Tuesday, September 27, 2011

9ராத்திரி-01: காத்திருப்பான் கமலக் கண்ணன்!

உத்தம புத்திரன் என்ற படத்தில் இந்தப் பாட்டு மிகவும் பிரபலம்;
பி.லீலா அவர்கள் பாடுவார்கள்! அழகான நாட்டியமும், இசையும் சேர்ந்து இதை ஒரு கடந்த கால வசந்தம் ஆக்கி விட்டது!

sringara-lila

வேடிக்கையாய்ச் செய்வான்
அலங்காரம்
playing-vina
வீணைஇசைக்கச் சொல்லி
வேண்டுவான் - சிலநேரம்


காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
காத்திருப்பான் கமலக் கண்ணன்!

கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்


ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
பூத்த மென்மலர் போலப்
புனிதமான வனிதை ராதை வருகையைக் - காணக்
காத்திருப்பான் கமலக் கண்ணன்


கோபியர் கொஞ்சும் சல்லாபன் - வேய்ங்
குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்


தாவிப் பிடிப்பான்...தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு - அங்கு
காத்திருப்பான் கமலக் கண்ணன்


வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வீணைஇசைக்கச் சொல்லி வேண்டுவான் - சிலநேரம்
வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்


பாடுவான்... அதற்கவள் ஆடுவாள்
பல நேரம் பாதம் நோகுமே
என்று பரிவுடன் காதல் இன்பமே
தந்த நாயகன் - வந்து


காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன் !



வரிகள்: சுந்தர வாத்தியார்
குரல்: பி.லீலா
இசை: ஜி. ராமநாதன்
படம்: உத்தம புத்திரன்

Tuesday, September 20, 2011

குடை பிடித்த கிரிதாரி

சமீபத்தில் கேட்டதில் மிகவும் பிடித்த ஒரு கண்ணன் பாடல்(விருத்தம்). காலையில் தூங்கி எழுந்தவுடன் கேட்கலாம் வகை.  கண்ணன் பாடலில் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. இந்த விருத்தத்தை வலையேற்ற அனுமதி அளித்த ரஞ்சனி-காயத்ரி சகோதரிகளுக்கு மிக்க நன்றி.

 

குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி
துளிரிடை த்ரௌபதி துகில் நீட்டிய உபகாரி
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி
வளர்த்தென்னை இங்கு பரிபாலி


Sunday, September 11, 2011

மேகங்களை கண்டு மிரள்கிறேன்



பல்லவி:

மேகங்களை கண்டு மிரள்கிறேன் - கண்ணா
தேகத்தை மட்டுமே நனைக்கவரும் - நீர்
(மேகங்களை)

அனுபல்லவி:

பாகனின் கட்டை மீறிய மதக்களிறென
வேகவேகமாய் வந்து சூழ்ந்திடும் - கரு
(மேகங்களை)

சரணங்கள்:

மின்னல்களே வேள்வித் தீயாக - அந்தப்
பேரிடிகள் மந்திரங்கள் தான் முழங்க
குளிர்காற்றே என்னை புகையாய்த் தழுவி
பலனாக பிரிவை மேலுமுணர்த்த வரும்
(மேகங்களை)

கூடும் பொழுதை எதிர்காணும் பேடைமுன்
ஆடும் மயிலின் அகவல் சத்தமும்
நாடும் நங்கையரின் கலியை தீர்த்திட
ஓடும் ஆடவரின் காலோசையும் தந்திடும்..
(மேகங்களை)

வெள்ளம் புரளும் யமுனைக் கரையில்
கள்ளன் வருகைக்கு காக்கக் கண்டு
வெள்ளை நிலவு எள்ளாத குறையை
முல்லை மலர்களே போக்கத் தூண்டும்

மேகங்களை கண்டு மிரள்கிறேன் - கண்ணா
தேகத்தை மட்டுமே நனைக்கவரும் - நீர்

Tuesday, September 06, 2011

நீல வண்ண கண்ணா வாடா !


அமைதியான இரவில் கேட்க  அருமையான இன்னொரு கண்ணன் பாடல். கிருஷ்ண ஜெயந்தியின் போது வானொலியில் கேட்க நேர்ந்தது.


நீல வண்ண கண்ணா வாடா !
நீ ஒரு முத்தம் தாடா !
நிலையான இன்பம் தந்து
விளையாடும் செல்வா வாடா !

பிள்ளையில்லாக்  கலியும் தீர
வள்ளல் உன் தன் வடிவில் வந்தான்

எல்லை இல்லாக்  கருணை தன்னை
என்னவென்று சொல்வேனப்பா !

வானம்பாடி கானம் கேட்டு
வசந்தகால தென்றல் காற்றில்
தேன் மலர்கள் சிரிக்கும் காட்சி
செல்வன் துயில் நீங்கும் காட்சி


தங்கநிறம் உன்தன் அங்கம்
அன்புமுகம் சந்திர பிம்பம்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
கவலை எல்லாம் பறந்தே போகும்

சின்னஞ்சிறு திலகம் வைத்து
சிங்காரமாய் புருவம் தீட்டி

பொன்னாலான நகையும் பூட்ட
கண்ணா கொஞ்சம் பொறுமை காட்டு

நடுங்கச் செய்யும் வாடைக் காற்றே
நியாயமல்ல உன்தன் செய்கை
தடை செய்வேன் தாளைப் போட்டு
முடிந்தால் உன் திறமை காட்டு

விண்ணில் நான் இருக்கும் போது
மண்ணில் ஒரு சந்திரன் ஏது
"அம்மா என்ன புதுமை ஈது?!" என்றே
கேட்கும் மதியைப் பாரு

இன்ப வாழ்வின் பிம்பம் நீயே !
இணையில்லா செல்வம் நீயே!
பொங்கும் அன்பின் ஜோதி நீயே !
புகழ் மேவி வாழ்வாய் நீயே !

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP