ராகம்: ஆபேரி
நகுமோமு கநலேநி நாஜாலி தெலிஸி
நன்னுப்ரோவ ராதா ஸ்ரீ ரகுவர நீ
நகராஜ தரநீது பரிவாருலெல்ல
ஒகிபோதன ஜேஸேவார லுகாரே அடுலுண்டுதுரே நீ
ககராஜூ நீயானதி விநிவேக சனலேடோ
ககநாநி கிலகு பஹூ தூரம் பனி நாடோ
ஜகமேலே பரமாத்ம எவரிதோ மொறலிடுது
வகஜூபகு தாளனு நந்நேலுகோரா த்யாகராஜனுத நீ (நகு)
[பொருள்]
ஸ்ரீ ரகுவீர ! உனது புன்னகை தவழும் முகத்தைப் பார்க்க இயலாத என் மனத்துயரைத் தீர்க்கலாகாதா? கிரிதாரியே ! உன் சேவகர்கள் என்னைப் பற்றி அவதூறு சொல்ல மாட்டார்களே ! வெகு தூரம் வர வேண்டும் என்று சொல்லி கருடன் உனது கட்டளைக்கு இணங்கவில்லையா? பரமாத்ம ! அகிலாண்டவா ! எவரிடம் முறையிடுவேன் ! தாமதம் செய்யாமல் இந்த அடிமையைக் காத்தருள்வாய் !
டிஸ்கி: இது ஒரு மிகப் பழைய ரெக்கார்டிங்க். பத்து நிமிடங்கள் முழுமையாக ஒதுக்கிவிட்டு பொறுமையாக கேட்க வேண்டிய ஒன்று. அவசர கதியில் கேட்டோம் என்றால் பிடிக்காமல் போகலாம். பதிவிட்டவர் மேல் கோபம் வரலாம். :-)
ஸத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி அவர்கள் அருளிய "நகுமோமு கநலேனி" என்கிற கீர்த்தனையை பல்வேறு இசைக் கலைஞர்களும் பாடியுள்ளனர். வெகு நாட்களுக்கு முன்னர், முசிறி சுப்ரமணியம் அவர்கள் பாடிய பழைய ரெக்கார்டிங்க் ஒன்று கிடைத்தது. இரவின் அமைதியில் கேட்டால் மனத்தூய்மை ஏற்படுத்தும் ஒரு மிக அற்புதமான ஆலாபனை...இதனைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு இப்பொழுது தான் அமைந்தது. எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் இது ஒரு பொக்கிஷம் என்று தோன்றியது. பின்னாளில் எவருக்கேனும் இது பயன்பெறலாம்...
~
கிரிதாரியின்,
ராதா
அனைவருக்கும் & கண்ணன் பாட்டு நேயர்களுக்கும்..., இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :) Wish You All A Very Happy New Year-2011 புத்தாண்டில், "நிம்மதியான சந்தோஷங்கள்", உங்களைப் பூப்போலச் சூழட்டுமென என் முருகனிடம் சொல்லிக் கொள்கிறேன்! :)
அது என்ன "நிம்மதியான" சந்தோஷம்? :) மனசுக்கு நிம்மதி இருந்தாலே, பாதி சந்தோஷம் வந்துரும்! மீதி சந்தோஷம், நாம் தேடி அடைஞ்சிக்குவோம்! என்ன சொல்றீங்க? :)
சந்தோஷம்-மகழ்ச்சி என்பதால், புத்தாண்டு அன்று ஒரு "சந்தோஷமுகா" பாட்டு(லு) இப்புடு சூஸ்தாவா? :)
கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பதற்கு ஏற்றவாறு, ஒரு அழகிய தியாகராஜ கீர்த்தனை! அதை மெட்டு மாறாமல், தமிழாக்கி இதோ! = சந்தோஷமுகா! சந்தோஷமுகா!
சந்தோஷம்-ன்னா கூடவே துளசி தளம் வருது பாருங்க! :) அலைச்சலுக்கும், பெரும் காத்திருப்புக்கும் பிறகு, காற்றில் மெல்லீசாய் வரும் துளசி வாசமே ஒரு தனி சந்தோஷம் தானே! கூடவே பல பூக்களின் வாசமும் பாட்டில் வீசுது! கேட்டுக்கிட்டே படிங்க!
தாமரை புன்னையும் சண்பகமும் - தரு பாதிரி குருந்தை மலருடனே அரளியும் மல்லியும் மணங்கமழும் -என் மனம் மலர் பூக்கள் பலவுடனே (துளசி தளம் அதினால்)
தரணி வி ஒக்க பர்யாயமு தர்மாத்முனி சாகேத புர வாசுனி ஸ்ரீ ராமுனி வர தியாகராஜ நுதுனி (துளசி தளமுலசே)
தரணியில் எழுஎழு பிறவி தனில் - அற ஆழியை அயோத்தி ஆள்பவனை மனமதில் வாழுமென் ராகவனை - உனை தியாக ராசன் தினம் பாடி மகிழவே (துளசி தளம் அதினால்) பாட்டில் வரீசையா, பல பூக்களைச் சொல்லி அர்ச்சிக்கிறாரே தியாகராஜர்! லேடீஸ் & ஜென்டில் லேடீஸ்... அத்தனை பூவையும் நோட் பண்ணீங்களா? அதுல, சில பூவை எல்லாம் கண்ணுல பார்த்தாச்சும் இருக்கீங்களா? :))
1. தாமரை 2. புன்னை 3. சண்பகம்
4. பாதிரி 5. குருந்தை 6. அரளி 7. மல்லி
8. துளசீ தளம் & 9. மனப் பூ
எனக்குக் கடைசிப் பூவை நல்லாவே தெரியும்-ப்பா! ஏன்-ன்னா அது தான் நான் சொல்லும் பேச்சைக் கேட்கவே கேட்காது! :) உம்.....தமிழாக்கம் என்பதால் என்னோட குரலில் கேட்டீங்க! உங்க விதி! :) ஆனா மூலப் பாடலை நல்ல குரலில்...இசைக் கருவிகளில் கேட்போமா? One Stop Shop for this Song!
திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி! ஜேசுதாஸ் குரலில்...
ஒரு தியாகராஜர் கீர்த்தனை. சற்றே சோகமானது. இரவில் கேட்கலாம் வகை.
உங்களுக்கு ராமர் பிடிக்கும் என்றாலோ, பொறுமைசாலி என்றாலோ நிச்சயம் இதனை விரும்புவீர். பாடலை முசிறி அவர்கள் பாடி, இங்கே கேட்கலாம்.
பாலமுரளி கிருஷ்ணா-சுசீலா பாடுவது, அதுவும் மெல்லிய குழுப் பாடலாக...கீழே கேளுங்கள்!
[பொருள்]
ஓ ராகவா ! ராமசந்த்ர ! ஜானகியின் மனதைக் கவர்ந்தவனே ! உன்னைத் தவிர வேறு கதியில்லை. என்னைக் காப்பாற்றுவாய் ! தாமரைக் கண்ணா ! விரைவில் கண்டு கொள் ! நின் கடைக்கண் பார்வை பெறாத பிறவி எதற்கு?
ஓ ராமையா ! பெரும் கீர்த்தி வாய்ந்தவர்கள் எல்லாம் புகழும்படியான பெருமை உடையவனே ! நீ சோதனைகள் செய்வதற்கு நான் தகுந்தவன் தானா? ராஜாதி ராஜர்களால் வணங்கப் பெற்ற தலைவனே ! த்யாகராஜனை ஆளும் ராகவனே ! languages->tamil என்பதன் தொடர் முயற்சியாக...
கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்ற பாரதியின் வாக்குக்கு இணங்க...
மேற்கண்ட தியாகராஜரின் பாடல், தமிழில், அதே மெட்டில்...
சரணம் ராம, சந்திர ராகவா - என்னை உனக்கு
சரணம் ராம, சந்திர ராகவா
சனகன் மகளின் மனத்துக் கினியவா - எந்தன்
கதியும் நீயே விரைந்து காக்கவா
(சரணம் ராம, சந்திர ராகவா)
விழித்-தாமரையால் என்னைக் காணப்பா - உந்தன்
பார்வை இல்லாப் பிறவி வீணப்பா!
(சரணம் ராம, சந்திர ராகவா)
சோதனைக்கு நானும் பொம்மையா? - உந்தன்
சாதனை தான் பேசும் தன்மையா?
(சரணம் ராம, சந்திர ராகவா)
இராமரை உயிராகக் கொண்ட த்யாகராஜர் அவர்கள் அருளிய கீர்த்தனை ஒன்று. எனக்கு மிகவும் பிடித்தமானது. உங்களுக்கும் பிடிக்கலாம் என்று இங்கு பகிர்ந்து கொள்கிறேன். :-)
[பாடலும் பொருளும் "ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமி கீர்த்தனைகள்" என்ற புத்தகத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது.]