1. கணபதியே வருவாய் அருள்வாய்
அன்று பாரதி பாடினான் - கண்ணன் பாட்டு!
இன்று நாமும் பாடுகிறோம் - கண்ணன் பாட்டு!!
மார்கழி மாதத்தில் இந்தப் புதிய வலைப்பூ.
இதில், நம்மை உடையவன், நாராயணன் நம்பி!
அவனைக் குறித்த தமிழ்ப் பாடல்களின்
- வரி (lyrics),
- ஒலி (audio clips),
- ஒளி (video clips).
இந்த வலைப்பூ நன்கு பூத்து, நாளும் மணம் தந்து மகிழ்விக்க,
கணபதியானை வணங்கித் துவங்குகிறோம்!
என்றும் போல் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டுகிறோம்!
கூட்டு முயற்சியாக, குமரன், பாலாஜி மற்றும் அடியேன்;
நீங்களும் இந்த முயற்சியில் பங்கு கொண்டால் எல்லாரும் மகிழ்வோம்!
குழுவில் சேர வேண்டுமா?
வலப்பக்கச் சுட்டியை - சொடுக்குங்கள்!
நற்றமிழ்ப் பாடல்களை - அடுக்குங்கள்!!

பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும்
கணபதியே வருவாய் அருள்வாய்
(கணபதியே)
மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க
மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க
(கணபதியே)
ஏழு சுரங்களில் நான் இசைபாட
எங்குமே இன்பம் பொங்கியே ஓட
தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட
தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட
(கணபதியே)
தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க
தொனியும் மணியென கணீர் என்றொலிக்க
ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க
உண்மை ஞானம் செல்வம் கொழிக்க
(கணபதியே)
பாடல்: கணபதியே வருவாய் அருள்வாய்
பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
எழுதியவர்:
ராகம்: நாட்டை
தாளம்: ஆதி
படம்:
17 comments :
http://music.cooltoad.com/music/song.php?id=187011
அன்பு இரவி,
வாழ்க! வளர்க!!
மிகவும் அருமையான பாடல். சீர்காழியின் கணீர்க் குரல் உள்ளமும் உயிரும் நிறைக்கிறது.
நல்ல திட்டம். கண்ணன் பாக்களைத் தொகுக்கும் முயற்சி. இந்த முயற்சி சிறப்புற்று வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.
ஆன்மீகக் கூட்டத்தில் வெட்டிப் பயலும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய வாழ்த்துகள் வெட்டி.
//G.Ragavan said...
ஆன்மீகக் கூட்டத்தில் வெட்டிப் பயலும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. என்னுடைய வாழ்த்துகள் வெட்டி. //
மிக்க நன்றி ஜி.ரா...
நம்மால் இயன்ற வரை செய்யலாமே என்றுதான் சேர்ந்துவிட்டேன்...
தேவையான சமயத்தில் வந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில்!!!
Adiya
Coolgoose சுட்டிக்கு நன்றிங்க!
இன்னும் கேட்கவில்லை; இன்று கேட்டுவிடுகிறேன்!
//ஞானவெட்டியான் said...
அன்பு இரவி,
வாழ்க! வளர்க!!//
உங்கள் ஆசி இந்த வலைப்பூவிற்கு நன்கு பயன் சேர்க்கட்டும் ஐயா!
//G.Ragavan said...
மிகவும் அருமையான பாடல். சீர்காழியின் கணீர்க் குரல் உள்ளமும் உயிரும் நிறைக்கிறது//
சீர்மிகு சீர்காழியின் பாடலோடு இந்த வலைப்பூ துவங்குவது மகிழ்ச்சியான ஒன்று ஜிரா!
//நல்ல திட்டம். கண்ணன் பாக்களைத் தொகுக்கும் முயற்சி. இந்த முயற்சி சிறப்புற்று வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்//
நன்றி ஜிரா!
கண்ணனுக்கு ராகவன் வாழ்த்து சொல்வது தானே சிறப்பு!!:-)
சில புதுமைகளும் இந்த வலைப்பூவில் செய்ய எண்ணம்!
கண்ணன் பாட்டு
நினைக்கையிலேயே இனிக்கிறது
கைவசம் ஒரு பாடல் இருக்கிறது.
மதுரை வானொலியில் இசையமைக்கப் பட்டு 1998ல் ஒலிபரப்பப்பட்ட பாடல்.
விரைவில் இடுகிறேன்
கணபதியின் அருளாசியுடன் தொடங்கப் பட்ட பதிவு சிறக்கட்டும்
hello
nalla muyarchi thanungo..naanum senthukaren unga kootaniyila
//மதுமிதா said...
கைவசம் ஒரு பாடல் இருக்கிறது.
மதுரை வானொலியில் இசையமைக்கப் பட்டு 1998ல் ஒலிபரப்பப்பட்ட பாடல்.
விரைவில் இடுகிறேன்//
மதுமிதா அக்கா,
அடியேன் வலைப்பூவில் உங்கள் முதல் வரவு! நல் வரவு!
//கைவசம் ஒரு பாடல் இருக்கிறது//
வாங்க வாங்க
சீக்கிரம்
தாங்க தாங்க !! :-)
//dubukudisciple said...
hello
nalla muyarchi thanungo..naanum senthukaren unga kootaniyila//
நன்றி டுபுக்குவின் சீடரே!
முடிந்தால் profile-il இருந்து ஒரு தனி மடல் இடுங்கள்!
// வெட்டிப்பயல் said:
மிக்க நன்றி ஜி.ரா...
நம்மால் இயன்ற வரை செய்யலாமே என்றுதான் சேர்ந்துவிட்டேன்...
தேவையான சமயத்தில் வந்து உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில்!!! //
என்னுடைய உதவியா! முருகனருளால் ஆனதைச் செய்வேன்.
வாழ்த்துக்கள் ரவி,பாலாஜி, குமரன் உங்க எல்லோருக்கும். நீங்க பதிவு செய்ததும் கேட்டுவிடுகிறேன்.
சீர்காழியின் கணபதிக்கு நன்றி.
//வல்லிசிம்ஹன் said:
வாழ்த்துக்கள் ரவி,பாலாஜி, குமரன் உங்க எல்லோருக்கும். நீங்க பதிவு செய்ததும் கேட்டுவிடுகிறேன்//
நன்றி வல்லியம்மா!
சீர்காழி அவர்களின் பெயரைக் கேட்டாலே எனக்கு ஞாபகத்திற்கு வரும் முதல் பாடல் இது தான். மிக்க நன்றி.
குமரேஷ்