Sunday, January 11, 2009

TMS பாடும் சௌராஷ்ட்ர பாடல்


நாயகி சுவாமிகள் மதுரையில் வசிக்கும் போது உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்ந்து வந்தார். பக்தியும் நற்குணங்களும் கொண்ட இல்லறத்தார் வீடுகளுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்றவற்றைப் பெறுவது தான் உஞ்சவிருத்தி. அப்படி உஞ்சவிருத்திக்குச் செல்லும் போது இறைவன் நாமத்தைப் பாடிய படியும் நல்லவழிகளை போதித்தபடியும் செல்வது வழக்கம். மக்களுக்கு நல்வழி காண்பிப்பதற்கு இதை ஒரு நல்லவழியாகக் கொண்டிருந்தனர் மகான்கள். அப்படிப் பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் பாடியது இந்த பாடல்.

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ
பக்திஹோரு தந்தனி கல்னோ
முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ மூலா
முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ

பகவத் நமமூஸ் மெல்லேத் ஜனோ - இறைவனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

பக்திஹோரு தந்தனி கல்னோ - பக்தியோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்

முகுந்தா நமமூஸ் மெல்லேத் ஜனோ - முகுந்தனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.


மூலா முடுகும் ஸேஸ்தெ தந்தனி கல்னோ - மூலையில் வைத்துள்ள பானையில் இருக்கும் அரிசியை கொண்டுவந்து நீங்கள் அளிக்கவேண்டும்.

ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ
எம தாக் நீ: தந்தனி கல்னோ
காம க்ரோத குண்ணுன் ஜனோ
தமஸ்ஹோனா தந்தனி கல்னோ


ராம நமமூஸ் கவ்லேத் ஜனோ - இராமனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

எம தாக் நீ: தந்தனி கல்னோ - எமபயம் இனி இல்லை; நீங்கள் அரிசி கொண்டு வந்து அளிக்கவேண்டும்.

காம க்ரோத குண்ணுன் ஜனோ - காமம், குரோதம் முதலிய குணங்கள் போகவேண்டும்

தமஸ்ஹோனா தந்தனி கல்னோ - தாமதம் செய்யாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ
கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ
கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ
விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ


கோவிந்த நமமூஸ் கவ்லேத் ஜனோ - கோவிந்தனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்

கோவிந்தா மெனிஸ் தந்தனி கல்னோ - கோவிந்தா என்று சொல்லியே நீங்களும் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

கேஸவ நமமூஸ் கவ்லேத் ஜனோ - கேஸவனின் நாமங்களையே பாடிக்கொண்டு செல்லவேண்டும்.

விஸ்வாஸ் ஹோரு தந்தனி கல்னோ - நம்பிக்கையோடு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ
லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ
பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ
ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ


அச்சுத நம்மூஸ் கவ்லேத் ஜனோ - அச்சுதனின் நாமங்களையே சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.

லொச்சு நீ:ஸ்த தந்தனி கல்னோ - சலித்துக்கொள்ளாமல் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

பட்சம்ஹோரு தேவுக் கவ்னோ - அன்புடன் இறைவனைப் பாடவேண்டும்.

ஹெச்சுகன் துமி தந்தனி கல்னோ - மகிழ்ச்சியுடன் நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ
குரு கைங்கர்யமூஸ் ஹொனோ
புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ
மொரி உஜுநா தந்தனி கல்னோ


ஹரி நமமூஸ் யெதுர் ஸனோ - ஹரியின் நாமங்களையே எதிர்பார்க்கவேண்டும்.

குரு கைங்கர்யமூஸ் ஹொனோ - குருவின் சேவைகளே ஆகவேண்டும்.

புருமு பொள்ளொ ஸெரிர் ஜன்னோ - புளியம்பழம் இந்த உடல்; இதை உணரவேண்டும்.

மொரி உஜுநா தந்தனி கல்னோ - இறப்பு பிறப்பு இவைகளில் இருந்து விடுபட நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ
நடனகோபாலுக் தந்தனி கல்னோ
ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ
கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ


வடபத்ரார்யுன் வாட் ஜன்னோ - நம் குருநாதரான வடபத்ரார்யரின் வழியை அறியவேண்டும்.

நடனகோபாலுக் தந்தனி கல்னோ - நடனகோபாலனுக்கு நீங்கள் அரிசி கொண்டுவந்து அளிக்கவேண்டும்.

ஹட்வி ஹட்வி தெருமூஸ் தெனோ - இன்னும் என்ன செய்யலாம்; இன்னும் என்ன செய்யலாம் என்று நினைத்து நினைத்து தருமங்களையே கொடுக்கவேண்டும்.

கெட்டாக் ஹிங்கஸ்தக் துமி அவ்னோ - கரையேறுவதற்கு நீங்கள் வரவேண்டும்.

***

2005 டிசம்பரில் 'மதுரையின் ஜோதி' பதிவில் இடப்பட்ட இந்த இடுகை இங்கே 'கண்ணன் பாட்டில்' அகில உலக ஆன்மிக சூப்பர் ஸ்டார் நண்பர் இரவிசங்கரின் கட்டளைப்படி இடப்படுகிறது.

22 comments :

Anonymous said...

//இங்கே 'கண்ணன் பாட்டில்' அகில உலக ஆன்மிக சூப்பர் ஸ்டார் நண்பர் இரவிசங்கரின் கட்டளைப்படி இடப்படுகிறது. //

ஆஹா :D
இப்படி ஒரு புனைப்பெயரா அண்ணாவுக்கு...
ரொம்ப நல்லா இருக்கு..

Anonymous said...

பாட்டு கேட்க முடியவில்லையே :(

A N A N T H E N said...

வடமொழிக்கு நல்ல மொழி பெயர்ப்பு செஞ்சி இருக்கிங்க...

எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட்டு
இந்த வரிக்கும் அர்த்தம் போட்டா நல்லாருக்கும்
"மாதாடு பாகத்தன், உத்தர கோசமங்கை"

பிகு: இது தமிழ்தான்னு சொல்லி கவுத்துடாதிங்க தல

குமரன் (Kumaran) said...

வாங்க அப்பாவிச் சிறுமி துர்கா. பாட்டு கேக்க முடியலையா? ஏன்னு தெரியலையே. உங்க அண்ணாச்சியைப் பாக்க சொல்றேன். அவர் வந்து பாத்தாலே சரியாயிடும்.

குமரன் (Kumaran) said...

ANANTHEN,

வடமொழின்னா எந்த மொழியைச் சொல்றீங்க? வழக்கமா வடமொழின்னு சமஸ்கிருதத்தை சொல்வாங்க. இங்கே இருக்குற பாட்டு சமஸ்கிருதம் இல்லை; மதுரையிலயும் தமிழ்நாட்டுல இன்னும் நிறைய ஊருலயும் வாழற சௌராஷ்ட்ர மக்கள் பேசும் மொழி. வடக்குல இப்ப யாரும் இந்த மொழியில பேசுறது இல்லைன்னு நினைக்கிறேன்.

நீங்க சொன்ன வரி தமிழ் தான். அதுல ஐயமே இல்லை. சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் (இளையராஜா கூட இசையமைத்து வெளியிட்டாரே திருவாசகம் அதை இயற்றியவர்) பாடிய வரி அது. பார்வதி அம்மையை ஒரு பாகத்தில் வைத்திருப்பதால் சிவபெருமானுக்கு மாதாடும் பாகத்தான் என்று பெயர். உத்தரகோசமங்கை என்பது ஒரு தலத்தின் பெயர்.

A N A N T H E N said...

விளக்கத்துக்கு நன்றி... நான் அது வட இந்தியாவுல இருக்கிற சமஸ்கிருதமோ இல்ல இந்தியோன்னுத்தான் இத்தனை நாள் நினைச்சிருந்தேன்

Anonymous said...

இப்போ கேட்குது குமரன் ஐயா :P

ரவி அண்ணா வர போறார்ன்னு தெரிஞ்சவுடனே எல்லாம் சரி ஆகிடுச்சு :))

Raghav said...

// υnĸnown вlogger™ said...
இப்போ கேட்குது குமரன் ஐயா :P//

ரிப்பீட்டே.. :)

Raghav said...

குமரன், என்ன ஒரு வேகம் உங்களிடம்.. நேத்து தான் இந்தப் பாடல் வரி பத்தி ரவி அண்ணா கிட்ட சொன்னேன், இன்னைக்கு போட்டுட்டீங்க.. அப்பப்போ செளராஷ்ட்ரமும் இங்கே வரட்டும் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கண்ணன் பாட்டில் செளராஷ்டிரத்துக்கு நல்வரவு! வருக வருகவே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ராகவ் கிட்ட இந்தப் பாட்டை எடுத்து இடும் படி நேத்து தான் சொல்லிக்கிட்டு இருந்தேன்!

கன்னடம் = கிருஷ்ணா நீ பேகனே!
தெலுங்கு = க்ஷீராப்தி கன்யகு ஸ்ரீமகாலக்ஷ்மி-க்கி
என்று இரண்டுமே தமிழாக இங்கு ஏற்கனவே வந்துள்ளது!

அப்படியே செளராஷ்டிரமும் வரட்டும்-ன்னு சொல்லி முடிக்கலை! வந்து விட்டது! அதுவும் மார்கழியில்!மகிழ்ச்சி! நன்றி குமரன்! :)

நடன கோபால நாயகி சுவாமிகள் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இங்கே 'கண்ணன் பாட்டில்' அகில உலக ஆன்மிக சூப்பர் ஸ்டார் நண்பர் இரவிசங்கரின் கட்டளைப்படி இடப்படுகிறது//

பதிவுக்குப் பதிவு என்னைத் திட்டினா எப்படி? :)

அ.உ.ஆ.சூ என்றுமே குமரன் தான்!

அடியேன், அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியேன் என்று இருப்பதில் தான் மகிழ்ச்சி!

குமரன் (Kumaran) said...

நீங்கள் அப்பாவிச் 'சிறுமி' என்றால் நான் ஐயா தான் துர்கா. :-) அப்படிப் பார்த்தால் உங்கள் அண்ணாச்சியும் ஐயா தான். பெரியையான்னு கூட சொல்லலாம். :-)

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவ். நீங்கள் இரவிசங்கரிடம் இந்தப் பாடலைப் பற்றி சொன்னதையும் அவர் அதற்குப் பதில் சொன்னதையும் பார்த்துவிட்டுத் தான் இங்கே இட்டேன். சொல்லியிருக்கேன் பாருங்க.

திருப்பாவை மூன்று இடுகைகள் படிக்காமல் இருந்தன. அவற்றை எல்லாம் காலையில் பேருந்தில் படிக்கலாம் என்று பிரதி எடுத்து வைத்துக் கொள்ளும் போது உங்கள் பின்னூட்டங்களைப் பார்த்தேன். உடனே இதனை ஏற்கனவே எழுதிவிட்டோமே என்று எண்ணி அங்கிருந்து இங்கே எடுத்து இட்டுவிட்டேன். வெட்டி ஒட்டுவதில் என்ன வேகம் இருக்கிறது? :-)

குமரன் (Kumaran) said...

சௌராஷ்ட்ரத்தைக் கண்ணன் பாட்டில் வரவேற்றதற்கு நன்றி கண்ணன் பாட்டின் உரிமையாளரே. :-)

குமரன் (Kumaran) said...

//அடியேன், அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியேன் என்று இருப்பதில் தான் மகிழ்ச்சி! //

ஓவரா போலி தன்னடக்கம் காட்டாதீங்க இரவிசங்கர். :-)))))))

Anonymous said...

pongal vaazhttukkal!
mozhi nalliNaakkattiRku kumaranin tonDukku paaraaTTukkaL.
K.V.Pathy

Anonymous said...

//குமரன் (Kumaran) said...

நீங்கள் அப்பாவிச் 'சிறுமி' என்றால் நான் ஐயா தான் துர்கா. :-) அப்படிப் பார்த்தால் உங்கள் அண்ணாச்சியும் ஐயா தான். பெரியையான்னு கூட சொல்லலாம். :-)//

குமரன் ஐயா தங்களின் வயது 1036 என்று இருந்தது :D
தாத்தான்னு கூப்பிடவா,பெரிய்யான்னு கூப்பிடவான்னு ஒரே குழப்பம்.உங்க வயசுக்கு என்னானு தெரியல அதான் ஐயான்னு சொல்லிட்டேன்.எப்போ ரவி அண்ணா அப்பாவி சிறுவன் ஆனாரோ அப்போ நான் அப்பாவி சிறுமி இல்லைன்னு ஆச்சு.Copyright issues ;)
ரவி அண்ணா பெரியைய்யா இல்லை...தெய்வம் :D


இந்த பாட்டு ரொம்ப நல்லா இருந்தது.எத்தனை தடவை கேட்டேன்னு கணக்கு தெரியல :D

குமரன் (Kumaran) said...

பொங்கல் வாழ்த்துகளுக்கும் பாராட்டிற்கும் நன்றிகள் பதி ஐயா.

தங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் துர்கா. இரவி அண்ணா தெய்வமே தான். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
//அடியேன், அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியேன் என்று இருப்பதில் தான் மகிழ்ச்சி! //

ஓவரா போலி தன்னடக்கம் காட்டாதீங்க இரவிசங்கர். :-)))))))//

ஹா ஹா ஹா
நம்மாழ்வார் திருவாய்மொழியில் ஏழு முறை அடியேன்-ன்னு காட்டிய அதே போலி தன்னடக்கம்-ன்னு ச.சங்கர் அண்ணாச்சிக்குச் சொல்லிருவோம்! :))

wholesale said...

Yiwu.hk, No.1 trusted discount wholesale site. Wholesale products from Yiwu at lowest price, for all your cheap wholesale needs!

More and more global importers, trading companies, worldwide wholesalers buy China wholesale products from Yiwu - the world's largest wholesale market of small commodities at cheapest wholesale prices.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP