கண்ணன் பாட்டு மக்களே, வணக்கம்!
இன்னிக்கி எனக்கு மிகவும் பிடிச்ச முருக-தாசர் ஒருத்தரு..."கண்ணா, என் பால், அன்-பால், உன் பால் வடியும் முகம், ஹைய்யோ"-ன்னு உருகிப் போயி பாடுறாரு! யாரு அந்த முருகதாசர்-ன்னு கேட்கறீங்களா?
நம்ம பித்துக்குளி முருகதாசரே தான்!
அவர் பாடுவது:
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிகவாகுதே - கண்ணா!
மொதல்ல பித்துக்குளியார் பற்றி லைட்டாப் பார்ப்போம்! அப்பாலிக்கா பாட்டுக்குப் போவோம்! ஓக்கேவா?
மொதல்ல எப்பமே அடியார்கள்! அடியார்கள் வாழ..அரங்கநகர் வாழ..சடகோபன் தண் தமிழ் நூல் வாழ :)
பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)
அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :)
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))

பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு!
இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!
கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!
Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு போடறது தப்பில்லை! ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல?
பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியார் காவடிச் சிந்தைக் கேளுங்க!
சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க!
பால் வடியும் முகம் - கண்ணா, என்பது ஊத்துக்காடு வேங்கட கவியின் கீர்த்தனை! நடனத்துக்குன்னே பாடப்பட்ட அழகான கண்ணன் பாடல்கள்! இதை எப்படி முருகதாஸ் Handle பண்றாரு?
* முதலில் பச்சை மாமலை போல் மேனி-ன்னு, ஆழ்வாரை Hum பண்ணி ஆரம்பிக்கறாரு!
* அடுத்து, ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு!
* அடுத்து, பாஆஆஆஆஆல் வடியும் முகம்...நினைந்து நினைந்து உள்ளம்.....பரவசம் மிகவாகுதே....கண்ணாஆஆஆஆ!
கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில், மாயோன் பாட்டு - பால் வடியும் முகம்!
Bhajan Version, here 
பால் வடியும் முகம்...
பால் வடியும் முகம்நினைந்து நினைந்தென் உள்ளம்பரவசம் மிக வாகுதே - கண்ணா!(பால் வடியும்)
நீலக் கடல் போலும் நிறத்தழகா - எந்தன்நெஞ்சம் குடி கொண்டஅன்று முதல் இன்றும்எந்தப் பொருள் கண்டும்சிந்தனை செலா தொழிய(பால் வடியும்)

நீர் வடியும் முகம்...
வான முகட்டில் சற்றேமனம் வந்து நோக்கினும்மோன முகம் வந்து தோனுதே!தெளிவான தண்ணீர் தடத்தில்சிந்தனை மாறினும்சிரித்த முகம் வந்து காணுதே!கானக் குயில் குரலில்கருத்(து) அமைந்திடினும் - உன்கானக் குழலோசை மயக்குதே!கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகு - இறுக்கி அமைத்த திறத்திலேகான மயிலாடும் மோனக்குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலேகுழல் முதல் எழிலிசை, குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளங் கரத்திலேகதிரும் மதியும் என நயன விழிகள் இரு - நளினமான சலனத்திலேகாளிங்கன் சிரத்திலேபதித்த பதத்திலேஎன் மனத்தை இருத்திக்கனவு நனவினொடுபிறவி பிறவி தொறும்கனிந்துருக வரம்தருக பரங்கருணை....(பால் வடியும்)
வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: நாட்டக் குறிஞ்சி
தாளம்: ஆதி
குரல்: பித்துக்குளி முருகதாஸ்
இசைக் கருவிகளில்:*
வீணைபாடகர் குரலில்:*
மகராஜபுரம் சந்தானம்*
சுதா ரகுநாதன்*
நித்யஸ்ரீ*
செளம்யா
பித்துக்குளியாருக்கு இப்போ வயசு 95 இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! அன்பர்களால், "முருகா"-ன்னே அழைக்கப்படுகிறார்!
"நான்" என்ற சொல்லே அவர் வாயில் வராது! ஒன்லி "அடியேன்"! இல்லீன்னா தன்னையே கூட "அவன்"-ன்னு தான் சொல்லிப்பாரு! :)
எளியோர்களின் தத்துவத்தால் வைணவம் பிடிச்சிப் போய், அடியேன், அடியேன்-ன்னு சொல்லிக்கிட்டாலும், முருகன் தான் மனத்துக்கு இனியான்! என்னையப் போலவோ? :)
பாடிய கேசட்டுகளில் எக்கச்சக்கமான கண்ணன் பாடல்கள்! அது என்னமோ தெரியலை........பஜனை-ன்னு வந்துட்டாலே, இந்தக் கண்ணன் தான் சரியான பஜனை பார்ட்டி போல! :)
திருப்புகழ் பாடல்கள் பலவும், தன் ஸ்டைலில் பாடி இருக்கார்! ஆழ்வார் பாசுரங்களும் அப்படியே! ரொம்ப அருமையா இருக்கும்! ஆனால் மிகவும் ஹிட்டானது என்னவோ..
கார்த்தி கேயா, கலியுக வரதா பாட்டு தான்! முருகனருள் வலைப்பூவில் அப்பறமா இடறேன்!
சினிமாவிலும் பாடி உள்ளார் -
நாடறியும் நூறுமலை! குன்னக்குடி இசையில், தெய்வம் படத்துக்காக!
சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் திளைத்தவர்........சுமார் அறுபது வயதில், உடன் பாடிடும், தேவி சரோஜா என்ற அம்மையாரை மணந்து கொண்டார்!
முதலில் சாஸ்திரோத்காரமான மடங்களில் எதிர்ப்பு கிளம்பினாலும், கண்ணன் அருளால், எதிர்ப்புகள் அடங்கின! தேவி முருகதாஸ் + பித்துக்குளி முருகதாஸ் இணைந்து, ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்!
எல்லாஞ் சரி! "ஊத்துக்குளி" வெண்ணெய் தெரியும்! அது என்ன "பித்துக்குளி"?சின்ன வயசில், தெருவில் விளையாடும் போது, ரோட்டுல போற ஒருவர் மேல கல்லெறிஞ்சி இருக்கான் இந்த வாலுப்பையன்!
அடிபட்ட பெரியவரோ பரம பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார்! நெற்றியில் இரத்தம் வடிய...
"அடேய்...நீ என்ன பித்துக்குளியா (பைத்தியமா)? ஒரு நாள் இல்லை ஒரு நாள், என்னையப் போலவே நீயும் ஆகப் போற பாரு!"-ன்னு சொல்ல...
* அப்படியே ஆகி,
* பித்துக்குளியாகி,
* கண்ணன்-முருகனில் நம்மையும் பித்துக்குளியாக்கும்,
பித்துக்குளி முருகதாசர் திருவடிகளே சரணம்!!!இவர் கச்சேரிக் காசு பலவும் போகுமிடம் = அனாதைச் சிறார் விடுதிக்கு! எங்கூருக்கு அருகில் உள்ள வாலாஜாப்பேட்டை "தீனபந்து அனாதைச் சிறுவர் ஆசிரமம்" தான் அது!
பித்துக்குளி ஐயா-அம்மா! உங்கள் சிறியேனை ஆசீர்வதியுங்கள்! -
பெருகாதல் உற்ற தமியேனை, முருகா நீ, பிரியாது பட்சம் மறவாதே! பிரியாது பட்சம் மறவாதே! முருகாஆஆஆ...எந்தப் பொருள் கண்டும் சிந்தனை செலா தொழிய......