Showing posts with label *கண்ணன் என்னும் மன்னன் பேரை. Show all posts
Showing posts with label *கண்ணன் என்னும் மன்னன் பேரை. Show all posts

Saturday, January 06, 2007

27. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல!

வெண்ணிற ஆடை படத்தில், கவியரசர் கண்ணதாசன் பாட்டின் ஒவ்வொரு அடியிலும் அடுக்குத் தொடரால் அடுக்குகிறார்!
அதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில், பி.சுசீலா பாடி மிடுக்குகிறார்!
பாடலைக் கேட்க இங்கு சொடுக்கவும்!
அதே பாடலை Re-Mix இல் கேட்க இங்கு சொடுக்கவும்!

பாடலை வாய்விட்டுப் பாடினாலோ, படித்தாலோ, ஊஞ்சலில் முன்னும் பின்னும் போய் வருவது போலவே இருக்கும்; அது தான் நம் கவிஞரின் அடுக்குத் தொடர் effect!



கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

(கண்ணன்)

தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்னப் பின்ன
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன

(கண்ணன்)

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்

(கண்ணன்)

கண்ணன் என்று பெயரில் உள்ளவர்கள் எல்லாருக்கும் இந்தப் பாடலை dedicate செய்யலாமா? ஓ, இதெல்லாம் சூரியன் FM இல் மட்டும் தான்
செய்யணும் இல்லையா! :-)



மார்கழி 23 - மாரி மலை முழைஞ்சில் - இருபத்து மூன்றாம் பாமாலை

படம்: வெண்ணிற ஆடை
எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடுபவர்: பி.சுசீலா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP