28. யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே!
தலைவர் படமான தளபதியில், மித்தாலி என்பவர் பாடும் பாட்டு! பாடல் வரிகளை எழுதியவர் யார் என்று தெரியவில்லை!
கேட்க, இங்கே சொடுக்கவும்!
பார்க்க, பதிவின் இறுதிக்குச் செல்லவும்!
யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே
கண்ணனோடு தான் ஆட
பார்வை பூத்திட பாதை பார்த்திட
பாவை ராதையோ வாட
இரவும் போனது பகலும் போனது
மன்னன் இல்லையே கூட
இளைய கன்னியின் இமைத்திடாத கண்
இங்கும் அங்குமே தேட
ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ
ஆசைவைப்பதே அன்புத் தொல்லையோ
பாவம் ராதா...
(யமுனை)
மார்கழி 24 - அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி - இருபத்து நான்காம் பாமாலை
படம்: தளபதி
எழுதியவர்: ?
பாடுபவர்: மித்தாலி
இசை: இளையராஜா
18 comments :
அருமையான பாடல். One of my all time favorites!
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி!
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி!
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி!
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி!
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி!
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய்
முன்பொரு காலத்தில் இவ்வுலகத்தை திரிவிக்ரமானாய்த் தோன்றி அளந்தவனே! உன் திருவடிகள் போற்றி! தென் இலங்கைக்குச் சென்று அதனைச் செற்றாய்! உன் திறமை போற்றி! வண்டிச்சக்கர வடிவில் வந்த சகடாசுரன் நொறுங்கிப் போகும் படி உதைத்தவனே! உன் புகழ் போற்றி! பசுங்கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை வீசி எறிந்து கொன்றவனே! உன் வீரக்கழல்கள் போற்றி! கோவர்த்தன மழையைக் குடையாக எடுத்து கோகுலத்தைக் காத்தவனே! உன் பெருங்குணம் போற்றி! பகைவர்களை வென்று பகையின்றித் தீர்க்கும் உன் கையில் இருக்கும் வேல் போற்றி! உன் திருப்புகழ்களை இப்படியே என்றென்றும் பாடி எங்கள் விருப்பங்களைப் பெற இன்று நாங்கள் வந்தோம். இரங்கி அருளவேண்டும்.
ஒலி வடிவத்தில் பாடப்படுவதும் ஒளி வடிவத்தில் பாடப்படுவதும் வேறு வேறாக இருக்கிறதே?!
இந்தப் படத்தில் மிகவும் பிடித்த பாடல் இது.
பாவம் ராதா! கண்ணனின் வரவிற்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறாள். ஆசை வைப்பதே அன்புத்தொல்லை தான். சின்ன பாட்டு ஆனாலும் சிறப்பான பாட்டு. அவசரமா ஏதும் சினிமா பாட்டு பாடுங்கன்னு சொன்னா இந்தப்பாட்டு பாட உதவும்.
அடுத்த பாடலில் ராதாவுக்காக கண்ணன் ஏங்கணும் ஆமா?:)
ஷைலஜா
இப்பாடல் எனக்கும் மிகவும் பிடித்த பாடல். என்ன படம் என்று தெரியாது இருந்தது. இப்பாடலுக்கான காட்சி அமைப்பு அற்புதம். எப்படி இவர்களால் இப்படியெல்லாம் அனுபவித்து நடிக்க முடிகிறது? "ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ!" எனும் போது எழும் பாவத்தைப் பாருங்கள். கண்கள் தளும்புவதற்கு முன்னுள்ள சில நொடிகளின் பாவனை அது! பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலுள்ளது!
அழகிய பாடல். மீண்டும் காணத் தந்தமைக்கு நன்றி :-)
''இமைத்திடாத கண் அங்கும் இங்கும் தேட''
பாவம் ராதா'
நல்ல இனிமையான,சோகமும் ஆசையும் கலந்த Expression.
நன்றி ரவி.
''காத்திருப்பான் கமலக்கண்ணன் '' போடவில்லையா.உத்தமபுத்திரன் படத்தில் பி.லீலா பாடின பாடல்
என்று நினைக்கிறேன்.
குமரன்,
கண்ணனின்
அடி,திறல்,புகழ்,கழல்,குணம்,வேல்
எல்லாவற்றையும் போற்றிப் பாடியாகி விட்டது.
இரங்கி வந்துவிடுவான்.
நன்றி.
//இலவசக்கொத்தனார் said...
அருமையான பாடல். One of my all time favorites!//
நன்றி கொத்ஸ். எனக்கும் மிகவும் பிடிக்கும்!
அளந்தாய் அடி போற்றி!
உதைத்தாய் புகழ் போற்றி!
என்று திருவடிகளை ஏத்தி விட்டுப் பின்னர் தான்
எடுத்தாய் குணம் போற்றி!
நின் கையில் வேல் போற்றி!
என்று கைகளைப் பாடுகிறார் பாருங்கள்!
நன்றி குமரன்!
// குமரன் (Kumaran) said...
ஒலி வடிவத்தில் பாடப்படுவதும் ஒளி வடிவத்தில் பாடப்படுவதும் வேறு வேறாக இருக்கிறதே?!
//
அட ஆமாம்!
சினிமா மாயை? :-)))
//ஷைலஜா said...
சின்ன பாட்டு ஆனாலும் சிறப்பான பாட்டு//
கரெக்டாச் சொன்னீங்க திருவரங்கப்ரியா!
//அடுத்த பாடலில் ராதாவுக்காக கண்ணன் ஏங்கணும் ஆமா?:)//
அரங்கத்தான் ஆணை போட்ட பின்பு மீற முடியுங்களா? :-))
//நா.கண்ணன் said...
"ஆசை வைப்பதே அன்புத் தொல்லையோ!" எனும் போது எழும் பாவத்தைப் பாருங்கள். கண்கள் தளும்புவதற்கு முன்னுள்ள சில நொடிகளின் பாவனை அது!//
ஷோபனா, நடன மணி ஆயிற்றே! அதனால் தான் பாவங்கள் அபிநயித்துச் செய்கிறார் போலும்!
நன்றி கண்ணன் சார்!
//சேதுக்கரசி said...
அழகிய பாடல். மீண்டும் காணத் தந்தமைக்கு நன்றி :-)//
நன்றி சேதுக்கரசி!
//வல்லிசிம்ஹன் said...
''காத்திருப்பான் கமலக்கண்ணன் '' போடவில்லையா.உத்தமபுத்திரன் படத்தில் பி.லீலா பாடின பாடல்
என்று நினைக்கிறேன்//
குறித்துக் கொள்கிறேன் வல்லியம்மா!
அருமையான பாடல்.. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
ரவி!
எனக்கும் ரொம்பப் பிடித்த பாடல்.
//அடுத்த பாடலில் ராதாவுக்காக கண்ணன் ஏங்கணும் ஆமா?:)//
சின்னக் கண்ணன் அழைக்கிறான். ராதையை பூங்கோதையை.. பாலமுரளி கிருஷ்ணா பாடல், தேடினேன் கிடைக்கவில்லை. இருந்தால் தாருங்கள். ரசிக்கலாம்.:)
நன்றி!
One of my all time favourites!ராதா உண்மையில் ரொம்ப பாவம் இல்லை.உண்மையில் இந்த பாடலை பாடியவரும் சரி இந்த பாடலின் வரிகளும் சரி,ஒரு பெண்ணின் மனநிலையை அப்படியே படம் பிடித்து காட்டுவது போல் இருக்கின்றது.