Thursday, October 25, 2007

70. வாணி ஜெயராம்: கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்!

அன்னிக்கி நம்ம ஜிராவுடன், ஜிடாக்கில், ஜிலுஜிலு என்று சாட்டிக்கிட்டு இருந்தேன்;
ஏண்ணா......முருகனருள் ராகவன்-னு போர்டு போட்டுக்குனு,
கண்ணன் பாட்டுத் திண்ணையில காலாற உட்காந்துகிட்டு இருக்கீக!
நீங்க கண்ணன் பாட்டுல பதிவு போட்டு எம்புட்டு நாள் ஆச்சுது? கொஞ்சம் எட்டிப் பாருங்கோண்ணா என்றேன்!

மனுசன் நெசமாலுமே எட்டிப் பார்த்தாரு! எட்டுமா எட்டுமா-ன்னு எட்டி எட்டிப் பாத்தாரு!
யாரை இப்பிடி எட்டி எட்டிப் பாக்குறீங்க? கண்ணனையா? அதான் ஒங்க முன்னாடி நானே இருக்கேனே-ன்னு சொன்னது தான்! மனுசன் ஒரு மொறை முறைச்சுப் பாத்தாரு!
எங்கடா அந்த ராதா? அவளுக்கோசரம் தான் கண்ணன் பாட்டு வலைப்பூவுக்கே வர ஒத்துக்கிட்டேன் தெரியுமா?-ன்னாரு!



அத்தோட நிக்காம ராதா மேல பல பாட்டுகளை அள்ளி அள்ளி வீசினாரு!
எல்லாம் அவர் குருநாதர் எம்.எஸ்.வி போட்ட பாட்டாம்!
நான் எல்லாத்தையும் ஒடனே லபக் லபக்-னு ட்ராவிட் கணக்கா கேச் புடிச்சிக்கிட்டேன்! இந்தப் பாட்டுலயே ஏதாச்சும் ஒன்னைப் போடுங்க-ன்னு கேட்டேன்!
நீயே என் பேரைச் சொல்லிப் போட்டுக்க போடா! நான் பாட்டு போட்டா என்னா, நீயி பாட்டு போட்டா என்ன-ன்னு சொல்லிப்புட்டாரு!

வெறுமனே பாட்டு போட்டா போதுமா? பேக்கிரவுண்டு கொடுங்க! எல்லாம் ஒங்க காலத்துப் படம்...
எங்களுக்கு எல்லாம் யுவன், ஹாரிஸ் இப்படித் தான் தெரியும்-னு வேண்டிக் கொள்ள...இதோ ஜிரா!




இயக்குநர் கே.சங்கர் தெரியுமா? பல பக்திப் படங்களைக் கூடச் சமூக நோக்கில், எளிமையா கொடுப்பாரு! அவர் இயக்கிய ஒரு படம் சுப்ரபாதம்!
இந்தப் படத்தில் சாதாரண தட்டு மக்களையும், பல வைணவக் கோவில்களையும், அதை ஒட்டினாற் போலச் சில கதைகளையும் சோடிச்சி படம் பிடிச்சிக் காட்டி இருப்பாரு!

அதுல வாணி ஜெயராம் பல பாடல்களைப் பாடி இருப்பாங்க! ஆனா அவங்களும் ஜேசுதாசும் சேர்ந்து பாடின இந்த டூயட் செம ஹிட்!
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா

அப்படின்னு ஒவ்வொரு பத்தியிலும், எடுப்பா முடிப்பாங்க!

என்னது டூயட்டா? ஆமா கண்ணன் பாட்டுல நான் கொடுக்கறேன்னா, டூயட் இல்லாம என்னவாம்? படத்துல ஜெய்கணேஷும் லதாவும் ஆடுவாங்க!
கண்ணா கோபாலா ராதா கிருஷ்ணா ஸ்ரீதேவா என்று நீங்களும் டூயட் ஆடிக்கிட்டே பாடுங்க!
இந்தா, கேளுங்க!
KannanaiNinaithaal...




கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை
நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
(கண்ணனை நினைத்தால்)

ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்
காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்
திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்

(கண்ணனை நினைத்தால்)



படம்: சுப்ரபாதம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
குரல்: வாணி ஜெயராம், ஜேசுதாஸ்
இசை: மெல்லிசை மன்னர், எம்.எஸ்.விஸ்வநாதன்

Wednesday, October 03, 2007

ஆடுகின்றான் கண்ணன்.

இந்தப்பாடல் ஏற்கனவே எனது பதிவொன்றில் இடப்பட்டதுதான். இருந்தாலும், இது கண்ணன் பாட்டில் இருப்பதுவும் ஒரு அழகுதான் என்றெண்ணி, இங்கே பதிவு செய்கின்றேன்.

"ஆடுகின்றான் கண்ணன்" எனும் தொலைக்காட்சித் தொடரின், தலைப்புப் பாடலாக வரும் இப்பாடலைப் பாடியிருப்பவர் பின்னணிப்பாடகர், சிறிநிவாஸ். பாடலுக்கான இசை சத்யா. பாடலை யாத்தவர் யாரெனத் தெரியவில்லை.

பாடலில் வரும் இடையிசை மிக அற்புதமாகவிருக்கும். அதுபோலவே பாடலுக்கான காட்சிப்படுத்தலும் அழகாகவிருந்தது. சரணத்தின் முன்னதாக வரும் இடையிசையில் காணப்படும் கலவை நுணுக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். ரசிப்பேன், நீங்களும் ரசிக்கலாம்.

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP