தொண்டன் ஆகாவிட்டால் மோசம் வருமே - ஹரி
தொண்டருக்கு தொண்டன் ஆனால் ஹரி கருணை செய்வானே
காடு மலை ஏறத் தேவையில்லையே - மலையை
விரலால் தொட்ட ரெங்கனைத் துணை கொள்ளுங்கள் இங்கே (எ)
உன்னோட கடைசிப் பாட்டு ரொம்ப தொல்லை குடுக்குதுடீ! வரவர தாங்க முடியல! நானும் உன்னைப் போலவே ஆயிருவேனோ-ன்னு பயமா இருக்கு! :( இது கண்ணன் பாட்டிலே....KRS என்னும் சிறுவனின் 100வது இடுகையும் ஆகும்!
வாழ்விலே பல தருணங்கள், இவளை ஒட்டித் தான் எனக்கு அமைஞ்சிருக்கு!
* என் பிறந்த நாள் ஆகட்டும், வாழைப் பந்தல் கிராமத்துப் பள்ளிச் சேர்க்கை ஆகட்டும், * சென்னை திராவிடர் கழக வாசம் ஆகட்டும், TVS நிறுவன வேலை ஆகட்டும், * அமெரிக்காவில் ஆற்றிய சொற்பொழிவுகள் ஆகட்டும், பந்தல் பதிவுகள் ஆகட்டும்.... * இனியது கேட்கின் ஆகட்டும்....எட்டாம் வகுப்பில் இவளைப் போலவே பெண் வேடமிட்டு, பள்ளியில் ஆடிய நடனப் புகைப்படம் ஆகட்டும்
இவள் பிறந்த நாளை ஒட்டி, இவளின் மகுடமான கனவுப் பாட்டை, நனவுப் பாட்டாக....இதோ...கண்ணன் பாட்டிலே! வாரணமாயிரம் = பல திரைப்படங்களில், பல்வேறு இசையமைப்பாளர்கள் கை வண்ணத்தில் வந்திருக்கு! ஆனால் அத்தனைக்கும் மகுடமாக, இளையராஜாவின்இசையில்.....கேளடி கண்மணி படத்தில்.....ஜானகி பாடும் ஏக்கமான மெல்லிசை!
சிங்கார வேலனே தேவா போல்.....ஜானகிக்கு அமைந்து விட்ட மிகப் பெரும் நல்லூழ் (அதிருஷ்டம்) என்று தான் சொல்லணும்! ஏன்-ன்னா வேற யாரும் இதைச் சினிமாவில் முழுக்கப் பாடலை! ஏக்கம் இழையோடும் குரலில் கேட்டுக்கிட்டே பதிவை வாசியுங்கள்!
ஹே ராம் படத்திலும், சிறு சிறு துணுக்குகளாக.....கோயில் அரையர்கள் ஓதும் நடையில் இந்த ஆண்டாள் பாட்டு! இதுவும் இளையராஜே இசையே! விபா சர்மா பாட, அரையர்கள் ஓதுவது!
நாட்டியப் பேரொளி பத்மினி நடனமாடுவது! - செந்தாமரை என்னும் படத்தில்!MSV இசையிலே, பி. லீலா பாடுகிறார்கள்!
** சுசீலாம்மாவும் இந்தப் பாட்டைப் பாடி இருக்காங்க! ஆனால் முதல் இரு வரிகள் மட்டுமே! அப்பறம் Track மாறீடும்! திருமால் பெருமை படத்தில்! இதோ!
** வியப்பு என்ன-ன்னா மரபிசை-கர்நாடக இசையில், எவருமே இதை இதுவரை பாடாதது தான்! பிரபல கலைஞர்கள், இதைப் பாடிக் குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும்!
ஆண்டாள் கல்யாணத்துக்காக, ஷைலஜா அக்கா பிரத்யேகமாக போட்டு அனுப்பிய, வண்ணக் கோலம் (தண்-மண்டலம்).
இவ்வளவு நாள், சூடிக் கொடுத்த மாலையை, அப்பா கிட்ட கொடுத்து, பெருமாளுக்குப் போட்டாள்! இன்று அவளே தன் கைப்பட, மாலை மாற்றப் போகிறாள்!
* பெரிய திருவடியான கருடன், எங்கள் மாப்பிள்ளையை, வாயு வேகத்தில் பறந்தடித்துக் கொண்டு வர... * நிகழும் திருவள்ளுவராண்டு 2042 (கர வருடம்), ஆடித் திங்கள் (Aug-02-2011), பூர நட்சத்திரம் கூடிய நன்னாளிலே...