Thursday, August 16, 2012

கண்ணா வருவாயோ?




சுப்பு தாத்தாவின் சுகமான ராகத்தில் இங்கே: அவரே 'கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்' மெட்டில் பாடியது இங்கே: மிக மிக நன்றி தாத்தா!

 
காற்றினில் அலைகின்ற கருங் குழலும் – அவன்
கனியிதழ் தழுவிய தீங் குழலும்,
போற்றி வரும் பக்தர் மனங் கவரும் – அவனை
ஏற்றி ஏற்றி எங்கள் தமிழ் வளரும்!

கனக மணிச் சதங்கை பாதம் தழுவும் – அவன்
கமலப் பிஞ்சுப் பாதம் பூமி தவழும்;
மார்பினில் பாதம் பட மெய் சிலிர்க்கும் – அவன்
வாயினில் தேனொழுக மனம் களிக்கும்!

வெண்ணெயள்ளி உண்டவனைக் கண்டதுமே
வெண்ணெயினைப் போல உள்ளம் உருகிடுமே;
அள்ளியள்ளி அணைத்திட ஏங்கிடுமே
அங்கமெல்லாம் அன்பு வெள்ளம் ஊறிடுமே!

சின்னக் கண்ணா என்னிடத்தில் வருவாயோ?
செவ்விதழால் முத்து ஒன்று தருவாயோ?
உள்ளத்தினைக் கடைந்தன்பு வெண்ணெயெடுத்தேன்;
ஓடி வந்து உண்டு மனம் மகிழ்வாயோ?


--கவிநயா


10 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

அழகு கண்ணனுக்கு அழகு கவி... பாராட்டுக்கள்... நன்றி...

Kavinaya said...

ரசித்தமைக்கு மிக்க நன்றி திரு.தனபாலன்!

Lalitha Mittal said...

ரொம்பப் பிடித்த வரிகள்:

"உள்ளத்தினைக் கடைந்தன்பு வெண்ணெயெடுத்தேன்;
ஓடி வந்து உண்டு மனம் மகிழ்வாயோ?"

Kavinaya said...

மிக்க நன்றி அம்மா.

சுப்பு தாத்தா பாடித் தந்ததை இணைத்திருக்கிறேன்; அவற்றையும் கேளுங்கள் :)

Lalitha Mittal said...

enjoyed the song in both tunes;
thanks

Kavinaya said...

மீண்டும் வந்து கேட்டமைக்கு நன்றி அம்மா :)

Sankar said...

அக்கா நலமா ?
செவ்விதழ் எனும் முத்து திறந்து, அதில் இருந்து முத்து எனும் முத்தம் பிறக்குமோ !!!
Brilliant expression.. :)

Kavinaya said...

தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும் சங்கர். ரொம்ப நாளா காணும்? நீங்க நலமா? ரசிச்சதுக்கு நன்றிப்பா :)

venksai said...


பகவான் கண்ணன் பற்றி பஜன் வடிவில் ஓரூ சிறிய பாடல். http://srimannarayana108.blogspot.com/2013/03/offering-to-lord-krishna-on-occasion-of.html
P

venksai said...

Very good Blog with lot of good postings

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP