Sunday, April 25, 2010

இளையராஜா/யேசுதாஸ்: கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்!

கண்ணன் பாட்டு மக்களே, எனக்கு ஒரு சந்தேகம்! தீர்த்து வைங்க!
இந்தப் பாட்டு கண்ணன் பாட்டு தானே?
"கண்ணனே" நீ வர-ன்னு தானே துவங்குது? :)

இளையராஜாவின் மிக அழகான மெலடிக்களில், இது என்றும் நிலைத்து நிற்கக் கூடியது! வயலினை வச்சிக்கிட்டே ஜால வித்தை காட்டுவாரு ராஜா என்பதற்கு இதுவும் ஒரு சரியான எடுத்துக்காட்டுப் பாடல்!

ராஜா-வின் வயலின் சாகசங்களோடு பாட்டின் கம்பீரத் துவக்கம் - Dont Miss! கூடவே மெல்லீசா ஒரு "டொக் டொக்" சத்தம்....
* பாட்டு ஆரம்பிக்கும் போதும் டொக் டொக்!
* அப்பறம் பாடல் முழுக்கவும் டொக் டொக் கேட்கும் பாருங்க!
அந்த டொக் டொக்-கையே உன்னிப்பா Follow பண்ணீங்கனா....
அதான் என்னோட காதல் துடிப்பு-ன்னு தெரிஞ்சீரும்! :))(ஆண்குரல் - பச்சையில்; பெண்குரல் - கண்ணனுக்கு பிடிச்ச வயலெட்டில்! :)


காத்திருந்தேன்...

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன் - ஜன்னலில் பார்த்திருந்தேன்!
கண்விழித் தாமரை பூத்திருந்தேன் - என் உடல் வேர்த்திருந்தேன்!
ஒவ்வொரு ராத்திரி வேளையிலும் - மன்னவன் ஞாபகமே!
கற்பனை மேடையில் கண்டிருந்தேன் - மன்மத நாடகமே!
அந்திப் பகல், கன்னி மயில், உன்னருகே!
(கண்ணனே நீ வர)

நீலம் பூத்த ஜாலப் பார்வை - மானா? மீனா?
நான்கு கண்கள் பாடும் பாடல் - நீயா? நானா?

கள்ளிருக்கும் - பூவிது பூவிது!
கையணைக்கும் - நாளெது நாளெது?
பொன்னென மேனியும் - மின்னிட மின்னிட!
மெல்லிய நூலிடை - பின்னிடப் பின்னிட

வாடையில் வாடிய
ஆடையில் மூடிய
தேர்...நான்...
(கண்ணனே நீ வர)
பேச வேண்டும்! மெதுவா மெதுவா...

ஆசை தீரப் பேச வேண்டும் - வரவா? வரவா?
நாலு பேர்க்கு ஓசை கேட்கும் - மெதுவா! மெதுவா!

பெண் மயங்கும் - நீ தொட நீ தொட!
கண் மயங்கும் - நான் வர நான் வர
அங்கங்கு வாலிபம் - பொங்கிடப் பொங்கிட
அங்கங்கள் யாவிலும் - தங்கிடத் தங்கிட

தோள்களில் சாய்ந்திட
தோகையை ஏந்திட
யார்...?நீ....!
(கண்ணனே நீ வர)
தோள்களில் சாய்ந்திட...


படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
குரல்: யேசுதாஸ் & உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து
ராகம்: மலைய மாருதம்
தென்றலே என்னைத் தொடு படம் ஒரு வருஷம் மேல ஓடியது-ன்னு நினைக்கிறேன்! பாட்டுக்கும்-காதலுக்காகவே!
சேட்டன் யேசுதாஸோட mesmerizing காதல் குரல்!
உமா ரமணனும் நல்லா கம்பெனி குடுக்கறாங்க! (பூங்கதவே, கஸ்தூரி மானே-ன்னு நிறைய ஹிட் கொடுத்தவங்க உமா!)

ராகம்/மெட்டு எங்கேயோ கேட்டாப் போல இல்லை?
TMS பாட்டு ஞாபகம் வருதா? ஓராறு முகமும் ஈராறு கரமும்....தீராத வினை தன்னை தீர்க்கும்! எக்ஜாக்ட்லி!
அந்த முருகன் பாட்டு ராகமே தான், இந்தக் கண்ணன் பாட்டு ராகமும் கூட! :)
பூப்பூக்கும் மாசம் தை மாசம் என்ற பாட்டும் இதே மெட்டு தான்!

கண்ணா, உனக்கு, உன் பாட்டு பிடிச்சி இருந்தது தானே? :)

Friday, April 23, 2010

பித்துக்குளி ஹிட்ஸ்: பால் வடியும் முகம் நினைந்து நினைந்து!

கண்ணன் பாட்டு மக்களே, வணக்கம்!
இன்னிக்கி எனக்கு மிகவும் பிடிச்ச முருக-தாசர் ஒருத்தரு..."கண்ணா, என் பால், அன்-பால், உன் பால் வடியும் முகம், ஹைய்யோ"-ன்னு உருகிப் போயி பாடுறாரு! யாரு அந்த முருகதாசர்-ன்னு கேட்கறீங்களா?

நம்ம பித்துக்குளி முருகதாசரே தான்!
அவர் பாடுவது:
பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிகவாகுதே - கண்ணா!

மொதல்ல பித்துக்குளியார் பற்றி லைட்டாப் பார்ப்போம்! அப்பாலிக்கா பாட்டுக்குப் போவோம்! ஓக்கேவா?
மொதல்ல எப்பமே அடியார்கள்! அடியார்கள் வாழ..அரங்கநகர் வாழ..சடகோபன் தண் தமிழ் நூல் வாழ :)பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்?
எனக்கு முருகன் ஞாபகம் வருவான்! :)
அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :)
மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :))

பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு!

இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்!
கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்!
இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது!

Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு போடறது தப்பில்லை! ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல?
பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :)
ஆனால் நம்ம பித்துக்குளியார் காவடிச் சிந்தைக் கேளுங்க! சுருட்டி ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :)

சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்க!
பால் வடியும் முகம் - கண்ணா, என்பது ஊத்துக்காடு வேங்கட கவியின் கீர்த்தனை! நடனத்துக்குன்னே பாடப்பட்ட அழகான கண்ணன் பாடல்கள்! இதை எப்படி முருகதாஸ் Handle பண்றாரு?
* முதலில் பச்சை மாமலை போல் மேனி-ன்னு, ஆழ்வாரை Hum பண்ணி ஆரம்பிக்கறாரு!
* அடுத்து, ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு!
* அடுத்து, பாஆஆஆஆஆல் வடியும் முகம்...நினைந்து நினைந்து உள்ளம்.....பரவசம் மிகவாகுதே....கண்ணாஆஆஆஆ!

கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில், மாயோன் பாட்டு - பால் வடியும் முகம்! Bhajan Version, here

பால் வடியும் முகம்...பால் வடியும் முகம்
நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசம் மிக வாகுதே - கண்ணா!
(பால் வடியும்)

நீலக் கடல் போலும் நிறத்தழகா - எந்தன்
நெஞ்சம் குடி கொண்ட
அன்று முதல் இன்றும்
எந்தப் பொருள் கண்டும்
சிந்தனை செலா தொழிய
(பால் வடியும்)
நீர் வடியும் முகம்...

வான முகட்டில் சற்றே
மனம் வந்து நோக்கினும்
மோன முகம் வந்து தோனுதே!

தெளிவான தண்ணீர் தடத்தில்
சிந்தனை மாறினும்
சிரித்த முகம் வந்து காணுதே!

கானக் குயில் குரலில்
கருத்(து) அமைந்திடினும் - உன்
கானக் குழலோசை மயக்குதே!

கருத்த குழலொடு நிறுத்த மயில் சிறகு - இறுக்கி அமைத்த திறத்திலே
கான மயிலாடும் மோனக்குயில் பாடும் - நீல நதியோடும் வனத்திலே
குழல் முதல் எழிலிசை, குழைய வரும் இசையில் - குழலொடு மிளிர் இளங் கரத்திலே
கதிரும் மதியும் என நயன விழிகள் இரு - நளினமான சலனத்திலே

காளிங்கன் சிரத்திலே
பதித்த பதத்திலே
என் மனத்தை இருத்திக்
கனவு நனவினொடு
பிறவி பிறவி தொறும்
கனிந்துருக வரம்தருக பரங்கருணை....
(பால் வடியும்)

வரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி
ராகம்: நாட்டக் குறிஞ்சி
தாளம்: ஆதி
குரல்: பித்துக்குளி முருகதாஸ்

இசைக் கருவிகளில்:
* வீணை

பாடகர் குரலில்:
* மகராஜபுரம் சந்தானம்
* சுதா ரகுநாதன்
* நித்யஸ்ரீ
* செளம்யாபித்துக்குளியாருக்கு இப்போ வயசு 95 இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! அன்பர்களால், "முருகா"-ன்னே அழைக்கப்படுகிறார்!
"நான்" என்ற சொல்லே அவர் வாயில் வராது! ஒன்லி "அடியேன்"! இல்லீன்னா தன்னையே கூட "அவன்"-ன்னு தான் சொல்லிப்பாரு! :)
எளியோர்களின் தத்துவத்தால் வைணவம் பிடிச்சிப் போய், அடியேன், அடியேன்-ன்னு சொல்லிக்கிட்டாலும், முருகன் தான் மனத்துக்கு இனியான்! என்னையப் போலவோ? :)

பாடிய கேசட்டுகளில் எக்கச்சக்கமான கண்ணன் பாடல்கள்! அது என்னமோ தெரியலை........பஜனை-ன்னு வந்துட்டாலே, இந்தக் கண்ணன் தான் சரியான பஜனை பார்ட்டி போல! :)

திருப்புகழ் பாடல்கள் பலவும், தன் ஸ்டைலில் பாடி இருக்கார்! ஆழ்வார் பாசுரங்களும் அப்படியே! ரொம்ப அருமையா இருக்கும்! ஆனால் மிகவும் ஹிட்டானது என்னவோ..கார்த்தி கேயா, கலியுக வரதா பாட்டு தான்! முருகனருள் வலைப்பூவில் அப்பறமா இடறேன்!
சினிமாவிலும் பாடி உள்ளார் - நாடறியும் நூறுமலை! குன்னக்குடி இசையில், தெய்வம் படத்துக்காக!

சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் திளைத்தவர்........சுமார் அறுபது வயதில், உடன் பாடிடும், தேவி சரோஜா என்ற அம்மையாரை மணந்து கொண்டார்!
முதலில் சாஸ்திரோத்காரமான மடங்களில் எதிர்ப்பு கிளம்பினாலும், கண்ணன் அருளால், எதிர்ப்புகள் அடங்கின! தேவி முருகதாஸ் + பித்துக்குளி முருகதாஸ் இணைந்து, ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்!

எல்லாஞ் சரி! "ஊத்துக்குளி" வெண்ணெய் தெரியும்! அது என்ன "பித்துக்குளி"?
சின்ன வயசில், தெருவில் விளையாடும் போது, ரோட்டுல போற ஒருவர் மேல கல்லெறிஞ்சி இருக்கான் இந்த வாலுப்பையன்!
அடிபட்ட பெரியவரோ பரம பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார்! நெற்றியில் இரத்தம் வடிய...
"அடேய்...நீ என்ன பித்துக்குளியா (பைத்தியமா)? ஒரு நாள் இல்லை ஒரு நாள், என்னையப் போலவே நீயும் ஆகப் போற பாரு!"-ன்னு சொல்ல...

* அப்படியே ஆகி,
* பித்துக்குளியாகி,
* கண்ணன்-முருகனில் நம்மையும் பித்துக்குளியாக்கும்,
பித்துக்குளி முருகதாசர் திருவடிகளே சரணம்!!!

இவர் கச்சேரிக் காசு பலவும் போகுமிடம் = அனாதைச் சிறார் விடுதிக்கு! எங்கூருக்கு அருகில் உள்ள வாலாஜாப்பேட்டை "தீனபந்து அனாதைச் சிறுவர் ஆசிரமம்" தான் அது!
பித்துக்குளி ஐயா-அம்மா! உங்கள் சிறியேனை ஆசீர்வதியுங்கள்! - பெருகாதல் உற்ற தமியேனை, முருகா நீ, பிரியாது பட்சம் மறவாதே! பிரியாது பட்சம் மறவாதே! முருகாஆஆஆ...எந்தப் பொருள் கண்டும் சிந்தனை செலா தொழிய......

Friday, April 16, 2010

பி.சுசீலா in solo: கண்ணாஆஆஆ, கருமை நிறக் கண்ணா!

கண்ணன் பாட்டு குழுவினருள் மிக முக்கியமானவரும், கண்ணனுக்கு கோவர்த்தனத்திலே சொந்தக்காரருமான திருவாளர் ராதாமோகன்!
எப்படிச் சொந்தம்-ன்னு கேட்காதீங்க! ஒன்னு விட்ட சித்தப்பா பையனாவும் இருக்கலாம், இல்லை மூனு விட்ட முத்தப்பா பையனாகவும் இருக்கலாம்! :)

அவர், கண்ணன் பாட்டின் கெட்டப் சேஞ்சில் மயங்கிப் போய், சைட் பாரில் இருக்கும் பாட்டையெல்லாம் பார்த்து விட்டு, குற்றங் குறைகளை அடுக்க ஆரம்பித்து விட்டார்!
இதுக்குத் தான் நாமளே பட்டியல் போட்டு மாட்டிக்க கூடாது-ன்னு சொல்லுறது!
இப்போ பட்டியலைப் பார்த்து, யாரு வேணும்-ன்னாலும், கேள்வி் எழுப்பலாம் பாருங்க! சொ.செ.சூ = சொந்த செலவில் சூயிங்கம்! :)

அவர் நேயர் விருப்பமாகக் கொடுத்துள்ள பல திரைப்பாடல்கள், முன்பே கண்ணன் பாட்டில் வந்து விட்டன! ஆனால்...ஆனால்...ஆனால்...

ஒரு பாட்டு, ஒரே ஒரு பாட்டு, அது மிஸ் ஆகியிருக்கவே கூடாத பாட்டு!
இவ்ளோ நாள் எப்படி மிஸ் ஆச்சு-ன்னே் தெரியலை! இத்தனைக்கும் என் மனசில் நிலாவி உலாவும் பாட்டு!

இப்போ, முருகனருள்-150ஆம் பதிவால், அது கண்ணன் பாட்டில் பின்னூட்டமா எழுப்பப்பட்டு, இப்படி Trigger ஆகணும்-ன்னு இருக்கு போல!
என் முருகா! ஆராய்ந்து அருளேலோ-ன்னு இல்லாம, விட்டுப் போனதைக் கூட, நீயாக வந்து அருளுகிறாயே! நீயல்லவா பக்தவத்சலன் = அடியார்க்கு நல்லான்!

இந்தப் பாட்டுக்கு என் மனசு கிறங்கிப் போகும்! ஏன் தெரியுமா?
மனம் பார்க்க மறுப்போர் முன்............. படைத்தாய் கண்ணா!
இனம் பார்த்து எனைச் சேர்க்க ............. மறந்தாய் கண்ணா! கண்ணாஆஆஆ.....
புகுந்த வீட்டில் அன்பைப் பெற ஏங்கும் ஒரு ஜீவன்!
ஆனால் அது எத்தனை தான் நல்லபடியா பார்த்து பார்த்து நடந்துக்கிட்டாலும், அதுக்கு-ன்னு வாய்ச்சது என்னமோ உதாசீனமும், வெறுப்பும் தான்!

"நம்மை ஒருத்தர் வெறுக்கறாங்க-ன்னு தெரிஞ்சா, நாமளா ஒதுங்கிக்கணும்! எதுக்குப் போயி போயி அவமானப் படணும்?
நீ என்ன தான் முயற்சி செஞ்சாலும் சரி, நல்லபடியா நடந்துக்கிட்டாலும் சரி, அவரோட அன்பை உன்னால் பெற முடியாது! அவமானத்தைத் தான் பெற முடியும்!"
- இதுக்கு அவ என்ன பதில் சொல்லுறா? இதை அவமானமாக எடுத்துக் கொள்வாளா? நீங்களே கேளுங்க, ஆரம்பப் பகுதியின் உரையாடலை!

அப்படியே....சுசீலாம்மாவின் சுகமான சோகத்தில் கேட்டுக்கிட்டே படிங்க!
Also, just before the song starts, a flute piece will float, as she runs singing kaNNaaa! Dont miss that!கண்ணாஆஆஆஆஆ
கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண் இல்லையே!

உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை!
(கண்ணாஆஆஆஆஆ)

மனம் பார்க்க மறுப்போர் முன், படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுப்போர் முன், கொடுத்தாய் கண்ணா
இனம் பார்த்து எனைச் சேர்க்க, மறந்தாய் கண்ணா
நல்ல இடம் பார்த்துச் சிலையாக அமர்ந்தாய் கண்ணா!
(கண்ணாஆஆஆஆஆ)

பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா
அதில் பூப் போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா
கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக் கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா?
(கண்ணாஆஆஆஆஆ)

படம்: நானும் ஒரு பெண்
குரல்: பி.சுசீலா
இசை: ஆர்.சுதர்சனம்
வரிகள்: கண்ணதாசன்கவியரசர் கண்ணதாசனால் மட்டுமே இப்படி உள்ளத்தின் உண்மையை, பாட்டில் கொண்டு வர முடியும்!
சுசீலாம்மா பாடிய Solo-க்களில் மிகவும் உன்னதமான Solo Piece இது!
இந்த Solo-வில், அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லிலும் ஈரம் இருக்கும்!

துள்ளலான கிக்-கான ரொமான்டிக் பாடல்களுக்கு ஜானகி என்றால்...
சுகம், சோகம், தாலாட்டு, மென்மை என்பதற்கெல்லாம் சுசீலாம்மா!
Janaki Madam is a Very Good Companion = When You are in Happy Times! But Am I always so? This is where you might need Susheelamma!

மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா! இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா!
ஹைய்யோ...இனம் பார்த்து இவளைச் சேர்க்க முடியாமல் போன கண்ணனே! நீயும் ஒரு தெய்வமா? எந்தக் கடன் தீர்க்க இவளை நீ படைத்தாய் கண்ணா?? கண்ணாஆஆஆ...கருமை நிறக் கண்ணா!


சுசீலாம்மாவின் முன்னால், அதே பாட்டைப் பாடும் சின்னஞ் சிறு சிறுமி!

Tuesday, April 13, 2010

மூங்கிலுக்கு முகவரி தந்தவன் யார்? ஏன்?

அனைத்து அன்பர்களுக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!
நிங்களுக்கு கண்ணன் பாட்டு மக்களோடே விஷூ ஆஷம்சகள்!
ஈ புது வருஷத்தில், நிங்களுக்கு நல்லது வரட்டே, பாக்யம் கடாஷிக்கட்டே! :)

கண்ணன் பாட்டில், தொடர்ந்து...வாசகர்கள் எழுதி இடும் கவிதைகள்! அந்த வரிசையில் இன்று சித்ரம் ஐயா!
ஆனா ஏதோ அவரு நம்மளைக் கேள்வி கேக்குறாப் போல கவிதை எழுதி இருக்காரு! என்னவாம்? மூங்கிலுக்கு முகவரி தந்தவன் யார்? :)கண்ணன் கையில் புல்லாங்குழல் இருக்கக் காரணம் என்ன?
வேற எந்த ஆயர்களோ, மாடு மேய்ப்பவர்களோ புல்லாங்குழல் வச்சிருந்ததா காணோமே?
கண்ணன் கையில் மட்டும் இந்த Weapon of Mass Destruction எப்படிக் கிடைச்சுது? :)

யாராச்சும் Giftஆ கொடுத்தாங்களா? அது அப்படியே ஒட்டிக்கிச்சா?
மகாபாரதம் அல்லது பாகவதம் கதையைப் படிச்சவங்க, கொஞ்சம் ஹெல்ப் ப்ளீஸ்! :)மூங்கிலுக்கு முகவரி தந்த கண்ணா
முத்து மணி மாலை அணிந்த வண்ணா
(மூங்கிலுக்கு)

வெள்ளை மனம் உள்ளம் கொண்டு - என்
வெண்ணை திண்ண நீ வாருவாய்
வெங்கல பானை உருளக் கண்டேன் - அதில்
வெண்சங்கு மணி ஓசை கேட்டேன்!
(மூங்கிலுக்கு)

அமுத வாயில் குமுத மொழி பேசி
அன்ன நடை நடந்த அழகா
அலைகடல் மீது உனது ஆனந்த நடனமதை
ஆயர்ப்பாடி மக்களை கண் குளிர வைத்தாயே
(முங்கிலுக்கு)

வெண் பனி மேகங்கள் உறவாட
வெள்ளை மலர்ப் பூ மழையாக
வெந்தபூமி தணித்த நின் கருணை
வேதமானவனே கீதை நாயகனே நீயே
(மூங்கிலுக்கு)

குழல் ஊதிய கண்ணணுக்கு ...சித்ரம் ..//

Sunday, April 04, 2010

திலகா: கிருஷ்ண பள்ளி எழுச்சி!

கண்ணன் பாட்டில், குழுவினர் மட்டும் அல்லாது, பல வாசகர்களும் பதிவிடுவது வழக்கம்!

* தங்கள் படைப்புகளை அனுப்பி, இதையும் இடுங்களேன் என்று கேட்பவரும் உண்டு! = சித்ரம், திலகா, மலைநாடான் ஐயா போன்றோர்
* நேயர் விருப்பங்களைத் தருபவரும் உண்டு! = கானா பிரபா முதற்கொண்டு பலப்பலர்!
* அதை அவர்களாகவே எழுதி அனுப்புவோரும் உண்டு! = கோவி கண்ணன் முதலானோர்!
* பாடிக் கொடுப்போரும் உண்டு = வல்லியம்மா, மீனாட்சி சங்கரன், சூரி சார் போன்றோர்!
* நல்ல ஆலோசனைகளையும், படங்களையும் சுட்டிக் காட்டுவோரும் உண்டு = என் தோழன் ஜி.இராகவன் முதலானோர்!

இந்த ஊக்கம் என்றும் இனிது! இன்றும் இனிது!
அந்த வரிசையில், திலகா அவர்கள் எழுதி அனுப்பிய கிருஷ்ண சுப்ரபாதத்தைக் கேளுங்கள்!
இவரும், சித்ரம் ஐயாவும் அனுப்பிய பாடல்கள் எல்லாம் க்யூ வரிசையில் வேறு உள்ளன! :))

இதோ...கிருஷ்ணா சுப்ரபாதம்!

From கண்ணன் பாட்டு


யசோதையின் மைந்தா ஸ்ரீகிருஷ்ணா எழுந்தருள்வாய்!
யமுனையில் நீராடும் மாதவனே எழுந்தருள்வாய்!
கோபியர்கள் கொஞ்சிடும் கோபாலா எழுந்தருள்வாய்!
கோவர்தன மலை எடுத்த கோவிந்தா எழுந்தருள்வாய்!( )

அகிலத்தை தாங்கும் இறைவா எழுந்தருள்வாய்
ஆநிரை மேய்த்த கண்ணனே நீ எழுந்தருள்வாய்
இன்பங்கள் தந்திடும் இறைவா எழுந்தருள்வாய்
ஈசனும் வணங்கும் தேவா நீ எழுந்தருள்வாய் ( )

உலகளந்த பெருமாளே மாயவனே எழுந்தருள்வாய்
ஊனுக்குள் உயிராய் நிறைந்;தவனே எழுந்தருள்வாய்
எங்கும் நிறைந்த பரம்பொருளே எழுந்தருள்வாய்
ஏழுமலை வாழும் ஸ்ரீனிவாசா எழுந்தருள்வாய் ( )

- திலகா

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP