22. குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா!
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும், குன்னக்குடி இசையில், சீர்காழியின் வெங்கலக் குரலில்! படம்: திருமலை தென்குமரி.
குருவாயூரப்பா - திருவருள்
தருவாய் நீயப்பா
உன்கோவில் வாசலிலே - தினமும்
திருநாள் தானப்பா - தினமும்
திருநாள் தானப்பா!
(குருவாயூரப்பா)
எங்கும் உந்தன் திருநாமம்
எதிலும் நீயே ஆதாரம் - உன்
சங்கின் ஒலியே சங்கீதம்
சரணம் சரணம் உன்பாதம்
(குருவாயூரப்பா)
உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதி்யே
காலம் என்னும் சக்கரமே - உன்
கையில் சுழலும் அற்புதமே
(குருவாயூரப்பா)
22 comments :
இந்தப் பாட்டு கேட்டாலே போதும் குருவாயூர் கிருஷ்ணன் வந்துவிடுவான் மனதில்.
இவர் குரலுக்கு உருகாமல் இருக்க முடியுமா.
குட்டி கண்ணன் குமிழ் சிரிப்பு
ஜேசுதாசின் கண்ணன் பாட்டுகள், சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதரின்
நாராயணீயம் பாடல் உரைகள் எல்லாவற்றையும் நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டது.
நன்றி ரவி.
குமரன்,
உந்துமதக் களிற்றனின்
,பின்கதையான
எம்பெருமானார் இராமனுஜமுனியின்
கதையை நீங்கள் எழுத வேண்டும்.
அத்துழாயைப் பார்த்து அவர் மயங்கி விழுந்த கதை.
அன்பு இரவி,
//உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதி்யே
காலம் என்னும் சக்கரமே - உன்
கையில் சுழலும் அற்புதமே//
ஆம் உலகம் = தேர்
சக்கரம் = காலனாகிய காலம்
சங்கு = ஓங்காரம்
//உலகம் என்னும் தேரினையே
ஓடச் செய்யும் சாரதி்யே
காலம் என்னும் சக்கரமே - உன்
கையில் சுழலும் அற்புதமே//
எளிமையான வரிகளில் உன்னத உண்மையை உணரமுடிகிறது.
நல்லபாடல் ரவி.
ஷைலஜா
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலீ கடைதிறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்
மத யானையை மோதித் தள்ளுகின்ற வலிமையை உடையவனும் என்றும் தோற்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபாலனின் மருமகளே. நப்பின்னைப் பிராட்டியே. நறுமணம் கமழும் கூந்தலை உடையவளே. கதவைத் திறப்பாய். கோழிகளும் சேவல்களும் எல்லா இடங்களிலும் கூவுவதைக் காண். மாதவிப்பந்தல் மேல் பலமுறை குயில் கூட்டங்கள் கூவுவதைப் பார். பூப்பந்து விளையாடுவதில் விருப்பம் மிகுந்தவளே. உன் அன்புடைய கணவனின் பெயர்களை நாங்கள் பாட உன் செந்தாமரையைப் போன்ற கைகளில் வளையல்கள் ஒலிக்க மகிழ்ந்து வந்து கதவைத் திறப்பாய்.
அத்துழாய் அம்மையை நப்பின்னை என்று எண்ணிய திருப்பாவை ஜீயரின் கதையை அடியேனை விட அழகாக இரவிசங்கர் சொல்வார் வல்லி அம்மா. தங்களைப் போல் அவரும் நியமித்தால் அடியேன் முயல்கிறேன்.
//வல்லிசிம்ஹன் said...
இந்தப் பாட்டு கேட்டாலே போதும் குருவாயூர் கிருஷ்ணன் வந்துவிடுவான் மனதில்//
குருவாயூர் கிருஷ்ணன் மட்டும் இல்லை வல்லியம்மா!
நம் வீட்டு குட்டிக் கிருஷ்ணன்களும் மனதில் வந்து விடுவார்கள் :-))
// வல்லிசிம்ஹன் said...
குமரன்,உந்துமதக் களிற்றனின்
பின்கதையான எம்பெருமானார் இராமனுஜமுனியின் கதையை நீங்கள் எழுத வேண்டும்.//
ஆகா, என்ன ஒரு உன்னதமான கதை! உன்னதமான பணி!
குமரன், கதை தந்து எங்கள் எல்லாரையும் எப்போது மகிழ்விக்கப் போகிறீர்கள்? :-)
வல்லியம்மா, குமரன் வரும் நாட்களில் பிசியாகி விடுவாரே! பணி மிகுதி இருக்குமே! :-) ஆனாலும் நாம் எல்லாம் காத்திருக்கலாம்!
// ஞானவெட்டியான் said...
ஆம் உலகம் = தேர்
சக்கரம் = காலனாகிய காலம்
சங்கு = ஓங்காரம்//
நீங்கள் சொல்லிய பின் பொருத்திப் பார்க்கும் போது மிகவும் அழகாக இருக்கு ஞானம் ஐயா! நன்றி.
// ஷைலஜா said...
எளிமையான வரிகளில் உன்னத உண்மையை உணரமுடிகிறது.
நல்லபாடல் ரவி.//
ஆமாங்க ஷைலஜா! ஞானம் ஐயா சொன்னதையும் பாருங்க!
இந்தப் பாடல் வரிகள் யார் எழுதியது என்று உறுதியாகத் தெரியவில்லை! அதனால் தான் நானும் போடவில்லை!
கவியரசராக இருக்குமோ? யாருக்கேனும் தெரிந்தால் சொல்லுங்கள்!
//குமரன் (Kumaran) said...
அத்துழாய் அம்மையை நப்பின்னை என்று எண்ணிய திருப்பாவை ஜீயரின் கதையை அடியேனை விட அழகாக இரவிசங்கர் சொல்வார் வல்லி அம்மா. தங்களைப் போல் அவரும் நியமித்தால் அடியேன் முயல்கிறேன்.//
ஆகா அடியேன் நியமனமா? என்ன குமரன் இது! காத்துக் கிடக்க மாட்டோமா? சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!
//மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்!//
நன்றி குமரன்! :-))))
குருவாயூரப்பா - திருவருள்
தருவாய் நீயப்பா
குருவாயூரப்பா - உனைப்பாட
வரமருள்வாய நீயப்பா
ரவி, குமரன் பாவைப் பாடல் எழுதுவதால் அவ்ரிடம் சொன்னேன்.
நீங்கள் எழுதினலும் அவர் எழுதினாலும் படிக்கும் எங்களுக்கு ஆனந்தம் தான். குமரனுக்கு வேலை மிகுதியாகிவிடும் என்பது மறந்து விட்டது:-)
@ குருவாயூர் அப்பனே அப்பன்.நாராயணா நாராயணா. நாராயணா திவ்ய நாமம் நான் மறைகள் சொல்லும் நாமம்.
இந்தப்பாடலை எழுதியவர் புலவர் கே.டி. சந்தானம் என்று நினைக்கிறேன்.
பதிவுக்கு நன்றி
பதிவுக்கு நன்றி
மெளலி,,,,,,,,,,
//SP.VR.சுப்பையா said...
குருவாயூரப்பா - திருவருள்
தருவாய் நீயப்பா
குருவாயூரப்பா - உனைப்பாட
வரமருள்வாய நீயப்பா//
நன்றி சுப்பையா சார்!
//தி. ரா. ச.(T.R.C.) said...
இந்தப்பாடலை எழுதியவர் புலவர் கே.டி. சந்தானம் என்று நினைக்கிறேன்//
நன்றி திராச ஐயா!
இப்போதுதான் திருசூர், குருவாயூர் தரிசனங்கள் முடிந்து சென்னை திரும்பினேன். சீர்காழியின் கணீர் குரலில் இந்தப் பாடல் என்னை energise செய்கிறது. இணையத்தில் வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றி.
நன்றி மெளலி சார்!
//இப்போதுதான் திருசூர், குருவாயூர் தரிசனங்கள் முடிந்து சென்னை திரும்பினேன்.//
தரிசனத் திருப்தியுடன் பின்னூட்டியமைக்கு நன்றிங்க வெங்கடேஷ் வரதராஜன்!
//SP.VR.சுப்பையா said... குருவாயூரப்பா - திருவருள் தருவாய் நீயப்பா குருவாயூரப்பா - உனைப்பாட வரமருள்வாய நீயப்பா// நன்றி சுப்பையா சார்!