Tuesday, July 24, 2007

61. பிருந்தா வனமும் ந(நொ)ந்த குமாரனும் - மிஸ்ஸியம்மா!

ஃபிகருங்க அல்வா கொடுத்த பசங்களுக்கு, இதை அப்படியே உல்டா பண்ணிக் கல்லூரியில் பாடிக் காட்டுவாய்ங்க! -
பிருந்தா வனமும் நொந்த குமாரனும், யாவருக்கும் பொதுச் செல்வமன்றோஏனோ குமரா இத்தனை சோகம், யார் தான் காதலில் வழுக்கி விழாரோ? :-)
ஸ்லோ டூயட்! (Slow Duet)...

மிஸ்ஸியம்மா படத்தில் ஒரு அழகான கண்ணன் பாட்டு.
கேட்கும் போது அப்படியே ஏரியில் ஓர் ஓடம் அப்படியும் இப்படியும் அசைவதைப் போல இருக்கும்!
அதுவும் துவக்கத்தில் வாசிக்கும் ஒரு ஓப்பனிங் பீஸ்...அது என்ன வாத்தியம்-ங்க? இசை இன்பத்துக்காரங்க வந்து சொல்லுங்கப்பா!

அதுவும் AM ராஜா குரலில், சுசீலாம்மாவும் கூடப் பாடுகிறார்! பொதுவா AM ராஜா-ன்னா, கூட ஜிக்கி பாடறது தான் காம்பினேஷன். ஆனா இங்க சுசீலாம்மா குழந்தைக் குரலில் கொஞ்சும் குழைவுக்குச் சொல்லவும் வேண்டுமா?

ஜி-ன்னு ஒரு படம் வந்துச்சி. அஜீத்-த்ரிஷா. அதுல "சரளாக் கொண்டையில் சாமந்திப் பூ"-ன்னு ஒரு பாட்டு வரும் :-)
அப்படியே அட்டைக் காபி, இதே மெட்டில்! நீங்களே கேளுங்க!
வித்யாசாகரின் சினிமா-காரம்-காபி = CVR உங்க லிஸ்டுல சேத்துக்குங்க! :-)

ஒரிஜினல் பாட்டைக் கேட்க இங்கே சொடுக்கவும்!
ஜிரா இந்தப் பாட்டைக் கண்ணன் பாட்டில் ரொம்ம நாளா தேடினார்-ன்னு காத்து வாக்குல ஒரு சேதி வந்துச்சு! :-)
ஜெமினி-சாவித்ரியை மறந்துட்டு
கண்ணன்-ராதை ஸ்லோ டூயட் ஆடறதா கற்பனை செஞ்சிக்கோங்கப்பா! :-)


பிருந்தா வனமும் நந்த குமாரனும்
யாவருக்கும் பொதுச் செல்வ மன்றோ
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ
(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)

புல்லாங் குழலின் இனிமை யினாலே
உள்ளமே ஜில் லெனெத் துள்ளாதா
ராகத்திலே அனு ராக மேவினால்
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா

(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா
ஏனோ ராதா இந்தப் பொறாமை
யார்தான் அழகால் மயங்கா தவரோ

(பிருந்தா வனமும் நந்த குமாரனும்)


இன்று Jul 24, 2007 - பதிவர் CVR அவர்களின் பிறந்த நாள் நேயர் விருப்பம்! மெலடி ரசிகரான அவருக்குக் கண்ணன் பாட்டில் அனைத்து நண்பர்களின் சார்பாகவும்...."Happy Birthday CVR!"

படம்: மிஸ்ஸியம்மா (மிஸ் மேரி என்று இந்தியில் வந்தது)
இந்தியில் இதே பாட்டு எப்படி வரும் என்று யாராச்சும் வந்து போலோ, ப்ளீஸ்!:-)

வரிகள்: T.N. ராமையா தாஸ்
குரல்: A.M.ராஜா, P.சுசீலா
இசை: S.ராஜேஸ்வர ராவ்

ராகம்: ச்யாமா
அப்படின்னு தான் நினைக்கிறேன். சங்கராபரணம் படத்துல "மானச சஞ்சரரே"-ன்னு ஒரு பாட்டு வரும்! சதாசிவப் பிரம்மம் எழுதியது! கிட்டத்தட்ட அந்த ராகம் மாதிரி தான் தெரியுது!
இசை வாணர்கள், அடியேன் தப்பா சொல்லியிருந்தா, கோச்சிக்காம வந்து திருத்தி விடுங்க!


யாவருக்கும் பொதுச் செல்வம் - பலப் பல கண்ணன்கள்!

Monday, July 23, 2007

மாடு மேய்க்கும் கண்ணே !

கண்ணன் பாடல்களில் எனக்கு ஆர்வம் மிகக் காரணம் என் அன்னை. வேளைகளில், ஏதாவதொரு கண்ணன் பாடலை முணுமுனுத்தபடியிருப்பாள். இதன் நீட்சி, கண்ணன் பாடல்களில் எனக்கும் எப்போதும் விருப்புண்டு. ரவிசங்கர் இந்தப்பதிவைத் தொடங்கிய காலத்திலிருந்து பார்த்தும், பாடல்களைக் கேட்டும் வருகின்றேன். மிக அழகான பாடல்களெல்லாம் பதிவாகியுள்ளன.

இவை பற்றிக் கதைக்கும் வேளைகளிலெல்லாம், ரவிசங்கர் , நீங்களும் கண்ணன் பாடல் பதிவில் பங்குகொள்ளலாமே என்பார். நானும் எப்படியாவது தவிர்த்துக்கொண்டுவிடுவேன். என் தப்பித்தல் தந்திரத்தை புரிந்து கொண்டோ என்னவோ, என் பெயரையும் பதிவில் இணைத்து அழைப்பு அனுப்பிவிட்டார் ரவி. இதற்கு மேலும் தவிர்க்க முடியாதென்பதால் இதோ நானும்...

கண்ணனைப் பலருக்கும் பிடிப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்று எண்ணிய போது, அவனை புனிதக் கடவுளாக அல்லாது, குறும்புகளும், குறைகளும் கொண்ட மனிதனாகக் கொண்டாட முடிகிறதென்பது ஒரு காரணமாகவிருக்குமோ என்று கூட எண்ணத்தோன்றியது. ( அடிக்க வந்தீடாதீங்கப்பா..:-)

கண்ணனை மாடு மேய்பவனாக, யதுகுல பாலனாகப் பார்த்து ரசிக்கும் இந்தப்பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. பிரபல கர்னாடக இசைக்கலைஞர் அருணாசாய்ராமின் குரலில் இப்பாடலை முதலில் கேட்டபோது, அவரது பாடும் லாவகமும், இசையில் காட்டும் மாறுதல்களும், ரசிக்கத்தக்கதாக இருந்தது. அவ்விசையின்பத்தை இங்கே, உங்களோடினைந்து ரசிக்க வந்துள்ளேன். வாருங்கள்...ரவிசங்கர்! உங்கள் அன்புக்கு நன்றி. பாடல் உங்களுக்கும், ஏனையோர்க்கும் மகிழ்வு தருமெனில் அதுவே எனக்கும் இன்பம்.

பல்லவி:

யசோதை:
மாடு மேய்க்கும் கண்ணே நீ
போக வேண்டாம் சொன்னேன்


அனுபல்லவி:

கண்ணன்:
போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


சரணம்:

காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணைய் தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே

(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்

(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)
----------------------------------------------------------------------------

Saturday, July 14, 2007

59. வருஷம் 16 - கங்கைக்கரை மன்னனடி, கண்ணன் மலர்க் கண்ணனடி

வருஷம் 16 என்னும் படத்தில், இளையராஜா போட்டாரு பாருங்க ஒரு தோடி! அதுவும் பாடலின் இறுதியில் கம கம என்று கமகம் பொங்கிப் பிரவாகமாய்.....
யேசுதாஸ் பாடும் போது, இசை கேட்க எழுந்"தோடி" வருவார் அன்றோ?
நடன மெட்டில் அமைந்த நல்ல கண்ணன் பாட்டு!

கார்த்திக் பாடல் கலைஞர்; குஷ்பு ஆடல் கலைஞர்!
படத்தில் கார்த்திக்கை அந்தச் சிவப்பு சால்வை போட்ட கெட்டப்பில் பார்க்கவே வித்தியாசமாக இருக்கும்!:-)
குஷ்புவும் வேறு யாரோ ஒருவர் வந்து பாட, பரத நாட்டியத்தை நிறுத்தி விடுவார்!
கார்த்திக் பாடினால் மட்டுமே ஆடுவார் போல! இந்தப் பாடல் படத்தின் க்ளைமாக்ஸோ என்னவோ...கடைசியில் துப்பாக்கி பேசிடுமோ? நீங்களே பாருங்க!

பாடலைக் கேட்டு ரசிக்க - இங்கே சுட்டுங்கள்!
பாடலின் ஆரம்பத்தில் வரும் ஒரு முன்னுரை (விருத்தம்)....ஆடை கட்டும் பைங்கிளியே....அதில் அப்படியே யேசுதாஸ் குழைவதைக் கேட்கலாம்!
(கண்மணியே ராதை என்னும் - காதலியே நான் விரும்பும்
பெண்மணியே..... ஆடை கட்டும் பைங்கிளியே!
கண்ணன் வந்தான் பாட்டிசைக்க - கவலைகளை விட்டு விடு
காற் சலங்கை சத்தமிட - மேடையிலே வட்டமிடு....)


கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி
வங்கக்கடல் வண்ணனடி - உள்ளம் கவர் கள்வனடி
நெஞ்சில் எழும் அலைகளிலே - நீச்சல் விடும் இளைஞனடி
வஞ்சிக் கொடி மடியினிலே - மஞ்சம் இடும் தலைவனடி


உள்ளத்தை எடுத்தேன் - உன் கையில் கொடுத்தேன்
வெள்ளத்தைப் பிரிந்த - மீனைப் போல் துடித்தேன்
(கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி)


தத்தும் சிறு தாமரைப் பாதங்கள் - நடை தான் பழக
கத்தும் கடல் நீரலை போல் - இங்கு குழல் தான் நெளிய
இல்லை என யாவரும் கூறிடும் - இடை தான் ஒடிய
இன்பம் என என் விழி பார்ப்பது - இமை தான் விரிய

காற் சலங்கை ஆடுதடி ஆள் வரத்தான் வாழுதடி
காற் சலங்கை ஆடுதடி ஆள் வரத்தான் வாழுதடி


முன்னம் பல ஜென்மம் வழியே - உண்டானது உன் உறவே!
இன்னும் என்னைத் தொட்டுத் தொடர்ந்தே - பந்தாடுது உன் நினைவே?
உயிர் வாழும் பெண்ணா - வா வா கண்ணா
(கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி)

தாம் தரிகிட, தாம் தரிகிட, தீம் தரிகிட, தீம் தரிகிட.........

சந்தம் தரும் ஆடலும் பாடலும் சுகமாய் மலரும்
சுட்டும் விழிப் பார்வையில் ஆயிரம் நிலவாய் பொழியும்
அங்கம் ஒரு ஆலிலை போல் இங்கு நடனம் புரியும்
அன்பே என மாதவன் தோள் தொட நெடுநாள் உருகும்


காத்திருப்பான் கை அணைக்க - காதலியாள் மெய் அணைக்க
காத்திருப்பான் கை அணைக்க - காதலியாள் மெய் அணைக்க

கண்ணன் மனம் அந்தப்புரமே - வந்தாடிடும் முத்துச் சரமே
அச்சம் விடும் பச்சைக் கிளியே - அவற்றால் தினம் நத்தும் கனியே
நாளும் ஓதும்......காதல் வேதம்!
(கங்கைக்கரை மன்னனடி - கண்ணன் மலர்க் கண்ணனடி)படம்: வருஷம் 16
குரல்: KJ ஜேசுதாஸ்
இசை: இளையராஜா
வரிகள்: ?
ராகம்: தோடி

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP