34. கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை!
வீரமணியின் கணீர் குரலில், கவிஞர் கண்ணதாசன் பாடலைக் கேட்க இங்கு சொடுக்கவும்! மார்கழி மாதத்தில் இந்தப் பாடல் இல்லாமலா? அதுவும் சபரி கிரி வாசனின் விழாவின் போது, எல்லா ஐயப்ப பூஜைகளிலும் இந்தப் பாட்டை ஒலிக்க விடுவார்களே!
கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான்
மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார்
ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான்
(கோதையின் திருப்பாவை)
வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில்
மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான்
மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில்
கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான்
ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில்
அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான்
அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி
சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான்
பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க
தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான்
போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட
கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான்
ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து
வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான்
வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள்
வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
(கோதையின் திருப்பாவை)
மார்கழி 30 - வங்கக் கடல் கடைந்த - முப்பதாம் பாமாலை
இத்துடன் மார்கழி மாதம் - தினம் ஒரு பாமாலைகள் - நிறைந்தன!
இனிய போகித் திருநாள் வாழ்த்துக்கள்!
மேளம், பிளாஸ்டிக் குடுகுடுப்பை எல்லாம் அடிச்சாச்சா? :-)
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ஒலி: K.வீரமணி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
15 comments :
பாடலில் உள்ள அத்தனை வரிகளுமே அசத்தலான வரிகள் ஸ்வாமி!
கண்ணதாசன் கண்ணதாசன்தான்!
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்
கப்பல்கள் செல்லும் கடலை (திருப்பாற்கடலை) கடைந்த திருமகள் மணவாளனை,
அழகிய சுருண்ட தலைமுடிகளை உடைய கேசவனை,
நிலவைப் போன்ற முகத்தைக் கொண்ட ஒளி பொருந்திய அணிகலங்களை அணிந்த பெண்கள் சென்று வணங்கி,
அங்கே அவர்கள் விரும்பியதைப் பெற்ற வரலாற்றை,
அழகிய வில்லிபுத்தூரில் வாழும் அழகிய குளிர்ந்த தாமரை மலர் மாலை அணிந்த பட்டர் பிரானாம் பெரியாழ்வாரின் திருமகள் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பது பாடல்களும்
தவறின்றி பாடுபவர்கள் பெரிய மலைகளைப் போன்ற நான்கு தோள்களை உடைய சிவந்த கண்களை உடைய திருமகள் மணாளனின் திருவருளால் எல்லா நன்மைகளும் பெற்று இன்புறுவார்கள்.
sir,
kannan pathivilium thiruppavai publish -i kandu magishi.
how 31 in margazhi? all calendars have 30 here.Naallai THAI-allava?
SJ request madhri ennudiyathu:
Gangaikarai thottam mum
Singaravellane Theva-vum
mudinthal YT udan publish plo.
sundaram
//SP.VR.சுப்பையா said...
பாடலில் உள்ள அத்தனை வரிகளுமே அசத்தலான வரிகள் ஸ்வாமி!
கண்ணதாசன் கண்ணதாசன்தான்!//
உண்மை தான் சுப்பையா சார்!
கண்ணன் எதற்கு வந்தான் என்ற ஒவ்வொரு வரியுமே அசத்தல் தான்!
அத்தனையும் முத்துக்கள்.
கண்ணனின் தாசன் பாட்டோடு கண்ணன் பாட்டு முற்றியதா?
//Anonymous said...
how 31 in margazhi? all calendars have 30 here.Naallai THAI-allava?//
சுந்தரம் சார்!
அடியேன் தவறு தான்!! மன்னிக்கவும்! நீங்கள் சுட்டிக்காட்டியவுடன் பதிவில் இருந்து எடுத்து விட்டேன்.
இங்கு இன்னும் Jan 13 தான்! பதிப்பதோ வங்கக் கடல் கடைந்த...
பொங்கல் Jan 15!
அப்போ Jan 14க்கு என்ன என்பதனால் வந்த குழப்பம்! அடியேனை மன்னிக்கவும்! மார்கழி பெரும்பாலும் 29/30 நாட்கள் தான்!
//ஞானவெட்டியான் said...
அத்தனையும் முத்துக்கள்.
கண்ணனின் தாசன் பாட்டோடு கண்ணன் பாட்டு முற்றியதா?
//
நன்றி ஞானம் ஐயா!
கண்ணன் பாட்டும் முற்றுமோ?
மார்கழி முடிந்ததால், இனி தினம் ஒரு பாட்டு என்பதற்குப் பதிலாக, அவ்வப்போது இல்லை வாரம் ஒரு முறையாவது கண்ணன் பாட்டு வரும், வரும் வரும்.....:-))
//ஞானவெட்டியான் said...
அத்தனையும் முத்துக்கள்.
கண்ணனின் தாசன் பாட்டோடு கண்ணன் பாட்டு முற்றியதா?
//
நன்றி ஞானம் ஐயா!
கண்ணன் பாட்டும் முற்றுமோ?
மார்கழி முடிந்ததால், இனி தினம் ஒரு பாட்டு என்பதற்குப் பதிலாக, அவ்வப்போது இல்லை வாரம் ஒரு முறையாவது கண்ணன் பாட்டு வரும், வரும் வரும்.....:-))
"எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்........"
மார்கழி முடிந்ததால், இனி தினம் ஒரு பாட்டு என்பதற்குப் பதிலாக, அவ்வப்போது இல்லை வாரம் ஒரு முறையாவது கண்ணன் பாட்டு வரும், வரும் வரும்.....:-))
வரவேண்டும் வரவேண்டும். இன்னும் நிறைய நேயர் விருப்பம் பாக்கி இருக்கிறது.
சீர்காழியின்"காதலென்னும் சோலையிலே ராதே ராதே,
நான் கண்டெடுத்த பொன்மலரே ராதே ராதே''
பாட்டு ரொம்ப முக்கியம்:-)
சர்க்கரவர்த்தி திருமகள்
படத்திலிருந்து.
கண்ணன் பாட்டின் 30ஆம் பாடலும் மனதில் பதிகிறது.
என்னமாக வெண்கலக் குரல்.
கண்ணதாசன் பாடலுக்கு விமரிசனம் எழுத முடியுமா!!
Kannan very good work for our tradation and culture. I enjoy this 30 days.
ஆனந்தம்! ஆனந்தம்!! ஆனந்தம்!!!
நன்றி! நன்றி!! நன்றி!!!
இந்தப் பாடலை மறக்கத்தான் முடியுமோ ?
//மார்கழி முடிந்ததால், இனி தினம் ஒரு பாட்டு என்பதற்குப் பதிலாக, அவ்வப்போது இல்லை வாரம் ஒரு முறையாவது கண்ணன் பாட்டு வரும், வரும் வரும்.....:-)) //
அவசியம் வரவேண்டும்.
என் மனங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.
இந்த பாடலின் ராகம் என்ன?
I think this song is based on a Hindustani ragam called Jogiya . I may not be correct also