29. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!
கண்ணே கனியமுதே என்ற ஒரு படம் வந்தது! ஞாபகம் இருக்கா? அதில் வரும் இந்தப் பாரதியார் பாடல் மிகவும் இனிமை! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில், ஜேசுதாஸின் தேன் குரல்!
எப்பவும் ராதை தானே கண்ணனுக்கு ஏங்குகிறாள்!
அடுத்த கண்ணன் பாட்டில், ராதைக்காக அந்தக் கண்ணன் ஏங்க வேண்டும், சொல்லிட்டேன், ஆமா! - அப்படின்னு நம்ம திருவரங்கப்ரியா ஒரு போடு போட்டார்கள்! இதோ நிறைவேற்றியாகி விட்டது அரங்கன் ஊர் ஆணையை! :-)
பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்! (Opens in Real Player)
கண்ணம்மா, கண்ணம்மா என்று கண்ணன் துடிக்கிறானே! பாவம்பா அந்தக் கண்ணன்! :-)
நண்பர் இலவசக்கொத்தனார், மகராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய mp3 ஒன்றைத் தனி மடலில் அனுப்பியுள்ளார்; அவருக்கு நம் நன்றி. இதோ சுட்டி!
San Diegoவில் சந்தானம் அவர்கள் பாடுவது என்று நினைக்கிறேன். ராகம்: பாகேஸ்ரீ
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா
மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(நின்னையே)
மார்கழி 25 - ஒருத்தி மகனாய்ப் பிறந்து - இருபத்தி ஐந்தாம் பாமாலை
வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
குரல்: கே.ஜே ஏசுதாஸ், S.சசிரேகா
படம்: கண்ணே கனியமுதே
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
45 comments :
திரு யேசுதாஸ் மற்றும் இளையராஜாவின் கூட்டணியில் வந்த ஒரு முத்துப்பாடல் இது.
அது சரி,இந்த மாதிரி படங்கள் எங்கேயிருந்து எடுக்கிறீங்க.. சூப்பர்.
அந்த இலை மறைவில் நின்று பார்க்கும் பெண்ணின் படம்,அவர்களின் தனித்தண்மையை காட்டுகிறது.:-))
கியூராசிட்டி??
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்
தேவகிக்கு மகனாகப் பிறந்து அதே இரவில் யசோதைக்கு மகனாகச் சென்று ஒளித்து வளர்ந்து வர, அதனைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த கம்சனின் எண்ணத்தை பொய்யாக்கி அவன் வயிற்றில் நெருப்பு என நின்ற நெடுமாலவனே! உன்னைப் போற்றி வந்தோம். எங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவாயானால் உன்னுடைய பெருமையுடைய செல்வத்தையும் உன் திருப்புகழ்களையும் நாங்கள் எப்போதும் மனம் விரும்பிய படியெல்லாம் பாடி எங்கள் வருத்தங்களும் தீர்ந்து மகிழ்வோம்.
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி...
மிக அருமையான கண்ணன் என் காதலி பாடல். :-)
'இங்கு யாவுமே கண்ணம்மா, கண்ணம்மா, கண்ண்ம்மா"
அதுதான் பாடலின் punchline
நம்ம இ.கொ. மகராஜபுரம் இதே பாட்டைப் பாடியுள்ளதாக ஒரு mp3 அனுப்பியுள்ளார்!
இருங்க upload (தரவேற்றம்) செய்து விட்டு வருகிறேன்!
நன்றி இ.கொ. அவர்களே!
என் கணியில் (கணினியில் - இராம.கி. ஐயா கணி என்று தான் சொல்கிறார்) ரியல் பிளேயர் இல்லாததால் முதல் சுட்டியில் பாடல் கேட்க முடியவில்லை. சந்தானம் அவர்கள் பாடியதைக் கேட்டேன். மிக நன்றாக இருந்தது.
கண்ணம்மான்னு நாலுதடவை சொன்னா ஆச்சா ராதா மாதிரி அத்தனை ஏக்கமோ ஆசையும் அன்பும் கலந்த வார்த்தைகளோ இதுல மிஸ்ஸிங் தான்:) இதே பாரதி காற்றுவெளியிடைக் கண்ணம்மாவில் அசத்தி இருப்பார்!
'நீயெனதின்னுயிர் கண்ணம்மா எந்த நேரமும் நிந்தனைப்போற்றுவேன், எந்தன் வாயினிலே அமுதூறுதே கண்ணம்மா என்னும் போதிலே..' என்பார்!
ஆனாலும் எமது வேண்டுகோளை நிறைவேற்றிய ரவிசங்கருக்கு நன்றி!
ஷைலஜா
சந்தானம் ரொம்ப அனுபவிச்சு பாடி இருக்கிறார் கேளுங்க ஷைலஜா. அவர் பாடி இருக்கிறது பாகேஸ்ரீ ராகம். ரொம்ப அருமையான ராகம். அதை கேட்டுட்டு சொல்லுங்க ஏக்கமும் ஆசையும் இல்லையான்னு. :)
// கண்ணம்மான்னு நாலுதடவை சொன்னா ஆச்சா ராதா மாதிரி அத்தனை ஏக்கமோ ஆசையும் அன்பும் கலந்த வார்த்தைகளோ இதுல மிஸ்ஸிங் தான்:) //
மாவுடன் பலாவை ஒப்பிட்டு இரண்டிலொன்றின் சுவையை இழக்க நான் தயாராய் இருப்பதில்லை. ஆனால் ஒப்பிட்டல் நீங்கள் சொல்வது போலிருக்கலாம்.
மாறன் அம்புகள் என் மீது மாறி மாறி வீசவே...அடடா கேட்கத் தெவிட்டாத பாட்டு :-) என்னை எப்படி உங்கள் வலைப்பூவுக்கு வரவைப்பது என்று தெரிந்துவைத்திருக்கிறீர்கள்! நேற்று "யமுனையாற்றிலே"... இன்று இது! :-)
ஆமாம் இலவச கொத்தனாரே..சந்தானத்தின் குரலில் ஏக்கம் காதல் ஆத்மார்த்த அன்பு அத்தனையும் ததும்பி வழிகிறது. பாகேஸ்ரீ ராகம் இறைஞ்சிக் கேட்பதற்கென்றே அமைந்த ராகம்.
கண் பாராயோ வந்து சேராயோ என்கிற போது மனசு அடித்துக்கொள்கிறது. கண்ணம்மாவை உடனே அனுப்பி வைக்கணும்போல..முன்னே நான் கூறியதை வாபஸ் வாங்கிக்கறேன்! தாசை ,தானம் இந்தப்பாடலில் 'பீட்' அடித்துவிட்டது !
ஷைலஜா
கண்ணன் உருகினானோ என்னவோ(அவன்தான் கள்ளனாச்சே)
மஹாராஜபுரம் குழைந்து பாடிவிட்டார்,.
வாங்க குமார் சார்! ஆமாங்க யேசுதாஸ் மற்றும் இளையராஜாவின் கூட்டணியில் இது ஒரு மாஸ்டர்பீஸ்!
படங்கள் பெரும்பாலும் krishna.com, Iskcon.com தான்!
அது சரி, கண்ணனையும் ராதையும் பாக்கச் சொன்னால், நீங்க இலை மறைவில் நிற்கும் பெண்ணின் படத்தை ஏன் பாக்கறீங்க? - கியூரியாசிட்டி! :-))))))
//திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்//
ஆகா, கண்ணன் பாட்டு வலைப்பூவிலும் இதையே செய்து, அவன் அருள் பாடி, மகிழ கண்ணன் அருள வேண்டும்! சரியான நேரத்தில் சரியான திருப்பாவைப் பாட்டு, குமரன்! நன்றி!
//குமரன் (Kumaran) said...
மிக அருமையான கண்ணன் என் காதலி பாடல். :-) //
குமரன்,
கண்ணன் என் காதலி =
கண்ணம்மா என் காதலி ???
//SP.VR.சுப்பையா said...
'இங்கு யாவுமே கண்ணம்மா, கண்ணம்மா, கண்ண்ம்மா"
அதுதான் பாடலின் punchline //
ஆமாம் சார்...வெறும் வார்த்தையாய் சொல்லாமல் கண்ணம்மா என்று உருகுவது தான் punchline!
//குமரன் (Kumaran) said...
ரியல் பிளேயர் இல்லாததால் முதல் சுட்டியில் பாடல் கேட்க முடியவில்லை. சந்தானம் அவர்கள் பாடியதைக் கேட்டேன். மிக நன்றாக இருந்தது//
அதைப் போடும் போதே நினைத்தேன்! ரியல் பிளேயர் ஆக இருக்கிறதே என்று! சினிமாப் பாட்டு தான் என்றாலும் அந்தச் சுட்டி எங்கும் கிடைக்கவில்லை! யாருக்காச்சும் mp3 சுட்டி கிடைத்தால் தாருங்கள்! ஜேசுதாஸ் குரலில் அனைவரும் கேட்டு மகிழ்வார்கள்!
என்ன கொடுமை ரவி இது. மெல்லிசை மன்னர் இசையை இளையராஜா இசைன்னு நீங்க சொல்லீட்டீங்களே....கண்ணே கனியமுதே படத்துக்கு இசை மெல்லிசை மன்னர். இந்தப் பாடலைப் பாடியவர்கள் பி.எஸ்.சசிரேகாவும் ஏசுதாசும். மிகவும் அருமையாக பாடியிருப்பார்கள்.
//ஷைலஜா said...
கண்ணம்மான்னு நாலுதடவை சொன்னா ஆச்சா//
மூன்று தடவை தான் கண்ணன் சொல்கிறான்! நோட் திஸ் பாயிண்ட் ஷைலஜா அவர்களே! :-))
//ராதா மாதிரி அத்தனை ஏக்கமோ ஆசையும் அன்பும் கலந்த வார்த்தைகளோ இதுல மிஸ்ஸிங் தான்:)//
அதானே! ஆனா கெஞ்சத் தெரியாம அப்படியே காலிலேயே விழுந்து விட்டானே கண்ணன்! அதுவும் சரணம் எய்தினேன் என்று!!
கண் பாராயோ வந்து சேராயோ என்று கெஞ்சுவதினால், பாவம் அவனை விட்டு விடுங்கள் ஷைலஜா!
ஓ, நீங்க வாபஸ் வாங்கி விட்டீர்களா! ok, ok!
//இதே பாரதி காற்றுவெளியிடைக் கண்ணம்மாவில் அசத்தி இருப்பார்!//
சந்தடி சாக்கில் அடுத்த நேயர் விருப்பமா? :-))
//இலவசக்கொத்தனார் said...
சந்தானம் ரொம்ப அனுபவிச்சு பாடி இருக்கிறார் கேளுங்க ஷைலஜா. அவர் பாடி இருக்கிறது பாகேஸ்ரீ ராகம். ரொம்ப அருமையான ராகம். அதை கேட்டுட்டு சொல்லுங்க ஏக்கமும் ஆசையும் இல்லையான்னு. :) //
கண்ணன் புகழைக் காத்த கொத்தனார் வாழ்க! வாழ்க!!
// ஓகை said...
மாவுடன் பலாவை ஒப்பிட்டு இரண்டிலொன்றின் சுவையை இழக்க நான் தயாராய் இருப்பதில்லை. ஆனால் ஒப்பிட்டல் நீங்கள் சொல்வது போலிருக்கலாம்.//
கண்ணன் புகழை மீண்டும் காத்த ஓகை ஐயா, வாழ்க! வாழ்க!!
//சேதுக்கரசி said...
மாறன் அம்புகள் என் மீது மாறி மாறி வீசவே...அடடா கேட்கத் தெவிட்டாத பாட்டு :-) என்னை எப்படி உங்கள் வலைப்பூவுக்கு வரவைப்பது என்று தெரிந்துவைத்திருக்கிறீர்கள்! நேற்று "யமுனையாற்றிலே"... இன்று இது! :-)//
நன்றி சேதுக்கரசி! உங்கள் வருகையும் கருத்தும் கூட தெவிட்டாத ஒன்று தான்!
