35. அசைந்தாடும் மயில் ஒன்று காணும்!
நண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்!
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று வேளாண் மக்கள் மகிழும் திருநாள்!
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் மகிழ்ந்திருக்கும் திருநாளும் கூட!
கிராமங்களில் குரவைக் கூத்துக்கு கேட்கவும் வேண்டுமோ!
கண்ணனுக்காக மார்கழி முழுதும் காத்திருந்தோம், ராதையும் நாமும்!
அதான் இப்போது மார்கழி நோன்பு முடிந்து, தை பிறந்து விட்டதே!
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்! - கண்ணனோடு
ஆடிப்பாடி ஓடலாமே தங்கமே தங்கம்!
வாங்க, அனைவரும் ஆயர்ப்பாடியில் பொங்கல் கொண்டாடி ஆடலாம்!
நித்யஸ்ரீ அவர்களின் குரலில், அழகான பாடல் இதோ!
அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்!
(அசைந்தாடும்)
இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக நின்றான் - என்றும்
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்
எங்காகிலும் எமது இறைவா இறைவா
என மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான் - அருள்
பொங்கும் முகத்துடையான்
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட
மயிலின் இறகாட மகர குழையாட
மதி வதனமாட மயக்கும் விழியாட
மலரணி களாட மலர்மகளும் பாட
இது கனவோ நனவோ என
மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)
அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலைபோல நின்று
நிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசைதோறும் கோபாலன் நின்று - மிக
எழில் பொங்க நடமாட
எதிர் நின்று ராதைபாட
(எங்காகிலும் எமது இறைவா இறைவா)
(அசைந்தாடும்...)
மற்ற கலைஞர்களின் குரலில்.
Sudha Raghunathan
Bombay Sisters
K.J.Yesudas
தை 1 - தையொரு திங்கள் - முப்பத்தோராம் பாமாலை
வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: சிம்மேந்திர மத்யமம்
தாளம்: ஆதி
26 comments :
பொங்கல் நல்வாழ்த்து!
அன்பு இரவி,
//ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி //
ஆமாம். அதேதான் வழி.
வலது திருவடி குத்தி, இடது திருவடி ஏத்தி மேலேறவேண்டும்.
Thanks for posting Thai oru NaaL Thamiz isaippadal
Nanri
Sirappudan Vaazga.
Anbudan
Radhakrishnan
அன்பு நண்பர் ரவிசங்கருக்கும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !
பொங்கல் நல்வாழ்த்து!
தையொரு திங்களும் தரைவிளக்கித்
தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்,
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா,
உய்யவும் ஆங்கொலோ வென்றுசொல்லி
உன்னையு மும்பியை யும்தொழுதேன்,
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
வேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே
தைத் திங்கள் நாளில் இல்லத்தையும் முற்றத்தையும் நன்கு திருத்தி அழகு செய்வோம்! முன் மெழுகி, செம்மண் இட்டு இன்னும் அலங்காரங்கள் செய்வோம்!
காம தேவனும் அவன் சகோதரன் சாம தேவனும் என் மீது கருணை காட்டட்டும். அக்கினிப் பொறிகளை வீசிச் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் சக்கரத்தைத் தன் கையில் ஏந்தியுள்ளான் திருவேங்கடத்தான்! அவனுக்கே மனையாளாய் என்னை விதிக்கட்டும்!
(மார்கழி மாதம் நோன்பிருந்து
தை மாசம் கல்யாணப் பேச்சு இப்படித் தான் ஆரம்பிக்கிறது போலும்!)
பொங்கல் நல்வாழ்த்து!
குயிலாய் நித்ய ஸ்ரீ பாட மயில் ஒன்று கண்முன் ஆடுவது போல இருக்கிறது. என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான் எனுமிடத்தை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாது.
அளித்த ரவிக்கு நன்றியுடன் பொங்கல் வாழ்த்தும்
ஷைலஜா
ரவி
பொங்கல் வாழ்த்த்டுக்க்கள்!
ரவி, பொங்கல் முதல் நள் வாழ்த்துகள்.
தையொரு திங்கள் மட்டுமில்லாமல் அத்தனை திங்களும்
நற்றிங்களாகி,
நலம் பெற வேண்டும்.
பாம்பே சகோதரிகள் பாட்டு கேட்டேன்.
குரலும் தமிழும் இழையக் கேட்க, வாய்ப்புக் கொடுத்தீர்கள்.
கண்ணன் பாடி ஆடுகிறான்.
ஒரு சோலை,அதில கண்ணன்.சுற்றி
பசுவும்,மயிலும் குயிலும் ராதையும்.
பச்சையும் நீலமும் மஞ்சளும் கலந்த வண்ணக்காட்சி.
நன்றி.
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ரவி. யமுனைத் துறையில் நீரெடுத்து கோகுலத்துப் பாலூற்றி பிருந்தாவனத்தில் பொங்கலிட்டு அதனை ஆவும் மாவும் கூடச் சேர்ந்து அருந்தும் வண்ணம் ஒரு பாட்டு போட்டிருக்கின்றீர்கள். நன்று.
சிஜி சார்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
இங்கு அமெரிக்காவிலும் பொங்கலுக்கு லீவு! (மார்தின் லூதர் கிங் பிறந்த நாள்) - ஹே!!!!!!!!!!!!!!!
//ஞானவெட்டியான் said...
அன்பு இரவி,
//ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி //
ஆமாம். அதேதான் வழி.
வலது திருவடி குத்தி, இடது திருவடி ஏத்தி மேலேறவேண்டும்.//
நன்றி ஞானம் ஐயா!
அப்படியே சிவ தாண்டவம் போலவே கண்ணன் தாண்டவம் உள்ளதே!
//Anonymous said...
Thanks for posting Thai oru NaaL Thamiz isaippadal//
நன்றிங்க ராதாகிருஷ்ணன்! பொங்கல் வாழ்த்துக்கள்!
// கோவி.கண்ணன் [GK] said...
அன்பு நண்பர் ரவிசங்கருக்கும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் ! //
தமிழர் திருநாள் - பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் GK ஐயா!
//Arunachalam said...
பொங்கல் நல்வாழ்த்து!//
பொங்கல் வாழ்த்துக்கள், அருணாச்சலம்!
//ஷைலஜா said...
குயிலாய் நித்ய ஸ்ரீ பாட மயில் ஒன்று கண்முன் ஆடுவது போல இருக்கிறது.//
ஷைலஜா வாங்க!
பாட்டில் மயில் மட்டும் உள்ளதே, குயில் எங்கே என்று தேடினால், நீங்க வந்து நித்ய ஸ்ரீ பாடலைச் சொல்லி விட்டீர்கள்! நன்றி.
//அளித்த ரவிக்கு நன்றியுடன் பொங்கல் வாழ்த்தும்//
பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஷைலஜா !
//செல்லி said...
ரவி
பொங்கல் வாழ்த்த்டுக்க்கள்!
//
நன்றி செல்லி! உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
// வல்லிசிம்ஹன் said...
ரவி, பொங்கல் முதல் நள் வாழ்த்துகள்.
தையொரு திங்கள் மட்டுமில்லாமல் அத்தனை திங்களும்
நற்றிங்களாகி,
நலம் பெற வேண்டும்.//
நன்றி வல்லியம்மா! பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!
//பச்சையும் நீலமும் மஞ்சளும் கலந்த வண்ணக்காட்சி//.
ஆகா நான் பாட்டின் வரியைத் தான் கடன் வாங்கித் தந்தேன்! நீங்க ஒரு வீடியோவே ஓட விட்டீர்களே!
// G.Ragavan said...
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ரவி. //
வாங்க ஜிரா!
மயிலார் படம் பார்க்கத் தானே வந்தீர்கள்!:-)
உங்களுக்கும் மயிலாருக்கும் ஆகா என்ன நட்பு! என்ன நட்பு!! மயிலார் கொடுத்து வச்சவர் தான்!!
தமிழர் திருநாள் - பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் ஜிரா!
//யமுனைத் துறையில் நீரெடுத்து
கோகுலத்துப் பாலூற்றி
பிருந்தாவனத்தில் பொங்கலிட்டு
அதனை ஆவும் மாவும் கூடச் சேர்ந்து அருந்தும் வண்ணம் ஒரு பாட்டு போட்டிருக்கின்றீர்கள். நன்று.//
நன்றி ஜிரா! எனக்கும் அதே சிந்தனை தான்! தமிழர் பொங்கலை, பால் பொங்கி ஓடும் கோகுலத்தில், கன்று பசுவினங்களோடு கொண்டாடினால் எப்படி இருக்கும்?
ரவிசங்கர்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
இனிய குரலில் அழகுதமிழ்ப் பாடல். பின்ணணியில் மயிலுடன் கண்ணன் படம் முதற்தடவை பார்க்கிறேன்.
மிக அழகு. அசப்பில் முருகன் போல்....குழல் காட்டிக் கொடுத்து விட்டது.
யோகன் பாரிஸ்
தோகை மயிலின்முன் துட்டனாம் சூரன் அவனொழித்து
வாகையும் சூடி வலம்வரும் வேலன் அவனிடத்தில்
பாகையும் மிஞ்சிடப் பண்ணிசை தந்திடும் பாலகிட்டன்!
ஓகை திகைத்தே உவகை மிகுந்து மகிழ்ந்தனனே!!
dear KRS,
All songs and their selection are everlasting and made us enjoy MARGAZHI very well.
i had made 2 requests(neyar viruppam)in my last post.mudinthal podavum.
Is it possible to simultaneously enjoy the songs and the text together?
Thanks once again for ur divinly and beautiful efforts.
sundaram
//Johan-Paris said...
ரவிசங்கர்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!//
பொங்கல் வாழ்த்துக்கள் யோகன் அண்ணா!
//பின்ணணியில் மயிலுடன் கண்ணன் படம் முதற்தடவை பார்க்கிறேன்.
மிக அழகு. அசப்பில் முருகன் போல்....குழல் காட்டிக் கொடுத்து விட்டது.//
:-)
புல்லாங்குழலும் கருநீல நிறமும் காட்டிக் கொடுத்து விடும் மாமன் யார் மருகன் யார் என்று! :-)
//ஓகை said...
தோகை மயிலின்முன் துட்டனாம் சூரன் அவனொழித்து
வாகையும் சூடி வலம்வரும் வேலன் அவனிடத்தில்
பாகையும் மிஞ்சிடப் பண்ணிசை தந்திடும் பாலகிட்டன்!
ஓகை திகைத்தே உவகை மிகுந்து மகிழ்ந்தனனே!!//
தளிர் பசுமைத் தமிழில்
ஒளிர் கண்ணன் மீதில்
மிளிர் கவிதை யாத்த
வளர் ஓகை ஐயா,
வாழி நீர் வாழி!!
நன்றி ஓகை ஐயா!
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்ற ஆண்டாள் திருப்பாவையில் வருவது போலவே உள்ள படம் அது! பாருங்கள் யோகன் அண்ணாவும் கண்ணனில் முருகனைக் கண்டார்! :-)
No updates for long time