Showing posts with label சித்ரம். Show all posts
Showing posts with label சித்ரம். Show all posts

Tuesday, April 13, 2010

மூங்கிலுக்கு முகவரி தந்தவன் யார்? ஏன்?

அனைத்து அன்பர்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!
நிங்களுக்கு கண்ணன் பாட்டு மக்களோடே விஷூ ஆஷம்சகள்!
ஈ புது வருஷத்தில், நிங்களுக்கு நல்லது வரட்டே, பாக்யம் கடாஷிக்கட்டே! :)

கண்ணன் பாட்டில், தொடர்ந்து...வாசகர்கள் எழுதி இடும் கவிதைகள்! அந்த வரிசையில் இன்று சித்ரம் ஐயா!
ஆனா ஏதோ அவரு நம்மளைக் கேள்வி கேக்குறாப் போல கவிதை எழுதி இருக்காரு! என்னவாம்? மூங்கிலுக்கு முகவரி தந்தவன் யார்? :)



கண்ணன் கையில் புல்லாங்குழல் இருக்கக் காரணம் என்ன?
வேற எந்த ஆயர்களோ, மாடு மேய்ப்பவர்களோ புல்லாங்குழல் வச்சிருந்ததா காணோமே?
கண்ணன் கையில் மட்டும் இந்த Weapon of Mass Destruction எப்படிக் கிடைச்சுது? :)

யாராச்சும் Giftஆ கொடுத்தாங்களா? அது அப்படியே ஒட்டிக்கிச்சா?
மகாபாரதம் அல்லது பாகவதம் கதையைப் படிச்சவங்க, கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ்! :)



மூங்கிலுக்கு முகவரி தந்த கண்ணா
முத்து மணி மாலை அணிந்த வண்ணா
(மூங்கிலுக்கு)

வெள்ளை மனம் உள்ளம் கொண்டு - என்
வெண்ணை திண்ண நீ வாருவாய்
வெங்கல பானை உருளக் கண்டேன் - அதில்
வெண்சங்கு மணி ஓசை கேட்டேன்!
(மூங்கிலுக்கு)

அமுத வாயில் குமுத மொழி பேசி
அன்ன நடை நடந்த அழகா
அலைகடல் மீது உனது ஆனந்த நடனமதை
ஆயர்ப்பாடி மக்களை கண் குளிர வைத்தாயே
(முங்கிலுக்கு)

வெண் பனி மேகங்கள் உறவாட
வெள்ளை மலர்ப் பூ மழையாக
வெந்தபூமி தணித்த நின் கருணை
வேதமானவனே கீதை நாயகனே நீயே
(மூங்கிலுக்கு)

குழல் ஊதிய கண்ணணுக்கு ...சித்ரம் ..//

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP