Saturday, January 06, 2007

27. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல!

வெண்ணிற ஆடை படத்தில், கவியரசர் கண்ணதாசன் பாட்டின் ஒவ்வொரு அடியிலும் அடுக்குத் தொடரால் அடுக்குகிறார்!
அதை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில், பி.சுசீலா பாடி மிடுக்குகிறார்!
பாடலைக் கேட்க இங்கு சொடுக்கவும்!
அதே பாடலை Re-Mix இல் கேட்க இங்கு சொடுக்கவும்!

பாடலை வாய்விட்டுப் பாடினாலோ, படித்தாலோ, ஊஞ்சலில் முன்னும் பின்னும் போய் வருவது போலவே இருக்கும்; அது தான் நம் கவிஞரின் அடுக்குத் தொடர் effect!கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல
கல்லும் முள்ளும் பூவாய் மாறும் மெல்ல மெல்ல
எண்ணம் என்னும் ஆசைப் படகு செல்லச் செல்ல
வெள்ளம் பெருகும் பெண்மை உள்ளம் துள்ளத் துள்ள

(கண்ணன்)

தென்றல் இன்று பாடும் பாடல் என்ன என்ன
சின்னக் கிளிகள் சொல்லும் கதைகள் என்ன என்ன
கண்ணும் நெஞ்சும் ஒன்றுக்கொன்று பின்னப் பின்ன
என்னைத் துன்பம் செய்யும் எண்ணம் என்ன என்ன

(கண்ணன்)

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்

(கண்ணன்)

கண்ணன் என்று பெயரில் உள்ளவர்கள் எல்லாருக்கும் இந்தப் பாடலை dedicate செய்யலாமா? ஓ, இதெல்லாம் சூரியன் FM இல் மட்டும் தான்
செய்யணும் இல்லையா! :-)மார்கழி 23 - மாரி மலை முழைஞ்சில் - இருபத்து மூன்றாம் பாமாலை

படம்: வெண்ணிற ஆடை
எழுதியவர்: கவியரசர் கண்ணதாசன்
பாடுபவர்: பி.சுசீலா
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி

21 comments :

ஷைலஜா said...

//அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்!//

அடடா !காதலில் பெண்ணின் மன நிலைமையை அப்படியே வடித்திருக்கிறார் கண்ண தாசன் அவளுக்கு காதலன் மீதுதான் எத்தனை அன்பு!கல்லும் முள்ளும் பூவாய்மாறுமாம் அவன் பேரைச்சொன்னால்! சுசீலாவின் குரலா அல்லது தேன் கிண்ணம் ஏதும் கவிழ்ந்துவிட்டதா?:)
ஷைலஜா

VSK said...

!ஒவ்வொரு கோபியரின் மனநிலையையும் அப்படியே நேரில் பார்த்தது போல அமைந்திருப்பதே இப்பாடலின் சிறப்பு!

ஒரு ஆங்கில 'ராப்' பாடலுக்கு இணையாக எழுதியிருக்கும் கவியரசர் திறனுக்கு மகுடம் சூட்டும் பாடல்!

VSK said...
This comment has been removed by a blog administrator.
VSK said...

இதை எழுதியது 60-களில் என்பது குறிப்பிடத்தக்கது!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஷைலஜா said...
கல்லும் முள்ளும் பூவாய்மாறுமாம் அவன் பேரைச்சொன்னால்! சுசீலாவின் குரலா அல்லது தேன் கிண்ணம் ஏதும் கவிழ்ந்துவிட்டதா?:)//

நன்றி ஷைலஜா!
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று சுவாமி ஐயப்பன் பக்தர்கள் பாடுவார்கள்!
ஆனால் இவளுக்கோ, கல்லும் முள்ளும் பூவாகவே மாறி விட்டது!

எல்லாம் காதல் படுத்தும் பாடா? இல்லை கண்ணன் படுத்தும் பாடா??

நாளைய பாட்டும் உங்களுக்குப் பிடிக்கும் பாருங்க! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஒவ்வொரு கோபியரின் மனநிலையையும் அப்படியே நேரில் பார்த்தது போல அமைந்திருப்பதே இப்பாடலின் சிறப்பு!//

ஆமாங்க SK ஐயா! ஒருத்திக்குத் தென்றல் பாட்டு, இன்னொருத்திக்கோ கிளிக் கதை! இப்படி ஒவ்வொரு மனநிலை!!

//ஒரு ஆங்கில 'ராப்' பாடலுக்கு இணையாக எழுதியிருக்கும் கவியரசர் திறனுக்கு மகுடம் சூட்டும் பாடல்!//

ஆகா, இது தான் உண்மையான பேட்டை ராப்? :-)
சூப்பர்! பாட்டும் Rap (Tap) Dance போலத் தான் இருக்கு!

