Wednesday, January 10, 2007

31. காற்று வெளியிடைக் கண்ணம்மா!

மகாகவியின் பாடலை, ஜி.ராமநாதனின் இசையில் அமுதமாகக் கேட்க, இங்கே சொடுக்கவும்!
பிபிசி வானொலியில் இந்தப் பாடலைப் பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது! இசைஞானி இளையராஜா பேசுகிறார், இங்கே. (Real Player)


Radha%20Krsna

காற்று வெளியிடைக் கண்ணம்மா - நின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் - அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து


மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்

(காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்


வாயினிலே அமு தூறுதே - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே

கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம் - கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - இந்தக்

(காற்று)

மார்கழி 27 - கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா - இருபத்தேழாம் பாமாலை


பாடல்: காற்று வெளியிடைக் கண்ணம்மா
படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்
குரல்: பி.பி.ஸ்ரீனிவாஸ் - பி.சுசீலா
இசை: ஜி.ராமநாதன்

32 comments :

வடுவூர் குமார் said...

"அமுதும் & நிலவும்"எல்லா ஆண்களையும் வீழ்த்திவிடும் போல்!!
:-))

SP.VR. SUBBIAH said...

//நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலே - என்றன்//

அற்புதமான வரிகள். அதிலும் பி.பி ஸ்ரீனிவாசரின் தேனான குரலில் - கேட்கும் போது மனது எங்கேயோ போய்விடும்!

பதிவில் தந்தமைக்கு நன்றி!

சேதுக்கரசி said...

//அற்புதமான வரிகள். அதிலும் பி.பி ஸ்ரீனிவாசரின் தேனான குரலில் - கேட்கும் போது மனது எங்கேயோ போய்விடும்!//

ரிப்பீட்டு! :-)

இலவசக்கொத்தனார் said...

எமது ஆட்சியில் பாலும் தேனும் ஆறாய் ஓடுகிறதா என பழங்கால மன்னர்கள் கேட்பார்களாம். அப்பொழுது ஓடியதே என்னவோ தெரியாது. ஆனால் இந்த மார்கழி மாதம் என் காதில் தேன் பாய்ந்து கொண்டே இருக்கிறது.

நன்றி கே.ஆர்.எஸ். !!

கோவி.கண்ணன் [GK] said...

பாடல் காட்சியும் நினைவுக்கு வந்துவிட்டது. இனிமையான பாடல்!
படமும் சூப்பர் !

குமரன் (Kumaran) said...

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னை
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்று அனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய்

பகை கொண்டு உன்னுடன் கூடாதவர்களை எல்லாம் வெல்லும் பெருமை உடைய கோவிந்தனே! உன்னைப் பாடி விருப்பங்களை எல்லாம் நாங்கள் பெற்று அதனால் பெறும் சம்மானம் என்னவென்றால் நாடு நகரங்களெல்லாம் புகழும் படியான நல்ல வளையல்கள், தோள்வளைகள், தோடுகள், செவியின் மேல் அணியும் செவிப்பூக்கள், கால்களில் அணியும் நகைகள் போன்ற பலவிதமான அணிகலன்கள் நாங்கள் அணிவோம். புத்தாடை உடுப்போம். பின்னர் முழங்கை வரை வழியும் நெய்யினால் மூடபபட்ட பாற்சோற்றை எல்லாரும் கூடியிருந்து மனம் குளிர்ந்து உண்போம்.

ஷைலஜா said...

//உயிர்த்
தீயினிலே வளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! - //

உயிர்த் தீயாம் !அதில் வளரும் ஜோதியாம்! ஆஹா!
கவிதை படைத்த பாரதிக்குக் கலைவாணியின் அருள் இல்லாவிடில் இப்படியெல்லாம் எழுத சாத்தியமே இல்லை. 'தெளிவுறவே மொழிந்திடுத்ல்,சிந்திப்பார்க்கே களிவளர உள்ளத்தில் ஆனந்தக்கனவுபல காட்டல் 'என்றவன் அல்லவா அவன்? படைத்தவனுக்கு என்றும் மனம் நெகிழ்ந்த நன்றி.

பாடலில் காதலின் ஆழம் பிரமிக்கவைக்கிறது.
சாதாரண காற்றா என்ன தென்றல் காற்றாய் என்றன் செவிஅருகே சாமரம் வீசும் 'எவர்க்ரீன் சாங் 'இது! இங்கு யாருக்கு நன்றி சொல்ல இசை அமைத்த ராமநாதனுக்கா
பாடிய பிபிஎஸ் பிஎஸ் இருவருக்கா நடித்தபோது கண்ணம்மாவாகவே மாறி நாணத்தில்'ம்ம்' என்று சொல்லிய சாவித்திரிக்கா அல்லது நான் ஏதோ பேச்சுவாக்கில் சொன்னதையும் அன்பாய் ஏற்று உடனேஇங்கு பாடலை அளித்த ரவிசங்கருக்கா?
ஷைலஜா

Anonymous said...

பாடலும் படமும் சூப்பர்!
பாடலின் ராகம் - மோஹனம் என்று நினக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

பாடலைப் பற்றிச் சொல்வதென்றால்
பாரதியை ஏதாவது கமெண்ட்
செய்த மாதிரி.
ஸ்ரீனிவாஸ் சாரும், சுசிலாவும் இழைந்த பாடல். ஜெமினி கண்ணம்மா என்று கூப்பிட,சாவித்திரி ம்ம் என்று பதில் சொல்ல
கண்ணம்மா பாடல் உருக்கம்.விண்ணவனாகப் புரிபவள்.

சேதுக்கரசி said...

அமுதூற்றினை ஒத்த இதழ்களும்... இதழ்களும்...
என்னுமிடத்தில் பிபிஎஸ் குரல்... அடடா!

Anonymous said...

/அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும் - நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும் - பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! //
ரவிசங்கர்!
பாரதியார் சொல்லை உணர்ந்து கோர்த்துள்ளார். அருமையான இசையும் குரல் வளத்தாலும் சிறந்த பாடல். எப்போது கேட்டாலும் "அமுதை ஒத்ததே"
யோகன் பாரிஸ்

Anonymous said...

ரவி
இந்த பாரதியின் பாடலையும் கண்ணன் பாட்டு பதிவில் போடலாம்.

கண்ணன் என் காதலன் - 1
செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம் சிருங்கார ரஸம்

"தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்"

Thoondir Puzhuvinai
Artist : Nityasree
Ragam : Ragamalika
Composer : Subramania Bharathi
Album : Bharathiar Songs
http://www.musicindiaonline.com/p/x/S4y2.iOnht.As1NMvHdW/

மு.கார்த்திகேயன் said...

மார்கழி மாதற்கேற்ற அருமையான பாடல் ரவி.. கேட்க கேட்க தெவிட்டாத உள்ளத்திற்கு இன்பத்தை தருவது இந்த பாடல் ரவி

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// வடுவூர் குமார் said...
"அமுதும் & நிலவும்"எல்லா ஆண்களையும் வீழ்த்திவிடும் போல்!!
:-))
//

குமார் சார்! அதே அதே! :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SP.VR.சுப்பையா said...
அதிலும் பி.பி ஸ்ரீனிவாசரின் தேனான குரலில் - கேட்கும் போது மனது எங்கேயோ போய்விடும்!//

நன்றி சுப்பையா சார்!
கண்ணன் பாட்டு வலைப்பூவில் கண்ணதாசனின் பாடல்கள் இட இனி எங்கேயும் தேட வேண்டாம்; தங்கள் பதிவிற்கு வந்து விடுகிறோம்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சேதுக்கரசி said...
//அற்புதமான வரிகள். அதிலும் பி.பி ஸ்ரீனிவாசரின் தேனான குரலில் - கேட்கும் போது மனது எங்கேயோ போய்விடும்!//

ரிப்பீட்டு! :-)//

நன்றி சேதுக்கரசி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
எமது ஆட்சியில் பாலும் தேனும் ஆறாய் ஓடுகிறதா என பழங்கால மன்னர்கள் கேட்பார்களாம். அப்பொழுது ஓடியதே என்னவோ தெரியாது. ஆனால் இந்த மார்கழி மாதம் என் காதில் தேன் பாய்ந்து கொண்டே இருக்கிறது.//

ஆகா...
கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொன்னால்
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே!

நன்றி கொத்ஸ்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// கோவி.கண்ணன் [GK] said...
பாடல் காட்சியும் நினைவுக்கு வந்துவிட்டது. இனிமையான பாடல்!
படமும் சூப்பர் !//

நன்றி GK ஐயா!
கண்ணன் கண்ணம்மாவிற்குத் தாம்பூலம் ஊட்டி விடுகிறான் அல்லவா? தெரியும் உங்களுக்குப் பிடிக்கும் என்று! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா//

கூடாரவல்லி வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
முழங்கையில் நெய் வழிய யாரெல்லாம் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்டீங்க? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார//

இரண்டாம் பாட்டில் சொன்ன நெய் உண்ணோம், பால் உண்ணோம் விரதம் இன்றோடு முடிவடைகிறது!

அதனால் தான் அதன் பின்னே பால் சோறு, மூட நெய் பெய்து முழங்கை வழிவார என்று பாடுகிறாள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
//உயிர்த் தீயினிலே வளர் சோதியே - என்றன் சிந்தனையே, என்றன் சித்தமே! - //
உயிர்த் தீயாம் !அதில் வளரும் ஜோதியாம்! ஆஹா!//

இது ஆழ்வார் சிந்தனையும் கூட ஷைலஜா! தீயும் ஓளியும் என்றும் பிரியுமோ? தீக்குள் விரலை வைத்தால் என்று பாடியதும் இதனால் தானோ!

//நான் ஏதோ பேச்சுவாக்கில் சொன்னதையும் அன்பாய் ஏற்று உடனே இங்கு பாடலை அளித்த ரவிசங்கருக்கா?//

நீங்க சொன்ன அன்றே பாட்டு ஏற்பாடு ஆகி விட்டது! திகட்டக் கூடிய பாட்டா இது!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
பாடலும் படமும் சூப்பர்!
பாடலின் ராகம் - மோஹனம் என்று நினக்கிறேன்.//

நன்றி ஜீவா!
மோஹனமே தான்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
ஸ்ரீனிவாஸ் சாரும், சுசிலாவும் இழைந்த பாடல். ஜெமினி கண்ணம்மா என்று கூப்பிட,சாவித்திரி ம்ம் என்று பதில் சொல்ல கண்ணம்மா பாடல் உருக்கம்.//

பாடலின் சிறப்பம்சமே அங்கு தான் வல்லியம்மா! ஜி ராமனாதன் அருமையாக அமைத்த பாடல்!

பாரதியார், ஆண் பாடுவதாகவே பாட்டை அமைத்தாலும்,
ஜி ராமனாதன் இருவரும் பாடுவதாக வைத்து, இன்னும் சுவை கூட்டி விட்டார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//சேதுக்கரசி said...
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்... இதழ்களும்...
என்னுமிடத்தில் பிபிஎஸ் குரல்... அடடா!//

நன்றி சேதுக்கரசி!
கேட்கும் போது இதழ்களும்,...இதழ் கள்ளும் என்பது போல ஒலிக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//johan -paris said...
பாரதியார் சொல்லை உணர்ந்து கோர்த்துள்ளார். அருமையான இசையும் குரல் வளத்தாலும் சிறந்த பாடல். எப்போது கேட்டாலும் "அமுதை ஒத்ததே"

நன்றி யோகன் அண்ணா!
செஞ்சொற் கவிஞர் பாரதி, காதல் பாடல்கள் சினிமாவில் எழுதி இருந்தால் அவ்வளவு தான்! தமிழ்நாடே ஒரு கலங்கு கலங்கி இருக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// செல்லி said...
ரவி
இந்த பாரதியின் பாடலையும் கண்ணன் பாட்டு பதிவில் போடலாம்.

தூண்டிற் புழுவினைப்போல்-வெளியே
சுடர் விளக்கினைப் போல்"
//

நன்றி செல்லி!
செஞ்சுருட்டி ராகம் அருமை! விரைவில் இட்டு விடலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மு.கார்த்திகேயன் said...
மார்கழி மாதற்கேற்ற அருமையான பாடல் ரவி.. கேட்க கேட்க தெவிட்டாத உள்ளத்திற்கு இன்பத்தை தருவது இந்த பாடல் ரவி//

நன்றி கார்த்தி. உங்களை மு.கா என்று யாராச்சும் அழைத்துள்ளார்களா? :-))

ஞானவெட்டியான் said...

நம்ம ராமனாதன் இசையில் மயங்கி இருக்கிறேன். தொல்லை செய்யாதே! கண்ணா!!!

Anonymous said...

ரவி
கீழ்வரும் பாரதியின் பாடல்களையும் கண்ணன் பாட்டு பதிவில் போடலாம்.
1. கண்ணம்மா - என் காதலி - 1
(காட்சி வியப்பு)
சுட்டும் விழிச்சுடர் தான், - கண்ணம்மா!
சூரிய சந்திர ரோ?
வட்டக் கரிய விழி, - கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?

Suttum Vizhi [ Lyrics ]
Artist : Bombay Jayashree
Ragam : Bhairavi
Thalam : Aadi
Composer : Subramanya Bharathi
Album : Subramanya Bharathi Songs
http://www.musicindiaonline.com/p/x/dJp2PUpk4S.As1NMvHdW/
_______________________________________________

Sutum Vizhi - Hariharan [ Lyrics ]
Artist : Bharathiar Songs
Composer : Subramanya Bharathi
Album : Various Artists
http://www.musicindiaonline.com/p/x/t4C2N7Gnt9.As1NMvHdW/
_______________________________________
Suttum Vizhi [ Lyrics ]
Artist : Bharathiar Songs
Composer : Subramanya Bharathi
Album : Maharajapuram Santhanam

http://www.musicindiaonline.com/p/x/_qx2Y9EBIS.As1NMvHdW/

Anonymous said...

ரவி
இன்னும் ஒரு பாடல்
கண்ணன் - என் - காதலன் -3
(காட்டிலே தேடுதல்)
திக்குத் தெரியாத காட்டில் - உனைத்
தேடித் தேடி இளைத்தேனே.


Thikku Theriyatha Kattil
Artist : Bombay Sisters
Ragam : Raagamaalika
Thalam : Aadi
Composer : Subramanya Bharathi
http://www.musicindiaonline.com/p/x/74K24FUJn9.As1NMvHdW/
http://www.tamilsongs.net/page/player.cgi?65


Thikku Theriyatha Kattil
Artist : Maharajapuram Santhanam
Ragam : Raagamaalika
Thalam : Aadi
Composer : Subramanya Bharathi
http://www.musicindiaonline.com/p/x/74K24FUJn9.As1NMvHdW/

Dikkutheriyatha Kattil [ Lyrics ]
Artist : Tiruchur V Ramachandran
Ragam : Raagamaalika
Thalam : Aadi
http://www.musicindiaonline.com/p/x/vqX2wY2MyS.As1NMvHdW/

Anonymous said...

கண்ணபிரான்

நல்ல சேவை. நன்றி. இந்தக் காற்று "வெளியிடைக் கண்ணம்மா" நமக்கெல்ல்லாம் கப்பலோட்டிய தமிழன் படம் மூலம்தான் பிரபலம். இப்பொழுது இதே பாடலை ஒரு புதியா மெட்டில் மோகன் சித்தாரா என்ற இசையமைப்பாளர் போட்டிரூக்கிறார். அற்புதமாக இருக்கிறது. தன்மாத்திரா என்ற அருமையான மலையாளப் படத்தில் மோகன்லால் பாடுவதாக வருகிறது. ஆம் மலையாளப் படத்தில் தமிழ் பாடல்தான், அதிலும் இந்தப் பாடல் வரிகளுக்கும் படத்தில் ஒரு முக்கியமான பங்கு உள்ளது. முடிந்தால் படத்தில் இந்தப் பாடலைப் பாருங்கள். தன்மாத்ரா படத்தில் வரும் காற்று வெளியிடைக் கண்ணம்மா பாடலை இங்கு கேளுங்கள். கடைசி லிங்க்.கண்ணம்மா என்ற தலைப்பில் இருக்கும் பாடல், உன்னி, ஷீலா மணி, சுனில், விது பாடியது.

http://www.raaga.com/channels/malayalam/movie/M0000952.html

கேட்டு விட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.அன்பன்
ச.திருமலை

மாசிலா said...

அலைபாயும் மனதை அமைதிப்படுத்தும் அற்புத ராகம்.
நெகிழ வைக்கும் பாரதியின் வரிகள்.
அருமையான குரல்கள்.
போதைதான் மிஞ்சியது.

பகிர்ந்தமைக்கு நன்றி
kannabiran, RAVI SHANKAR (KRS)

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP