Saturday, February 10, 2007

சின்னக் கண்ணன் அழைக்கிறான்!

கண்கள் சொல்கின்ற கவிதை - இளம்வயதில் எத்தனை கோடி?
இசைஞானி, இசைஞானி என்று பெயர் வாங்குவதற்கு முன்னரே, தன் ஞானத்தை மிக அருமையாக வெளிப்படுத்திய பாடல் இது.
எளிமையான வரிகள் - ஆனால் இதைப் பாட அவர் அழைத்தது யாரை?
கனராகப் பாடகர் என்று அப்போது அறியப்பட்ட,
கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி அவர்களை.

கண்ணன்-ராதை காதலாக இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம்,
ஒரு மாஸ்டர் பீஸ் பாடலைக் கேட்கும் திருப்தி கிடைக்கும்.
இதை ஜானகியும் அதே படத்தில் பாடியிருப்பார்.
பாலமுரளி பாடிய வெகு சில திரைப்பாடல்களில் இது தலைசிறந்த ஒன்று!
(வேறு பாடல்கள் என்னென்ன என்று சொல்லுங்க பார்க்கலாம்?)

ராஜா, இந்தப் பாட்டில் வரும் வாத்திய இசைக்கு, ஐரோப்பிய Baraoque பாரம்பரியத்தைப் பயன்படுத்தியதாகச் சொல்லுவார்கள்;
ரீதிகெளளை ராகம் ஒரு பக்கம், Baraoque மறு பக்கம்! ஆனால் ஒன்றை ஒன்று விழுங்காது,
பாடல் வரிகளும் விழுங்காது வந்து விழும் இனிய இசை!
ராஜாவின் இசை ஆய்வு (experiment) அப்போதே தொடங்கி விட்டது!

எல்லாம் சரி; பாடல் எதோ? - இதோ!
மாயனின் லீலையில் மயங்குது உலகம்! நாமும் மயங்குவோம்!
Radha%20Krsna
கண்கள் சொல்கின்ற கவிதை - உன் புன்னகை சொல்லாத அதிசயமா?

எஸ்.ஜானகி பாடுவது
பாலமுரளி கிருஷ்ணா பாடுவது


இந்தப் பதிவிலேயே கேட்க play button-ஐச் சொடுக்கவும்!

சின்னக் கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
சின்னக் கண்ணன் அழைக்கிறான்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்


கண்கள் சொல்கின்ற கவிதை
இளம்வயதில் எத்தனை கோடி
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை
(சின்ன கண்ணன்)

நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இதுதானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா
அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
(சின்ன கண்ணன்)படம்: கவிக்குயில்
இசை: இளையராஜா
குரல்: பாலமுரளி கிருஷ்ணா
வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ராகம்: ரீதி கெளளை

ஸ்ரீநிவாசன் என்ற அன்பர் முன்பு ஒரு பின்னூட்டத்தில் கேட்ட நேயர் விருப்பம்!

32 comments :

SP.VR.சுப்பையா said...

பாலமுரளி அவர்களின் அற்புதக் குரல் வளத்தில் இன்னுமொரு சிறப்பான பாடல் உண்டு மிஸ்டர்.கே.ஆர்.எஸ்.
பல்லவி, சரணம், ஆலாபனை என்று அசத்தியிருப்பார்

பாடல்: ஒரு நாள் போதுமா?
இன்றொரு நாள் போதுமா?

படம்: திருவிளையாடல்
இசை: திரையுலகில் அனைவராலும் மாமா என்றழைக்கப்பெற்ற திரு. கே.வி.மாகாதேவன்

ஷைலஜா said...

வெட்டிப்பயல் தட்டி எழுப்ப கண்ணபிரான்(ரவி) சுதாரித்து சின்ன கண்ணனை அழைத்து இங்கே கொண்டுவிட்டதற்கு நன்றி.இனிமையான பாடல்..
ஷைலஜா

Anonymous said...

பாடலை கேட்டததம் என் மனதில் தோன்றியது "beautiful" :)

செல்லி said...

அருமையான பாடல்.
பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் ஒரு தனி ரகம்.அவரின்
" எந்தரோ மஹாஹுபாவுலு" என்ற பஞ்சரத்னக் கிருதியை
என் பதிவில்
http://pirakeshpathi.blogspot.com/2007/02/3.html

கேட்டு மகிழுங்கள்.
நன்றி

தெனாலி said...

நான் பிறக்கும்போது இந்தப் பாடல் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தாம். அதனால், எனக்கு "கண்ணன்" என்று பேர் வைக்க முடிவு செய்து, பின் அதை கைவிட்டதாய் என் அம்மா சொல்வார்கள். இந்த பாட்டு எனக்கு பர்சனல் பேவரிட். தேடித்தந்ததற்க்கு நன்றி.

பாலராஜன்கீதா said...

1. கலைக்கோயில் - தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே (பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி)

2. நூல்வேலி - மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே

3. காமன் பண்டிகை - kalai nila aadinaaL

4. சாது மிரண்டால் - அருள்வாயே நீ அருள்வாயே

(மூன்றாம் நான்காம் பாடல்களை நான் கேட்டதில்லை)
நன்றி : http://www.dhool.com/sotd2/catlist.php?catid=14

வல்லிசிம்ஹன் said...

சின்னக் கண்ணன் அழகு. பாடல் இன்னும் அழகு.
இசையும் பாலமுரளியும் சொல்லவே வேண்டாம்.
இதமான பாடல்.
கலைக்கோயில் என்று ஒரு படம் வந்தது.அதிலும் தங்கரதம் என்ற பாடலில் பாலமுரளி கிருஷ்ணா உருகிப் பாடி இருப்பார்.
கண்ணபிரான் பதிவில்,சின்னக் கண்ணனி பாட கிருஷ்ணா வந்தது என்ன அதிசயமா?:-0)

எழில் said...

கண்ணன் படம் தெய்வீக அழகு!

நன்றி

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//SP.VR.சுப்பையா said...
பாலமுரளி அவர்களின் அற்புதக் குரல் வளத்தில் இன்னுமொரு சிறப்பான பாடல் உண்டு மிஸ்டர்.கே.ஆர்.எஸ்.
பல்லவி, சரணம், ஆலாபனை என்று அசத்தியிருப்பார்//

நன்றி சுப்பையா சார்.

//ஒரு நாள் போதுமா?
இன்றொரு நாள் போதுமா?//

அதே அதே! அந்தப் பாடலும் சூப்பர். திருவிளையாடல் படத்தில் ஏமநாதப் பாகவதரின் ஆணவத்தை அப்படியே பாடலில் வெளிப்படுத்தியிருப்பார்....

ராகங்களின் பெயரும் அதில் வரும்.
எனக்கு இணையாக -தர்பாரில்- எவரும் உண்டோ?
கலையாத -மோகனச்- சுவை தான் அன்றோ
என் இசை கேட்க எழுந்-தோடி- வருவார் அன்றோ..

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஷைலஜா said...
வெட்டிப்பயல் தட்டி எழுப்ப கண்ணபிரான்(ரவி) சுதாரித்து சின்ன கண்ணனை அழைத்து இங்கே கொண்டுவிட்டதற்கு//

நன்றிங்க, ஷைலஜா.
வெட்டிப்பயல், தட்டிப்பயல் ஆகி தட்டோ தட்டு என்று தட்டி விட்டார்...நானும் கொட்டோ கொட்டோ என்று கொட்டி விட்டேன். :-)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தூயா said...
பாடலை கேட்டததம் என் மனதில் தோன்றியது "beautiful" :) //

நன்றி தூயா.
உங்கள் profileஇல் உள்ள அழகிய பொம்மைப் படமும் beautiful!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//செல்லி said...
பாலமுரளி கிருஷ்ணாவின் குரல் ஒரு தனி ரகம்.அவரின்
" எந்தரோ மஹாஹுபாவுலு" என்ற பஞ்சரத்னக் கிருதியை
என் பதிவில்
http://pirakeshpathi.blogspot.com/2007/02/3.html
கேட்டு மகிழுங்கள்//

நன்றி செல்லி.
கேட்டேன் எந்தரோ-வை, பாலமுரளியின் கானத்தில்! அருமை.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//தெனாலி said...
நான் பிறக்கும்போது இந்தப் பாடல் ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருந்தாம். அதனால், எனக்கு "கண்ணன்" என்று பேர் வைக்க முடிவு செய்து//,

ஆகா...பிறக்கும் போதே கண்ணனைக் கேட்டு பிறந்தீர்களா...அருமை அருமை! வாழ்த்துக்கள்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பாலராஜன்கீதா said...
1. கலைக்கோயில் - தங்க ரதம் வந்தது வீதியிலே ஒரு தளிர்மேனி வந்தது தேரினிலே
2. நூல்வேலி - மௌனத்தில் விளையாடும் மனசாட்சியே
3. காமன் பண்டிகை - kalai nila aadinaaL
4. சாது மிரண்டால் - அருள்வாயே நீ அருள்வாயே//

நன்றி பாலராஜன்கீதா.
அருமையான தொகுப்பு கொடுத்திருக்கீங்க! "அருள்வாயே நீ அருள்வாயே" - dhool.com இல் கேட்டேன்...அருமை!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// வல்லிசிம்ஹன் said...
கலைக்கோயில் என்று ஒரு படம் வந்தது.அதிலும் தங்கரதம் என்ற பாடலில் பாலமுரளி கிருஷ்ணா உருகிப் பாடி இருப்பார்.//

நன்றி வல்லியம்மா... பாலராஜன் கீதா கொடுத்த சுட்டியில் பாருங்கள்...நீங்கள் சொல்லும் பாடல் உள்ளது.

//கண்ணபிரான் பதிவில்,சின்னக் கண்ணனி பாட கிருஷ்ணா வந்தது என்ன அதிசயமா?:-0)//

அதானே!
நானும் என் சின்னக் கண்ணனைக் காணச் செல்கிறேனே சென்னைக்கு! ஒரே ஆவலாக உள்ளது! சின்னிக் கிருஷ்ணனா...சென்னிக் கிருஷ்ணனா..சென்னைக் கிருஷ்ணனா...:-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//எழில் said...
கண்ணன் படம் தெய்வீக அழகு!//

நன்றி எழில்.
படம் krishna.com..
முன்பே கண்ணன் பாட்டில் இட்டிருந்தேன். அங்கு pic courtesy கொடுத்துள்ளேன்.

குமரன் (Kumaran) said...

அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்...
சின்ன கண்ணன் அழைக்கிறான்...
சின்ன கண்ணன் அழைக்கிறான்...

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குமரன்...

Sri Rangan said...

அற்புதமான பாடல்.இத்தகைய பாடல்களை எங்கே பதிவிறக்கஞ் செய்யலாம்?

எனக்கு இன்னொரு பாடலும் பிடிக்கும்.

கண்ணன் ஒரு கைக் குழந்தை கன்னம்(கண்கள்?)ப+ங்கவிதை...இப்பாடலையும் போடுங்களேன் கண்ண பிரான்.இவைகள் ராஜாவின் அற்புதமான பாடல்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி சங்கர்!
பால முரளி அவர்களின் குரலில் வந்த அருமையான பாடல். அது ஒரு காலம்.

சிறில் அலெக்ஸ் said...

எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று..
அப்பப்ப பாத்ரூமில் பாடும் பாட்ல்களிலும் ஒன்று.

:))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//குமரன் (Kumaran) said...
சின்ன கண்ணன் அழைக்கிறான்...
சின்ன கண்ணன் அழைக்கிறான்...

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குமரன்...//

ஆகா, கண்ணன் கூவினால் குமரன் வருவாரா? :-)
புரிகிறது புரிகிறது!
கண்ணா, தேன் மதுரக் குரலில் பலமாகக் கூவி அழைப்பாயாக!
வேலுடன் குமரன், கண்ணன் பணி செய்ய ஒடோடி வரட்டும்! :-)

சரி தானே ஜிரா?
கண்ணன் பணியில் குமரனுக்கு மகிழ்ச்சி தானே?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Sri Rangan said...
அற்புதமான பாடல்.இத்தகைய பாடல்களை எங்கே பதிவிறக்கஞ் செய்யலாம்?//

வாங்க ஸ்ரீரங்கன்.
அரங்கனின் பெயர் கொண்டவருக்குக் கண்ணன் பாட்டு பிடிக்காமல் போகுமா...தரவிறக்கம் coolgoose.com, mohankumars.com இல் செய்ய முடியும்.

//எனக்கு இன்னொரு பாடலும் பிடிக்கும்.
கண்ணன் ஒரு கைக் குழந்தை கன்னம்(கண்கள்?)ப+ங்கவிதை...இப்பாடலையும் போடுங்களேன் கண்ண பிரான்.//

நீங்கள் கேட்கும் நேரம் பாருங்கள், கரெக்டாக போட்டு விட்டோம், இப்ப தான் ஒரு மாசத்துக்கு முந்தி...
இதோ சுட்டி...

http://kannansongs.blogspot.com/2007/01/24.html

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவி சங்கர்!
பால முரளி அவர்களின் குரலில் வந்த அருமையான பாடல். அது ஒரு காலம்.//

யோகன் அண்ணா, வாங்க! நலமா?
ஒரு மாதம் gap ஆகி விட்டது.
இருங்க, உங்க வலைப்பக்கம் வருகிறேன்!

ஆமாங்கண்ணா, பாலமுரளியின் மத்த பாடல்களையும் பாலராஜன் கீதா கொடுத்துள்ளார் பாருங்க! உங்களுக்குப் பிடிக்கும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சிறில் அலெக்ஸ் said...
எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று..
அப்பப்ப பாத்ரூமில் பாடும் பாட்ல்களிலும் ஒன்று.//

வாங்க சிறில்.
பாத்ரூமில் பாடும் போது கண்ணன் வந்து விட்டால், என்ன செய்வீங்க? :-))
கண்ணனிடம் ஓடி ஓளியக் கூட முடியாதே!

Sri Rangan said...

சுட்டிகளுக்கு நன்றி,கண்ணபிரான்.

பாடல்களைத் பதிவிறக்கஞ் செய்வதற்குப் போகிறேன் நன்றி.கண்ணனொரு கைக் குழந்தைiயும் கேட்கப் போகிறேன்.

அன்புடன்
ஸ்ரீரங்கன்.

நா.கண்ணன் said...

பாலமுரளி என்றால் அவர்தான்! அவருக்கு இணை அவரே! என்ன பாவம், என்ன உச்சரிப்பு! சூப்பர். என் நேயர் விருப்பம் ஒன்றுண்டு. வெஸ்டர்ன், கர்நாடக இசை குழையும் பாடல் "ராதை மனதில், ராதை மனதில், என்ன ரகசியமோ?" ஜோதிகா நடிச்ச படம், த்ரில்லர். பேரு மறந்து போச்சு. வித்யாசாகரின் மேதமை விளங்கும் பாடல்.

பாலராஜன்கீதா said...

//
நா.கண்ணன் said...
என் நேயர் விருப்பம் ஒன்றுண்டு. வெஸ்டர்ன், கர்நாடக இசை குழையும் பாடல் "ராதை மனதில், ராதை மனதில், என்ன ரகசியமோ?" ஜோதிகா நடிச்ச படம், த்ரில்லர். பேரு மறந்து போச்சு. வித்யாசாகரின் மேதமை விளங்கும் பாடல். //

http://www.musicindiaonline.com/lr/26/5206/

Movie Name : Snehithiye (2000)
Singer : Chithra K S, Sangeetha Sajith, Sujatha
Music Director : Raghunath Seth
Lyrics : Vairamuthu
Year : 2000

பாலராஜன்கீதா said...

//
நா.கண்ணன் said
என் நேயர் விருப்பம் ஒன்றுண்டு. வெஸ்டர்ன், கர்நாடக இசை குழையும் பாடல் "ராதை மனதில், ராதை மனதில், என்ன ரகசியமோ?" ஜோதிகா நடிச்ச படம், த்ரில்லர். பேரு மறந்து போச்சு. வித்யாசாகரின் மேதமை //

அந்த இனிய பாடலின் சுட்டி :

http://music.cooltoad.com/music/song.php?id=225590

என் முந்தைய பின்னூட்டம் சரியா தவறா என்று தெரியவில்லை :-(((

மலைநாடான் said...

ரவி!

இலங்கை வானொலியில் அநேக காலைகளில் ஒலிபரப்பான பாடல். பால.முரளி, சுவிஸ் வந்தபோது, நேரடியாக விருப்பம் கேட்டு, நிகழ்ச்சியில் பாடினார் முன்னர் ஒரு பதிவில் நான் இந்தப்பாடலை உங்களிடம் கேட்டதாக ஞாபகம். பாடலுக்கு நன்றி.

கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் குமரன் பாடலும் மிக நல்ல பாடல்.பேடலாமே:)

நா.கண்ணன் கேட்ட ராதை மனமே பாடல் 'சிநேகிதி' படம். அதுவம் நல்லதோர் பாடல் என்பதிலும் பார்க்க சிறந்த இசைக்கோப்பு எனச் சொல்லலாம்.

நன்றி

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நா.கண்ணன் said...
என் நேயர் விருப்பம் ஒன்றுண்டு. வெஸ்டர்ன், கர்நாடக இசை குழையும் பாடல் "ராதை மனதில், ராதை மனதில், என்ன ரகசியமோ?" //

கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா!
பாருங்க கண்ணன் சார், நீங்க கேட்டதும் கொடுத்துள்ளார் நம்ம பாலராஜன் கீதா.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பாலராஜன்கீதா said...
என் முந்தைய பின்னூட்டம் சரியா தவறா என்று தெரியவில்லை :-((( //

ஏன் பாலராஜன்கீதா?
சரியாகத் தானே கொடுத்துள்ளீர்கள்!

முதல் பின்னூட்டம் பாட்டின் வரிகள் கொடுத்திருக்கீங்க - பார்த்தேன், அருமையா இருக்கு!
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பின்னர் பெயர்த்துக் கொள்ளலாம்

இரண்டாம் பின்னூட்டம் ஒலி வடிவம்..வீட்டுக்குச் சென்ற பின் தரவிறக்கம் செய்து கொள்கிறேன்.

மிக்க நன்றி!
உங்களுக்குத் தனி மடல் ஒன்றும் அனுப்புகிறேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மலைநாடான் said...
இலங்கை வானொலியில் அநேக காலைகளில் ஒலிபரப்பான பாடல். பால.முரளி, சுவிஸ் வந்தபோது, நேரடியாக விருப்பம் கேட்டு, நிகழ்ச்சியில் பாடினார்//

இது போன்ற பாடல்களை நேரடியாக மேடைகளில் பாடக் கேட்பதும் ஒரு தனி சுகம் தான்!
விவித பாரதியிலும் (சென்னை வானொலி) இதை முன்பு அடிக்கடி ஒலி பரப்புவார்கள்!

//முன்னர் ஒரு பதிவில் நான் இந்தப்பாடலை உங்களிடம் கேட்டதாக ஞாபகம். பாடலுக்கு நன்றி.//

ஆமாம் ஐயா
நீங்களும் கேட்டு இருந்தீர்கள்
உங்களுக்குச் சற்று முன் ஸ்ரீநிவாசன் சாரும் கேட்டிருந்தார்.

நேயர் விருப்பம் தானே கண்ணனின் விருப்பம்! :-)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP