இளையராஜா & பாலமுரளி: சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
கண்கள் சொல்கின்ற கவிதை - இளம் வயதில் எத்தனை கோடி?-ன்னு ஒத்தை வரியில் கண்ணனையும் காதலையும் ஒரு சேரக் காட்டியவர் இசைஞானி இளையராஜா! - சின்னக் கண்ணன் அழைக்கிறான் என்னும் மனம் மயக்கும் பாட்டில்!
ராஜாவின் இன்னொரு பலமான முகத்தைக் காட்டிய "முதல் பாட்டு" பற்றி இன்னிக்கி பார்க்கலாம் வாங்க! எங்கள் சின்னக் கண்ணனும் ஒரு "இளைய" ராஜா தானே! :)
இன்று கண்ணன் பிறந்தநாள்! (Aug-13-2009)!
ஜன்மாஷ்டமி என்று வடக்கிலும், கோகுலாஷ்டமி என்று ஒரு சிலர் தெற்கிலும் சொன்னாலும்,
கிருஷ்ண ஜெயந்தி என்றோ கண்ணன் பிறந்த நாள் என்றோ சொல்லும் போது தான், அவன் பேரும் அதில் ஒட்டிக் கொண்டு, விழாவுக்கே இனிப்பு சேர்க்கிறது! :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா! Have a sweet & sexy birthday dude! :)
கண்ணா-ன்னு உனக்கு வாழ்த்து சொல்லும் போது,
எனக்கே நான் சொல்லிக்கிறாப் போல ஒரு ஃபீலிங்! :)
முல்லை நிலத் தமிழ்த் தலைவன் = தமிழ்க் கடவுள் = கண்ணன்!
* அக நானூறு வழியில் = நப்பின்னையைத் தழுவினான்! ஏறு தழுவி, வீறு தழுவி, அவளுடல் கூறு தழுவி, இன்பச் சேறு தழுவி, நூறு தழுவல் தழுவிய அழகிய காதல்!
* புற நானூறு வழியில் = தூது சென்று, போரை வென்று, தன் நாட்டு மக்களுக்கென்று தனி நகரமே உருவாக்கினான்! இந்திரனின் மூடப் பழக்க வழக்கம் ஒழித்து, குன்றுக்குப் பூசை கண்டான்! குன்றின் மேல் விளக்காக இன்னிக்கும் ஒளிர்கிறான் இந்தப் பிறந்த நாள் பையன்!
காதல் என்றால் கண்ணன் - கண்ணன் என்றால் காதல் என்று அல்லவா உலக வழக்கில் ஆகிப் போனது? அவன் பிறந்த ராத்திரியில் இருந்து, கடைசி வரை.....அவன் வாழ்க்கை, ஒரு நல்ல தமிழ் சினிமாவைப் போலவே சூடும் சுவையும் குறையாதது! :)

இளையராஜாவைக் கிராம ராஜா என்று பேசிக் கொண்டிருந்த காலம்! அன்னக்கிளி-க்கு அப்புறம் பெரும்பாலும் கிராமியச் சாயல் மெட்டுக்களே போட்டுக் கொண்டிருந்த காலம்!
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கலக்கிக்கிட்டு இருந்த காலம்......விதம் விதமா வித்தை காட்டுவாரு! ராஜாவுக்கோ அன்னக்கிளி ஹிட் ஆனதால், ஒரு மாறுபட்ட கிராமச் சூழல் பாடல்களுக்குக் கொஞ்சம் வரவேற்பு! அவ்ளோ தான்! ஆனால் அது போதுமா?
பின்னாளில் இசைஞானி-ன்னு சொல்லணும்-ன்னா இன்னும் பல முகங்களைக் காட்டணுமே? அப்போது ராஜாவுக்குக் கைகொடுத்த படங்கள் இரண்டு!
* முள்ளும் மலரும் - மெலடியும் பின்னணியும் பிச்சி வாங்கிய படம்! செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்-ன்னு மெலடி! ராமன் ஆண்டாலும்-ன்னு லைட் குத்து! இப்படி, இயக்குனர் மகேந்திரன் ராஜாவைப் பிழிஞ்சி எடுத்தாரு-ன்னே சொல்லலாம்! இது பற்றி கா.பி. அண்ணாச்சி றேடியோஸ்பதியில் இட்ட சூப்பர் பதிவு இங்கே!
* கவிக்குயில் - சினிமா இசை உலகில், கிளாசிக்கல் முகமும் காட்டினாத் தான் ஒரு மரியாதையே கெடைக்குது! பணத்துக்கும் ஹிட்டுக்கும் மெல்லிசை முகம்-ன்னா, மரியாதைக்கும் "ஞானி" போன்ற சொற்களுக்கும் கிளாசிக்கல் முகம் கொஞ்சம் காட்டணும்! நம்ம கிராம ராஜாவுக்கு அந்த முகம் காட்டத் தெரியுமா? :)
ராஜா-வின் அதி அற்புதமான கிளாசிக்கல் முகம் முதலில் வெளிப்பட்ட பாட்டு - கவிக்குயில் படத்தில் - சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ஏன்னா அதுக்கு அவரு எடுத்துக்கிட்ட மெட்டு-ராகம் = ரீதி கெளளை!
ரொம்ப ரொமான்டிக் ராகம்! ஆனா அவ்வளவு சீக்கிரம் டைல்யூட் பண்ணவே விடாது! ஸ்வர வரிசையும் ரொம்ப சிக்கலானது! வேணும்-ன்னே அதைக் கையில் எடுத்தார் ராஜா! :)
அதுவும் தன் முதன்முதல் கிளாச்சிக்கல் முயற்சியில்! இதற்கு முன் இதை எடுத்த இசையமைப்பாளர்கள் மிக மிகக் குறைவு! (அ) இல்லவே இல்லை!
ஆனானப்பட்ட எம்.எஸ்.வி கூட மெல்லிய சுகமான ராகங்களைத் தான் அதிகம் கையாண்டாரே தவிர, "சிக்கலான" ராகத்தில் கையைப் போட்டு ரிஸ்க் எடுக்கவில்லை!
சொதப்பிருச்சீன்னா அவ்ளோ தான்! இதுக்குப் பேரே "கன ராகம்"! அம்புட்டு கனமா இருக்கும்! அதை எப்படி லைட் பண்ணுறது? மக்களுக்குப் பிடிக்கச் செய்யறது?
சூடு மேல சூடு போட்டா ஜூரம் போகும்-ங்கிற மாதிரி, ரிஸ்க் மேல ரிஸ்க் போட்டாரு ராஜா! அந்த ரிஸ்க்கான பாட்டைப் பாட, அவர் அழைத்தது யாரை.....................?
மக்கள் செல்வாக்குள்ள எஸ்.பி.பி போன்ற பாடகர்களையா? இல்லை! கச்சேரிப் பாடகர் - பாலமுரளி கிருஷ்ணாவை! ஹா ஹா ஹா! எடுபடுமா?
![]() | ![]() |
என்ன தான் பாலமுரளி கச்சேரிப் பாடகரா இருந்தாலும், மென்மையான குரல் கொண்டவர்! புதுசா செஞ்சிப் பார்க்கும் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ளவர்! தியாகராஜர் பாட்டுகள் சிலவற்றைத் தமிழில் மொழி மாற்றிக் கூடப் பாடியிருக்காரு!
பாலமுரளியின் ஆற்றலைச் சினிமாவில் முதல்ல கண்டுபிடிச்சிப் பாட வைத்ததே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி தான்! "தங்கரதம் வந்தது வீதியிலே, தளிர் மேனி வந்தது தேரினிலே"-ன்னு பாட்டு! கலைக்கோயில் படத்துக்காக சுசீலாம்மாவோடு பாடிய பாட்டு தான் பாலமுரளியின் முதல் சினிமாப் பாட்டு!
அப்பறம் "ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா?"-ன்னு திருவிளையாடல் படத்தில் சவடால் பாலையா பாடுவது! :)
அது பாலமுரளி பாடி ஹிட் ஆச்சி! அப்பறமா குன்னக்குடி, சங்கர் கணேஷ் இசையில் கூடப் பாடி இருக்காரு!
ஆனால் "சின்னக் கண்ணன் அழைக்கிறான்" போல ஒரு மெகா ஹிட் பாலமுரளியே எதிர்பார்க்கவில்லை! அந்தளவுக்கு எல்லாருக்கும் பாட்டு மனப்பாடம் ஆனது! அதான் ராஜாவின் ராசி! :)
இந்தக் கடினமான ரீதி கெளளை ஹிட்டைப் பார்த்துக் கச்சேரிப் பாடகர்களே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு ஆனது!
அந்த உற்சாகத்தில் தான், அதே ரீதி கெளளையில் பின்னாளில் இன்னொரு பாட்டும் போட்டார் = தலையைக் குனியும் தாமரையே! அதுவும் செம ஹிட்! :)
* அப்பறம் இதையே ரஹ்மான் ட்ரை பண்ணிப் பாத்தாரு! = அழகான ராட்சசியே, அடிநெஞ்சில் குதிக்கிறியே! = சரியா வரலை! விட்டுட்டாரு! :)
* யுவன் கூட துள்ளுவதோ இளமை-ல ட்ரை பண்ணாரு! = தீண்டத் தீண்ட மலர்ந்ததென்ன? = சரியா வரலை! அவரும் விட்டுட்டாரு!
ஆக, ரீதி கெளளையைத் தமிழ்ச் சினிமாவில் வெற்றிகரமாக் கையாண்ட ஒரே தல = நம்ம இளையராஜா தான்! :)

கண்ணன்-ராதையின் காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம்,
ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும்.
இதே பாட்டை இன்னொரு வெர்ஷனாக, ஜானகி அதே படத்தில் பாடியிருப்பார். ஆனால் பாலமுரளி பாடியது தான் ஹிட்டோ ஹிட்!
இந்தக் கிளாசிக்கல் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque இசைப் பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்;
ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம்! - ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது! பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை! ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது அல்லவா?
எல்லாம் சரி! பாடல் எதோ? - இதோ! மாயனின் லீலையில் மயங்குது உலகம்! நாமும் மயங்குவோம்! வாங்க!
கண்கள் சொல்கின்ற கவிதை - உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
*** பாலமுரளி கிருஷ்ணா பாடுவது
கண்ணன் என்றாலே புல்லாங்குழல் தானே! பாடலின் ஓப்பனிங், Flute Bit-ஐ, Baroque-வோடு கேட்கத் தவறாதீர்கள்! :)
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்)
படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
குரல்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ராகம்: ரீதி கெளளை
கேள்வீஸ் ஒன்லி கேள்வீஸ்:
இதே கவிக்குயில் படத்தில், பாலமுரளி இன்னொரு கண்ணன் பாட்டும் பாடி இருக்காரு! ராஜா இசையில்! என்னா-ன்னு சொல்லுங்க பார்ப்போம்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான் - காணொளி:
Jaya TV Concert - Yuvan sings his dad's tune! - Sothappal! :))
Airtel Top Singer:
போனஸ்: தலையைக் குனியும் தாமரையே! - அதே சூப்பர் ரீதி கெளளை
30 comments :
The other songs in Reethigowlai ragam:
Film : THAMBI:
" SUDUM NILAVU SUDATHU SURIYAN"(I think the music was by Vidyasagar)
Ilayaraja had given one more song: FILM: SWATI MUTHYAM: RAMA KANAVEMERA
Dubbed in Tamil:SIPPIKUL MUTHU/ RAMAN KATHAI KELUNGAL
K.G.Subbramanian
அண்ணா சமீபத்தில் வந்த “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் “ பாட்டுகூட ரித்திகெளள இராகம்தான் :)
அடடா சொல்ல மறந்துட்டேன்...
ஹாப்பி பர்த்டே கண்ணா :)
சூப்பர்! எனக்கு இந்த டெக்னிக்கல் விஷயம்லாம் தெரியாது. நீங்க எளிமையா விளக்கியிருக்கீங்க! நன்றி!
நமோஷ்கார் :)
உங்க உபயத்தில், இசை உலகுக்கு என்னாலான ஒரு சின்ன டார்ச்சர்.
http://neyarviruppam.blogspot.com/2009/08/blog-post.html
நீங்களும் பாடி அனுப்புங்க. ஹாப்பி கி.ஜெயந்தி.
முதல்ல குட்டிக்கண்ணனுக்கு என் வணக்கங்கள் மற்றும் பிறந்தநாள் வாழ்த்துகள்.. இன்னைக்கு எல்லார் வீட்டிலும் எல்லா படசணமும் கிடைக்கும்.. இருந்தாலும் கண்ணா, நீ குழந்தை அதனால பாலும் வெண்ணையும் மட்டும் சாப்புடு, மத்த முறுக்கு, அதிரசம், வடை, தோசை இதெல்லாம் எனக்கு குடுக்கச் சொல்லிரு :)
ரவி அண்ணா, சூப்பரா எழுதிருக்கீங்க.. பாடலும் அதற்கு குடுத்த பின்னனித் தகவல்களும் படிக்க அருமையாக இருந்தது.. எனக்கென்னமோ நீங்க உங்க தோழியை விட, அவளின் உள்ளம்கவர்ந்தானை ரொம்ப கொஞ்சுறீங்கன்னு தோணுது.. பார்த்து, உங்ககிட்ட கோச்சுக்கப்போறா :)
//முள்ளும் மலரும் - மெலடியும் பின்னணியும் பிச்சி வாங்கிய படம்! //
ஹய்.. தலைவர் படம் :)
கண்ணன், ராதைக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் படம் அழகோ அழகு.
யுவன் பாடியபின் ராஜாவின் கமெண்ட் கலக்கல்.. :)
ஆகா ஆகா சின்னக்கண்ணனை வச்சுக் கொண்டு பெரும் காவியமே படைச்சிட்டீரே, அருமை அருமை, பீஸ் பீஸ் ஆக ரசித்தேன்.
ரீதி கௌளை! ஆஹா! நெஞ்சல் அள்ளும் ராகம் அல்லவா? பாட்டைக்கேட்டூடுவரேன் இருங்க முன்னமே கேட்டிருந்தாலும் இங்க மறுபடி கேட்டாகணும்.மேலும் படிச்சிவந்து பின்னூட்டமிடறேன் .
எம்.எம்.அப்துல்லா said...
அண்ணா சமீபத்தில் வந்த “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் “ பாட்டுகூட ரித்திகெளள இராகம்தான் :)
1:13 AM, August 13, 2009
>>>>>>>>>>>>>>>>>
ரவீ இந்த அப்துல்லா சினிமாலல்லாம் பாடறார் தெரியுமா அற்புதக்குரல்வளம் அவருக்கு! பிடிங்க அவரை ஒருபாட்டுப்பாடவைங்க உடனே இங்க!
//Anonymous said...
The other songs in Reethigowlai ragam: Film : THAMBI:
"SUDUM NILAVU SUDATHU SURIYAN"(I think the music was by Vidyasagar)//
ஆகா! ஆமாங்க! வித்யாசாகர் தான்! நல்ல பாட்டு! நன்றி சுப்ரமணியன்!
சுடும் நிலவு! சுடாத சூரியன்!
ஓடும் நிமிஷம்! உறையும் வருஷம்!
எல்லாம், எல்லாம், எல்லாம் வேண்டுமா?
- இது வரை கிட்டத்தட்ட ரீதி கெளளை தான்! :)
அப்பறம் வரும்
காதலித்துப் பார்...சேக்க சேக்க சேக்
காதலித்துப் பார்...
ரீதி கெளளை இல்லை! காதல் கெளளை :)))
//RAMA KANAVEMERA
Dubbed in Tamil:SIPPIKUL MUTHU/ RAMAN KATHAI KELUNGAL//
ராம கனவேமிரா
ரகுராம கனவேமிரா-ன்னு அதுவும் ராஜா போட்ட ரீதி கெளளை தான்! சூப்பரா நடுநடு-ல நாதசுரமும் வந்து ராகத்தில் கலக்கும்!
உரையாடல்கள் நடுநடுவே வந்தாலும், இன்னொரு அருமையான ரீதி கெளளைப் பாடல் தான்! சந்தேகமே இல்லை!
//எம்.எம்.அப்துல்லா said...
அண்ணா சமீபத்தில் வந்த “கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் “ பாட்டுகூட ரித்திகெளள இராகம்தான் :)//
அப்துல்லா அண்ணே! காலைக் காட்டுங்க!
சுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால் - ரீதி கெளளை தான்! பாட்டு கொள்ளை அழகு! பாட்டின் வரிகளும் ராகத்துக்கு ஏத்தாப் போலவே இழுவையா வரும்!
கண்கள் இரண்டால்
உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய்..இழுத்தாய்...போ..தாஆஆ..தென...ன்னு இழுக்கும் போதே ராகம் அப்படியே வெளிப்படும்!
ஆனால் பின்னணி மட்டும் ஒத்துழைக்கவே இல்லை! பாட்டு முழுக்க பீட் ஒரே மாதிரி தான் வரும்! ஏற்ற இறக்கமே இருக்காது! ராகத்துக்கு ரெண்டுமே தேவை இல்லையா? ஜேம்ஸ் வசந்தன் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கணுமோ என்பது என் கருத்து!
பாட்டோடு, பின்னணி இசையில் கவனம் செலுத்தி இருந்தா, இது சின்னக் கண்ணன் அழைக்கிறான்-யும், தலையைக் குனியும் தாமரையே-யும் தூக்கிச் சாப்பிட்டு இருக்கும்!
//எம்.எம்.அப்துல்லா said...
அடடா சொல்ல மறந்துட்டேன்...
ஹாப்பி பர்த்டே கண்ணா :)//
ஹிஹி! நன்றி! நன்றி! அப்படியே....
ஹாப்பி பர்த்டே
கண்ணா ஹாப்பி பர்த்ட்-ஏஏ-ன்னு
இழுத்து, கண்கள் இரண்டால் போலவே பாடி வாழ்த்துச் சொல்லுங்கண்ணே! நீங்க தான் சூப்பர் சிங்கர்-ல்ல?
//சங்கா said...
சூப்பர்! எனக்கு இந்த டெக்னிக்கல் விஷயம்லாம் தெரியாது.//
அட எனக்கும் தெரியாதுங்க!
ஆரோகணம், அவரோகணம், இவரோகணம்-ன்னு எல்லாம் வச்சி ராகத்தைக் கண்டு புடிக்கத் தெரியாது! சும்மா கேள்வி ஞானம் தான்! :)
//நீங்க எளிமையா விளக்கியிருக்கீங்க! நன்றி!//
எளிமையே இனிமை! :)
//SurveySan said...
நமோஷ்கார் :)//
நீங்க எப்போ-ண்ணே ஆஜ் தக்-ல நிருபர் வேலைக்குச் சேர்ந்தீங்க? :)
//உங்க உபயத்தில், இசை உலகுக்கு என்னாலான ஒரு சின்ன டார்ச்சர்//
ஹா ஹா ஹா! என்னடா நேயர் விருப்பம் ரொம்ப நாளாக் காணோமே-ன்னு நினைச்சேன்! இப்ப நான் புண்ணியம் கட்டிக்கிட்டேனா? சூப்பரு! ட்ரை பண்ணுறேன்! உங்க அளவுக்கு எல்லாம் எனக்குப் பாட்டு படிக்க வராது! :)
//நீங்களும் பாடி அனுப்புங்க. ஹாப்பி கி.ஜெயந்தி//
யாரு சர்வேசண்ணே இந்த கி. ஜெயந்தி?
அவங்க அப்பா பேரு கிருஷ்ணமூர்த்தியா? :))
//Raghav said...
இருந்தாலும் கண்ணா, நீ குழந்தை அதனால பாலும் வெண்ணையும் மட்டும் சாப்புடு//
பொறந்த குழந்தை அது கூடச் சாப்பிட முடியாது! அது எப்படி ராசா வெண்ணையைச் சாப்பிடும்? இது கூடத் தெரியாத வெண்ணைய்-ன்னு நீங்க வேணும்-ன்னா வெண்ணைய் சாப்பிடலாம்! :))))
//மத்த முறுக்கு, அதிரசம், வடை, தோசை இதெல்லாம் எனக்கு குடுக்கச் சொல்லிரு :)//
தோடா! பதிவைப் போட்டது நானு! ஞாபகம் வச்சிக்கோங்க!
பை தி வே, கி. ஜெயந்திக்கு தோசை எல்லாம் கூட சுடுவாங்களா என்ன?
//Raghav said...
ரவி அண்ணா, சூப்பரா எழுதிருக்கீங்க.. பாடலும் அதற்கு குடுத்த பின்னனித் தகவல்களும் படிக்க அருமையாக இருந்தது..//
நன்றி ராகவ்! :)
படிச்சது போதும்! சீக்கிரம் சீடையைக் காலி பண்ணு! :)
//எனக்கென்னமோ நீங்க உங்க தோழியை விட, அவளின் உள்ளம்கவர்ந்தானை ரொம்ப கொஞ்சுறீங்கன்னு தோணுது..//
அடப் பாவி மக்கா! எங்கிருந்துய்யா இப்படி டைப் டைப்பாக் கெளம்பி வரீங்க? :)
கண்ணா-ன்னு தான் கவிக்கா என்னையக் கூப்டுவாங்க! அதான் கண்ணா Have a sweet & sexy birthday dude!-ன்னு சொன்னேன்!
என் பொறந்த நாள் கண்ணன் பிறந்த நாளுக்கு ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே! அதான் எனக்கே சொல்லிக்கிட்டேன்! :)
//பார்த்து, உங்ககிட்ட கோச்சுக்கப்போறா :)//
தன் மனத்துக்கு இனியானை அனைவருக்குமே காட்டிக் கொடுத்த ஞான ஆசார்யை - என் தோழி! :)
ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை மாயன் மணி வண்ணன் என்று காதலனையே பங்கு போட்டுக் கொடுக்கும் பெரிய மனசு யாருக்கு வரும்? அவளா என்னிடம் கோச்சிக்கப் போறா? நெவர்! நெவர்! Shez my dearesttttt friend :))
//Raghav said...
கண்ணன், ராதைக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கும் படம் அழகோ அழகு//
இன்றும் பெருமாள் தாயாருக்கு வெற்றிலை மடிச்சிக் கொடுப்பாரு! அந்தத் தாம்பூலத்தைத் திருமார்பில் உள்ள அலர்மேல் மங்கைக்குத் தந்து, அவள் மென்று தந்ததை அவனுக்கும் நைவேத்யம் செய்வார்கள்! :)
உன் இதய-வாசல்
படியாய்க் கிடந்து உன் வெற்றிலை வாய் காண்பேனே!
//Raghav said...
யுவன் பாடியபின் ராஜாவின் கமெண்ட் கலக்கல்.. :)//
ஹிஹி! செம நக்கல் ஓட்டுறாரு-ல்ல புள்ளைய! :)
யுவன் கூட பாடுறது யாரு? சரியான வெண்ணைய் மாதிரி பாடுறான்!
//கானா பிரபா said...
ஆகா ஆகா சின்னக்கண்ணனை வச்சுக் கொண்டு பெரும் காவியமே படைச்சிட்டீரே, அருமை அருமை, பீஸ் பீஸ் ஆக ரசித்தேன்//
வாங்க காபி அண்ணாச்சி! பீஸ் பீஸா ரசித்தீங்களா? ஜூப்பரு! பாட்டுல தப்பு-ன்னு என்னைய பீஸ் பீஸா ஆக்காம வுட்டீங்களே! உங்க அன்பை என்னான்னு சொல்லுவேன்? :)
//ஷைலஜா said...
ரீதி கௌளை! ஆஹா! நெஞ்சல் அள்ளும் ராகம் அல்லவா?//
ஆமாக்கா! காதலுக்கு-ன்னே பொறந்த ராகம் அது! அதான் அவ்ளோ Complicated! But Captivating! :)
//ஷைலஜா said...
ரவீ இந்த அப்துல்லா சினிமாலல்லாம் பாடறார் தெரியுமா அற்புதக்குரல்வளம் அவருக்கு! பிடிங்க அவரை ஒருபாட்டுப்பாடவைங்க உடனே இங்க!//
துண்டைப் போட்டாச்சுக்கா!
ஹேப்பி பர்த்டே கண்ணா
ஹேப்பி பர்த்டே-ன்னு
கண்கள் இரண்டால் மெட்டில் பாடப் போறாரு அப்துல்லா! :)
மக்களே
நம்ம சர்வேசன் அண்ணாச்சி, அவரோட பதிவில், ரீதி கெளளையைச் சும்மா பிச்சி உதற்றாரு! உடனே போய்க் கேளுங்க!
சின்னக் கண்ணன் உதைக்கிறான்!
சின்னக் கண்ணன் உதைக்கிறான்!
வேசனை, சர் வேசனை
அவன் பயங் கொள்ளும் பயங்கரப் பாட்டினைக் கேட்டே...
சின்னக் கண்ணன் உதைக்கிறான்!
:))
கண்ணன் முற்றம் கலந்தளராயிற்று போலிருக்கிறதே.
//குமரன் (Kumaran) said...
கண்ணன் முற்றம் கலந்தளராயிற்று போலிருக்கிறதே//
ஆமாம் குமரன்! முற்றம் அளர் ஆயிற்று தான்! எல்லாம் சர்வேஸ் அண்ணாச்சி கெளப்பிய பீதி! :))
//Raghav said... இருந்தாலும் கண்ணா, நீ குழந்தை அதனால பாலும் வெண்ணையும் மட்டும் சாப்புடு// பொறந்த குழந்தை அது கூடச் சாப்பிட முடியாது! அது எப்படி ராசா வெண்ணையைச் சாப்பிடும்? இது கூடத் தெரியாத வெண்ணைய்-ன்னு நீங்க வேணும்-ன்னா வெண்ணைய் சாப்பிடலாம்! :)))) //மத்த முறுக்கு, அதிரசம், வடை, தோசை இதெல்லாம் எனக்கு குடுக்கச் சொல்லிரு :)// தோடா! பதிவைப் போட்டது நானு! ஞாபகம் வச்சிக்கோங்க! பை தி வே, கி. ஜெயந்திக்கு தோசை எல்லாம் கூட சுடுவாங்களா என்ன?
பாடல் - பஞ்சு அருணாச்சலம், கண்ணதாசன் இல்லை.
கண்ணதாசன் என்று தவறாக போட்டு உள்ளீர்கள். மாற்றுங்கள்.