் கன்னம் மிளிர
மாணவன் இன்னல் புரிய

நடந்தது கனவா நனவா
மயக்கத்தில் கிடந்த நான்
இன்னும் என்ன சொல்ல ஆ....

(கண்ணன் மணி வண்ணன்)


படம்: பரமசிவன்
வரிகள்: Dr. க்ருதியா
குரல்: கல்யாணி மேனன், சைந்தவி, லக்ஷ்மி ரங்கராஜன்
இசை: வித்யாசாகர்

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP