Showing posts with label திலகா. Show all posts
Showing posts with label திலகா. Show all posts

Sunday, April 04, 2010

திலகா: கிருஷ்ண பள்ளி எழுச்சி!

கண்ணன் பாட்டில், குழுவினர் மட்டும் அல்லாது, பல வாசகர்களும் பதிவிடுவது வழக்கம்!

* தங்கள் படைப்புகளை அனுப்பி, இதையும் இடுங்களேன் என்று கேட்பவரும் உண்டு! = சித்ரம், திலகா, மலைநாடான் ஐயா போன்றோர்
* நேயர் விருப்பங்களைத் தருபவரும் உண்டு! = கானா பிரபா முதற்கொண்டு பலப்பலர்!
* அதை அவர்களாகவே எழுதி அனுப்புவோரும் உண்டு! = கோவி கண்ணன் முதலானோர்!
* பாடிக் கொடுப்போரும் உண்டு = வல்லியம்மா, மீனாட்சி சங்கரன், சூரி சார் போன்றோர்!
* நல்ல ஆலோசனைகளையும், படங்களையும் சுட்டிக் காட்டுவோரும் உண்டு = என் தோழன் ஜி.இராகவன் முதலானோர்!

இந்த ஊக்கம் என்றும் இனிது! இன்றும் இனிது!
அந்த வரிசையில், திலகா அவர்கள் எழுதி அனுப்பிய கிருஷ்ண சுப்ரபாதத்தைக் கேளுங்கள்!
இவரும், சித்ரம் ஐயாவும் அனுப்பிய பாடல்கள் எல்லாம் க்யூ வரிசையில் வேறு உள்ளன! :))

இதோ...கிருஷ்ணா சுப்ரபாதம்!

From கண்ணன் பாட்டு


யசோதையின் மைந்தா ஸ்ரீகிருஷ்ணா எழுந்தருள்வாய்!
யமுனையில் நீராடும் மாதவனே எழுந்தருள்வாய்!
கோபியர்கள் கொஞ்சிடும் கோபாலா எழுந்தருள்வாய்!
கோவர்தன மலை எடுத்த கோவிந்தா எழுந்தருள்வாய்!( )

அகிலத்தை தாங்கும் இறைவா எழுந்தருள்வாய்
ஆநிரை மேய்த்த கண்ணனே நீ எழுந்தருள்வாய்
இன்பங்கள் தந்திடும் இறைவா எழுந்தருள்வாய்
ஈசனும் வணங்கும் தேவா நீ எழுந்தருள்வாய் ( )

உலகளந்த பெருமாளே மாயவனே எழுந்தருள்வாய்
ஊனுக்குள் உயிராய் நிறைந்;தவனே எழுந்தருள்வாய்
எங்கும் நிறைந்த பரம்பொருளே எழுந்தருள்வாய்
ஏழுமலை வாழும் ஸ்ரீனிவாசா எழுந்தருள்வாய் ( )

- திலகா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP