New Year! துளசி தளம்! உன்னால் முடியும் தம்பி!
அனைவருக்கும் & கண்ணன் பாட்டு நேயர்களுக்கும்...,
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)
Wish You All A Very Happy New Year-2011
புத்தாண்டில், "நிம்மதியான சந்தோஷங்கள்", உங்களைப் பூப்போலச் சூழட்டுமென என் முருகனிடம் சொல்லிக் கொள்கிறேன்! :)
அது என்ன "நிம்மதியான" சந்தோஷம்? :)
மனசுக்கு நிம்மதி இருந்தாலே, பாதி சந்தோஷம் வந்துரும்! மீதி சந்தோஷம், நாம் தேடி அடைஞ்சிக்குவோம்! என்ன சொல்றீங்க? :)
சந்தோஷம்-மகழ்ச்சி என்பதால், புத்தாண்டு அன்று ஒரு "சந்தோஷமுகா" பாட்டு(லு) இப்புடு சூஸ்தாவா? :)
கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்பதற்கு ஏற்றவாறு,
ஒரு அழகிய தியாகராஜ கீர்த்தனை!
அதை மெட்டு மாறாமல், தமிழாக்கி இதோ! = சந்தோஷமுகா! சந்தோஷமுகா!
சந்தோஷம்-ன்னா கூடவே துளசி தளம் வருது பாருங்க! :)
அலைச்சலுக்கும், பெரும் காத்திருப்புக்கும் பிறகு, காற்றில் மெல்லீசாய் வரும் துளசி வாசமே ஒரு தனி சந்தோஷம் தானே!
கூடவே பல பூக்களின் வாசமும் பாட்டில் வீசுது! கேட்டுக்கிட்டே படிங்க!
துளசி தளமுலசே
சந்தோஷமுகா...பூஜிந்து
துளசி தளம் அதினால்
மகிழ்ச்சியுடன்...பூசித்து
பலுமாரு சிறகாலமு
பரமாத்முனி பாதமுலனு
(துளசி தளமுலசே)
பல்லாண்டு பல்லாண்டே
பெருமாளின் திருவடிக்கே!
(துளசி தளம் அதினால்)
சரசீருஹ புன்னாக சம்பக
பாடல குருவக
கரவீர மல்லிக சுகந்த
ராஜ சுமமுல
(துளசி தளமுலசே)
தாமரை புன்னையும் சண்பகமும் - தரு
பாதிரி குருந்தை மலருடனே
அரளியும் மல்லியும் மணங்கமழும் -என்
மனம் மலர் பூக்கள் பலவுடனே
(துளசி தளம் அதினால்)
தரணி வி ஒக்க பர்யாயமு
தர்மாத்முனி சாகேத
புர வாசுனி ஸ்ரீ ராமுனி
வர தியாகராஜ நுதுனி
(துளசி தளமுலசே)
தரணியில் எழுஎழு பிறவி தனில் - அற
ஆழியை அயோத்தி ஆள்பவனை
மனமதில் வாழுமென் ராகவனை - உனை
தியாக ராசன் தினம் பாடி மகிழவே
(துளசி தளம் அதினால்)
பாட்டில் வரீசையா, பல பூக்களைச் சொல்லி அர்ச்சிக்கிறாரே தியாகராஜர்!
லேடீஸ் & ஜென்டில் லேடீஸ்...
அத்தனை பூவையும் நோட் பண்ணீங்களா?
அதுல, சில பூவை எல்லாம் கண்ணுல பார்த்தாச்சும் இருக்கீங்களா? :))
1. தாமரை
2. புன்னை
3. சண்பகம்
4. பாதிரி
5. குருந்தை
6. அரளி
7. மல்லி
8. துளசீ தளம்
&
9. மனப் பூ
எனக்குக் கடைசிப் பூவை நல்லாவே தெரியும்-ப்பா! ஏன்-ன்னா அது தான் நான் சொல்லும் பேச்சைக் கேட்கவே கேட்காது! :)
உம்.....தமிழாக்கம் என்பதால் என்னோட குரலில் கேட்டீங்க! உங்க விதி! :)
ஆனா மூலப் பாடலை நல்ல குரலில்...இசைக் கருவிகளில் கேட்போமா? One Stop Shop for this Song!
திரைப்படம்: உன்னால் முடியும் தம்பி! ஜேசுதாஸ் குரலில்...
* நித்ய ஸ்ரீ
* Hyderabad Brothers
படம்: ப்ரணய காலம் (Dont Miss; Again Yesudass, but in a different tone)
வீணை:
கொல்கத்தா கலா-சித்ரா
மகரந்தம் மணக்க...
மலர்கள் பூத்துக் குலுங்க...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! :)துளசி தளமுலசே, சந்தோஷமுகா....
63 comments :
விதி நல்லாதான் இருந்தது - ஐ மீன் நீங்க பாடின பாட்டு! உங்களுக்கும்,
கண்ணன் பாட்டு வாசகர்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
மனமதில் இராகவன் இருக்கும்போது,
மனமது மனப்பூதான் - மணம் பூதான்.
//நல்லாதான் இருந்தது - ஐ மீன் நீங்க பாடின பாட்டு //
இதை ரிப்பீட் அடிச்சிக்கறேன். புத்தாண்டில் கேட்ட முதல் பாடல். விதி எப்படி இருக்குன்னு பார்க்கலாம். :-)
நல்லா அமையும் என்று நம்பி (இல்லாட்டியும் பரவாயில்ல) தியாகராஜருக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்.
கஷ்ட நஷ்டங்கள் வந்தால் கண்ணபிரான் பொறுப்பு. :-)
இது தான் பாதிரி பூவா? தெரிஞ்சி வெச்சிக்கறேன்.
பாண்ருக்கு திருவடிகளே சரணம் ! :-)
happy new year to all !
அருமை. மலர்களால் புத்தாண்டின் வரவேற்பு நறுமணம் வீசுகிறது.
பாதி சந்தோஷம் நிம்மதி. சரி தான். மீதி நாம் தேடி போக வேண்டாம். சந்தோஷம் எங்கயும் வெளியில இல்ல..நமக்குள்ள என்று புரிந்து கொண்டால் முழு நிம்மதி நிறைந்துவிடும். அதுவே சந்தோஷமும் ன்னு - பெரியவங்க சொல்வாங்க.
துளசீதளமுல....பழைய நினைவுகளை கிண்டி விடுகிறது. தியாகராஜர் = மஹான்.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்! பதிவைப்படிக்ககூட நேரமில்லாமல் புத்தாண்டு இனிப்பு(அதேதான்) செய்வதில் பிசியாகிட்டேன் வரேன் சீக்கிரமா! அட ஷக்திப்ரபால்லாம் முன்னாடி வந்துட்டாங்க..வா ஷக்தி நல்வரவு!
அருமையான பாடலின் அறிமுகத்திற்கு நன்றி இரவி! புத்தாண்டு வாழ்த்துகள்!
//இனிய புத்தாண்டு வாழ்த்துகள் அனைவருக்கும்! // :))
(MY tamil thanks to Shailaja aunty's comment and copy-paste option :))))
Dear all,
Here's wishing a very happy, prosperous, joyful, new year!
May Perumal and Thaayar shower their blessings!
"An end is a new beginning."
MAY THIS BEGINNING BE FRUITFUL FOR EVERYONE.
May Krishna guide us to our goals this year! :) May He bless joy, prosperity and success on all!
May we find Him enshrined in our hearts, may we find more love for Him every next day, may we serve Him more and more this year and forever, and may He bless us with the ability to talk about Him, spread His fame to one and all :))
//புத்தாண்டில், "நிம்மதியான சந்தோஷங்கள்", உங்களைப் பூப்போலச் சூழட்டுமென என் முருகனிடம் சொல்லிக் கொள்கிறேன்! :)//
Naan PSP-idam petition podren! :)
@Shylaja aunty:
Tiruvallikeni-yil irukkum ranganathar-kku unga wishes solliten! Happy? :))
மணம் கமழும் மலர்களுடன் புத்தாண்டின் வரவேற்பு இனிக்கிறது.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ரசித்தேன் ரவி.
நன்றாகவே இருந்தது.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
//May we find Him enshrined in our hearts, may we find more love for Him every next day, may we serve Him more and more this year and forever, and may He bless us with the ability to talk about Him, spread His fame to one and all :))
//
wonderful wishes they are ! இந்த வரிகளைப் படித்து என் மனம் ஆனந்தக் கடலாடுகிறது. :-)
//Tiruvallikeni-yil irukkum ranganathar//
@KK,
i need not tell you...in case you haven't tried this...when you are before Him, tilt your head to your left by 60 degrees or more...and behold that beauty ! that killer smile in His face !!! srirangam ranganathar is yasodha krishnan with chubby cheeks and He is more in a contemplative mood...thinking of His next target...triplicane arangan is a real "maapillai" :-)
your heart is already with PSP, so you can safely have a look ! :-)
@Radha:
yes, i know!!!
btw, ranganathar has a totally different place in my life- i was born at His feet! The first water i drank, the first water i bathed in-all had touched Him (Kaveri)!
And, i know, He is so calm in tpcane.
He's my KP, and here, He is so relaxed!
Sometimes, i wish PSP would lie down like Him, He must be so tired standing all the time!
You know, my dreams with KP have been like He sat up on His bed all of a sudden, then suddenly got up, and came walking towards me!
That was at a time when i was getting back to Perumal after having remained aloof for a couple of years. i won't forget what it was like to me! Everytime KP comes in my dreams, it's exhilirating. i tend to "expect" the next time. Ofcourse, i'd very much love to see Him for real. It's been like 10 years, and so you can imagine how young i might have been.
The only way i remember KP is through my dreamz:)
@Radha:
//your heart is already with PSP//
:)))
all i can say is: //இந்த வரிகளைப் படித்து என் மனம் ஆனந்தக் கடலாடுகிறது. :-)//
//Sometimes, i wish PSP would lie down like Him, He must be so tired standing all the time! //
oh ! i don't have an iota of doubt...you are truly my sister ! :-) i used to think the same way but w.r.t VK... :-)
for the benefit of those who are new to the forum:
PSP = Partha Sarathy Perumal (Triplicane Urchavar)
VK = Venkata Krishnan (same temple moolavar)
please don't think we are mad ! :-)
@கே.ஆர்.எஸ்
பூக்களின் படங்களை கொடுத்ததற்கு கோடி நன்றி. மனப்பூ எப்படி இருக்கும்னு படம் போடலையே ! :-)
பெரியாழ்வார் பாசுரங்கள் சிலவற்றின் கடைசி வரிகள் மட்டும்.
++++++++++++++++
தேனில் இனிய செண்பகப் பூச்சூட்டவாராய் !
திருவுடையாள் மணவாளா ! திருவரங்கத்தே கிடந்தாய் !
மருவிமணம் கமழ்கின்ற மல்லிகைப் பூச்சூட்டவாராய் !
பச்சைத் தமனகத்தோடு பாதிரிப் பூச்சூட்டவாராய் !
பொருது வருகின்றபொன்னே ! புன்னைப் பூச்சூட்டவாராய் !
தெள்ளிய நீரிலெழுந்த செங்கழுநீர் சூட்டவாராய் !
குடந்தைக் கிடந்தஎம்கோவே ! குருக்கத்திப் பூச்சூட்ட வாராய் !
அணியரங்கத்தேகிடந்தாய்...இருவாட்சிப் பூச்சூட்டவாராய் !
கண்டு நான் உன்னை உகக்கக் கருமுகைப் பூச்சூட்டவாராய்
+++++++++++++++
"கண்ணனைப் பூச்சூட அழைத்தல்" என்ற வகையில் அமைந்த மேற்படி பெரியாழ்வார் பாசுரங்கள் "ஆனிரை" என்று தொடங்கும் ஏழாம் திருமொழியில் காணக் கிடைக்கும்.
//எத்தனை பூக்கள்! எத்தனை நிறங்கள்! எங்க கிடச்சிது இத்தனையும்! awesome!
பாட்டும் பூ ன்னு ஊதித்தள்ளிட்டீங்க ! நல்லாருக்கே! சாதாரணமா இந்தமாதிரி பாடப் போறேன்னு முன்னெல்லாம் எனக்கு அட்வான்சா சொல்வீங்க :)
பிச்சி மந்தாரம் துளசி .....பாட்டு நினைவுக்கு வந்தது துளசிதளம் என்றதுமே...ராதா தெரிவித்துள்ள பெரியாழ்வார் பாட்டும் அருமை..மலர்களைப்பற்றி எழுதினாலே மணக்கிறது பதிவு!
//Radha said...
@கே.ஆர்.எஸ்
பூக்களின் படங்களை கொடுத்ததற்கு கோடி நன்றி. மனப்பூ எப்படி இருக்கும்னு படம் போடலையே
///
என்னதுமனப்பூவா? வம்பு பண்றீங்க ராதா விடப்போறார் உங்க தோஸ்து அம்பு:):)
//ஜீவா (Jeeva Venkataraman) said...
மனமதில் இராகவன் இருக்கும்போது,
மனமது மனப்பூதான் - மணம் பூதான்//
:)
ஜீவா, இந்தப் பின்னூட்டத்துக்கு கோடி கொடுப்பேன்! மிக்க நன்றி!
//ஜீவா (Jeeva Venkataraman) said...
விதி நல்லாதான் இருந்தது - ஐ மீன் நீங்க பாடின பாட்டு!//
விதி நல்லா இருந்துச்சுன்னு சொன்னதுக்கும் நன்றி! பாருங்க, என்னை வம்பு செய்யும் ராதாவே, நல்லா இருக்கு-ன்னு முதன் முதலா உண்மையை ஒத்துக்கிட்டு இருக்காரு! :)
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜீவா!
// Radha said...
இதை ரிப்பீட் அடிச்சிக்கறேன். //
நன்றி ராதா! அப்பப்போ Shock கொடுக்கற! :)
//நல்லா அமையும் என்று நம்பி (இல்லாட்டியும் பரவாயில்ல)//
சேச்சே! உனக்கு நல்லா அமையும் ராதா!
நல்ல பதத்தால் மனை வாழ்வர், அல்லிக் கமலக் கண்ணனை,
அந்தண் குருகூர்ச் சடகோபன்!
//கஷ்ட நஷ்டங்கள் வந்தால் கண்ணபிரான் பொறுப்பு. :-)//
அந்தக் கஷ்டத்துக்குத் தான் நஷ்டம் வரும்!
உன் இஷ்டத்துக்கு லாபமே வரும் ராதா! :)
// Radha said...
இது தான் பாதிரி பூவா? தெரிஞ்சி வெச்சிக்கறேன்//
என்னது? தெரிஞ்சி, "வச்சிக்கிறியா"? நீ எதுக்கு ராதா பூ வச்சிக்கிற? :)
நல்லா இருக்காது! Pl give it to Her Excellency KK! :)
//பாண்ருக்கு திருவடிகளே சரணம் !//
திருட்டு ராஸ்கல் ராதா:)
அதுக்குள்ள என் ரகசியத்தைக் கண்டுபுடிச்சிட்டியா? உன்னை எவன் படத்தின் filename எல்லாம் பார்க்கச் சொன்னது! I love PaanRuk! :) பேரு நல்லா இருக்கா! அவனை அப்படிக் கூப்பிட எனக்கு ரொம்பப் பிடிக்கும்!
ருக் ருக் ருக், அரே பாபா ருக், பாண் ருக் ருக்! :)
பாண்டுரங்கன்-ருக்மிணி திருவடிகளே சரணம்! :)
//Shakthiprabha said...
அருமை. மலர்களால் புத்தாண்டின் வரவேற்பு நறுமணம் வீசுகிறது//
நன்றி ஷக்திப்ரபா! புத்தாண்டு வாழ்த்துக்கள்! ஷைலஜா-க்காவைப் பார்க்க பெங்களூர் வரும் போது, உங்களிடம் பேசுகிறேன், அக்காவின் மை.பா சாப்பிட்டு, குரல் இருக்கும் பட்சத்தில்... :)
//சந்தோஷம் எங்கயும் வெளியில இல்ல..நமக்குள்ள என்று புரிந்து கொண்டால் முழு நிம்மதி நிறைந்துவிடும். அதுவே சந்தோஷமும் ன்னு - பெரியவங்க சொல்வாங்க//
அப்போ நீங்க சொல்ல மாட்டீங்களா? :)
சந்தோஷம் வெளியில் இல்லை, உள்ளே-ன்னு சிம்பிளாச் சொல்லிட்டீங்க! So, சந்தோஷம் = இறைவன்! :)
// Shakthiprabha said...
துளசீதளமுல....பழைய நினைவுகளை கிண்டி விடுகிறது//
என்ன நினைவுகள்? அதைச் சொல்லாம சஸ்பென்ஸ் வைத்தால் எப்படி? :)
//ஷைலஜா said...
பதிவைப்படிக்ககூட நேரமில்லாமல் புத்தாண்டு இனிப்பு(அதேதான்)//
ஹிஹி! அது பேரைச் சொல்ல, நீங்களே இப்பல்லாம் பயப்படறீங்களா-க்கா? சூப்பரு! மை.பா-வுக்கு பதிலா இனி ஷை.பா-ன்னு சொல்ல வேண்டியது தான்! :)
//அட ஷக்திப்ரபால்லாம் முன்னாடி வந்துட்டாங்க..வா ஷக்தி நல்வரவு!//
ஓ...அவங்க முன்னாடி வரக் கூடாதா? எப்பமே நீங்க தான் முன்னாடி இருக்கணுமா, பள்ளிக்கூட நாளில் இருந்து? :)
//குமரன் (Kumaran) said...
அருமையான பாடலின் அறிமுகத்திற்கு நன்றி இரவி! புத்தாண்டு வாழ்த்துகள்!//
நன்றி குமரன்! இந்தத் தியகாராஜர் பாட்டில் சில ஆழ்வார் பாசுரங்கள் ஒளிஞ்சிக்கிட்டு இருக்கு! என்ன-ன்னு கண்டுபுடிங்க! :)
//May we find Him enshrined in our hearts, may we find more love for Him every next day, may we serve Him more and more this year and forever, and may He bless us with the ability to talk about Him, spread His fame to one and all :))//
Wow I like this blessing from Her Excellency KK :)
One small correction, May He serve us more & more this year! :)
//may we find more love for Him every next day//
nopes!
more love for Him, every next minute! bcoz one full day of love is huge! I dont have the strength to bear it! So minute by minute love! Muruga, vaa love pannalaam :)
//Tiruvallikeni-yil irukkum ranganathar-kku unga wishes solliten! Happy? :))//
திருவல்லிக்கேணியில் எனக்கு ரொம்ப பிடிச்சது இது!
இந்தப் பக்கம் = பெரிய-பெருமாள் = அரங்கன்!
அந்தப் பக்கம் = பெருமாள் = இராமன்!
திருவரங்கத்தில் கூட இப்படிப் பக்கத்துப் பக்கத்தில் இருக்க மாட்டாங்க!
It looks as if in Ayodhya, Raaman worshipping Arangan, before giving the statue to Vibeeshanan! :)
//மாதேவி said...
மணம் கமழும் மலர்களுடன் புத்தாண்டின் வரவேற்பு இனிக்கிறது//
நன்றி மாதேவி!
மலர்கள்-ன்னு சொல்லும் போதே மலர்ச்சியா இல்ல? :)
I have a secret wish that KK shd not know. If I know magic, I will transform myself to a rose and go and hug His neck :)
//வல்லிசிம்ஹன் said...
ரசித்தேன் ரவி. நன்றாகவே இருந்தது//
வல்லிம்மா, வாங்க, புத்தாண்டு வாழ்த்துக்கள்! கண்ணன் பாட்டில் எப்போ அடுத்த பாட்டு பாடித் தரப் போறீங்க? :)
//tilt your head to your left by 60 degrees or more...and behold that beauty ! that killer smile in His face !!!//
killer! killer! :)
whatz the short name for this guy? TVR? :)
//srirangam ranganathar is yasodha krishnan with chubby cheeks and He is more in a contemplative mood...thinking of His next target...//
nopes! he is the real maapiLLai...tired and contemplative, after maapiLLai's night! :)
//triplicane arangan is a real "maapillai" :-)//
he is மா+பிள்ளை
and our arangan is மாப்பிள்ளை!
:)
//Sometimes, i wish PSP would lie down like Him, He must be so tired standing all the time! //
நின்ற கால்கள் நொந்தவோ
நீயும் அல்லிக் கேணியில்?
ஒன்று தர்மம் சொன்னவா
ஓய்வெடுக்க ஓண்ணலார்
நன்று உன்தன் வாய்மொழி
நானும் அங்கு நோக்கையில்
அன்று வைத்த மீசையே
இன்றும் எந்தன் ஆசையே!
- இது எந்த ஆழ்வார் பாசுரம்-ன்னு கண்டுபுடிங்க! :)
//PSP = Partha Sarathy Perumal (Triplicane Urchavar)
VK = Venkata Krishnan (same temple moolavar)
please don't think we are mad ! :-)//
No Way!
We dont "think" Radha is mad!
We all know, he is! :)
PSP-KRS
VK-GR (giridhaari-yin Radha)
// Radha said...
@கே.ஆர்.எஸ்
பூக்களின் படங்களை கொடுத்ததற்கு கோடி நன்றி//
நன்றி-ன்னு வாயால் சொன்னால் போதாது! அத்தனை பூவையும் மாலையாக் கட்டிக் கொடு! :)
//மனப்பூ எப்படி இருக்கும்னு படம் போடலையே ! :-)//
மனப்பூ பூப்பதே தெரியாது!
திடீர்-ன்னு வீசுமா வாசம்!
ஓ பூத்தாச்சு-ன்னு அப்போ தான் தெரியும்! :)
என் கிட்ட கேட்காம, நீ பாட்டுக்கு, அவனுக்கு எப்படி பூத்தாய்-ன்னு அப்பறமா சண்டை போடுவேன்! :)
//செங்கழுநீர் சூட்டவாராய் !
குருக்கத்திப் பூச்சூட்ட வாராய் !
இருவாட்சிப் பூச்சூட்டவாராய் !
கருமுகைப் பூச்சூட்டவாராய்//
இந்த நாலுத்துக்கும் படம் போட்டுரு ராதா! :)
மீதியெல்லாம் பதிவில் இருக்கு! :)
//பாட்டும் பூ ன்னு ஊதித்தள்ளிட்டீங்க ! நல்லாருக்கே!//
:)
ஊதியா? அந்தப் பழக்கம் எனக்கு இல்லியேக்கா! :)
//சாதாரணமா இந்தமாதிரி பாடப் போறேன்னு முன்னெல்லாம் எனக்கு அட்வான்சா சொல்வீங்க :)//
இப்பவும் சொன்னேனே! என் பெங்களூரானுக்கு! :)
//பிச்சி மந்தாரம் துளசி .....பாட்டு நினைவுக்கு வந்தது துளசிதளம் என்றதுமே...//
பிச்சிப்பூ, மந்தாரம் - இதெல்லாம் இப்போ கிடைக்குதா?
@KRS:
What is this stupid Her excellency business????
////PSP-KRS
VK-GR (giridhaari-yin Radha)//
ahem, ahem....
enakku "j" varaadhu!
En endraal naan PSP-kku sondham!!!
Ponga!Ponga!
@Radha:
anna, i meant VK only! :)
actually, for me VK=PSP!
@KRS:
//Wow I like this blessing from Her Excellency KK :)//
happa Perumal-e!
this was a prayer.
i need your blessings, and not the other way round. :)
//என்னது? தெரிஞ்சி, "வச்சிக்கிறியா"? நீ எதுக்கு ராதா பூ வச்சிக்கிற? :)
நல்லா இருக்காது! Pl give it to Her Excellency KK! :)//
When did i become ambassador of US??
btw, i don't keep flowers, except when they come from Him.
i took this oath last year in Tirupati.
PSP always makes sure He gives me a lot of flowers. :)
so, please offer those flowers to HIM.
If He wishes, let Him give it here to me! :))
//anna, i meant VK only! :)
actually, for me VK=PSP!
//
thank you sister ! i understand ! :-)
One day or the other people may solve the equation:
1.67 lakh crores = 0
But they are never going to understand our notations and equations ! :-)
glory to krishna !
//Pl give it to Her Excellency KK! :) //
just a few hours ago submitted ample flowers to Her Excellency - Kaarunya Kadal - residing in besant nagar ashtalakshmi temple ! :-)
//இந்த நாலுத்துக்கும் படம் போட்டுரு ராதா! :)
//
பாசுர வரிகளை கொடுத்ததே நீ கண்டுபிடிச்சி சொல்வேன்னு தான் ! :-)
//திருவல்லிக்கேணியில் எனக்கு ரொம்ப பிடிச்சது இது!
இந்தப் பக்கம் = பெரிய-பெருமாள் = அரங்கன்!
அந்தப் பக்கம் = பெருமாள் = இராமன்!
//
இவர்கள் இருவர் இருப்பதனாலேயே எவ்வளவு நீண்ட வரிசை இருந்தாலும் க்யூவில் நிற்பது தெரியாது. முதலில் வழி நெடுக ஆச்சார்யர்கள் - திருக்கச்சி நம்பிகள் தொடங்கி மணவாள மாமுனிகள் வரை. அடுத்து தூர இருந்து பார்த்தசாரதியை ஒரு முறை பார்த்து விடலாம். அடுத்த சில நிமிடங்களில் ராமர், அரங்கன்...சிரமம் தெரியாமல் தொடர்ந்து தரிசன மழை தரும் திவ்ய தேசம்.
இதை எல்லாம் முடிஞ்சி வந்தா புளியோதரை முதல் காஞ்சீபுரம் இட்லி வரை ஒரு கை பார்க்கலாம். :-)
//When did i become ambassador of US??//
Her Excellency-naa, "Excellent" aa baama = aaNdal combi paNNathukku :)
//btw, i don't keep flowers, except when they come from Him.
i took this oath last year in Tirupati//
ஓ...
Fyi...
திருமலையில் எவ்வளவு பெரிய VIPஆக இருந்தாலும், யாருக்கும் மாலையோ, பூக்களோ தருவதில்லை! ஏனென்றால் திருமலை மேல் பூக்கள் எல்லாம் எம்பெருமானுக்கு மட்டுமே உரியவை! உடுத்திக் களைந்த பூக்களும் பூங்கிணற்றில் தான் போடப்படும்! இப்படியொரு சட்டம்!
//முதலில் வழி நெடுக ஆச்சார்யர்கள் - திருக்கச்சி நம்பிகள் தொடங்கி மணவாள மாமுனிகள் வரை.//
ஆமாம்! இராமானுசர் மட்டும் இராமனைப் போல் உள்ளடங்கி இருப்பார்! :)
//அடுத்து தூர இருந்து பார்த்தசாரதியை ஒரு முறை பார்த்து விடலாம்//
அவன் தான் கம்பிக்கு இடையில் கூட, வெட்கமில்லாமல் போஸ் கொடுப்பானே! நானும் வெட்கமில்லாமல் பார்த்துக் கொண்டே இருப்பேனே!
//அடுத்த சில நிமிடங்களில் ராமர், அரங்கன்...சிரமம் தெரியாமல் தொடர்ந்து தரிசன மழை தரும் திவ்ய தேசம்//
அரங்கன், ராமனுக்கு இடையில் 180deg திரும்பினால், இராமனைப் பார்த்தவாறு நம் ஆஞ்சநேயன்! So Cute! :)
அப்படியே ஆழ்வார்களை எல்லாம் ஒரு லுக்கு விட்டுறலாம்!
என்ன, ஆச்சார்யர்கள் தனியாத் தெரிவார்கள் வரிசையில் நுழையும் போது! ஆனால் ஆழ்வார்கள் கதிரவன் முன் நிலவு போல்...இந்தப் பார்த்தசாரதியைப் பார்க்கும் மயக்கத்தில், ஆழ்வார்கள் சட்டென்று தெரியமாட்டார்கள்! ஆனா அதானே ஆழ்வார்கள் விரும்பியதும்! தங்களை முன்னிறுத்தாது, அவனையே முன்னிறுத்தி...உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் எம்பெருமான்...PSP எம்பெருமான்!
@KRS:
//இவர்கள் இருவர் இருப்பதனாலேயே எவ்வளவு நீண்ட வரிசை இருந்தாலும் க்யூவில் நிற்பது தெரியாது. முதலில் வழி நெடுக ஆச்சார்யர்கள் - திருக்கச்சி நம்பிகள் தொடங்கி மணவாள மாமுனிகள் வரை. அடுத்து தூர இருந்து பார்த்தசாரதியை ஒரு முறை பார்த்து விடலாம். அடுத்த சில நிமிடங்களில் ராமர், அரங்கன்...சிரமம் தெரியாமல் தொடர்ந்து தரிசன மழை தரும் திவ்ய தேசம்.//
Yes, but since PSP is very kind enough never to let me stand in the line (avarukku porukaadhu, ulle straight-a kootittupoyiduvaaru)my way is different.
1)first anjaneyar
2)then ramar, from a distance
3)then psp, psp, psp, psp....
4)then, if there is no rush, SRI RANGANATHAR
5)on my way out, alwars
but i never miss manavaala maamunigal before going inside
(i told u, na ranganathar inspires me more by His invisibility than visibility)
@KK
காலை எழுந்தவுடன் படிப்பு-ன்னு பாரதியார் பாடி இருக்காரு!
நீங்க காலையில் எழுந்தவுடன் கண்ணன் பாட்டா? :))
//ulle straight-a kootittupoyiduvaaru)my way is different.//
என் வழி தனி வழி! :)
இது திருவல்லிக்கேணி பாட்ஷா-வா? :))
//i told u, na ranganathar inspires me more by His invisibility than visibility//
அடேங்கப்பா! KK is really kalakkings! :)
* Invisibility than Visibility!
* Exclusively Exclusive to everyone!
இப்படி நச்-ன்னு தத்துவ மகா வாக்கியமா அப்பப்ப எடுத்து விடறதைப் பார்த்தால் - No Doubt She is Her Excellency தான்! :))
உங்க தும்பையூர் கொண்டி Part-2 இன்னும் ரெண்டு மணி நேரத்தில் வந்துரும்! Beware of falling flat before Thiruvenkatam Udaiyaan! :))
அழகான தமிழாக்கம்; அழகா பாடியுமிருக்கீங்க :) பூக்களின் அறிமுகமும் சிறப்பு. அனைவரின் மனப் பூக்களும் அவன் குடியிருப்பால் மலர்ந்தே இருக்க, மனமார்ந்த வாழ்த்துகள்.
பாடலை Mp3- லேயும் வரும் பதிவுகளில் போடா முடியுமா !
Mp3 more comfortable for me:)
because any time use pannikkalaam . tevaipattaal phone la download pannikalaam
//பாடலை Mp3- லேயும் வரும் பதிவுகளில் போடா முடியுமா !//
இதுலயும் mp3ல தானே இருக்கு ராஜேஷ்? Click on that link below the player. A new page will open where u can download the mp3!
//Mp3 more comfortable for me:)//
எனக்கும் தான்!
//because any time use pannikkalaam . tevaipattaal phone la download pannikalaam//
yessu! :)
the main song of the post will always be in mp3 - i will try for it! but other songs from youtube konjam kashtam! try downloading real converter for free...you can convert even youtube videos to audios!
// கவிநயா said...
அழகான தமிழாக்கம்; அழகா பாடியுமிருக்கீங்க :)//
நன்றி-க்கா! அக்காவுக்கும் தன் தம்பி பொன் தம்பி! :)
//பூக்களின் அறிமுகமும் சிறப்பு. அனைவரின் மனப் பூக்களும் அவன் குடியிருப்பால் மலர்ந்தே இருக்க//
சூப்பராச் சொன்னீங்க! கவிஞர் கவிநயா-ன்னா சும்மாவா?
//Invisibility than Visibility!
* Exclusively Exclusive to everyone!
இப்படி நச்-ன்னு தத்துவ மகா வாக்கியமா அப்பப்ப எடுத்து விடறதைப்//
haiyyo!!
i was trying to point out to KP, complain to Him!
plate-ai maathiteengle!!!
Andha arangan ungalai ippadi "complaint"-la "thathuvam" kandupidikka sonnaara??
இப்படிப்பட்ட துளசியைக் கொண்டுவரவேண்டாமுன்னு சொல்லிட்டாங்கப்பா வெங்கி கோவிலில்:(
அது போன வருசம்.
அதுக்குப் பிராயச்சித்தமா இப்போ அங்கே தேங்காயை உடைக்கலாமாம்!!!!!
துளசீ தள(ம்)முலச்சே...... சேவிச்சுக்கணும்:-)