"முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்
அடியேற்கு அருள்" என்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடிநிலை ஈந்தானைப் பாடிப் பற !
அயோத்தியர் கோமானைப் பாடிப் பற !!
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப் பற !
தூமணி வண்ணனைப் பாடிப் பற !!
மாயச் சகடம் உதைத்து மருது இறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற
ஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற !
ஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற !!
காரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்
நேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த
ஆரா அமுதனைப் பாடிப் பற !
அயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற !!
மேலே உள்ள பெரியாழ்வார் பாசுரங்களை எம்.எஸ் அவர்களின் தெய்வீகமான குரலில்
இங்கே கேட்கலாம். பாசுரங்களின் பொருளை
இங்கே காணலாம்.
~
கிரிதாரியின்,
ராதா