குமரன் (Kumaran) said...

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமாபோலே நீ பூவைப்பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்து அருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்

மழை பொழிகின்ற போது ம்லைக்குகையில் அசையாமல் கிடந்து உறங்கும் சிறப்புள்ள சிங்கம், மழை நின்ற போது விழித்தெழுந்து தன் கண்களைத் தீ போல் விழித்து பிடரி மயிர் சிலிர்க்க எந்தத் தடை இருந்தாலும் அவற்றை எல்லாம் பேர்ந்து உதறி உடலை நிமிர்த்தி கர்ஜனை செய்து புறப்பட்டு வெளியே வருவதைப் போல பூவைப்பூ வண்ணனே நீ உன் இல்லத்திலிருந்து கிளம்பி அப்படியே வந்து அருளி அழகுடைய சிறந்த சிங்காசனத்தில் அமர்ந்து நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டு செய்ய வேண்டியதைச் சிந்தித்து அருள வேண்டும்.

SP.VR. SUBBIAH said...

கண்ணனின் மகுடத்தில் கவியரசர் வைத்த
பல மயிலிறகுகளில் இதுவும் ஒன்று

எதுகையை வழக்கம் போல வரிகளின் இறுதியில் வைத்து என்ன சொல் விளையாட்டு விளையாண்டிருக்கிறார் பார்த்தீர்களா கே.ஆர்.எஸ்?

SP.VR. SUBBIAH said...

//ஒரு ஆங்கில 'ராப்' பாடலுக்கு இணையாக எழுதியிருக்கும் கவியரசர் திறனுக்கு மகுடம் சூட்டும் பாடல்!//

எஸ்.கே அய்யா சொன்னது சரிதான்.
கவியரசர் மட்டும் யு.எஸ் ஸில் பிறந்திருந்தால் அவரை அடிக்க இன்று வரை ஒரு ராப்' அல்லது பாப்' பாட்டு எழுதுபவர் வந்திருக்க முடியாது!

SP.VR. SUBBIAH said...

//சுசீலாவின் குரலா அல்லது தேன் கிண்ணம் ஏதும் கவிழ்ந்துவிட்டதா?:)//

சகோதரி ஷைலஜா அவர்கள் சொன்னது போல சுசிலா அவர்களின் குரல்தான் எத்தனை இனிமை!

பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவித் தேனில் விழுந்தது என்பார்கள்.

அப்படிக் கவியரசரின் சுவைமிகுந்த பழங்களெல்லாம், விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோர் வைத்திருந்த
பசும் பாலுடன் கலந்ததோடு, சுசிலா அவர்களின் தேனினும் இனிய குரலோடு கலந்து நம்க்குக் கிடைத்தது -- தமிழர்களாகிய நாம் பெற்ற பெரும் பேறுதான்

வல்லிசிம்ஹன் said...

''அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம்.''
அநேகமாக எல்லப் பெண்களின் மனதியும் இந்தப் பாடல் தொற்றிக் கொண்டகாலம் 1965.
ஊஞ்சலைச் சொன்னது அருமை.
சுசீலா அம்மாவின் குரல் எத்தனை மேடு பள்ளங்களில் வழுக்கிச் செல்லுகிறது.
ஒரு தேன் தாரை சுற்றி வளைந்து
தவழ்ந்து
நெஞ்சில் இறங்கும்.
நன்றி ரவி.

வல்லிசிம்ஹன் said...

குமரன்,மலைமுழைஞ்சிலில் இருந்து சிங்கம் கிளம்பி விட்டது.
இனி சிம்மாசானத்தில் அமர வேண்டும்.
அருள் பாலிக்க வேண்டும்.
எங்கள் நரசிம்மனைக் கண்ணனாக்கிப் பார்க்கிறாள்
ஆண்டாள்.
அவனும் இவனும் ஒன்றுதானே.

ராகவசிம்மத்திற்குப் பிறகு,கிருஷ்ணசிம்ஹம்.
சோம்பல் முறித்துப் புறப்படும் சிம்மம் முதலில் கர்ஜிக்கும் இல்லையா. முழங்கிப் புறப்படும் கண்ணனைப் பாடுவோம்.

Anonymous said...

//கண்ணன் என்று பெயரில் உள்ளவர்கள் எல்லாருக்கும் இந்தப் பாடலை dedicate செய்யலாமா?//

ஆகா! நன்றி!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//SP.VR.சுப்பையா said...
எதுகையை வழக்கம் போல வரிகளின் இறுதியில் வைத்து என்ன சொல் விளையாட்டு விளையாண்டிருக்கிறார் பார்த்தீர்களா கே.ஆர்.எஸ்? //

ஆமாங்க வாத்தியார் ஐயா, கவியரசருக்கு மிகவும் பிடித்த விளையாட்டு ஆயிற்றே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வல்லிசிம்ஹன் said...
அநேகமாக எல்லப் பெண்களின் மனதியும் இந்தப் பாடல் தொற்றிக் கொண்டகாலம் 1965.
ஊஞ்சலைச் சொன்னது அருமை.//

நன்றி வல்லியம்மா. ஓ இது அந்தக் காலப் பெண்களின் கனவுப் பாடலா? :-)

பினாத்தல் சுரேஷ் said...

KRS, நம்ம பக்கம் வந்து கலாய்ச்சலை அக்னாலட்ஜ் பண்றது;-)

சாத்வீகன் said...

மற்றுமொரு திரைப்பாடல்... கண்ணன் பாட்டு பதிவில் பெருமளவு திரைப்பாடல்கள் தான் அல்லவா :))

தி. ரா. ச.(T.R.C.) said...

கண்ணனை கண்ணதாசனைத் காட்டிலும் வேறு யார் அனுபவிக்க முடியும். நன்றி

Anonymous said...

ரவிசங்கர்!
கண்ணனைப்பற்றியும் காதலைப் பற்றியும் எழுத நம்ம கவியரசர் தான் ! ஏனையோர் பின்னேதான்!
யோகன் பாரிஸ்

rahini said...

raumai arumai thodarugga eluthuga ennum

kaviri said...

அது ஒரு இனிய மாலைப்பொழுது.. (1992) சைதைப் பகுதியில் உள்ள அரசு அலுவலர் குடியிருப்பில்.. இலக்கியச் சரணாலயம்.. கவிஞர் இளந்தேவன் அவர்களின் இல்லமாய் திகழ்ந்தது. தாய்ப்பறவையை நாடிச் செல்லும் விதமாய், காகிதத்தில் தூரிகைப் பதித்தவர்கள் - கவிதையெனும் காகிதக் கப்பலைச் சிறுவர்கள் போல் செலுத்தத் தெரிந்தவர்கள்... கலங்கரை விளக்கம் தேடிப் போவதைப் போல் எந்தன் கால்களும் கவிஞர் இளந்தேவன் இல்லம்நோக்கி..

தமிழர்கள் வீடுகளில்.. திண்ணைகள் இருக்கும். அந்தத் திண்ணைகளில் அமர்ந்து பேசும் பேச்சுக்கு திண்ணைப்பேச்சு என்று பெயர். ஆனால், இளந்தேவன் அவர்களின் இல்ல நுழைவில் இருபுறமும் எழில்மிகு செடிகொடிகள்.. அதில் ஒரு பக்கம்.. நிலா முற்றமென இலக்கிய ஆர்வலர்களின் குழுமம் மேடையேதுமில்லாமலே கருத்தரங்கம் நடந்தது போலிருந்தது. நினைவில் அது இன்றும் பசுமையாக நிற்கிறது! கவிஞர் பேராசிரியர் வ.வே.சுப்பிரமணியன் அவர்களின் உரையில் குறிப்பிட்டதை மறக்க முடியவில்லை.

வெட்கம், நாணம் இவை இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று பேராசிரியப் பெருமக்கள்.. ஆராய்ச்சியாளர்கள்.. தமிழ்த்துறைத்தலைவர்கள்.. பலரையும் கேட்டபோது.. வெட்கம்.. நாணம்.. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. ஒன்றன்பின் ஒன்று வரும்.. ஒன்றும் அதிக வித்தியாசம் கிடையாது என்றுதான் விளக்கங்கள் கிடைத்தன..

ஆனால் கவிஞர் கண்ணதாசன்.. ஒரு திரைப்பாடலில்.. அதுவும் வேக வீச்சில் உருவான பாடலில் (Fast Beat Song) அந்த வேகமான தாள ஜதிப்பாடலில்.. போகின்ற போக்கிலே.. சொல்லுவதைப் போல வார்த்தைகளை அள்ளி வழங்கிய இரண்டு வரிகளில்.. இதோ பாருங்கள்..

அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம்.. வெட்கம்.
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம்.. நாணம்..

எட்டாவது மட்டும் எட்டிப்பார்த்த கண்ணதாசனே.. எங்களின் தமிழ்க்கடல் நீ என்பதில் மகிழ்கிறோம்!
kavirimaindhan - abu dhabi..
kmaindhan@gamil.com

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP