Thursday, July 17, 2008

மாமனை மறந்த மருகன் அடியார்கள்..." என்ன இது... பெருமாள் தனியாக இருக்கிறாரே?! "

ஸ்ரீதேவி, பூமிதேவி, நீளாதேவி, ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், முனிவர்கள், தேவாதி தேவர்கள் உனது தாள் தொழ.. கமலக் கண்ணாடி கண்டருளும்.. எங்கள் கண்ணா, கார்மேக வண்ணா..

இன்றோ உன்னை விட்டு எக்கணமும் பிரிந்திராத ஆதிசேஷன் மட்டும் இருக்க, மலர்மாலை கூட இல்லாமல் இருப்பதன் காரணம் என்னவோ.. ??


ஆதிசேஷனே, நீ மீண்டும் ஒருமுறை முருகனருள் சென்று விட்டு வாயேன்.. என் மருகனுக்கு பாம்பு-அணியாய் இருந்து விட்டு வரலாம்.


அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா!,
"சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
நின்றால் மரஅடியாம் நீள்கடலுள்- என்றும்
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
அணையாம் திருமாற்கு அரவு"
என்றிருக்க நான் எப்படி உங்களை விட்டு விலக முடியும்.. வேண்டுமானால் நாம் இருவரும் செல்வோம்..
இப்படி உரையாடிக் கொண்டிருந்த கண்ணன், வேறொருவர் குரல் கேட்டு திரும்புகிறான்..

சரி கதையை தொடரும் முன் சிறு விண்ணப்பம்.. அடியேன் இராகவன்.. ரவி அண்ணாவுக்கு மட்டும் ராகவ். கண்ணன் பாட்டு நூறை தொட்டு இரண்டு வாரம் ஆகி விட்டது. முருகனருளும் நூறை தொட்டு விட்டது. கண்ணன் பாட்டின் 101வது பாடலாக.. இந்த கந்தவடி பதிவு.
சரி கதைக்கு வருவோம். முருகனருளின் 100 வது பதிவை அனைவரும் சேர்ந்து கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, பெருமாள் மட்டும் வைகுண்டம் திரும்பி விட்டார். தற்போது தொடருவோம்..
"பெருமாளே ஏன் இந்த கோலம்? .. நாடு தோறும் வீடு தோறும் .. உன்னைத்தேடி ஓடி வந்துள்ளேன்.. அருள் புரிய வேண்டும். "
பக்தனே யார் நீ? என் மருகன் 100 வது பதிவு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள வரும் வழியில் பாதை மாறி வந்து விட்டாயா?இல்லை பரந்தாமா. .உன் மருகன்.. இந்த பித்தன் முருகதாஸனை, உன்னை சந்தித்து வரத்தான் இங்கு அனுப்பியுள்ளான். உலகத்தின் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் பரந்தாமன் நீ..
உன்னை அலங்காரப்பிரியன் என்றல்லவோ பூஜிக்கிறோம். இன்று தாங்கள் தனியே, மலர்மாலை கூட சூடாமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை.முருகதாஸா, நான் உட்பட அனைவரும் என் மருகன், முருகனின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டோம். உலக ஷேமத்திற்காக நான் விரைவில் வந்து விட்டேன். தேவியர்களுக்கு இன்னும் அங்கிருந்து வர மனமில்லை.. என்ன இருந்தாலும் தமிழர் விருந்தோம்பலில் சிறந்தவன். அது தான் அனைவரும் அங்கேயே உள்ளனர்.
ஆறுமுகத்தானின் கொண்டாட்டத்திற்கு நிறைய மலர்கள் தேவை, அதனால் தான் எனக்கு கூட மாலை இல்லா பற்றாக்குறை
.
கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயா, "பூமாலைக்கு பதிலாக என் பாமலையை சூட்டிக்கொள்ள வேண்டுகிறேன்."
ம்ம்.. முன்பெல்லாம் பொன் வைக்கும் இடத்தில் பூ வைக்கலாம் என்பர்... இன்று அதுவும் போய்.. பூமாலை வைக்கும் இடத்தில் பாமாலை வைக்கிறாய்.

சரி இந்த அலங்கார பிரியனுக்கு உன் பாடல்களே அழகு சேர்க்கட்டும்.


நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !


கண்ணா.... கண்ணா....கண்ணா....கண்ணா...

கூடிக் குலாவ குதித்தே வந்தேன்!
கூடிக் குலாவ குதித்தே வந்தேன்!
கொஞ்சியே உன்னோடு ஆட வந்தேன்.


கூடிக் குலாவ குதித்தே வந்தேன்!
கொஞ்சியே உன்னோடு ஆட வந்தேன்.


வேடிக்கை உலக மாயையினாலே
வேடிக்கை உலக மாயையினாலே
வேதனை கண்ணீர் ஒன்றே கண்டேன்..


நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!


கண்ணா.... கண்ணா....கண்ணா....கண்ணா...

குழலினால் இனிய கானம் இசைத்தாய்
கண்ணா கீதையும் உன் அருள் தானே
கண்ணா கீதையும் உன் அருள் தானே


மழலை பேசி மகிழ்வாய் வருவாய்
மழலை பேசி மகிழ்வாய் வருவாய்
மாதவனே எனை ஆண்டிட வேண்டும்..நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!
நாளும் உன்னை பாடிப்பாடி நானோர் பைத்தியம் ஆனேன் கண்ணா !
நாடே நாடாய் வீடே வீடாய் நாடி தேடினேன் கண்ணா!கண்ணா.... கண்ணா....கண்ணா....கண்ணா..Get this widget Track details eSnips Social DNA


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..

காத்திருக்கோம் காத்திருக்கோம் கமலக் கண்ணா வா வா!
பார்த்திருப்போம் உன் வரவை குழழ்ஊதி வா வா!
கால் சிலம்பு கொஞ்சிடவே கமலக் கண்ணா வா வா!
கானக்குரல் கேட்க வேண்டும் கமலக் கண்ணா வா வா!

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP