ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி, ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், முனிவர்கள், தேவாதி தேவர்கள் உனது தாள் தொழ.. கமலக் கண்ணாடி கண்டருளும்.. எங்கள் கண்ணா, கார்மேக வண்ணா..
இன்றோ உன்னை விட்டு எக்கணமும் பிரிந்திராத ஆதிசேஷன் மட்டும் இருக்க, மலர்மாலை கூட இல்லாமல் இருப்பதன் காரணம் என்னவோ.. ??
ஆதிசேஷனே, நீ மீண்டும் ஒருமுறை முருகனருள் சென்று விட்டு வாயேன்.. என் மருகனுக்கு பாம்பு-அணியாய் இருந்து விட்டு வரலாம்.
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா!,
"சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரஅடியாம் நீள்கடலுள்- என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு"
என்றிருக்க நான் எப்படி உங்களை விட்டு விலக முடியும்.. வேண்டுமானால் நாம் இருவரும் செல்வோம்..
இப்படி உரையாடிக் கொண்டிருந்த கண்ணன், வேறொருவர் குரல் கேட்டு திரும்புகிறான்..
சரி கதையை தொடரும் முன் சிறு விண்ணப்பம்.. அடியேன் இராகவன்.. ரவி அண்ணாவுக்கு மட்டும் ராகவ். கண்ணன் பாட்டு நூறை தொட்டு இரண்டு வாரம் ஆகி விட்டது. முருகனருளும் நூறை தொட்டு விட்டது. கண்ணன் பாட்டின் 101வது பாடலாக.. இந்த கந்தவடி பதிவு.
சரி கதைக்கு வருவோம். முருகனருளின் 100 வது பதிவை அனைவரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, பெருமாள் மட்டும் வைகுண்டம் திரும்பி விட்டார். தற்போது தொடருவோம்..
"பெருமாளே ஏன் இந்த கோலம்? .. நாடு தோறும் வீடு தோறும் .. உன்னைத்தேடி ஓடி வந்துள்ளேன்.. அருள் புரிய வேண்டும். "
பக்தனே யார் நீ? என் மருகன் 100 வது பதிவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் பாதை மாறி வந்து விட்டாயா?
இல்லை பரந்தாமா. .உன் மருகன்.. இந்த பித்தன் முருகதாஸனை, உன்னை சந்தித்து வரத்தான் இங்கு அனுப்பியுள்ளான். உலகத்தின் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பரந்தாமன் நீ..
உன்னை அலங்காரப்பிரியன் என்றல்லவோ பூஜிக்கிறோம். இன்று தாங்கள் தனியே, மலர்மாலை கூட சூடாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை.
முருகதாஸா, நான் உட்பட அனைவரும் என் மருகன், முருகனின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோம். உலக ஷேமத்திற்காக நான் விரைவில் வந்து விட்டேன். தேவியர்களுக்கு இன்னும் அங்கிருந்து வர மனமில்லை.. என்ன இருந்தாலும் தமிழர் விருந்தோம்பலில் சிறந்தவன். அது தான் அனைவரும் அங்கேயே உள்ளனர். ஆறுமுகத்தானின் கொண்டாட்டத்திற்கு நிறைய மலர்கள் தேவை, அதனால் தான் எனக்கு கூட மாலை இல்லா பற்றாக்குறை.
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயா, "பூமாலைக்கு பதிலாக என் பாமலையை சூட்டிக்கொள்ள வேண்டுகிறேன்."
ம்ம்.. முன்பெல்லாம் பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கலாம் என்பர்... இன்று அதுவும் போய்.. பூமாலை வைக்கும் இடத்தில் பாமாலை வைக்கிறாய்.
சரி இந்த அலங்கார பிரியனுக்கு உன் பாடல்களே அழகு சேர்க்கட்டும்.
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா! நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா ! நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா! நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
காத்திருக்கோம் காத்திருக்கோம் கமலக் கண்ணா வா வா! பார்த்திருப்போம் உன் வரவை குழழ்ஊதி வா வா! கால் சிலம்பு கொஞ்சிடவே கமலக் கண்ணா வா வா! கானக்குரல் கேட்க வேண்டும் கமலக் கண்ணா வா வா!
கண்ணன் பாட்டு வலைப்பூவின் 100-வது பதிவு இதோ! 100-ஆம் பாடல், மிகவும் பிரபலமான பாடல்! கிருஷ்ணா நீ பேகனே, பாரோ! தமிழ் வடிவில், கிருஷ்ணா நீ வேகமாய், வாராய், என்று தந்துள்ளோம்! மங்கள இசையுடன் துவங்கலாமா? ஷேக் சின்ன மெளலானா அவர்கள் இதே பாட்டை வாசிப்பதை இங்கு கேட்டு மகிழுங்கள்!
இன்னிக்கு பல பதிவர்களின் குரலை எல்லாம் ஒன்னாக் கேக்கப் போறீங்க! இது நாள் வரை அவர்கள் எழுத்தை மட்டுமே படித்த பலருக்கும், இன்னிக்கி பதிவர்களின் குரலைக் கேக்கப் போற அபாயம்! எனவே எச்சரிக்கை! நில், கவனி, பின்னூட்டு! :-)
கிட்டத்தட்ட அதே மெட்டில், தமிழாக்கி உள்ளேன்! அந்தத் தமிழை, மலைநாடான் ஐயாவும், குமரனும் அடியேனும் பாடி உள்ளோம்! இந்த நூறாம் பதிவை, வழி நடத்திச் செல்லப் போவது, நம் ஷைலஜா அக்கா! அவர் பாட்டுக்குத் தரும் முன்னுரை இதோ! Over to Shylaja!
வாராய் நீ வாராய்!- இந்த திரைப் பாடல் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இப்படிக் கடவுளை வாராய் நீ வேகமாக வாராய் என்றார் ஒரு பக்தர்! யார் அவர்?
அதற்கு முன், கண்ணனைப் பெரியாழ்வார் எனும் பெரும்பக்தர் எப்படி அனுபவித்துப் பாடினார் என்பதைப் பார்ப்போமா? கண்ணன், அழகான குழந்தை வடிவோடு பெரியாழ்வாருக்கு சேவை தந்தாராம். அந்த அழகான குழந்தையின் முகம் பார்த்ததும், குழந்தைக்குத் தொட்டில் போட அவருக்கு ஆசை வந்ததாம்.
மாணிக்கங்கட்டி வயிரம் இடைகட்டி ஆனிப்பொன்னால் செய்த வண்னச் சிறுதொட்டில் என்று பாட்டில் அதைச் செய்தார்! தொட்டிலில் கண்ணனைக் கிடத்தி அவனுடைய பாதக் கமலங்கள் காண வாரீரே என்று பாசுரம் பாடுகிறார்! - 'வையம் அளந்தானே தாலேலோ!' வையம் அளந்த கால் அது!
முத்தும் மணியும் வயிரமும் நன் பொன்னும் தத்திப் பதிந்துத் தலைப் பெய்தாற்போல் எங்கும் பத்து விரலும் மணிவண்னனின் பாதங்கள், ஒத்தி இருந்தவா காணீரே! ஒத்தார் போலிரூக்கும் விரல்கள்! அந்தப் பாத அழகு! கண்ணனின் திருவடியில் மனம் சரணடைவதை பெரியாழ்வார் இப்படிச் சொன்னார் என்றால் கண்ணன் திருவடி எண்ணுக மனமே என்கிறார் பாரதியும்.
கிருஷ்ணா நீ பேகனே-விலும், அந்த திருவடியைத் தான் வியாசராயர் தன் பாடலில் முதலில் சொல்கிறார் பாருங்கள்! வியாசராயர் பெரிய மகான். மத்வ மடாதிபதி! மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரசவையில் மந்திரியாக விளங்கியவர். ஒரு சமயம் குஹு யோகத்தின் பலனாக மன்னரின் உயிருக்கு ஆபத்து நேர்ந்த போது வியாசராயரே சிம்மாசனம் ஏறி மன்னரின் உயிரைக் காப்பாற்றினாராம்.
"ஸ்ரீக்ருஷ்ண" என்னும் கன்னட முத்திரையுடன், கன்னட மொழியில் பல பதங்களை இயற்றி உள்ளார். இந்த வியாசராயரிடம் தீட்சை பெற்றவர் தான் புரந்தர தாசர். வியாசராயா எழுதிய கன்னட மொழிப்பாடல் இந்தக் கிருஷ்ணா நீ பேகனே! நாமெல்லாம் கடவுளை நோக்கிச் செல்ல விரும்புவோம்! ஆனால் இவரோ க்ருஷ்ணனை வா வேகமாய் வா என்று அன்புக் கட்டளையிடுகிறார்.
அவருடைய மனக்கண்ணில்....
முனியே நான்முகனே முக்கண்ணப்பா! நம் கண்ணன் குழந்தைக்கு, பெருமாளாகவும்-சிவசக்தியாகவும் அலங்காரம்!
காலாலந்திகே கெஜ்ஜே நீலாத பானவுலி நீலவர்ணனே நாட்யம் ஆடுத பாரோ காலிலே கிண் கிணிகள்! கையில் மணிக் கங்கணங்கள்! நீல வண்ணக் கண்ணா, நடனம் நீ ஆடி வாராய்! (கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
காசி பீதாம்பர கையல்லி கொலாலு பூசித ஸ்ரீகந்த மையல்லோ லாகம்மா காசிப் பீதாம்பரமும் கையில் புல்லாங் குழலும் பூசிய சந்தனம் உன், மேனி எங்கும் மணக்க (கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
தாயிகே பாயல்லி ஜகவன்னு தோரித ஜகதோத் தாரக நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா வாயினில் வையத்தைத் தாயிற்கே காட்டியவா உலகத்தின் காவலா, நம்ம உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா (கிருஷ்ணா நீ வேகமாய், வாராய்!)
ராகம்: யாமுன கல்யானீ தாளம்: சாபு வரிகள்: வியாசராய தீர்த்தர் மொழி: கன்னடம் Back to Shylaja... வியாசராயரின் மனக்கண்ணில்.... குழந்தைக் கண்ணன் யசோதை வீட்டின் கூடத்தில் தவழ்ந்து ஓடிக் கொண்டிருக்கிறான். குழந்தைக்கு எத்தனை சுறுசுறுப்பு! ஓரிடத்தில் இல்லாமல் தவழ்ந்து நகர்ந்து நீஞ்சிச் செல்கிறது. வியாசராயரால் அவனைப் பிடிக்க முடியவில்லை. அந்தத் திருமுகத்தை அருகில் பார்க்க ஆவலாகிறார்! ஆகவே க்ருஷ்ணா நீ வேகமாய் வா அப்பா என்று கெஞ்சுகிறார்.
வந்தால் மட்டும் போதாதாம்! வேகமாய் நீ வந்து உன் திருமுகத்தைக் காட்டுவாய் என்கிறார். முகம் கண்டவுடனேயே மனம் கண்ணனின் திருவடிக்கே செல்கிறது. அங்கே காலில் கொலுசைப் பார்க்கிறார்! காற்சலங்கையை இங்கு முதலில் குறிப்பிடுவது நம் தாயகத்தில்! இதற்கு ஓரு கதை உண்டு! சதங்கை மணிஒலி அதிர்ஷ்ட வரவின் அறிகுறி. அந்த ஒலி கேட்டு கெட்டவைகள் ஓடிவிடுமாம்.
கைகளில் நீலமணி கொண்ட கங்கணங்கள் பிடித்துக் கிடக்கிறதாம்..இடுப்பில் ஒட்டியாணம்! கையில் மோதிரம்! அந்தக் கையால் அருளோ அன்றி குட்டோ அதே பாக்கியம் அல்லவா?
வைஜயந்தி மாலை! அது பாற்கடலில் பள்ளி கொள்ளும் பரந்தாமனின் வெற்றி மாலை! பக்தனின் இதயத்திலும் அதே வெற்றி உணர்வு ,அதைப் பார்த்த மாத்திரத்தில் வந்து விடாதோ?
காசி! உலகின் பழைய நகரம்! புண்ணீய நகரம். காசிக்கு பனாரஸ் என்றும் பெயர் உண்டு. பனாரஸ் பட்டு உசத்தியானது, அதைக் கடவுளுக்கு அணியவைத்து அழகு பார்க்கிறார். சிவப்பு நிறப்பட்டு அண்ணலுக்கு உகந்த உடை. அந்த சிவந்த ஆடை, தன் சிந்தையைக் கவந்ததை திருப்பாணாழ்வாரும் அனுபவித்துப் பாடி இருக்கிறார்.
அடுத்து புல்லாங்குழல்!அதன் இன்னிசை ஒலி காற்று வெளியில் அமைதியை பரப்பி மனதை வருடி அங்கே தூய்மையை நிரந்தரமாக்குவது!
சந்தன மரம்! தியாகத்தின் மறுவடிவம். தன்னை அழித்து மணம் தருவது. பக்தியின் உச்சமே தன்னை மறப்பதும் இழப்பதும் தானே? அதற்கு சந்தனத்தை விட வேறு உதாரணம் சொல்லவும் இயலுமோ? அத்தகைய சந்தனம் மணக்கும் மேனி அழகன்,கண்ணன்!
வாயில் தன் தாயினுக்கு உலகத்தையேக் காட்டியவன் ! உலகத்தைக் காத்து ரட்சிக்கும் நம் உடுப்பி ஸ்ரீகிருஷ்ணனே!
வாராய் நீ வேகமாக வாராய்! - எங்களின் நூறாவது பதிவிற்கு வாராய்! தாராளமாய் அருள் வெள்ளம், ஏராளமாய் இங்கு வரும் பாரோர்க்குத் தாராய்! சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்! - திருவரங்கப்ரியா (எ) ஷைலஜா சக பதிவர்களின் வாழ்த்துச் சேதி இதோ:
மக்களே, கண்ணன் பாட்டை இன்னும் பாங்காகக் கொண்டு செல்ல உங்கள் யோசனைகளை அறியத் தாருங்கள்! இது நாள் வரை, நீங்கள் அத்தனை பேரும் காட்டி வந்த அன்புக்கும், ஆதரவுக்கும், எங்கள் பத்து பேரின் மகிழ்ச்சியையும் நன்றியையும் ஒரு சேரத் தெரிவித்துக் கொள்கிறோம்!
என்றும் வேண்டும், உங்கள் இன்ப அன்பு! - இப்படிக்கு, கண்ணன் பாட்டுக் குழுவினர் * தி. ரா. ச.(T.R.C.) * வெட்டிப்பயல் * மடல்காரன் * மலைநாடான் * Raghavan * "முருகனருள்" கோ.இராகவன் * dubukudisciple * குமரன் (Kumaran) * ஷைலஜா * kannabiran, RAVI SHANKAR (KRS) Colonial Cousins, ஹரிஹரன் மற்றும் லெஸ்லி லூயிஸ் சேர்ந்து, அனைத்துச் சமய நல்லிணக்கம் வேண்டிப் பாடுகிறார்கள்! இடையிடையே அருமையான ஆங்கில வரிகள் ! இதோ! So Come down and help us, Save all the little ones They need a teacher, And you are the only one Come back as Jesus, Come back and save the world We need a teacher, and You are the only one Come back as Rama, Forgive us for what we've done Come back as Allah, Come back for every one.......
கண்ணனின் இனிமை காசினிக்கே இனிமை சேர்க்கட்டும்! எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்! (கண்ணன் பாட்டு வலைப்பூவின் அன்பர், திரு. மலைநாடான் ஐயாவின் அன்புத் தந்தையாருக்கு இவ்வமயத்தில் அஞ்சலிகள் செலுத்தி, அவர் இன்னுயிர் அமைதி பெற, இறைவன் எம்பெருமானை வேண்டிக் கொள்கிறோம்!)
KRS பதிவு எழுதுவான்! பாட்டு எழுதுவானா? அதை ஷைலஜா பாடுவாங்களா?
இனிமேல் அரங்கன் மாதவிப் பந்தலில் இடம் பெற மாட்டான்-ன்னு நட்சத்திர வாரத்தில் நடைபெற்ற அரசியல் சூட்டில் ஏதோ வீறாப்பாகச் சொல்லிட்டேன்! கதையும் பாதியில் நிக்குது! ஆனால் மனசு மட்டும் சுத்தி சுத்தி அங்கே தான் வருது! ஒய்யார நடை அழகு, சக்கரப் படை அழகு, வெண்முத்துக் குடை அழகு, பிரசாத வடை அழகு - இப்படி இத்தனை அழகு இருந்தா, வீறாப்பு எம்புட்டு நாள் தாங்கும்? வீறாப்பை உடைக்க வந்த வீராங்கனை...அவங்க பேரு ஷைலஜா! திருவரங்கப்ரியா என்ற புனை பெயரில் அரங்கனே வந்தான் போலும்! * ஷைலஜாவின் குரல் நம்மில் பலருக்கும் அறிமுகம் தான்! அக்கா பாடினால் கனகதாரா(பொன்மழை) கொட்டாது, ஆனா மைசூர்பாக் நிச்சயமாக் கொட்டும்! * நாகி என்பவர் ஷைலு அக்காவின் தோழீ! தேர்ந்த கர்நாடக இசைப் பாடகி! பல கச்சேரிகள் செய்துள்ளார்! * கேஆரெஸ் என்பவன் ஷைலுவின் செல்லத் தம்பி! திருட்டுத்தனமா பல கவுஜ எழுதி இருக்கான்! ஆனால் பதிவுலகத்தில் பல பேருக்குத் தெரியாது! இதோ இன்னிக்கி தெரிஞ்சி போச்சு!:-)
முதலில், பாடலைப் படிச்சி எப்படி இருக்கு-ன்னு சொல்லுங்க! பாடல் பிறந்த கதையை அப்பறம் சொல்லுறேன்! ஷைலஜாவும், நாகியும் சேர்ந்து பாடறாங்க! ரொம்ப அழகா ராகம் எல்லாம் போட்டு, இனிமையாப் பாடுறாங்க! இந்தாங்க கேட்டுக்கிட்டே படிங்க!
கருநாகப் பாயில் உறங்கிடும் கரியவன் - என் மருதேகப் பாயில் உறங்கிட உரியவன்! வாரானோ அந்த வாமனச் சிறியவன் - அளந்து பாரானோ என்னை மாமலைப் பெரியவன்? (கண்டேன் அரங்கத்தில்)
(பாகேஸ்ரீ ராகம்) காவேரி பாய்ந்து ஓடிடும் சோலைகள் காதலன் தோளினில் சூடிடும் மாலைகள் கோவிலின் கோபுரம் ஓம்-கிடும் ஓங்கிடும் கோதையின் பூமனம் ஏன்-கிடும் ஏங்கிடும்!
(ஹம்சாநந்தி ராகம்) மத்தள வரிசங்க நாதம் வரும் - தள தத்தள தளாங்கு கீதம் வரும்! தித்திக்கும் தீந்தமிழ் வேதம் வரும் - அதில் எத்திக்கும் அவனிரு பாதம் வரும்!
வீணையில் விரகச் சேர்த்தம் வரும் - அவன் வியர்வையில் துளசீ தீர்த்தம் வரும்! காதினில் மந்திர ஓதல் வரும் - அவன் கலந்திடக் கலந்திடக் காதல் வரும்!
(பெஹாக் ராகம்) காதல் வரும், குழல் பாடல் வரும் - கேலிச் சீடல் வரும், உடன் ஊடல் வரும்! மோதல் வரும், பின் மோகம் வரும் - அந்த மோகத்தில் ஏங்கிடக் கூடல் வரும்!
(சிந்துபைரவி ராகம்) ஆழ்ந்த பின்னாலொரு ஆடல் வரும் - எல்லாம் ஆழ்வாரே என்றொரு ஆவல் வரும்! ஆண்டாள் ஆண்டான் தேடல் வரும் - பெண்ணே யாவுமே அவனென்ற நாடல் வரும்! (கண்டேன் அரங்கத்தில்) என்னாங்க! பாட்டு புடிச்சி இருந்துச்சா? கவுஜ ஓக்கேவா? :-) கண்ணன் பாட்டின் 99-ஆம் பாட்டை, அடியேன் புனைந்து, அக்கா பாடணும் என்பது அரங்கன் திருவுள்ளம் போலும்! அரங்க நகரப்பனுக்குப் பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை! பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!
மக்களே! கவிதை உருவான கதை இது தான்!
"கேஆரெஸ், ஆழ்வார்-ன்னா யாருங்க? ஏதோ பன்னிரெண்டு பேரு-ன்னு சொல்றாங்களே! அவங்களா?"
"எதுக்குப்பா மாப்பி கேக்குற? அதுவும் திடீர்னு? தல அஜீத் நடிச்ச ஆழ்வார் படம் பத்தி கூட ரொம்ப பேஸ் மாட்டியே நீ?"
"அடச் சும்மா தான்! நான் ஒன்னு கேட்டா, கோச்சிக்க மாட்டியே கேஆரெஸ்?"
"அடச்சீ, நமக்குள்ள என்ன இம்புட்டு பீடிகை? சும்மா கேளுமா!"
"இல்லை, வெறும் பன்னெண்டு பேரை மட்டூம் ஆழ்வார்-னு சொல்லிட்டுப் போயிட்டாங்க! அப்படின்னா, அவங்களுக்கு அப்புறம் வேற யாருமே பெருமாள் மேல பக்தி பண்ணலையா? எதுக்கு பன்னெண்டு பேரை மட்டும் எப்பவும் கொண்டாடிக்கறாங்க? அப்படின்னா மத்தவன் எல்லாம் என்ன ஒன்னும் பக்தி இல்லாதவனா? எதுக்கு குறிப்பிட்ட சிலரை மட்டும் இப்பிடி Institutionalize பண்ணனும்?"
"உம்...."
"என்ன ரவி, உம்-கொட்டுற? நான் சொல்லட்டுமா? ஆழ்வார்கள் எல்லாம் அந்தணர்கள்! அதுனால, இப்படியெல்லாம் சும்மா செட்டப் பண்ணி வச்சிட்டுப் போயிட்டாங்க! சரி தானே?"
"ஹிஹி! நீ இங்கிட்டு வரியா? ஆழ்வார்கள் பன்னிரெண்டு பேர்ல, ஒன்பது பேர் ஸோ கால்ட் தாழ்ந்த சாதி! சிலர் பிறப்பு அறியாத குழந்தைகளும் கூட!"
"என்னாது??? என்னடா சொல்லுற நீயி?"
"ஆமாம்! அந்தப் பன்னிரெண்டு பேர்ல, யார் யார் என்னென்ன சாதி-ன்னு இன்னோரு நாள் பட்டியல் போட்டுக்கலாம்! அதை விட, இப்போ நீ கேட்ட இன்னோரு முக்கியமான கேள்விக்கு வாரேன்! அவிங்களுக்கு அப்பறம் யாருமே பக்தி பண்ணலையா? எதுக்கு அவிங்களுக்கு மட்டும் இவ்ளோ சிறப்பு?"
"ஆமாம்! அதையே தான் நானும் கேக்குறேன்! அது என்னா பன்னண்டே பன்னண்டு பேரு கணக்கு?"
"எத்தனி பேருன்னு சொன்ன மாப்பி நீ?"
"பன்னிரெண்டு பேரு டா!"
"இல்லை! ஆழ்வார்கள் இன்னிக்கி தேதியில் மட்டும் 660 கோடி!"
"ஆகா...இது என்னடா புது கணக்கு சொல்ற நீ? இது என்ன கணக்கா? கப்சாவா?? இல்லை புதிரா? புனிதமா??"
Hymns of The Drowning!
வாழ்க்கையில் எப்பேர்பட்ட கொடியவனும், ஒரு நொடியாவது, எம்பெருமானிடத்தில் அம்மா, அப்பா, இறைவா என்று ஏதோ ஒரு வழியில், மனசறிய ஆழ்கிறான்! இளமையிலோ, முதுமையிலோ, குழந்தையாகவோ, பெரியவனாகவோ, ஆத்திகனோ, நாத்திகனோ...யாராயினும் அழாதவர்களும் இல்லை! ஆழாதவர்களும் இல்லை!
ஆக, அழுதவர் எல்லாரும் ஆழ்வார்கள் தான்! ஆழ்ந்தவர் எல்லாரும் ஆழ்வார்கள் தான்!
நாம் எல்லோருமே ஒரு வகையில் பார்த்தால், ஆழ்வார்கள் தான்! என்ன, நாம் நமக்காக மட்டும் அழுகிறோம்! அந்தப் பன்னிரெண்டு பேர், நம் அனைவருக்காகவும் ஆழ்ந்தார்கள்! மறைகளில் மறைந்து இருந்ததை, முதன் முதலாக, எல்லாருக்கும் பொதுவில் கொண்டு வந்து வைத்தார்கள்! தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே!
போதாக்குறைக்கு, தேன் தமிழை, தெய்வத் தமிழாய் ஆக்கினார்கள்! அதனால் தான் இந்தப் பன்னிரெண்டு என்ற கணக்கே தவிர, அவர்களுக்குப் முன்னும் பின்னும் பல பேர் வந்தார்கள் தான்! அவர்கள் அனைவருக்கும் சிறப்பு தான்! எந்தரோ மகானு பாவுலு தான்! அந்தரிகி வந்தனமுலு தான்!
நீயே கூட ஒரு ஆழ்வார் தான் மாப்பி! உன் பேர்ல-யே பாட்டு எழுதிறட்டுமா? அதான் எழுதினேன்! பாத்து சொல்லு! நீயும் ஒரு ஆழ்வார் தானே? ஆழ்ந்த பின்னாலொரு ஆடல் வரும் - எல்லாம் ஆழ்வாரே என்றொரு ஆவல் வரும்! ஆண்டாள் ஆண்டான் தேடல் வரும் - பெண்ணே யாவுமே அவனென்ற நாடல் வரும்! அடுத்த பதிவு: கண்ணன் பாட்டு - 100 என்ன பாட்டாக இருக்கும்? சொல்லுங்க பார்ப்போம்! யாரு பாடப் போறா? சொல்லுங்க பார்ப்போம்?? Stay tuned till Monday:-)