33. காத்திருப்பான் கமலக் கண்ணன்!
உத்தம புத்திரன் என்ற படத்தில் இந்தப் பாட்டு மிகவும் பிரபலம்;
பி.லீலா அவர்கள் பாடுவார்கள்! அழகான நாட்டியமும், இசையும் சேர்ந்து இதை ஒரு கடந்த கால வசந்தம் ஆக்கி விட்டது! கேட்க இங்கே சொடுக்கவும்! இந்த நாட்டியப் பாடல் ஒரு முல்லை மலர் என்றால், அந்த முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே, நாமெல்லாரும்!
தரவிறக்கம் செய்ய, இங்கே!
காத்திருப்பான் கமலக் கண்ணன் அங்கே
காத்திருப்பான் கமலக் கண்ணன்!
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல்
காத்திருப்பான் கமலக் கண்ணன்
ஆற்றங்கரை தனிலே அந்திப் பொழுதினிலே
பூத்த மென்மலர் போலப்
புனிதமான வனிதை ராதை வருகையைக் - காணக்
காத்திருப்பான் கமலக் கண்ணன்
கோபியர் கொஞ்சும் சல்லாபன் - வேய்ங்
குழலிசை அமுதூட்டும் எழிலொடு சுகம்காட்டும்
கோபியர் கொஞ்சும் சல்லாபன்
தாவிப் பிடிப்பான்...தாவிப் பிடிப்பான்
வெண்ணைத் தயிர்க் குடத்தைத் தடுப்பான்
தரையில் அமர்ந்து ராதை உருவம் வரைந்து கொண்டு - அங்கு
காத்திருப்பான் கமலக் கண்ணன்
வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
வீணைஇசைக்கச் சொல்லி வேண்டுவான் - சிலநேரம்
வேடிக்கையாய்ச் செய்வான் அலங்காரம்
பாடுவான்... அதற்கவள் ஆடுவாள்
பல நேரம் பாதம் நோகுமே
என்று பரிவுடன் காதல் இன்பமே
தந்த நாயகன் - வந்து
காத்திருப்பான் கமலக் கண்ணன்
கனிந்து கனிந்து அன்பை நினைந்து நினைந்து - கண்ணுறங்காமல் காத்திருப்பான் கமலக் கண்ணன் !
மார்கழி 30 - சிற்றஞ் சிறுகாலே - முப்பதாம் பாமாலை
வரிகள்: சுந்தர வாத்தியார்
குரல்: பி.லீலா
இசை: ஜி. ராமநாதன்
படம்: உத்தம புத்திரன்
13 comments :
பாடலக் கேட்கும் போது சில இடங்களில் புரியாது.
இப்போது வரிவடிவத்தில் பார்க்கும்போது நாம் இந்தப் பாடலை ரசித்ததில் அதிசயமே இல்லை என்று தோன்றுகிறது ரவி.
அருமையான குரல் பி.லீலா அம்மாவோடது. அவருடைய''கிருஷ்ண கிருஷ்ணா முகுந்தா ஜனார்த்தனா
கிருஷ்ண கோவிந்த நாராயண ஹரே''
என்ற மலையாளப்பாடலும் மிக நன்றாக இருக்கும்.
மிக மிக நன்றி.
பாடல் போட இசைந்ததற்கு.
பத்மினியும் ராகினியும் கண் முன்னால் வந்து போனார்கள்.
அருமை அருமை.
பி.லீலா அவர்களும், இசை மேதை ஜி.ராமநாதன் அவர்களும், இருவருக்கும் கைவந்த கர்நாடக மெட்டுக்களும் சேரும்போது கேட்கவா வேண்டும்?
அதெல்லாம் ஒரு காலம்...ஹீம்ம்ம்ம்ம்ம்ம்!
சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏலோர் எம்பாவாய்
அதிகாலையில் எழுந்து வந்து உன் பெருமைகளைப் போற்றிப் புகழ்ந்து பொன்னால் ஆகிய தாமரைகள் போன்ற உன் திருவடிகளைப் போற்றுகின்றோம். இதன் பொருள் கேட்பாய்.
பசுக்களை மேய்த்து அதில் வரும் வருமானத்தால் வாழும் குலத்தில் பிறந்த நீ எங்களை உன் அடியார்களாக எற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது.
இன்று நாங்கள் விரும்பியவற்றை மட்டும் பெற்றுக் கொள்ள இங்கே வரவில்லை கோவிந்தனே (பசுக்களை மேய்ப்பவனே).
என்றும் ஏழேழ் பிறவிக்கும் உன்னோடு உறவினர்களாக ஆவதற்கும் உனக்கே அடியார்களாக இருப்பதற்கும் வேண்டி வந்தோம்.
எங்களுக்கு மற்ற ஆசைகள் இருந்தால் அவற்றை கொடுத்தோ கெடுத்தோ நீக்கவேண்டும்.
கண்ணைமூடி இப்பாடல்களக் கேட்கக் கேட்கத் தெவிட்டாது. அதுவும் இராமநாதனின் தேனிசையுடன்.
"அந்த நாளும் வந்திடாதோ?"
sir,
Arumai..Arumai...
Kannan mel ulla aazhntha eedupadu velipadumpothu antha Mayane ullirunthu thangalai ieukkungindran..
Ennudiya ARANGAN..request iyum ungal kuzham niraivetrum.
sundaram
உங்களுக்கும் குமரனுக்கும்
என் அன்பான வாழ்த்துகள்!
நல்ல பதிவு;நன்றி!
//அருமையான குரல் பி.லீலா அம்மாவோடது....பத்மினியும் ராகினியும் கண் முன்னால் வந்து போனார்கள்.//
ரிப்பிட்டே.....
மெளலி...
மற்றை நம் காமங்கள் மாற்று.//
அவனுக்குத் தெரியும் நமக்கு எது வேண்டும், எது வேண்டாம் என்று.
இப்படி ஒருத்தர் நம்மைக் கட்டிக் காப்பாற்றினால் நமக்கு ஏது குறை?
இந்த ஒரு பலனுக்காகவாவது தினம் இந்த சாற்றுமுறைப் பாடலை இசைக்க வேண்டும்.
நன்றி ரவி.
நாளொரு பாடல் பாவைக்கும் கண்ணனுக்கும் கொடுத்தால் எல்லாப்
பிறவிக்கும் கவலை இல்லாமல் இருக்கலாம்.
அப்ப அடுத்த பாட்டு "பிருந்தாவனமும் நந்தகுமாரனும்" பாட்டுதானே? :-)
கனிந்து கனிந்து என்று வருகையில் குரலும் கனிந்து...அடடா!
வரிகளுக்கு ஏற்ப படங்கள் அழகுசேர்க்கின்றன.என்கே பிடித்தீர்கள் ரவி.சிற்றம் சிறுகாலே பாட்டை இரண்டு தரம்பாடுவார்கள்.சரணகதி தத்துவத்தை விளக்கும் அருமையாண பாடல்.உமக்கே நாம் ஆட்செய்வோம்.உன்னை ஒருவனைத்தவிற வேறு யாரையும் வணங்க மாட்டோம்.
காத்திருத்தலே சுகம்; அதுவும் நேசிக்கும் நெஞ்சத்திற்காக என்றால்..?
அருமையான பாடல்!
ஆனாலும் ராதை மனதில் ரா...தை மனதில் என்ன நினைவுகளோ கன்ணா வா கண்டுபிடிக்க...:):):)
ஷைலஜா
ரவிசங்கர்!
காலத்தால் அழியாத கீதமென இவற்றைத்தான் குறிப்பிட்டார்கள்;. இப்படம் பல தடவை பார்த்துள்ளேன். பாடல் காட்சியும் அத்தனை தடவையும் ரசித்தேன்.பத்மினி அம்மா கொள்ளை அழகு!
யோகன் பாரிஸ்
// இந்த நாட்டியப் பாடல் ஒரு முல்லை மலர் என்றால், அந்த முல்லை மலர் மேலே, மொய்க்கும் வண்டு போலே, நாமெல்லாரும்!//
வண்டு தேனுண்டு களைக்கும்.
சென்று மீண்டும் உண்டு களிக்கும்
இப்பாட்டு மலர் தேனின் சுனை.
திரை இசை மேதை ஜி. ராமனாதனின் இந்த ராக மாளிகைப் பாடலும் அதற்கான காட்சியும் .. காண நாம் கொடுத்துதான் வைத்திருக்கிறோம்.