Monday, June 24, 2013

MSV & இளையராஜா - "கூட்டாப் போட்ட பாட்டு"

* இன்று திரையிசைச் சக்கரவர்த்தி MSV அவர்களின் பிறந்தநாள்! (Jun24)

"பணியுமாம் என்றும் பெருமை - சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து"   - இந்தக் குறளுக்கு - எழுத்து அசை, சீர் தளை, அடி தொடை -ன்னு முழுக்க முழுக்க எடுத்துக்காட்டு = MSV; பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!

* கண்ணனின் தாசன், கண்ணதாசனுக்கும் இன்றே பிறந்தநாள்! (Jun24)
Happy Birthday Kannadasa!

Photo Credit: Sabesan, MSVtimes
என்னவொரு ஒற்றுமை! MSV & Kannadasan!
"எலே பணிவுள்ள விஸ்வநாதா, நீ விஜய"வாடா"-வைக் கூட, விஜய"வாங்க" -ன்னு தான் சொல்லுவியா?" -ன்னு MSVயை ஓட்டிய கவிஞர்:)

இந்த நாளில், lemme re-publish a post from 2008!
Sick & In Hosp. Dont have energy to write a new post; So...pardon for the re-post;


எம்.எஸ்.வி-இளையராஜாவைச் சேர்த்து வைத்த கண்ணன் பாட்டு!

"மெல்லத் திறந்தது கதவு-ன்னு ஒரு படம் வந்துச்சி! அதுல யாரு மீஜீக் போட்டாங்க?-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி - இசை ஞானி இளையராஜா = ரெண்டு பேரும் சேர்ந்து!"

"ஆ...இப்படி ஒரு உலக அதிசயம் நம்ம தமிழ்ச் சினிமாவிலா?"

"ஆமா! ஆமா!"

"அட, என்ன தான் குரு-சிஷ்யன் உறவு ரெண்டு பேருக்கும் இருந்துச்சி-ன்னாலும், இவிங்கள இப்படிச் சேர்த்து வச்சது யாருப்பா?"

"சாட்சாத், நம்ம கண்ணபிரான் தான்!"

"யாரு? கேயாரெஸ் கேயாரெஸ்-ன்னு கூப்புடறாங்களே? அவனா?"

"அடச்சே! அவன் பொடிப் பையன்! படம் வந்தப்போ அவனுக்குப் பத்து வயசு கூட இருக்காது! நான் சொல்லுறது ஒரிஜினல் கண்ணன், பரந்தாமன்!
சண்டை வேணாம்-னு தூது போவாரே? ஆனா, போயி தூண்டிட்டு வந்து சூப்பராச் சண்டை போடுவாரே! அவரே தான்!":)

"அடங் கொக்க மக்கா! கண்ணனா சேர்த்து வச்சாரு? எத வச்சி சொல்லுற நீயி?"

"மெல்லிசை மன்னரு, "குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேக்குதா?"-ன்னு இசை அமைக்க...
இளையராஜா, "பாவன குரு-பவன-புரா"-ன்னு இன்னொரு கண்ணன் பாட்டுக்கு அதே படத்தில் இசை அமைச்சாரு!"

"சூப்பரு! கண்ணன் லீலையே லீலை! மேல தகவலைச் சொல்லு மக்கா!"

"சரி, இதன் பின்னணி என்னான்னு சொல்லுறேன்! மத்த கதையெல்லாம் எம்.எஸ்.வி-யின் சிஷ்யப் பிள்ளையான எங்க ஜிரா வந்து சொல்லுவாரு!"


இளையராஜாவின் கொடி பறக்க ஆரம்பித்து விட்டது!

வெகு ஜனக் கலைஞர்-னா அது ராஜா தான்! புதுசு புதுசா இசை!
கிராமத்து இசையும் கொடுப்பாரு! அதே சமயத்தில் தமிழ் சினிமா இது வரை பார்த்திராத மெட்டுகளையும் அள்ளித் தருவாரு!

*இளையராஜா வீட்டு இட்லி சட்டியும் இசை அமைக்கும்!
*தோசைத் தட்டும் தோடி பாடும்!
- அப்படி, இப்படி-ன்னு ஒரே புகழ்மாலை தான்!:)

எந்த ஒரு மகோன்னதமான இசையமைப்பாளருக்கும், ஆறுமுகத்தால், முதலில் ஏறுமுகம், பின்னர் இறங்குமுகம்-னு இருக்கும்-ல?
எல்லாமே அவன் திருவிளையாடல் தானே? மெல்லிசை மன்னருக்கு அப்போது இறங்கு முகம்!
அவரால் சூப்பர் ஹிட்களைத் தொடர்ச்சியாகத் தர முடியாத காலகட்டம்! MSV இசை out-of-date என்றெல்லாம் பேசப்பட்ட காலகட்டம்!
Photo Credit: Subha Photo & Ragasudha

ராஜா-ராஜாதி ராஜன் இந்த ராஜா! ராஜா-தூக்காதே வேறு எங்கும் கூஜா!
இப்படி எல்லாம் ஒரு இசை அமைப்பாளரைப் பாடல் வரிகளில் கொஞ்சம் ஓவராகவே கொண்டாடி,
கட்-அவுட் வைத்த கதையைத் தமிழ் சினிமா எப்போதும் கண்டதில்லை!

இத்தனைக்கும் ராஜா, எம்.எஸ்.வி மீது மதிப்பு வைத்திருப்பவர் தான்!
ஆனால் தொழில்-னு வந்துட்டா குருவாவது? சிஷ்யராவது?? என்கிற நிலைமை!

பஞ்சு அருணாச்சலம் மூலமாகக் கச்சேரியைத் துவங்கிய ராஜா..
எம்.எஸ்.வி-யின் ஆஸ்தான இயக்குனர்களை எல்லாம் கூட வலை வீசிப் பிடித்து விட்டார்! ஸ்ரீதர், கே.பாலாஜி என்று பழைய ஆட்களும் கூட கட்சி மாறிய நேரம்!
போதாக்குறைக்கு, எம்.எஸ்.வி சொந்தப் படம் எடுத்து அதனால் பணப் பிரச்சனை!

அப்போது ராஜா, தன் படங்களின் பின்னணி இசைக்கு மட்டும் எம்.எஸ்.வி அவர்களை இசை அமைக்கச் சொல்லி நிலைமையை ஓரளவு சரி செய்ய உதவியதாகச் சொல்லுவார்கள்!
ஆனால் இப்படிச் செய்யப்பட்ட இசையமைப்பு பரவலாக வெளிப்படுத்தப் படவில்லை!:(

* அந்தச் சமயத்தில் வந்த படம் தான் = மெல்லத் திறந்தது கதவு!
* ராஜா-MSV ஒற்றுமைக்காக = மெல்லத் திறந்தது கதவு!
இளையராஜாவும்-எம்.எஸ்.வியும் இணைந்து இசை அமைக்கிறார்கள் என்று பயங்கரமாக விளம்பரப் படுத்தப்பட்டது!
*ஏற்கனவே கிருஷ்ண கானம் Album-இல் = MSV இசையமைப்பில், ராஜா பாடி இருப்பாரு;
*தாய் மூகாம்பிகை படத்திலோ = ராஜா இசையமைப்பில், MSV பாடி இருப்பாரு;

ஆனால், இருவரும் "இசை அமைப்பிலேயே" ஒன்றிணைவது??
= மெல்லத் திறந்தது கதவு!


முதல் பாட்டே கண்ணன் பாட்டு!
குழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டு கேட்குதா?

அதுக்குப் பின்னாடியே இன்னொரு கண்ணன் பாட்டு! ஆனா meaning தான் புரியலை!
பாவன குரு-பவன-புரா...

