51. திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
திருமலை தென்குமரி படத்தில் இடம்பெற்ற பாடல். சீர்காழியில் குரலில் அருமையாக அமைந்த பாடல். வீடியோ தேடலாம்னு பார்த்தா திருப்பதினு போட்டா அஜித் படம் வருது, திருமலைனு தேடினா விஜய் படம் வருது. என்ன கொடுமை கோவிந்தா?
உங்க யாருக்காவது வீடியோ லிங் கிடைத்தால் கொடுக்கவும்.
பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்...
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி...
அன்பென்னும் அகல் விளக்கை ஏற்றி வைத்தேன்
அதில் ஆசையென்னும் நெய்யை ஊற்றி வைத்தேன்
என் மனம் உருகிடவே பாடி வந்தேன்
உன் ஏழு மலை ஏறி ஓடி வந்தேன்
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலைவாசா
திருப்பதி...
நினைப்பதை நடத்தி வைப்பாய் வைகுந்தா
மறைத்ததை பறித்திடுவாய் கோவிந்தா
உரைத்தது கீதை என்ற தத்துவமே
அதை உணர்ந்தவர் வாழ்ந்திடுவார் சத்தியமே
திருப்பதி மலைவாழும் வெங்கடேசா -திருமகள்
மனம் நாடும் சீனிவாசா ஏழுமலை வாசா
திருப்பதி...
இந்த விடியோவையும் பார்க்கவும்
12 comments :
சீர்காழியின் குரலில் சீர்மிகு பாடல்!
இதைப் படமாக்கும் போது, திருமலை எம்பெருமான் முன்பு, சீர்காழியே நின்று பாடுகிற மாதிரி படமாக்கி இருப்பார்கள்!
அந்த கோவிந்தராஜன் முன்பு இந்த கோவிந்தராஜன்!
நன்றி பாலாஜி!
பாலாஜி
இதற்கு இசை: குன்னக்குடி வைத்யநாதன்
இந்தப் பாட்டை எழுதியவர்:
தென்காஞ்சி பாரதிசாமி என்பவர்
நீங்கள் இட்ட படம் டென்னிசி மெம்பிஸ் - தத்த பீடம் கோவிலில் உள்ள பெருமாள்-ன்னு நினைக்கிறேன். க்ளோசப்பில் ஜொலிக்கிறார்.
வீடியோவும் அருமை! Animation-il திருமலை ஆலயம் மற்றும் அதன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை animation-ஆகவே காட்டுவார்கள். யாரிடமாச்சும் இந்த முழு வீடியோவும் உள்ளதா?
பாலாஜி, சொல்ல வார்த்தையே வரவில்லை.
அப்படியே திருமலைக் கோவிலுள் போய் வந்த மாதிரி இருக்கிறது.
சீர்காழி பாடலைக் கேட்டு உருகாமல் இருக்க முடியுமா.
இந்தப் பாடலை பிரியா ஸிஸ்டர்ஸ் பாடுகிறார்களா.
மிகமிக நன்றி.திருமலை தென்குமரியில் குருவாயூரப்பா பாட்டும் ரொம்ப நன்றாக இருக்கும்
மிகவும் அருமையான பாடல். திருமலை தென்குமரி. மறக்க முடியாத படம். பலமுறை பார்த்துள்ளேன். ஆனாலும் நன்றாக இருக்கும். பல குடும்பங்கள் ஒன்றாகக் கூடித் திருத்தலச் சுற்றுலா செல்லும் கதை. திருமலையில் தொடங்கி திருப்பரங்குன்றம் மைசூர் மதுரை குருவாயூர் கன்யாகுமரி என்று பல ஊர்களுக்குச் செல்லும் கதைதான் படம். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு அருமையான பாட்டு. திருப்பதிக்குத்தான் இந்தப் பாட்டு. சீர்காழி கோவிந்தராஜனின் கணீர்க்குரலில் அருமையான பாடல். கேட்க மட்டுமல்ல பார்க்கவும் அருமையான பாடல். எல்லாரும் வரிசையாக வருவார்கள். சுருளியும் மனோரமாவும் வெகுளிகள். குறுக்கும் நெடுக்கும் வருவார்கள். நல்லதொரு பாடல்.
//திருமலை தென்குமரியில் குருவாயூரப்பா பாட்டும் ரொம்ப நன்றாக இருக்கும்//
வல்லியம்மா,
இதோ கண்ணன் பாட்டு சுட்டி...சிகாகோ குழந்தை குருவாயூரப்பன் ஞாபகத்துக்கு வந்து விட்டானா? :-)
http://kannansongs.blogspot.com/2007/01/22.html
Excellent Post,thanks for the video
dear VP sir,
nice to read ur post and hear the Adivo Al Adivo song by ANNAMAYYA.
As requested by KRS,if full video available,pl attach.
KRS sir,pl give the locations covered in the video,perhaps the Annamacharya's seating/sannadhi in the praharam is not shown?
sundaram
http://ww.smashits.com/player/flash/flashplayer.cfm?SongIds=32477
https://www.youtube.com/watch?t=41&v=MR0l_ja1qUA
Tirupati Malai Vazhum Venkatesa - Thirumalai Thenkumari - Tamil Devotional Song : https://youtu.be/BEyIUDVuw0E
Tirupati Malai Vazhum Venkatesa - Thirumalai Thenkumari - Tamil Devotional Song : https://youtu.be/BEyIUDVuw0E
Tirupati Malai Vazhum Venkatesa - Thirumalai Thenkumari - Tamil Devotional Song : https://youtu.be/BEyIUDVuw0E