16. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே!
பாடலைக் கேட்க, இங்கே சொடுக்கவும் - கவிஞர் கண்ணதாசன் எழுதி, MSV இசையில், TMS பாடியது
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே - எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களே
வண்டாடும் கங்கை மலர்த் தோட்டங்களே
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
பன்னீர் மலர் சொரியும் மேகங்களே - எங்கள்
பரந்தாமன் மெய்யழகைப் பாடுங்களே
தென்கோடி தென்றல் தரும் ராகங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே - எங்கள்
ஸ்ரீகிருஷ்ண மூர்த்தி புகழ் பாடுங்களே
(புல்லாங்குழல்)
குருவாயூர் தன்னில் அவன் தவழ்கின்றவன் - ஒரு
கொடியோடு மதுராவை ஆள்கின்றவன்
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன் - அந்த
ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
(புல்லாங்குழல்)
பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்
(புல்லாங்குழல்)
மார்கழி 12 - கனைத்திளங் கற்றெருமை - பன்னிரண்டாம் பாமாலை.
18 comments :
கனைத்து இளங் கற்று எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானை பாடவும் நீ வாய் திறவாய்!
இனித் தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்?
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.
சின்னஞ்சிறு கன்றினையுடைய எருமை கன்றினை நினைத்து இரங்கி முலை வழியே பால் தானாக வழிய, அந்தப் பாலால் இல்லம் முழுதும் பாற்சேறு ஆகும் நிறைந்த செல்வத்தை உடையவனின் தங்கையே! மார்கழி பனி தலையில் விழ உன் வாசல் கதவினைப் பற்றிக்கொண்டு, சினம் கொண்டு தென்னிலங்கைத் தலைவனான இராவணனை அழித்த மனத்துக்கு மிகவும் இனியவனின் பெயர்களைச் சொல்லி நாங்கள் பாடியும் நீ வாய் திறக்க மாட்டேன் என்கிறார். இனியாவது எழுந்திராய். இது என்ன இவ்வளவு நீண்ட உறக்கம்? அனைத்து இல்லத்தவர்களும் விழித்து எழுந்தாயிற்று.
முரளீதரன் கண்ணன்.
வேணுகோபாலனும் அவனே.
முரளி மற்றும் வேணு இரண்டுமே புல்லாங்குழலின் வேறு பெயர்கள்.
புல்லாங்குழலின் ஓசை கேட்கும் போது அந்த கண்ணன் அல்லவா நினைவுக்கு வருகிறான்.
//படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்//
இந்த இடத்தில் கீதையின் படத்தைப் போட்டு
பார்ப்பதற்குக் கீதை என்னும் படம் கொடுத்தார் குமரன் என்று ஆக்கி விட்டீர்களே! :-)
நன்றி குமரன்!
நல்லதொரு பாடல். இந்தப் பாடலைக் கேட்டுப் பார்க்கும் பொழுது ஒன்று புரியும். டி.எம்.எஸ் குரலை வீணை போல வைத்துப் பாடுவார். அது அவரது குரல் வளத்தைப் பெருக்கியிருக்கிறது என்றால் மிகையில்லை.
இதே போல கிருஷ்ணகானம்-2ல் தேவதாருவே காமதேனுவே என்ற பாடலும் சிறப்பு. கிருஷ்ணகானம்-2ல் மெல்லிசை மன்னர் இசையில் இசைஞானி ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
நன்றி...மங்காப்புகழடைந்த மாமணிகள் கண்ணதாசன்,டி எம் ஸ் அவர்களுக்கும்....உங்களுக்கும்..
இந்தப்பாடல் இல்லாத மார்கழியா?...
மெளலி.....
ஹாய்,
இந்த கண்ணன் பாட்டுல SPB, TMS,தவிர, சுசீலா, ஈஸ்வரி,ஜானகி இவங்க பாடின பாடும் கூட போடலாமே... நான் சென்னையில இருந்தப்ப இது எல்லாம் கேட்டது.இப்ப சரியா ஞாபகம் வரலை.
"கோபியரே..கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே.." இது L.R. ஈஸ்வரி paadinadhunnu நினைக்கிறேன்..Try panni paarunga..
மிக எளிமையாக அதே நேரத்தில் மிக நேர்த்தியாக இருக்கும் ஒரு பாடல் இந்தப் பாடல். பொருட்செறிவானது. எழுதியவரும் பாடியவரும் உணர்ந்து செய்திருக்கிறார்கள்.
//பாஞ்சாலி புகழ் காக்கத் தன் கை கொடுத்தான் - அந்த
பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்தான்
பாண்டவர்க்கு உரிமையுள்ள பங்கைக் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் - நாம்
படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான்//
பாடலின் முத்தாய்ப்பான வரி
நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் என்பதுதான்.
கவியரசரின் மற்றுமொரு அற்புதமான பாடல். பதிவிட்டமைக்கு நன்றி!
//அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்//
சமூகப் பார்வை கொடுக்கும் ஆண்டாள் பாசுரம்; நன்றி குமரன்!
//சாத்வீகன் said...
முரளி மற்றும் வேணு இரண்டுமே புல்லாங்குழலின் வேறு பெயர்கள்//
அழகா எடுத்துக் கொடுத்தீங்க சாத்வீகன்! நன்றி!!
//G.Ragavan said...
நல்லதொரு பாடல். இந்தப் பாடலைக் கேட்டுப் பார்க்கும் பொழுது ஒன்று புரியும். டி.எம்.எஸ் குரலை வீணை போல வைத்துப் பாடுவார்.//
ஹூம்! அதான் டி.எம்.எஸ் அவர்களை இமிடேட் செய்வது கொஞ்சம் கடினம் போலும்!
//இதே போல கிருஷ்ணகானம்-2ல் தேவதாருவே காமதேனுவே என்ற பாடலும் சிறப்பு. கிருஷ்ணகானம்-2ல் மெல்லிசை மன்னர் இசையில் இசைஞானி ஒரு பாடல் பாடியிருக்கிறார்.//
பாடல் வரியும், சுட்டியும் தந்து உதவ முடியுமா ஜிரா?
//Anonymous said...
நன்றி...மங்காப்புகழடைந்த மாமணிகள் கண்ணதாசன்,டி எம் ஸ் அவர்களுக்கும்....உங்களுக்கும்..
இந்தப்பாடல் இல்லாத மார்கழியா?...//
நன்றி மெளலி சார்.
புல்லாங்குழல் பாடல் ஒரு காலத்தில் எல்லாத் திருமண வரவேற்புகளிலும் பாடப்படும்!
//sumathi said...
ஹாய்,
இந்த கண்ணன் பாட்டுல SPB, TMS, தவிர, சுசீலா, ஈஸ்வரி,ஜானகி இவங்க பாடின பாடும் கூட போடலாமே... "கோபியரே..கோபியரே கொஞ்சும் இளம் வஞ்சியரே.." இது L.R. ஈஸ்வரி //
நேயர் விருப்பம் குறித்துக் கொள்கிறோம்! நன்றிங்க சுமதி!
//குமரன் (Kumaran) said...
மிக எளிமையாக அதே நேரத்தில் மிக நேர்த்தியாக இருக்கும் ஒரு பாடல் இந்தப் பாடல். பொருட்செறிவானது. எழுதியவரும் பாடியவரும் உணர்ந்து செய்திருக்கிறார்கள்//
ஆமாம் குமரன்; பெரும்பாலும் ட்.எம்.எஸ், கண்ணதாசன், எம்.எஸ்.வி இவர்களின் ஹிட் எல்லாம் முழு ஒருங்கிணைப்பாக இருக்கும்! Team Work Treats! :-)
//SP.VR.சுப்பையா said...
பாடலின் முத்தாய்ப்பான வரி
நாம் படிப்பதற்கு கீதையென்னும் பாடம் கொடுத்தான் என்பதுதான்//
உண்மை தான் சுப்பையா சார்!
அவர்க்கு பங்கைக் கொடுத்து, நமக்குப் பாடம் கொடுத்தான்.
கவியரசர் அனுபவித்து எழுதிய பாடல்.
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொள்கின்றவன் எனும்போது மனசு திருவரங்கத்திற்கே நடந்துபோய்விடுகிறது...க்ருஷ்ணகானக்கதம்பத்தில் இப்பாடல் மனோரஞ்சிதம்! அளித்த உங்களுக்கு ஆயிரம் நன்றி.
ஷைலஜா
சுட்டிக்கு நன்றி கேயாரெஸ்
கண்ணதாசன் புகழ் என்றும் அழியாத ஒன்று