கிருஷ்ணா கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
கோகுல
கிருஷ்ணா வா வா
கிருஷ்ணா
கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா
கோகுல
கிருஷ்ணா வா வா
பலப்
பலகாரம் பக்ஷணமெல்லாம்
உனக்காகத்தான்
கிருஷ்ணா
பாலும்
தயிரும் மோரும் வெண்ணெயும்
உனக்காகத்தான்
கிருஷ்ணா
புல்லாங்குழலை
ஊதிக் கொண்டு
புவியை
மயக்கும் கிருஷ்ணா
கல்லும்
கூடக் கரையச் செய்யும்
கனிமுகங்
கொண்ட கிருஷ்ணா
கரு
விழி இரண்டும் வண்டாய்ச் சுழலும்
கார்
மேக வண்ணக் கிருஷ்ணா
குறும்புச்
சிரிப்பு இதழ்களில் ஆடும்
கட்டிக்
கரும்பே கிருஷ்ணா
காலிற்
சதங்கை சிணுங்கிக் கிணுங்க
ஓடி
வா வா கிருஷ்ணா
முடியில்
சூடிய மயிலறகாட
ஆடி
வா வா கிருஷ்ணா
தேவகியோடு
யசோதையோடு
நானும்
ஓர் தாய் கிருஷ்ணா
மடியினில்
வாரி மார்போடணைப்பேன்
நீ
என் சேயே கிருஷ்ணா
--கவிநயா