எம்.எஸ்.வி = பாடல்களுக்கு இசை அமைப்பாரு!
பின்னணி-க்கு = இளையராஜா இசை அமைப்பாரு! (opening/interlude)

இப்படி ஒரு Gentleman Agreement போட்டுகிட்டாங்க!
பாடல்கள் அத்தனையும் இனிமை! எல்லாப் பாடல்களும் ஹிட் தான்!
And you have all of them: Susheelamma, Janaki, Chitra, SP Sailaja, Sasirekha:)

* தில் தில் தில் மனதில் - SPB/சுசீலாம்மா
* வா வெண்ணிலா உன்னைத் தானே - SPB/ஜானகி
* ஊரு சனம் தூங்கிருச்சி - ஜானகி
* சக்கர கட்டிக்கு சிக்குற குட்டிக்கு - சசிரேகா & குழுவினர்
* இன்னும் ரெண்டு பாட்டு...யாராச்சும் கொமென்ட்டுல சொல்லுங்க!:)

கண்ணன் பாட்டுல, இன்னிக்கி அந்த ஒற்றுமைப் பாட்டு(க்கள்)!


1) முதலில் MSV இசை, ராஜா பின்னணி!
* குழலூதும் கண்ணனுக்கு - Note the துள்ளல் instrument beats in prelude/ interludes - typical Raja style; whereas humble single beat melody ("chak chak") - throught the song in MSV style:)

குழலூதும் கண்ணனுக்குக், குயில் பாடும் பாட்டு கேட்குதா?
குக்கூ குக்கூ குக்கூ!
என் குரலோடு மச்சான், உங்க குழலோசை போட்டி போடுதா?
குக்கூ குக்கூ குக்கூ!


இலையோடு பூவும், தலையாட்டும் பாரு!
இலையோடு பூவும் காயும், தலையாட்டும் பாரு பாரு!
(குழலூதும்)

மலைக்காத்து வீசுற போது, மல்லிகைப் பூ பாடாதா?
மழைமேகம் கூடுற போது, வண்ண மயில் ஆடாதா?


என் மேனி தேனரும்பு! என் பாட்டு பூங்கரும்பு!!
மச்சான் நான் மெட்டெடுப்பேன்! உன்னைத் தான் கட்டிவைப்பேன்!


சுகமாகத் தாளம் தட்டிப் பாடட்டுமா?
உனக்காச்சு எனக்காச்சு, சரி ஜோடி நாமாச்சு,கேளைய்யா!

(குழலூதும்)

கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?


வந்தாச்சு சித்திரை தான்! போயாச்சு நித்திரை தான்!
பூவான பெண்ணைத் தொட்டா, ராவானா ஏங்குது தான்!


மெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா?
விளக்கேத்தும் பொழுதானா, இளநெஞ்சு படும்பாடு, கேளைய்யா!

(குழலூதும்)

குரல்: சித்ரா
வரிகள்: கங்கை அமரன் (can some one dbl chk?)
இசை: MSV (பாட்டுக்கு), இளையராஜா (பின்னணிக்கு)


இப்போ Role Change!
2) ராஜா இசையமைக்க, MSV பின்னணி!
** பாவன குரு பவன புரா! Same MSV style in the beginning/end, whereas Non conservative style of Raja throughout the lines; Tabla beats, for a carnatic song!


பாவன குரு - பவன புராதி - ஈசம் ஆச்ரயே!

ஜீவன தர சங்காசம், 
கிருஷ்ணம் கோ லோகேசம்!
பாவித நாரத கிரீசம், 

திரி புவனா வனவேசம்!!
(பாவன குரு)

பூஜித விதி புரந்தரம், 
ராஜித முரளீதரம்!
விரஜ லலா (ஆ)னந்த கரம், 

அஜித முதாரம்!! - கிருஷ்ணா

ஸ்மர சத சுபகா (ஆ)காரம், 

நிரவதி கருணா பூரம்!
ராதா வதன-ச கோரம், 

லலிதா சோதரம் பரம்!!
(பாவன குரு)

(இந்தப் பாட்டின் Melody சூப்பரா இருக்குப்பா, Tabla-வுல வாசிப்பு!
பாட்டின் பொருள் யாராச்சும் சொன்னீங்கனா புண்ணியமாப் போகும்! அனுபவிச்சிக் கேட்கலாம்....)

