Sunday, January 02, 2011

சாதி மாணிக்கம்

புகழு நல்லொருவன் என்கோ? பொருவில் சீர்ப்பூமி என்கோ?
திகழும் தண்பரவை என்கோ? தீ என்கோ? வாயு என்கோ?
நிகழும் ஆகாசம் என்கோ? நீள்சுடர் இரண்டும் என்கோ?
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ? கண்ணனைக் கூவுமாறே.

பங்கயக் கண்ணன் என்கோ? பவளச் செவ்வாயன் என்கோ?

 அங்கதிர் அடியன் என்கோ? அஞ்சன வண்ணன் என்கோ?

செங்கதிர் முடியன் என்கோ? 

திருமறு மார்வன் என்கோ?

சங்கு சக்கரத்தன் என்கோ? சாதி மாணிக்கத்தையே !

மேலே உள்ள திவ்ய பிரபந்த பாசுரங்களை ஜானகி ராமானுஜம் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.

29 comments :

Radha said...

அன்பு ரவி,
நேரம் கிடைக்கும் பொழுது அடியார்கள் எளிதில் பாடல்களைக் கேட்கும் வகையில் player embed செய்யவும். :-)
அன்புடன்,
ராதா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அன்பு ராதா,
நேரம் கிடைத்த பொழுது அடியார்கள் எளிதில் பாடல்களைக் கேட்கும் வகையில் player embed செய்து விட்டேன் :-)
Time 3:41 am! தூங்கப் போறேன்! குட் நைட்! :)

Radha said...

//Time 3:41 am! //
யான் இதற்கு இலன் ஓர் கைமாறே !

நாடி நாடி நரசிங்கா! said...

//Time 3:41 am! //
யான் இதற்கு இலன் ஓர் கைமாறே !
same repeat:)

பங்கயக் கண்ணன் என்கோ பவளச் செவ்வாயன் என்கோ
அங்கதிர் அடியன் என்கோ அஞ்சன வண்ணன் என்கோ
செங்கதிர் முடியன் என்கோ திருமறு மார்வன் என்கோ
சங்கு சக்கரத்தன் என்கோ சாதி மாணிக்கத்தையே.

engo engo engo engo engo ellaam nam kannane! engo!

Thanks radha song:)

Radha said...

புகழும் நல் ஒருவன் = வேதங்கள் இதிஹாச புராணங்கள் எல்லாம் புகழும் நற்குணங்கள் படைத்த ஒருவன்
பொருவில் சீர்ப்பூமி = ஒப்பில்லாத சிறப்புகளை உடைய பூமி
தண் பரவை = குளிர்ச்சியான கடல்
நீள் சுடர் இரண்டும் = சூர்யன் சந்திரன்

Radha said...

நரசிம்மருக்கு பிடிச்ச ராஜேஷ் ! :-)
பாசுரங்கள் உங்களுக்கு பிடித்தது குறித்து மகிழ்ச்சி. :-)

Kavinaya said...

பாசுரம் மிக இனிமை. படங்களெல்லாம் மிக அருமை. நன்றி ராதா.

ஷைலஜா said...

சாதி மாணிக்கம்! ஆஹா என்ன அழகான பெயர்! யார் அருளீய பாசுரம் இது? பாடலைப்படிக்கும் போது இருந்த பரவசம் கேட்கும் போது அவ்ருடைய கணீரென்ற குரலில் தமிழை உச்சரித்தவிதத்தில் மிக அருமையாக மனதில்பதிந்துவிட்டது. நாலுதடவை கேட்டு கத்துக்க ஆசையும் வந்துவிட்டது நன்றி ராதா.

In Love With Krishna said...

@Radha:
pictures- awesome!!! (sollanuma?)
paadal- arumai!! (idhum solla vendam! )

appo enna sollanum?
enakku oru word purinjidhu- "pangaiya kannan"
nothing else this english-loving- tamilacchi understood!!
konjam exolain panninaal nalla irukkume!!!

ஷைலஜா said...

கேகே! பங்கயக்கண்ணன் என்றால் தாமரைக்கண்ணன். பங்கஜம் ,தமிழில் பங்கயம்!
அங்கதிர் அடியன் செங்கதிர் முடியன்?
பொருள் இன்னும் முழுமையாக பிடிபடவில்லை.

ஷைலஜா said...

கேகே! பங்கயக்கண்ணன் மட்டும் புரிஞ்சுதுன்னு சொல்லியும் நான் மறுபடி அதையே அளிச்சிட்டேன்... பஞ்சபூதங்களையும் இந்தப்பாட்டில் பெருமாளோடு ஒப்பிட்டு இருக்கிறார்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

டேய் ராதா
பந்தல்-ல போட்ட PSP படத்தைச் சுட்டுட்டியா? :)
பேரை வேற ராதாவின் ஆருயிர்-ன்னு மாத்தி வச்சிட்ட! :))
இப்ப சொல்லு, யாரு டகால்ட்டி - நீயா? நானா? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
சாதி மாணிக்கம்! ஆஹா என்ன அழகான பெயர்! யார் அருளீய பாசுரம் இது?//

என்னக்கா இப்பிடி கேட்டுட்டீங்க? நம்ம ஆழ்வார் தான்! மாறன் என்னும் பையன் தான் இப்படியெல்லாம் எழுத்திலே சித்து காட்டுவான்! :)

Kavinaya said...

//நம்ம ஆழ்வார் தான்! மாறன் என்னும் பையன் தான் இப்படியெல்லாம் எழுத்திலே சித்து காட்டுவான்! :)//

நம்ம கண்ணன் மாதிரி :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//"pangaiya kannan"
nothing else this english-loving- tamilacchi understood!!
konjam exolain panninaal nalla irukkume!!!//

என் கோ (ஆருயிர்த் தலைவன்) எப்படிப்பட்டவன் தெரியுமா?

* பங்கயக் கண்ணன் என்கோ? = கண்களோ தாமரை!
* பவளச் செவ்வாயன் என்கோ? = கனி இதழ்ப் பவளம்!
(அவன் இதழ் கொஞ்சம் துவர்ப்பாத் தான் இருக்கும் :)))

* அங்கதிர் அடியன் என்கோ? = அடிகளின் குளிர்ச்சியோ சந்திரன்!
* அஞ்சன வண்ணன் என்கோ? = அழகு மேனியோ அஞ்சனை மைக் கருப்பன்! :)

* செங்கதிர் முடியன் என்கோ? = சேர்த்துக் கட்டிய தலை முடியோ சூரியப் பிரகாசம்!
* திருமறு மார்வன் என்கோ? = மார்பிலே அவளுக்குன்னு ஒரு மச்சம் வைச்ச மச்சான்!! :)

* சங்கு சக்கரத்தன் என்கோ? = கையிலோ சங்கு சக்கரம்!
* சாதி மாணிக்கத்து ஐயே = உயர்ந்த, தரமுள்ள மாணிக்கம் போல ஐயன் அவன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

* புகழு நல்லொருவன் என்கோ? = வேதங்கள் "ஒருவன்" என்று காட்டும் நல்-ஒருவன் இவன்!

* பொருவில் சீர்ப்பூமி என்கோ? = ஒப்பு நோக்குதலில், இவன் பூமியைப் போல்! உயிர்களைத் தாங்கிக் கொண்டிருப்பான்!
ஆனால் உயிர்கள் மறந்து விடுவார்கள் பூமி தான் தங்களை ஈர்ப்பு விசையால் தாங்குகிறதென்று! :)

* திகழும் தண் பரவை என்கோ? = குளிர்ந்த பரப்பான கடலும் இவனே! (நீர்-நீரானவன்-நாரமான நாரணன்)

* தீ என்கோ? வாயு என்கோ? = தீயும் இவனே! காற்றும் இவனே!

* நிகழும் ஆகாசம் என்கோ? = இயங்கும் ஆகாயம்/வெளி இவனே!

* நீள்சுடர் இரண்டும் என்கோ? = சூரிய/சந்திரனும் இவனே!

* இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ? = இகழ்ச்சி இல்லாத இந்த ஜடப் பொருள்களும் இவனே!
* கண்ணனைக் கூவுமாறே = இந்தக் கண்ணனைக் கூவுங்கள்! கூவுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கவிநயா said...
//நம்ம ஆழ்வார் தான்! மாறன் என்னும் பையன் தான் இப்படியெல்லாம் எழுத்திலே சித்து காட்டுவான்! :)//

நம்ம கண்ணன் மாதிரி :)//

கவிக்கா சொல்லும் கண்ணன்..
புல்லாங்குழல் வச்சிருக்கும் கண்ணன்!
எழுதுகுழல் வச்சிருக்கும் கண்ணன் அல்ல! :))

Kavinaya said...

//எழுதுகுழல் வச்சிருக்கும் கண்ணன்//

இவரைத் தான் சொன்னேன் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆழ்வார், இந்தப் பாசுரத்தை, சங்க இலக்கியமான பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரத்தை அடியொற்றி எழுதுகிறார், என்பது கூடுதல் தகவல்! :)

மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ

இப்படி என்கோ என்கோ என்று கண்ணகியைக் கொஞ்சுவான் கோவலன்! அப்பாலிக்கா மறந்துருவான்! :)

ஆனால் கொஞ்சுதலை மறக்காதவன் என் முருகன்!
கொஞ்சுதலை மறவாத, மிஞ்சுதலை அறியாத
அஞ்சுதலை களைந்திட்டு, ஆறுதலை தந்திட்டு
ஏழுதலையும் என்னுடன் கூடவே இருக்கும் என்கோ என்கோ முருகோ முருகன்!!

In Love With Krishna said...

@KRS:
THANKS :)
ellame en ko!!!! :))
PSP en ko!!! :))

//சாதி மாணிக்கம்! ஆஹா என்ன அழகான பெயர்! யார் அருளீய பாசுரம் இது?////
@Shailaja aunty: avar enga ooru pakkam, theriyuma?? :))
evalavu azhaga paaduraaru!!

In Love With Krishna said...

//சாதி மாணிக்கத்து ஐயே = உயர்ந்த, தரமுள்ள மாணிக்கம் போல ஐயன் அவன்!//
Beautiful!
alwar perumal-ai konjuraaru inga!! :))

ஷைலஜா said...

கவிநயா said...
//நம்ம ஆழ்வார் தான்! மாறன் என்னும் பையன் தான் இப்படியெல்லாம் எழுத்திலே சித்து காட்டுவான்! :)//

நம்ம கண்ணன்
////////

ஷைலஜா said...

கவிநயா said...
//நம்ம ஆழ்வார் தான்! மாறன் என்னும் பையன் தான் இப்படியெல்லாம் எழுத்திலே சித்து காட்டுவான்! :)//

நம்ம கண்ணன்
/////

கவிநயா சொன்னது சரிதான்!

ஷைலஜா said...

//January 04, 2011

கவிநயா said...
//எழுதுகுழல் வச்சிருக்கும் கண்ணன்//

இவரைத் தான் சொன்னேன்
....<<<நானும் இவரைத்தான புரிந்துகொண்டேன் கவிநயாக்கும் எனக்கும் இவரைத்தான் நன்கு தெரியும்:)

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//ஷைலஜா said...
சாதி மாணிக்கம்! ஆஹா என்ன அழகான பெயர்! யார் அருளீய பாசுரம் இது?//

என்னக்கா இப்பிடி கேட்டுட்டீங்க? நம்ம ஆழ்வார் தான்! மாறன் என்னும் பையன் தான் இப்படியெல்லாம் எழுத்திலே சித்து காட்டுவான்! :)

11:45 AM, January
/<<<<<<<<<<<<<அறியாமை ரவி...நம் ஆழ்வாரின் பல பாடல்களில் நான் இன்னும் ஆழவில்லை அதான் கேட்டேன்..... ஆனா பாட்டைபடிச்சதும் கேட்டதும் ச்சே நான்லாம் கதை கவிதைன்னு என்ன எழுதறேன்னு என் மேலயே வெறுப்பாகிட்டது. ஆனா இவைகளை ஆழ்ந்து அனுபவிக்கும் ரசனையாவது இருக்கிறதே என சின்ன மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//"pangaiya kannan"
nothing else this english-loving- tamilacchi understood!!
konjam exolain panninaal nalla irukkume!!!//

என் கோ (ஆருயிர்த் தலைவன்) எப்படிப்பட்டவன் தெரியுமா?

* பங்கயக் கண்ணன் என்கோ? = கண்களோ தாமரை!
* பவளச் செவ்வாயன் என்கோ? = கனி இதழ்ப் பவளம்!
(அவன் இதழ் கொஞ்சம் துவர்ப்பாத் தான் இருக்கும் :)))

* அங்கதிர் அடியன் என்கோ? = அடிகளின் குளிர்ச்சியோ சந்திரன்!
* அஞ்சன வண்ணன் என்கோ? = அழகு மேனியோ அஞ்சனை மைக் கருப்பன்! :)

* செங்கதிர் முடியன் என்கோ? = சேர்த்துக் கட்டிய தலை முடியோ சூரியப் பிரகாசம்!
* திருமறு மார்வன் என்கோ? = மார்பிலே அவளுக்குன்னு ஒரு மச்சம் வைச்ச மச்சான்!! :)

* சங்கு சக்கரத்தன் என்கோ? = கையிலோ சங்கு சக்கரம்!
* சாதி மாணிக்கத்து ஐயே = உயர்ந்த, தரமுள்ள மாணிக்கம்
/////

சாதி மாணிக்கம் தான் அப்படியே மனசில் போய் ஒட்டிக்கொள்கிறது!

ஷைலஜா said...

//In Love With Krishna said...
@KRS:
THANKS :)
ellame en ko!!!! :))
PSP en ko!!! :))

//சாதி மாணிக்கம்! ஆஹா என்ன அழகான பெயர்! யார் அருளீய பாசுரம் இது?////
@Shailaja aunty: avar enga ooru pakkam, theriyuma?? :))
evalavu azhaga paaduraaru!!

9:34 PM, January
//
<<<<<<<<<<<<<<< உங்க ஊரு பக்கம்னு எல்லாம் தெரியும் ஆனா அவரோட எல்லா பாடல்களையும் படித்து அனுபவிக்காத பெரும் குறையை உணர்கிறேன் கேகே....இனிமே வாசிச்சிடமாட்டேனா என்ன?!

ஷைலஜா said...

/// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அன்பு ராதா,
நேரம் கிடைத்த பொழுது அடியார்கள் எளிதில் பாடல்களைக் கேட்கும் வகையில் player embed செய்து விட்டேன் :-)//
<<<<<<<<<<<<

ரவிக்கு இதுக்காக ஸ்பெஷல் நன்றி.

ஷைலஜா said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆழ்வார், இந்தப் பாசுரத்தை, சங்க இலக்கியமான பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரத்தை அடியொற்றி எழுதுகிறார், என்பது கூடுதல் தகவல்! :)

மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ

இப்படி என்கோ என்கோ என்று கண்ணகியைக் கொஞ்சுவான் கோவலன்! அப்பாலிக்கா மறந்துருவான்! :)

//<<<<<<<<<<<<<<< ஓ இது அரிய தகவல்! எங்கேருந்துதான் இப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்யறீங்களோ தம்பி...பெருமையாகவும் கொஞ்சம் பொறாமையாகவும் இருக்கு உங்களைப்பார்த்தா!

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP