20. என்ன தவம் செய்தனை யசோதா!!!
இது நம்ம dubukudisciple (சுதா) தயாரித்த பதிவு!
அவர் தமிழ்மணத்துக்கு அனுப்பும் படி என்னிடம் கேட்டுக் கொண்டார்! Post-இல் அவர் பெயர் தெரிந்தாலும், தமிழ்மணம் மட்டும் அவர் பெயரில் ஏனோ எடுத்துக் கொள்ளவில்லை! எல்லாப் புகழும் dubukudisciple க்கே!
பாபநாசம் சிவன் அவர்களின் அருமையான தமிழிசைப் பாடல் இது!
Fusion Music இல் மாதங்கி அவர்கள் பாடிக் கேட்க இங்கே சொடுக்கவும்!
S. காயத்ரி அவர்களில் குரலில் சம்பிரதாய மெட்டில் கேட்க இங்கே சொடுக்கவும்!
மற்ற கலைஞர்கள் பாடியது/இசைத்தது பதிவின் இறுதியில்!
இதன் வீடியோ ஒன்று, ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் ஆடும் பரதம்!
காண வேண்டுமா? திராச ஐயாவின் பதிவுக்குச் செல்லுங்கள்! இதோ சுட்டி
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை
எங்கும் நிறை பரப்ரம்மம் - அம்மா வென்றழைக்க
(என்ன தவம்)
ஈரேழு புவனங்கள் படைத்தவனைக் - கையில்
ஏந்திச் சீராட்டி பாலூட்டி தாலாட்ட - நீ
(என்ன தவம்)
பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள - உரலில்
கட்டி வாய் பொத்திக் கெஞ்ச வைத் தாயே - நீ
(என்ன தவம்)
சனகாதியர் தவ யோகம் செய்து வருந்திச் சாதித்ததை
புனித மாதே எளிதில் பெற - நீ
(என்ன தவம்)
-----------------
திரைப்படங்களில்:
ஹரிணி படம்: பார்த்திபன் கனவு (முதல் சில வரிகள் மட்டும்)
கர்நாடக இசை/ஹிந்துஸ்தானி/மெல்லிசை:
S.P. Ram
Veenai - Nirmala Rajasekar
Violin
Flute - Ramani
Saxophone - Kadri Gopalnath
மார்கழி 16 - நாயகனாய் நின்று - பதினாறாம் பாமாலை.
எழுதியவர்: பாபநாசம் சிவன்
ராகம்: காபி
தாளம்: ஆதி
17 comments :
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக்கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய்
எங்களுக்குத் தலைவனாம் நந்தகோபருடைய திருமாளிகையைக் காப்பவரே! கொடிகளும் தோரணங்களும் உடைய திருவாயிலைக் காப்பவரே! மணிகள் பூட்டிய கதவினைத் திறந்து விடுங்கள். ஆயர் சிறுமியரான நாங்கள் விரும்பியதைத் தருவதாக முன்பே மாயன் மணிவண்ணன் உறுதிமொழி கொடுத்துள்ளான். அதனால் அவனுக்குத் திருப்பள்ளியெழுச்சி பாட தூயவர்களாக வந்திருக்கிறோம். மறுப்பு சொல்லாமல் அன்புடன் நிலைக்கதவை திறந்து எங்களை உள்ளே அனுமதியுங்கள்.
ஒவ்வொரு வரியும் உருகி உருகிப் பாடும் படி அமைந்த பாடல் இது. எவ்வளவு ஆழ்பொருள் ஒவ்வொரு வரியும். பாடியவர்களும் பொருள் உணர்ந்து பாடியிருக்கிறார்கள். எஸ்.பி. இராம் மிக நன்றாகப் பாடியிருக்கிறார். ஃப்யூசன் இசையில் இசை நன்றாக இருக்கிறது; பாடியவரும் உணர்ந்து இசைக்காக உணர்ச்சியை விட்டுகொடுத்துவிடாமல் பாடியிருக்கிறார்.
//வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ//
என்ன ஒரு சொல்லாட்சி!
முன்னமுன்னம் மாற்றாதே! இன்றும் கிராமங்களில் இதைக் கேட்டுள்ளேன் குமரன்!
முன்னுக்குப் பின் முரண் என்றெல்லாம் சொல்ல மாட்டார்கள்!
முன்னமுன்னம் என்று தான் சொல்வார்கள்! ஆண்டாள் பாட்டில் நம் ஊர்களின் வாடை அப்படியே வீசுகிறது! மக்கள் கவி தான் அவள்!!
//ஃப்யூசன் இசையில் இசை நன்றாக இருக்கிறது; பாடியவரும் உணர்ந்து இசைக்காக உணர்ச்சியை விட்டுக் கொடுத்துவிடாமல் பாடியிருக்கிறார்.//
உண்மை குமரன்! நானும் இதைக் கேட்ட பின் தான், ஃப்யூசன் இசைக்கும் மேலேயே சுட்டி கொடுக்கலாம் என்று கருதினேன்.
ரவி
என்ன தவம் செய்தனோ எத்தனைநாளாக
தேடித்தேடி கேட்க காணவொணா
இக் கீத்த்தை இங்கே நான் கேட்க
என்ன தவம் செய்தனோ
நன்றி
முத்தமிழும் இங்கே இணைந்து விட்டது ரவி. என்ன அழகு.
குரல் அழகு ,கண்ணன் அழகு,
நடனம் அழகு.
பாட்டைப் பற்றி சொல்லவே வேண்டாம்.
பிறகு வந்துவிட்டார் நம் நாயகன்.
நந்தகோபன் குமரன்.இன்றிலிருந்து
இன்னும் சுவை கூடும்.புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.
மயக்கும் ரமணியின் புல்லாங்குழல் இசையில் மெய் மறந்தேன்...நன்றி
ரொம்ப நல்ல பாட்டு. ஆனா எனக்கு இதை விட பார்த்திபன் கனவில் வரும் பாடல் தான் பிடிக்கும். இந்த பாடலில் கொஞ்சம் drums எல்லாம் உபயோகப்படுத்தி இருக்காங்க. கொஞ்சம் western பாட்டு மாதிரி இருக்கிறது அந்த பாட்டு ரொமப் அமைதியா இருக்கும்.
KRS,
பார்த்திபன் கனவு படத்தில் வரும் பாடல் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது... அதன் வரிகளையும் போட்டால் மகிழ்வோம்!!!
பாபநாசம் சிவன் அவர்களின் அருமையான பாடலிற்கு, ஏற்றமாதிரி இரண்டு அருமையான படங்களையும்
வலை ஏற்றியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்
//செல்லி said...
ரவி
என்ன தவம் செய்தனோ எத்தனைநாளாக
தேடித்தேடி கேட்க காணவொணா
இக் கீத்த்தை இங்கே நான் கேட்க
என்ன தவம் செய்தனோ//
ஆகா! உங்கள் மகிழ்ச்சி கண்டு மகிழ்ச்சி!:-)
நன்றி செல்லி!
//வல்லிசிம்ஹன் said...
முத்தமிழும் இங்கே இணைந்து விட்டது ரவி.//
ஆமாம் வல்லியம்மா! வரி, ஒலி, ஒளி எல்லாம் வந்து விட்டதே!
திராச ஐயாவுக்கும் நன்றி சொல்வோம்!
//அன்புடன்...ச.சங்கர் said...
மயக்கும் ரமணியின் புல்லாங்குழல் இசையில் மெய் மறந்தேன்...நன்றி//
வாங்க சங்கர் சார்!
ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்று பிடிக்கும் அல்லவா?
அதனால் தான் பாட்டின் பல சுட்டிகள் கொடுக்கிறோம் சங்கர் சார்! இந்த யோசனை அப்புறம் தான் வந்தது!
நீங்கள் ரமணியின் குழலை ரசித்ததில் மகிழ்ச்சியே!
//சந்தோஷ் said...
ரொம்ப நல்ல பாட்டு. ஆனா எனக்கு இதை விட பார்த்திபன் கனவில் வரும் பாடல் தான் பிடிக்கும். இந்த பாடலில் கொஞ்சம் drums எல்லாம் உபயோகப்படுத்தி இருக்காங்க.//
:-)))
பாருங்க சந்தோஷுக்கு என்ன பிடிக்கும்ன்னு பாத்து கொடுக்கப்பட்டுள்ளது!
நன்றி சந்தோஷ்!
//வெட்டிப்பயல் said...
KRS,
பார்த்திபன் கனவு படத்தில் வரும் பாடல் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது... அதன் வரிகளையும் போட்டால் மகிழ்வோம்!!! //
ஆகா! கண்ணன் பாட்டு வலைப்பூவின் ஒருங்கிணைப்பாளரே, பாலாஜி!
நீங்களே நேயர் விருப்பமா?:-)
உங்க ஆசையை நீங்க தான் நிறைவேத்தி வைக்கணும்! :-)
//SP.VR.சுப்பையா said...
பாபநாசம் சிவன் அவர்களின் அருமையான பாடலிற்கு, ஏற்றமாதிரி இரண்டு அருமையான படங்களையும்
வலை ஏற்றியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள்//
நன்றி சுப்பையா சார்!
சுதா கொடுத்த படங்கள்! நன்றி அவருக்கே!
என்ன தவம் செய்தனை யசோதா
என்ன தவம் செய்தனை