குரல்: சித்ரா
வரிகள்: லலிதா தாசர்
இசை: இளையராஜா (பாட்டுக்கு), MSV (பின்னணிக்கு),

ராகம்: ஹம்சானந்தி
தாளம்: ரூபகம்


படத்தில் மோகன், ராதா & Juvenile Fantasy = "my அமலா"!:)

இசைக் கல்லூரியில் பர்தா போட்டுக் கொண்டு "பாவன குரு"-ன்னு பாடும் போது, பர்தாவுக்குள் அந்தக் கண்கள் சூப்பர் தான்!

என்றாலும்...
படத்திலும், மனத்திலும் எப்போதும் நிக்குறது
அமலா! அமலா! அமலா! :-)

6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

குயில் பாடும் பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கிறது...

நன்றி... வாழ்த்துக்கள்...

கவிநயா said...

குழலூதும் கண்ணனுக்கு - எனக்குப் பிடிச்ச பாட்டு. MSV ஐயாவிற்கும், கண்ணதாசன் அவர்களுக்கும் பிறந்த நாள் வணக்கங்களை நானும் சொல்லிக்கிறேன் :)

பகிர்விற்கு நன்றி கண்ணா!

In Love With Krishna said...

//கண்ணா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?//

My fav lines, but i change them like this:
////கண்ணா! என் வாலிப நெஞ்சை உன் பாட்டு உசுப்புறதா?
கற்கண்டு சக்கரை எல்லாம் இப்பத் தான் கசக்குறதா?//

:)

R.DEVARAJAN said...

http://www.youtube.com/watch?v=njruYTgABEY


pAvanaguru pavana purAdhiShamAshrayE

raagam: hamsaanandi

taaLam: roopakam
Composer: Lalita Daasar

pallavi

pAvanaguru pavana purAdhiShamAshrayE
(pAvana)


anupallavi

jIvanadhara sankAsham krSNam gOlOkEsham bhAvita nArada girIsham tribhuvanAvanAvEsham
(pAvana)caraNam

pUjitavidhi purandaram rAjita muraLIdharam vraja lalanAnandakaram ajitamudAram
smarashada shubhakAkaram niravadhi karuNApUram rAdhA vadana cakOram laLitA sOdaram param
(pAvana)

Unknown said...

பாவன குரு - பாட்டின் பொருள்

பல்லவி:
குருபகவானாலும், வாயுபகவானாலும் நிர்மானிக்கப்பட்ட குருபவனபுரம் என்னும் குருவாயூரில் வாழுமீஸன் என் இறுதிப் புகல்.

அனுபல்லவி: கருமுகிலையொத்த நிறத்தைக் கொண்டவன் அவனே -
ஆனிரைகள் கூடிய உலகத்தில் உள்ளவன் அவனே -
நாரதராலும், சிவனாலும் துதிக்கப்பட்டவன் அவனே -
மூன்று உலகங்களையும் காத்தருள்பவனும் அவனே -

சரணம்:
இந்திரனாலும், பிரம்மாவாலும் பூசிக்கப்பட்டவன் அவனே -
வேய்ங்குழல் கொண்டு மந்தகாசமாய் ஒளிர்பவன் அவனே -
விரஜ பூமியின் கன்னியராம் கோபியர்க்கு ஆனந்தம் அளிப்பவனே -
வெல்ல முடியாதவனாயும், தயாபரனாயும் இருப்பவன் அவனே -
நூறு மன்மதரும் தோற்கும் அழகினை உடையவன் அவனே -
பலவிதமான, அளவிட முடியா அருளைப் பொழிபவன் அவனே -
ராதையாகிய சகோரப் பறவைக்கு மதியாக விளங்குபவனே -
தேவி லலிதையின் சகோதரனே - பரம்பொருளே -
குருபவன்புர ஈஸனே, நீயே என் இறுதிப் புகல்.
(மொழிபெயர்ப்பு - இந்து)

Unknown said...

Beautiful information sir Thank you and Vazhthukkal sir

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP