Thursday, January 11, 2007

32. காத்திருப்பேன் கண்ணா! - இப்படிக்கு, கண்ணன்!

முனைவர் நா.கண்ணன், கண்ணன் பேரில் யாத்த கவிதை ஒன்று இன்றைய கண்ணன் பாட்டில்;
அதைக் கனடாவின் ஆர்.எஸ்.மணி அவர்கள், இசை அமைத்து அவரே பாடுகிறார்!
தனிமையின் அமைதியில் கேட்டுப் பாருங்கள், உள்ளம் உருகும்!
இதோ சுட்டி!


காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக


தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ....தெல்லாம்
தூரத்து மணியோசை
ஒலித்திடும் போ...தெல்லாம்


நீவருவாய் என்று
நானறிவேன் அதனால்
தினம்தினம் மணியோசை
கேட்டிட மனம்நாடி


வீற்றிருப்பேன் வாயில் முன்னே கண்ணா
வீற்றிருப்பேன் வாயில் முன்னே
காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

செம்பவழ மாலையிலே
வைத்த கரு முத்தினைபோல்
செம்மைநிற மாலைநேரம்
உன்னுருவம் தோன்றும்வரை


தாயினது கழுத்தினிலே
ஆடும்மணி யோசைகேட்க
கொட்டிலிலே துடித்திருக்கும்
சின்னஞ்சிறு கன்றினைப்போல்


காத்திருப்பேன் உனக்காக கண்ணா
காத்திருப்பேன் உனக்காக


மார்கழி 28 - கறவைகள் பின் சென்று - இருபத்தி எட்டாம் பாமாலை.

நாளை உத்தம புத்திரன் படத்தில் இருந்து ஒரு பாடல். என்ன பாடல் என்று யூகித்து வையுங்கள்!மேற்கண்ட பாடல், மீனா அவர்களின் வாசக(ர்)சாலை-இல் இருந்து கண்ணன் பாட்டு வலைப்பூவிற்காக ஒரு மீள்பதிவு!

நா.கண்ணன் அவர்களின் வலைப்பூக்கள்:
*
ஆழ்வார்க்கடியான் - இதில் பாசுர மடல்கள் அருமையாகப் பயின்று வருகின்றன!
**
கவினுலகம்

நா.கண்ணன் அவர்களின் வலைத்தளம்:
இ-மொழி

17 comments :

சாத்வீகன் said...

அருமையான பாடல்.

பாடிய விதமும் அருமை.

நன்றிகள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னை
பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறை ஏலோர் எம்பாவாய்


பசுக்களின் பின் சென்று காட்டை அடைந்து அங்கே எல்லோரும் சேர்ந்து உணவு உண்போம்.

உலக அறிவு அவ்வளவாக இல்லாத ஆயர் குலத்தில் நீ தோன்றும் படியான புண்ணியம் நாங்கள் செய்திருக்கிறோம்.

எந்தவித குறைகளும் இல்லாத கோவிந்தனே. உனக்கும் எங்களுக்கும் இடையில் இருக்கும் உறவானது நீயோ நாங்களோ யார் எண்ணினாலும் ஒழிக்க இயலாது.

எது சரி; எது தவறு என்பதை அறியாத சிறு குழந்தைகள் நாங்கள். உன் மேல் உள்ள அன்பினால் எப்போதாவது மரியாதைக் குறைவாக உன்னைப் பேசியிருந்தால் எங்கள் மேல் சினந்துவிடாதே.

எங்கள் தலைவனே. இறைவனே. நீ நாங்கள் வேண்டியதை எல்லாம் தந்து அருள்வாய்.

VSK said...

நல்ல பாடல், ரவி!

நாளைக்கும் "காத்திருப்பேன் கமலக்கண்னனுக்காக"!

:)

siva gnanamji(#18100882083107547329) said...

முன்பு ஒரு பின்னூட்டம் போட்டபின்பு
கடைசியில் மொத்தமாகப் போடலாம் என்றிருந்தேன்; ஆசை யாரை விட்டது?

"குறை ஒன்றுமில்லை மாமூர்த்தி(அல்லது மறைமூர்த்தி) கண்ணா.." -ராஜாஜி அவர்கள் எழுதி,
எம்.எஸ் அவர்களால் ஐ.நா சபையில் பாடப்பட்டது..

தேடிப்பிடித்து பதிவிட இயலுமா........?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//sivagnanamji(#16342789) said...
"குறை ஒன்றுமில்லை மாமூர்த்தி(அல்லது மறைமூர்த்தி) கண்ணா.." -ராஜாஜி அவர்கள் எழுதி,
எம்.எஸ் அவர்களால் ஐ.நா சபையில் பாடப்பட்டது..
தேடிப்பிடித்து பதிவிட இயலுமா........? //

சிஜி சார் வாங்க!
நீங்கள் கேட்ட பாடலின் வரிகளும், இசையும், வீடியோவும் முன்பே ஒரு முறை வந்திருக்கே! இங்கே காணவும்!

http://madhavipanthal.blogspot.com/2006/12/blog-post_11.html

கண்ணன் பாட்டு வலைப்பூவில் வேண்டுமானால் மீள்பதிவாக இட்டு விடலாம்!

எம்.எஸ் குறையொன்றுமில்லை பாடலை நியூயார்க் கச்சேரியில் (Radio City Hall) பாடினார்கள்!
ஐ.நா சபையில் காஞ்சி பரமாச்சாரியார் எழுதிய மைத்ரீம் பஜத என்ற பாடலைப் பாடினார்கள் என்று தான் கேள்விப்பட்டுள்ளேன்! நீங்கள் சொன்னது எனக்குப் புதிய செய்தி தான்! நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// சாத்வீகன் said...
அருமையான பாடல்.
பாடிய விதமும் அருமை//

நன்றி சாத்வீகன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// SK said...
நல்ல பாடல், ரவி!
நாளைக்கும் "காத்திருப்பேன் கமலக்கண்னனுக்காக"!//

நன்றி SK ஐயா! அதே பாட்டு தான்! :-))
வல்லியம்மாவின் நேயர் விருப்பம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சிஜி சார்

குறையொன்றுமில்லை பாடல் வரிகள் அந்தப் பதிவில் சுட்டியாக உள்ளது!
இதோ,
http://koodal1.blogspot.com/2005/10/blog-post_15.html

ஞானவெட்டியான் said...

நான் விரும்பிக்கேட்கும் "காத்திருப்பான் கமலக் கண்ணன்"; அதுவும் என் G.ஈராமநாதனின் வீணை தபேலாவுடன்.
சீக்கிரம்.

வல்லிசிம்ஹன் said...

பாடல் உயிர் பெறுகிறது இசைக்கும் விதத்தில்.

கறைவகளோடு கூடிச் சென்று விருந்துண்ண,
காதில் கண்ணன் பாடல் கேட்க
அருமையான நாள் இன்று.
நேயர்விருப்பத்தை நிறைவேற்றும் ரவிக்கு நிறைய நன்றி:-)

Anonymous said...

அருமையான பாடல்....யாத்தவர், பாடியவர், ஆன்மிக பதிவுலக செம்மல் ஆகியோருக்கு அனேக வந்தனங்கள்..

மெளலி

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஆர்.எஸ். மணிக்கு.
ஏதோ கஸல் உலகிற்குப் போன பிரமை.

siva gnanamji(#18100882083107547329) said...

நன்றி மிக நன்றி!

சென்னைப் பல்கலைக் கழக நிழ்ச்சியில்
(1968) அவர்கள் இரண்டு பாடல்களையும் பாடக்கேட்டு மயங்கி இருக்கிறேன்.

பாடல்கள் பற்றி நீங்கள் கூறுவதே சரியாக இருக்கும்....40 ஆண்டுகள் செய்தி;நான் மறந்திருப்பேன்.

siva gnanamji(#18100882083107547329) said...

நன்றி மிக நன்றி!

சென்னைப் பல்கலைக் கழக நிழ்ச்சியில்
(1968) அவர்கள் இரண்டு பாடல்களையும் பாடக்கேட்டு மயங்கி இருக்கிறேன்.

பாடல்கள் பற்றி நீங்கள் கூறுவதே சரியாக இருக்கும்....40 ஆண்டுகள் செய்தி;நான் மறந்திருப்பேன்.

ஷைலஜா said...

கண்ணன் என்ற பெயர் உள்ளவர் அருமையாய் எழுதிய பாடலை மணியான ஒருவர் இசைத்துப்பாட கண்ணபிரானே(ரவிசங்கர்) அதை எங்களுக்கு அளிக்க... என்ன தவம் செய்தோமோ
இவைகளை அனுபவிக்க என மகிழ்கிறோம்.
அடுத்து வரபோகும் பாடல் 'கா' ல ஆரம்பிக்கும்.
வழக்கம்போல பெண் ஒருத்தி உருகி உணர்ந்து வழக்கம்போல ஆண்களைவிட பெண்களுக்கே அன்பின் ஆதிக்கம் அதிகம் என்பதையும் அதனாலேயே காத்திருப்பவனையே நினத்து வழக்கம்போல தவித்துப்பாடுவதுமான பாட்டு. லீ ல ஆரம்பிச்சி லா ல பேர் முடியறவங்க பாடினது நடுல எந்த எழுத்தும் கிடையாது!!! நாட்டியப்பேரொளி தானே இதுக்கு நடனம் ஆடினவங்க?
ஷைலஜா

Anonymous said...

கனடா ஆர்.எஸ்.மணி அவர்கள் இப்போது சிஃபி.வணியில் ஒலிப்பத்தி ஆரம்பித்து இருக்கிறார். அவர் மெட்டமைத்த பாடல்களை அங்கு அவர் தொடர்ந்து அளித்து வருகிறார்.

இதோ சுட்டி!

ஷைலஜா said...

மணி அவர்களின் பாடலை சிஃபியில் கேட்டேன்..மிகவும் பிரம்மாதமாயிருக்கிறது.என் சார்பில் பாராட்டுகளை அவருக்கு சொல்லுங்கள் நாகண்ணன்!
ஷைலஜா

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP