Showing posts with label *விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள். Show all posts
Showing posts with label *விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள். Show all posts

Wednesday, January 19, 2011

தைப்பூசம்: முருகனும் பெருமாளும் என்னை வளைத்துக் கொண்டே...

இன்று தைப்பூசம்!(Jan-20-2011)! அதற்குத் தோதான பாட்டைப் பார்க்கலாமா?

தைப்பூசம் என்பது, திருமுருகன் அன்னையிடம் வேல் வாங்கிய நாள் என்று சொல்லுவார்கள்!
என் முருகன் ஒய்யாரமாய் நிற்கும் பழனி மலையில், குன்றமெல்லாம் கொண்டாட்டம்! அலங்காரங்கள் மணக்கும்!

எது அலங்காரம்? = அகங்காரம் அழிப்பது எதுவோ, அது அலங்காரம்!
* நமக்கு மாலை போட்டு மரியாதை செய்ய வேண்டும் என்று எண்ணினால் = அகங்காரம்
* அதை முருகனுக்குச் சூட்டும் போது, அதே மனம், அதைக் கண்டு பொறாமை கொள்ளாமல், கண்டு களிக்கிறது அல்லவா! = அலங்காரம்!

அருணகிரி, முருகனுக்குச் செய்யும் அலங்காரம் = கந்தர் அலங்காரம்!
அதில் ஒரு பாடல், மிகவும் பிரபலம்!
கடைசி வரைக்கும் துணை வருவது வடிவேலும் மயிலும்-ன்னு வரும் பாடல்!
அதே போல் கண்ணனுக்கும் ஒரு பாட்டு இருக்கு, தெரியுமா? பலரும் அறியாத பாட்டு!


என் பிறந்த வீட்டுப் பாட்டையும், புகுந்த வீட்டுப் பாட்டையும், இன்னிக்கு தைப்பூசம் அதுவுமாய், கண்ணன் பாட்டில் ஒரு சேரப் பார்க்கலாமா? வாரீங்களா?



புகுந்த வீடு:
விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள் - மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும் - பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும், செங்கோடன் மயூரமுமே!
- கந்தர் அலங்காரம்

பிறந்த வீடு:
நாளும், பெரிய பெருமாள் அரங்கர் நகை முகமும்,
தோளும், தொடர்ந்து எனையாளும் விழியும், துழாய் மணக்கும்
தாளும், கரமும், கரத்தில் சங்கு-ஆழியும், தண்டும், வில்லும்
வாளும் துணை வருமே, தமியேனை வளைந்து கொண்டே!
- திருவரங்கத் திருவந்தாதி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP