Sunday, August 21, 2011

அதோ வருகிறான் குட்டிக் கண்ணன்


    
 
முட்டித் தேய தவழ்ந்து நகர்ந்து
சட்டிவெண்ணைதனை முகர்ந்து,

எட்டி உதைத்துருட்டித் தள்ளி,

கொட்டிப்போன கட்டிவெண்ணை

குட்டிக்கைகள் வழிய அள்ளி,

மொட்டுவாயில் அடைத்து,சப்புக்

கொட்டி ரசித்து,ருசித்து,-வயிறு

முட்டத் தின்னும் குட்டி அரியின்

சுட்டித்தனம் கண்ட அன்னை,

''பட்டு விடும கண்?''என்றஞ்சி,

பட்டுக்கன்னம் தொட்டு வழித்து,

முட்டிமடக்கி த்ருஷ்டி கழித்து,

கட்டக்கரு மை பொட்டுஒன்று
முகில்வண்ண முகத்திலிட்டு,

சிறுமாலை மடியில் போட்டு,

பாடுகிறாள் திருத்தாலாட்டு!
தாயவள்கை தள்ளி உருண்டு

தத்தக்கா புத்தக்கா நடை நடந்து,

விழுந்து,மீண்ட தாய்மடியில்

படுக்கிறான் அரிக்கொழுந்து!

பாலூட்டும் தாய் கையிலிருந்து

பாலாடை சங்கு பறித்து,

கரத்தில் சங்கு ஏந்தும் அரியாய்

அருள்கிறான் திருக் காட்சி.!

தட்டிக்கொட்டிய பாலில் விழுந்து

பட்டாடை நனையப் படுத்து

பாற்கடலில்  பள்ளி கொண்டு

அருள்கிறான் திருக் காட்சி!.

17 comments :

Kavinaya said...

வாவ், அம்மா! குட்டிக் கண்ணனின் குறும்புகளும், காட்சியும், கண் முன்னே! ரொம்ப அழகா இருக்கு, அவனைப் போலவே!

Kavinaya said...

கலா, மிக ரசனையுடன் பாடலை செய்து தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

Sankar said...

கொட்டிய பாலில் புரளும் குட்டிக்கண்ணன் // so cute.. :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாவ்! இப்போது தான் இதையும் கண்டேன்! என்னமா இசைக் கோர்வை! நன்றி கலா + லலிதாம்மா! கொஞ்சம் முன்னமே சொல்லி இருந்தா, அத்தனை கண்ணன் குழுவினரையும் கூப்பிட்டு, உங்க பாட்டுக்கு, கும்மி அடிக்கச் சொல்லி இருக்கலாம்! :)

//படுக்கிறான் அரிக்கொழுந்து//

ஐ லைக் திஸ் சொல்லாட்சி = அரிக்கொழுந்து!

பொதுவாச் சிவக்கொழுந்து-ன்னு நானும் என் தோழனும் சொல்லுவோம்...குமரன் அண்ணா பெண்ணை! :)
இப்போ அரிக்கொழுந்தும் வந்துரிச்சி!:))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உங்கள் பாட்டில் உருட்டிய பாலும் வெண்ணையும் கண்ணன் பாட்டு வலைப்பூவில் சேறாகி...கண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே!

//தத்தக்கா புத்தக்கா நடை நடந்து,
படுக்கிறான் அரிக்கொழுந்து!
பாலாடை சங்கு பறித்து,
கரத்தில் சங்கு ஏந்தும் அரியாய்
அருள்கிறான் திருக் காட்சி//

அப்படியே குழந்தை உலகப் பேருரு (விஸ்வரூபம்) காட்டியது போல் இருக்கு!

Lalitha Mittal said...

கவிநயா,

இந்தப்பாட்டு இப்போ எழுதினதுதான்;ஆனால் கோமாவில் பலவருடங்களாகக் கிடந்த என் பஜனைப்பாட்டுக்களை தன் சஞ்சீவினிக் குரலால் உயிர்த்தெழச் செய்பவள்

கலா;இதற்குமேல் வேறென்ன சொல்வதுன்னு தெரியலை!

Lalitha Mittal said...

sankar,
thanks;i happened to c yr meeraa bhajan;suddenly it has disappeared?

Lalitha Mittal said...

கே ஆர் எஸ்,

'பால் வடியும்'பாட்டைப் பதிவிட்டதற்கு நன்றி!பித்துக்குளியின் குரலில் ரொம்ப இனிமை!அருமையான பதிவு!



என் குட்டிக்கண்ணன் பாட்டுக்காக வரும் வாழ்த்துக்கள் யாவும் கலாவுக்கே சேரனும்;இந்தப்பாட்டை நான் எழுதியிருக்கும் விதம்' இசை அமைப்பதில் அவளுக்கு எவ்ளவு கடினமாயிருந்திருக்கும் என்று நான் அறிவேன்!

சென்னையில் இருப்பவளை டெல்லியிலிருந்து ஆட்டி வைக்கிறேன்!

கண்ணன் அவளைக்காக்க!



விஸ்வரூபம்=உலகப்பேருரு..அழகிய தமிழாக்கம்!நன்றி!

Sankar said...

It will be posted by tomo amma. :) its bit melancholy one.. So deferred from posting it due to Krishna Jayanthi.

Lalitha Mittal said...

wtng to hear premdhivaanee's bhajan!

Radha said...

பாடல் மிக அருமை.

Lalitha Mittal said...

thanks RADHA,KUTTIKKANNAN WS LONGING TO C U! :-)

திகழ் said...

கண் முன்னே காட்சியாய்

வாழ்த்துகள்

Lalitha Mittal said...

வருகைக்கு நன்றி திகழ்!

குமரன் (Kumaran) said...

அருமை அருமை அம்மா. பாடலும் அருமை. பாடியவர்களும் அருமையாகப் பாடியிருக்கிறார்கள்.

Lalitha Mittal said...

குட்டிக்கண்ணனின் குரும்பை ரசிக்க குமரன் வரவில்லையே என்று எண்ணியிருந்தேன் ;

வந்து ரசித்ததற்கு நன்றி குமரன் !

S.L. Chandrasekaran said...

Hari and Ari what a brilliant composition. It appears to be simple but what a thoughtful expression. Sri Baaaala Krishnan leelai pictured before the reader. It is mind blowing.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP