17. கண்ணன் வருவான் கதை சொல்லுவான்!
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் கண்ணதாசன் எழுதி, விசுவநாதன்-இராமமூர்த்தி இசையில், பி.சுசீலா பாடியது
படம் பெயர் யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்க; மறந்து போச்சு;
படத்தில் இதை கே.ஆர்.விஜயா பாடுவாங்கன்னு மட்டும் நினைவிருக்கு!
இது ரீ-மிக்ஸ் பாடல்; வேண்டுமானால் சொடுக்கவும்; சும்மா கேட்டுப் பார்க்கலாம்.
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டித் தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்துப் பாலூட்டுவான்
(கண்ணன் வருவான்)
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க...
தத்தித் தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கித் திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரி ராரி ராரி ராரி ராரிரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ராராரோ
(கண்ணன் வருவான்)
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான்...உறங்க வைத்தான்...
ஆரிரோ ஆரி ராரி ராரி ராரி ராரிரோ
ஆராரோ ஆரி ராரி ராரி ராரி ராராரோ
(கண்ணன் வருவான்)
மார்கழி 13 - புள்ளின் வாய் கீண்டானை- பதின்மூன்றாம் பாமாலை.
26 comments :
புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிர குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்
கொக்கின் வடிவத்தில் வந்த அரக்கனை கொக்கின் வாய் பிளந்து கொன்றவனை, பொல்லாத அரக்கனான கம்சனை களையைக் கிள்ளி எறிவதைப் போல் அழித்தவனை, அவன் புகழ்கள் எல்லாம் பாடி பின்னர் எல்லா பெண்களும் பாவை நோன்பு நோற்கும் களத்தில் புகுந்தார்கள். வியாழன் மறைந்து விடிவெள்ளியும் எழுந்துவிட்டது. பறவைகள் எல்லாம் சிலம்புகின்றன. பூபோன்ற கண்களை உடையவளே! உள்ளமும் உடலும் குளிரும் படி நன்கு குடைந்து நீராடாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாயே?! அழைகிய பெண்ணே. இன்று நல்ல நாள். புனிதமான நாள். கள்ளத்தனமாகக் கண்ணனை எண்ணிக் கொண்டு கண்மூடிக் கிடப்பதை விட்டுவிட்டு எல்லோருடனும் கலந்து அவனை அனுபவிப்பாய்.
குமரன் இந்த ஐடியா சூப்பர்!
திருப்பாவை விளக்கமும் ஆச்சு!
கண்ணன் பாட்டும் ஆச்சு!
கலக்கல்!
படம்: பஞ்சவர்ணக் கிளி
அருமையான பாடல்
படம் பஞ்சவர்னக்கிளி - வருடம் 1965
ஜெய்சங்கர், முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்தது
பஞ்சவர்ணக்கிளி படத்துக்காக மெல்லிசை மன்னர் இசையில் கவியரசரின் பாடலை இசையரசி பாடியது. மிகவும் அருமையான பாடல்.
அதுல பாருங்க..கண்ணன் மட்டும் கண்ணத்திலே முத்தம் கொடுக்கன்னு சொல்லீட்டு...மெல்லிய குரல்ல முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்கன்னு வரும். அடடா!
//திருப்பாவை விளக்கமும் ஆச்சு!
கண்ணன் பாட்டும் ஆச்சு!//
மாடும் மேய்ச்சாச்சு; மைத்துனனுக்குப் பெண்ணும் பார்த்தாச்சு!
விருப்பமான பாடல்களில் ஒன்று
very good song - the one i always murmering -
yaaro
எனக்கு கண்ணனைவிட கண்ணதாசன் தான் தெரிகிறார் இங்கு....என்ன அனுபவமிருந்தால் இந்த மாதிரி பாடல் வந்திருக்கும் அவரிடமிருந்து. நேரே பார்த்திருக்கிறாரைய்யா கண்ணனை.....
கண்ணன் பாடல்களுக்கே தனி கவர்ச்சி தான்.
எனக்கென்னவோ "கண்ணா கருமை நிற கண்ணா" தான் பிடிக்கும்
//வெள்ளியெழுந்து வியாழம் உறங்கிற்று//
இந்த வரி, பல சரித்திர, வானவியல் ஆய்வார்களுக்கு ஒரு பொக்கிஷம்!
//ஞானவெட்டியான் said...
படம்: பஞ்சவர்ணக் கிளி//
நன்றி ஐயா!
எப்படியும் நீங்க வந்து சொல்வீங்கன்னு நினைச்சேன்! அப்படியே நடந்து விட்டது! :-)
//SP.VR.சுப்பையா said...
அருமையான பாடல்
படம் பஞ்சவர்னக்கிளி - வருடம் 1965
ஜெய்சங்கர், முத்துராமன், கே.ஆர்.விஜயா நடித்தது//
நன்றி சுப்பையா சார்!
//G.Ragavan said...
அதுல பாருங்க..கண்ணன் மட்டும் கண்ணத்திலே முத்தம் கொடுக்கன்னு சொல்லீட்டு...மெல்லிய குரல்ல முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்கன்னு வரும். அடடா! //
ஜிரா
எனக்கும் இந்த இடம் தான் ரொம்பப் பிடிக்கும்! அதான் அந்த வரிகளை bold செய்து, கண்ணனின் முத்தப் படத்தை அங்கு போட்டேன்!
உங்க ரசனையும் அப்படியே இருப்பதில் மகிழ்ச்சி தான்!
//ஞானவெட்டியான் said...
மாடும் மேய்ச்சாச்சு; மைத்துனனுக்குப் பெண்ணும் பார்த்தாச்சு!//
நச்!:-)
ஐயா, அந்த மைத்துனன் நானா?
எனக்குத் திருமணம் ஆகி விட்டதே! பரவாயில்லையா:-)))
//கார்திக்வேலு said...
விருப்பமான பாடல்களில் ஒன்று//
நன்றிங்க கார்திக்வேலு! முதல் வருகை! நல்வரவு.
//Anonymous said...
very good song - the one i always murmering -
yaaro//
நன்றி யாரோ!
//Mathuraiampathi said...
எனக்கு கண்ணனைவிட கண்ணதாசன் தான் தெரிகிறார் இங்கு....என்ன அனுபவமிருந்தால் இந்த மாதிரி பாடல் வந்திருக்கும் அவரிடமிருந்து. நேரே பார்த்திருக்கிறாரைய்யா கண்ணனை.....//
:-)
கண்ணனை மட்டுமா?
கண்ணனின் லீலைகளையும் கண்டிருப்பார்! அதான் இப்படிக் காதல் சொட்டச் சொட்ட எழுதினார் போலும்!
//வடுவூர் குமார் said...
கண்ணன் பாடல்களுக்கே தனி கவர்ச்சி தான்.
எனக்கென்னவோ "கண்ணா கருமை நிற கண்ணா" தான் பிடிக்கும்//
குமார் சார், நேயர் விருப்பம் நிறைவேற்றுகிறோம்! :-)
நல்ல பாடல். இதற்கு முன் கேட்டிருந்தாலும் இன்று தான் முழுவதும் மனம் ஒன்றிக் கேட்டேன்.
படமும் பாடல்களும் அற்புதம். சொல்லும் முறை அதைவிட அபாரம். எதை எடுப்பது எதை விடுப்பது
கண்ணன் என்னும் மன்னன் பேரைச்சொல்லாச் சொல்ல கல்லும் முள்ளும் மலராய் மாறும் மெல்ல. இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்
கண்ணன் வருவான் கதை சொல்லுவான் என்று பாடும் சுசீலாவின் குரல்தான் எத்தனை கவர்ச்சியாக இருக்கிறது! பாடலின் வரிகளை உணர்ந்து பாடும் திறமையினால் பாட்டும் கேட்பவர்களின் நெஞ்சங்களில் சிறையாகிறது!
அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத பாட்டு!
ரசித்தேன் ரவி!
ஷைலஜா
//தி. ரா. ச.(T.R.C.) said...
கண்ணன் என்னும் மன்னன் பேரைச்சொல்லாச் சொல்ல கல்லும் முள்ளும் மலராய் மாறும் மெல்ல. இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்//
நேயர் விருப்பம் நிறைவேறும் திராச ஐயா!:-)
//குமரன் (Kumaran) said...
நல்ல பாடல். இதற்கு முன் கேட்டிருந்தாலும் இன்று தான் முழுவதும் மனம் ஒன்றிக் கேட்டேன்.
//
நன்றி குமரன்!
//ஷைலஜா said...
அன்றும் இன்றும் என்றும் மறக்க முடியாத பாட்டு! ரசித்தேன் ரவி!//
நன்றி ஷைலஜா!
சுசீலாம்மாவின் கண்ணன் பாட்டுகள் எல்லாமே ஹிட் தான் என்று நினைக்கிறேன்! நம்மால் முடிந்த வரை இங்கே இடுவோம்!
ரவி,இந்தப் பாடலின் அருமை படம் பூராவும் தெரியும்.
சுசீலா அம்மாவை நேரில் ரயிலடியில் பார்த்தபோது ஒன்றுமே பேச முடியவில்லை.அவர்களும் புரிந்து கொண்டது போல் சிரித்துவிட்டுப் போனார்கள். அவர்களும்,டி.எம்.எஸ் அவர்களும் செய்த மாயத்தால்தான் பல படங்கள் அந்தக் காலத்தில் ஓடின.
நன்றி உங்களுக்கு.