அது சரி, நாளை உங்களை எப்படி வலைப்பூவிற்குள் வர வைக்கலாம்? :-)))
// ஷைலஜா said...
சந்தானத்தின் குரலில் ஏக்கம் காதல் ஆத்மார்த்த அன்பு அத்தனையும் ததும்பி வழிகிறது. கண்ணம்மாவை உடனே அனுப்பி வைக்கணும்போல..முன்னே நான் கூறியதை வாபஸ் வாங்கிக்கறேன்!//
கண்ணன் புகழை மீண்டும் மீண்டும் காத்த ஷைலஜா வாழ்க! வாழ்க!!
//தாசை ,தானம் இந்தப்பாடலில் 'பீட்' அடித்துவிட்டது !//
ஆகா,
இயல் செய்யாததை இசை செய்து விட்டது! எல்லாப் புகழும் கொத்ஸ்-க்கே!
//வல்லிசிம்ஹன் said...
கண்ணன் உருகினானோ என்னவோ(அவன்தான் கள்ளனாச்சே)
மஹாராஜபுரம் குழைந்து பாடிவிட்டார்//
ஆகா, என்ன வல்லியம்மா இப்படிச் சொல்லிட்டீங்க! படத்தைப் பாருங்கள்!
கண்ணன் உருக்கம் தெரியவில்லையா? பாவம் கீழே உட்கார்ந்து கொண்டு உருகுகிறான்! :-))
//G.Ragavan said...
என்ன கொடுமை ரவி இது.//
ஆகா என்ன கொடுமை சரவணன்-(ச்சே சரவணன் இல்லை),ராகவன்!
எங்கு சென்றீர்கள் இத்தனை நாள்! ஆளைக் காணோம்!
கண்ணனைக் காண்பதெப்போ என்ற பாட்டுக்குப் பதிலா ராகவனைக் காண்பதெப்போ என்று பாடிவிடலாம் என்று இருந்தோம்! :-))
//மெல்லிசை மன்னர் இசையை இளையராஜா இசைன்னு நீங்க சொல்லீட்டீங்களே....கண்ணே கனியமுதே படத்துக்கு இசை மெல்லிசை மன்னர்.//
ஆகா, தவறு தான்! நீங்க சொல்லிய பிறகு தான் சரி பார்த்தேன்! மன்னிக்கவும்! மாற்றி விடுகிறேன்!
என்ன இன்று கண்ணன் பாட்டில் ஒரே வாபஸ்-ஆக இருக்கு?:-))
//ஆகா,
இயல் செய்யாததை இசை செய்து விட்டது! எல்லாப் புகழும் கொத்ஸ்-க்கே!//
என்ன நாடகம் இது. (அப்பாடி இயல் வந்தாச்சு, இசை வந்தாச்சு, நாடகம் வராம இருந்தா எப்படி!)
பாடியவர் யாரோ இருக்க, அம்பைப் பாராட்டுவதேன்!
ஜிரா, மாற்றியாகி விட்டது! அப்படியே அந்த நட்டுவாங்கம் குரல் யாருடையது என்றும் யாருக்காச்சும் தெரியுமா?
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் இதை பாட ஒரு கேசட்டில் கேட்டுள்ளேன்! ஆனால் அப்ப ரொம்ப சிறு வயது! இன்னும் கணீர் என்று இருந்தது!
கண்ணே கனியமுதே படப்பாடல் எனக்கும் பிடித்தமானது. ஆனால் அதில் எல்லா வரிகளும் பாரதியுடையதா? சரணங்கள் வேறு என்பது போல எங்கோ படித்த ஞாபகம்.
நான் இதுவரை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை...
Unkal Muyatsikal Paraddukuriyavai. Athai thodarnthu seithal aruki varum padalkalai nam kedpathatku inimaiyaka irukkum. Avanappaduthal enpathu valvin aatharam. Athai neenkal seikireerkal paraddukal.
ரவி
எனக்கு மிகவும் பிடித்த் பாடல் இது.
பாரதியின் "கண்ணன் பாட்டு" முழுவதும் எழுத்துருவில் உள்ளது, வேண்டுமென்றால் தருகிறேன்.
// சிந்தாநதி said...
ஆனால் அதில் எல்லா வரிகளும் பாரதியுடையதா? சரணங்கள் வேறு என்பது போல எங்கோ படித்த ஞாபகம்.
நான் இதுவரை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை...//
வாங்க சிந்தாநதி!
நான் பாரதியார் கவிதைகள் புரட்டிப் பார்த்தேன். சரணங்கள் அப்படியே தான் உள்ளன!
பாரதியின் கவிதைகள் என்றே அனுபவிப்போம்!
// செல்லி said...
ரவி
எனக்கு மிகவும் பிடித்த் பாடல் இது.
பாரதியின் "கண்ணன் பாட்டு" முழுவதும் எழுத்துருவில் உள்ளது, வேண்டுமென்றால் தருகிறேன்.//
தங்கள் அன்புக்கு நன்றி செல்லி.
பாரதியின் கவிதைகள் பெரும்பாலும் கண்ணன் பாட்டு உட்பட http://www.tamilnation.org/literature என்ற தளத்தில் உள்ளதே!
பாருங்கள்! மிக அருமையான தளம்; தமிழிலக்கிய ஆர்வலர்கள் மிகவும் விரும்பும் தளம்.
//Anpumathi said...
Unkal Muyatsikal Paraddukuriyavai. Athai thodarnthu seithal aruki varum padalkalai nam kedpathatku inimaiyaka irukkum. Avana ppaduthal enpathu valvin aatharam. Athai neenkal seikireerkal paraddukal.//
மிக்க நன்றிங்க அன்புமதி.
கண்ணன் பாட்டு வலைப்பூவே அதற்குத் தான் துவங்கப்பட்டது! சினிமா என்றில்லை, இலக்கியப் பாடல்கள், சங்கீதப் பாடல்கள் என்று எம்பெருமானுக்குக் கதம்ப மாலை!
அருமையான பாடல் கே.ஆர்.எஸ்
இதோ சௌம்யா பாடியது.
என்சாய்!
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆகா என்ன கொடுமை சரவணன்-(ச்சே சரவணன் இல்லை),ராகவன்!
எங்கு சென்றீர்கள் இத்தனை நாள்! ஆளைக் காணோம்!
கண்ணனைக் காண்பதெப்போ என்ற பாட்டுக்குப் பதிலா ராகவனைக் காண்பதெப்போ என்று பாடிவிடலாம் என்று இருந்தோம்! :-)) //
என்ன செய்றது ரவி. ஒரு பத்து நாள் விடுப்பெடுத்துக் கொண்டு சுற்றுலா போயிருந்தேன். ஆகையால் வலைப்பூ பக்கமே வரவில்லை. :-)
// //மெல்லிசை மன்னர் இசையை இளையராஜா இசைன்னு நீங்க சொல்லீட்டீங்களே....கண்ணே கனியமுதே படத்துக்கு இசை மெல்லிசை மன்னர்.//
ஆகா, தவறு தான்! நீங்க சொல்லிய பிறகு தான் சரி பார்த்தேன்! மன்னிக்கவும்! மாற்றி விடுகிறேன்!
என்ன இன்று கண்ணன் பாட்டில் ஒரே வாபஸ்-ஆக இருக்கு?:-)) //
:-) நான் கூட பல பாட்டுகளுக்கு இசை இளையராஜான்னு நெனைச்சு கடைசியா அது விஸ்வநாதனாயிருக்கு. அதுனால ஒரு பாட்டு பிடிக்குதுன்னா...அது தொடர்பான தகவல்களையும் சேர்த்துத் தெரிஞ்சிக்கிறேன்.
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா, மாற்றியாகி விட்டது! அப்படியே அந்த நட்டுவாங்கம் குரல் யாருடையது என்றும் யாருக்காச்சும் தெரியுமா? //
இன்னைக்கு ராத்திரி கேட்டுட்டுச் சொல்றேன்.
//இராமநாதன் said:
அருமையான பாடல் கே.ஆர்.எஸ்
இதோ சௌம்யா பாடியது//
நன்றிங்க இராமநாதன்.
பாடலை rapidshare=இல் இருந்து சேமித்துக் கொண்டேன். கொத்ஸ் தந்த சந்தானம் பாடியதும் கேட்டீர்களா? அருமை!
http://music.cooltoad.com/music/song.php?id=192553 song mp3 link
பாரதியின் கண்ணன் பாட்டுக்கள் எப்போது படித்தாலும் கேட்டாலும் அருமை.
அன்பு இலவச கொத்தனார்,
அப்படியே நம்ம செவிக்கினிய பாடல்களுக்கும் வந்து என்னென்னெ ராகம் என்று சொல்லமாட்டீரா, அது இலவசமாகவே!
பாரதியின் பெண் வயிற்றுப்பேரன் ராஜ் குமார் பாரதியும் இதைப் பாடியுள்ளார்.
அதுசரி, இது கண்ணன் ராதையை நோக்கிப்பாடுவது என்று எப்படிச் சொல்வது? பாரதி கண்ணனை நோக்கிப் பாடியதுதானே. பாரதி, ராதையைக் கண்ணனில் காண்கிறான். 'சிவனே நினையே தொழுவேன் கண்ணா!' என்கிறான் இன்னொரு பாடலில். அதைச் சிவன் பாடல் என்று கொள்ளமுடியுமோ?
The bottomline is...கண்ணபிரான் இன்னும் தேட வேண்டும். ஷைலஜா கேட்டபடி கண்ணன் ராதைக்கு ஏங்கும் பாடல்.
பாரதி பாடியிருக்கிறான். "ராதே உனக்கு கோபம் ஆகாதடி!" கண்ணபிரான் ஓடுங்கள் இப்பாடலைப் பிடிக்க...:-))
மன்னிக்கவும்,, உங்க பதிவு ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குத் தான் திறக்க முடிந்தது. மற்றப் பதிவுகளைப் பார்க்க முடியவில்லை. நீங்க மெயில் கொடுத்து எனக்கு வரலையா? அல்லது புதுசா எழுதலையா? தெரியலை? மற்றப் பதிவுகளுக்கும் போக முடியலை. இணையப் பிரச்னை.
http://www.youtube.com/watch?v=5p1JMZr139o
another raaga..
don't know who are the singers.
very nice one.
mesmerising
இந்த விடியோவில் சிந்து பைரவி ராகத்தில் பாடி இருப்பவர் ராம வர்மா. இவர் ஸ்வாதித் திருநாள் மஹராஜாவின் பரம்பரையில் வந்த ஒரு இளவரசர்.
//Anonymous said...
http://www.youtube.com/watch?v=5p1JMZr139o
another raaga..
don't know who are the singers.
very nice one.
mesmerising//
நன்றி அனானி!
போன வருசம் இதே நாளில் இட்ட பதிவு! ஒரு வருசம் கழிச்சும் பின்னூட்டமா? அதுவும் அதே நாளில்? :-)
அது சிந்து பைரவி ராகம்! கொத்தனாரும் சொல்லிட்டாரு!
//இலவசக்கொத்தனார் said...
இந்த விடியோவில் சிந்து பைரவி ராகத்தில் பாடி இருப்பவர் ராம வர்மா. இவர் ஸ்வாதித் திருநாள் மஹராஜாவின் பரம்பரையில் வந்த ஒரு இளவரசர்//
ஆமாங்க கொத்ஸ்! ராஜா ராம வர்மா ஸ்வாதித் திருநாள் வழித்தோன்றல்!
இவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் அப்துல் கலாம் முன்னர் செய்த கச்சேரிகள் youtubeஇல் இருக்கு! பாத்தீங்களா?