Friday, May 18, 2007

49. காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா?

தில்லாலங்கடி தாங்கு என்று நம்ம வெட்டிப்பயல் போட்டாரே ஒரு கண்ணன் பாட்டு, அதை விட தில்லாலங்கடி இந்தப் பாட்டு! - ஒரு நாள் ஒரு கனவு என்ற படம்.
இந்த வாரம் வெளிநாட்டுக்குப் போயிருந்த போது, சும்மா விமானத்தில் பாத்துக்கிட்டே போனேன். படம் நல்லாத் தான் இருந்துச்சு. நம்மள தான் ஊர் போய்ச் சேர்ந்தவுடன், ஆபிசில் போட்டுத் தாக்கிட்டாங்க! :-)

ஸ்ரீகாந்த் (இவருக்குக் கல்யாணம் ஆகப் போகுதாமே! - வாழ்த்துக்கள்).
இவருடன் சோனியா அகர்வால் நடிச்ச படம்.
யாராச்சும் தமிழ்மணத்தில் விமர்சனம் போட்டாங்களான்னு தெரியலை, மறந்து போச்சு!
ஆனா, இந்தப் படத்தில் ஒரு டாப்-டக்கர் கண்ணன் பாட்டு உள்ளது!
அஞ்சு பேர் சேர்ந்து பாடறாங்க டோய், இந்தப் பாட்டை!

அம்மன் பாட்டு வலைப்பூவில், bas என்பவர், நேயர் விருப்பம் கேட்டிருந்தார் - காற்றில் வரும் கீதமே, என் கண்ணனை அறிவாயா?
ஓ அறிவேனே என்று பாட்டும் வீடியோவும் அனுப்பி வைத்தார் நம்ம பாலராஜன் கீதா - பதிவுலகத் தென்றல்! - அவருக்கு நம் நன்றி!

காற்றினிலே வரும் கீதம் - எம்.எஸ் பாட்டு அந்தக் காலத்து ஹிட் என்றால், அதே போல்
காற்றில் வரும் கீதமே என்று தான் இதுவும் தொடங்குகிறது!
பாட்டும் மெல்லிய தென்றல் போலத் தான் ஒலிக்கிறது!
எல்லாவற்றுக்கும் மேலாக, ஆங்கில வார்த்தைகள் எல்லாம் இல்லாமல், எளிய தமிழில், சுகமான ராகத்தில், வாலி-ஞானியின் கூட்டு முயற்சி!

பாடலைக் காண வேண்டாம். கேட்டு மட்டும் மெய் மறப்போம் என்று நீங்கள் நினைத்தால் இதோ சுட்டி
கீழே இசைஞானி இளையராஜாவின் கச்சேரியில், ஒரு குழுவே பாடுகிறது பாருங்கள்!

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய்க் குழலில் அழகாக........
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )

பசு அறியும் அந்தச் சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும்
முகம் மலரும்...ஒரு அரும்பாகும்
இசையின் பயனே இறைவன் தானே
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )


ஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்பே
அதுக்கேற்ற லயம் என் தந்தை அன்பே
ஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும்...
ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்


திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி
(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?)


இசையின் பயனே இறைவன் தானே!
ஆகா...அருமையான வரிகள்!
கும்தலக்கடி கும்மாவா என்று பொழுதுபோக்குக்கும் இசை வேண்டும் தான் என்றாலும்
இசையின் பயன், நிலைத்த பயன் என்று வரும் போது, எது நிலைக்கும்?
நிலைத்து நிற்கக் கூடியவனின் பாட்டு தானே நிலைத்தும் நிற்கும்!
ஒத்த வரியில அழகாச் சொல்லிப்புட்டாரு வாலி!


வரிகள்: கவிஞர் வாலி
குரல்:
இளையராஜா, ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல், பவதாரிணி, சாதனா சர்கம்

இசை: இளையராஜா
படம்: ஒரு நாள் ஒரு கனவு

ராகம்: கல்யாணி (அப்படின்னு நினைக்கிறேன்...
கோட்டீஸ்வரக் கொத்தனார், கோட்டீஸ்வரர் எழுதிய பாட்டைப் போட்டு பட்டையக் கிளப்பினார். அவரே வந்து சொல்லவும் :-)

33 comments :

மலைநாடான் said...

ரவிசங்கர்!

படத்திலும், இசையிலும், அருமையான அந்தப்பாடல், அந்தக்கச்சேரியில் சற்றுக் குழம்பிப் போய்விட்டது. ஆனால் பாடியவர்கள் எல்லோரும் பிரபலங்கள்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

என் 2005 டாப் டென் பாடல்களில் முதல் இடம் பிடித்த பாடல் அல்லவா,
அசத்தல் பாடல் தான், ரவி!

ஷைலஜா said...

ஒரு முறையாவது முதல்ல வரணும்னு நினைச்சி இப்போ ஃபஸ்ட் வந்தேன்னு..(நினைக்கிறேன்..குமரன் முந்திட்டாரா?:))காற்றிலே வரும் கீதமே
பாட்டும் படமாக்கிய விதமும் அருமையா இருக்கும். நினச்சிட்டே இருந்தேன் இப்போ வந்தாச்சு.மகிழ்ச்சி. ஆனாலும் வெட்டிப்பயல் கூட ரவி போட்டி போட முடியுமா என்ன அடேயப்பா அவர் தூள் இல்ல கிளப்பி இருந்தாரு?:)

வடுவூர் குமார் said...

கண்ணை மூடி ரசிக்கவேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று.
வேற வழி? அலுவலகத்தில் "utube" வராது.:-))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆனாலும் வெட்டிப்பயல் கூட ரவி போட்டி போட முடியுமா என்ன
அடேயப்பா அவர் தூள் இல்ல கிளப்பி இருந்தாரு?:)//

அதானே! அது என்னமோ கரெக்டு தான்!

அது சரி,
பாலாஜி, இங்க பாருங்க.
ஷைலஜா உங்க போன பதிவில் ஆடிக்கு ஒரு தரம்னு உ.கு வைச்சாங்க!
இங்க என்னடான்னா, நீங்க "தூள்" (powder) கிளப்பறீங்கன்னு இன்னொரு உ.கு. :-))))))
ஆகா...ஐ ஆம் தி எஸ்கேப்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அடுத்த கண்ணன் பாட்டு...அரைச் சதம்! 50-50!
Any takers????
பாக்கலாம் யாரு வராங்கன்னு? :-)

வல்லிசிம்ஹன் said...

ரவி,
இந்தப் பாடல் அத்தனை பாடல்களையும் அள்ளிச் சாப்பிடக்கூடியது.

சிலசமயம் கண்ணீர்
சிலசமயம் ஆனந்தம்
எல்லா சமயமும் நிறைவு. தாரகைகள் பாடி இருக்கிறார்களா இப்போதுதான் தெரியும்.
கொஞ்சமே கேரள வாடையோடு படக்காட்சி இருந்தாலும் குடும்பமே பாடுவதும் சிறப்பு.

மிகமிகமிக நன்றி.
ஐம்பதுக்கு வந்தாச்சா...
வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

ரொம்ப நல்லா இருக்கு இரவிசங்கர். இன்று முதல் இந்தப் பாடலும் நான் கேட்டதில் பிடித்த பாடல்கள் பட்டியலில் இடம் பெறுகிறது. :-)

ச.சங்கர் said...

ரவி சங்கர்

சூப்பர் பாட்டு இது..

எனக்கு ஒரு சந்தேகம்..ஆபிஸுல& வீட்டுல அப்பப்ப வேலை ஏதாவது பாப்பீங்களா இல்லையா..இவ்வளவு பதிவெழுத நேரம் எப்படிய்யா கிடைக்குது? :)

வாழ்த்துக்கள்...தொடருங்கள்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//மலைநாடான் said...
அந்தக்கச்சேரியில் சற்றுக் குழம்பிப் போய்விட்டது. ஆனால் பாடியவர்கள் எல்லோரும் பிரபலங்கள்//

ஆமாங்க மலைநாடான் ஐயா.
அதுவும் பவதாரிணிக்கு அன்று குரலில் என்ன தொல்லையோ பாவம் தெரியவில்லை! :-)

படத்தில் பாட்டு அருமையாக வந்திருக்கும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஜீவா (Jeeva Venkataraman) said...
என் 2005 டாப் டென் பாடல்களில் முதல் இடம் பிடித்த பாடல் அல்லவா,
அசத்தல் பாடல் தான், ரவி! //

ஜீவா..
உங்கப் பதிவைக் கண்டேன்.
அட.. டாப் டென்னில் கூட, நம்பர் ஓன் கண்ணன் தானா? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஷைலஜா said...
ஒரு முறையாவது முதல்ல வரணும்னு நினைச்சி இப்போ ஃபஸ்ட் வந்தேன்னு..(நினைக்கிறேன்..குமரன் முந்திட்டாரா?:))//

ஆகா,
நீங்க வேற ஷைலஜா...
குமரன் தான் ஊருக்குப் போவதில் முந்திக்கிட்டாரே....அவரு ஜாலியா ஷாப்பிங் செஞ்சுகிட்டு இருப்பாரு.
நீங்க தான் ஃப்ஸ்ட்டு! (ஐ மீன்... அவருக்கு முன்னாடியே!)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//வடுவூர் குமார் said...
கண்ணை மூடி ரசிக்கவேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று.
வேற வழி? அலுவலகத்தில் "utube" வராது.:-))//

ஆகா...
youtube வராத அலுவலகமா?
போச்சு..."you"tube என்று பேர் வைத்துக் கொண்டு நமக்குத் தரவில்லை என்றான் எப்படி? :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// வல்லிசிம்ஹன் said...
கொஞ்சமே கேரள வாடையோடு படக்காட்சி இருந்தாலும் குடும்பமே பாடுவதும் சிறப்பு.//

உண்மை தான் வல்லியம்மா.
கேரள வாடை வீசுகிறது! ஆனால் கண்ணனும் குருவாயூர் தானே!

சரி...பயணம் எப்படி இருந்துச்சு? ஆல்ப்ஸ் மலைப்பயணம் எப்போது?

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// குமரன் (Kumaran) said...
ரொம்ப நல்லா இருக்கு இரவிசங்கர். இன்று முதல் இந்தப் பாடலும் நான் கேட்டதில் பிடித்த பாடல்கள் பட்டியலில் இடம் பெறுகிறது. :-) //

ஆகா கேள்பிடி வலைப்பூவில் மீள்பதிவுன்னு சொல்லுங்க! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ச.சங்கர் said...
எனக்கு ஒரு சந்தேகம்..ஆபிஸுல& வீட்டுல அப்பப்ப வேலை ஏதாவது பாப்பீங்களா இல்லையா..//

அய்யா சாமீ...
நானே ஆபீசுக்கு போகும்/வரும் வழியில் பேருந்தில் டைப் அடிப்பதைப் பாத்து, பக்கத்து சீட் மாதர் குல மாணிக்கம், முறைச்சுப் பாக்கறாங்க...இதுல நீங்க வேற இப்படி கிள்ளிப் போடறீங்களே! :-)

பதிவுகள் முன் போல் நிறைய போடுவதில்லைன்னு ஒருத்தர் கம்ப்ளெயிண்ட் பண்றார்...நீங்க இப்படிச் சொல்றீங்க! ஹூம்! :-)

Anonymous said...

oh Mr. Ravi Sankar,

could you please remember me some time back i asked this song - thanks a lot - thank you very much - every time when i opent this site, i felt somewhat dejected. now i am very happy to see this song in the site and very happy to hear this- my heart-felt thanks to you Mr.Ravishankar - thanks-baskar

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

Mr. Shankar,
while hearing this song, antha pirunthavanamum, kuzhal oothum kannanum rukmaniyum innum pala aayarpadi thozhikalum kan munne alai paaikintanar - appadiyea nammai kannanidam manathai parikkodukka vaikirathu - appadiyea onnum vendaam entu antha aayarpadi tholiyarkal pola kannannoda onti, oru meera pol, aandaal pol ontivida thonukirathu - killi paarthal ada cha naam saathaarana manithan - once again thanks for having given this song -when i find time at office i never fail to hear this song - baskar -

ப்ரசன்னா said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல். இளையராஜாவின் சமீபத்திய பாடல்களில் மிகச் சிறந்தது இதுதான். அந்த கச்சேரியை விட படத்தில் வந்ததுதான் அருமையாக இருக்கும். பாடல் காட்சியில் பாடலைத் துவங்கும் நடிகைகளின் expression அருமையாக இருக்கும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி சங்கர்!
படத்தில் பாடல் கேட்டபின் ;திரையிசைப்படல்களை மேடை நிகழ்சியில் கேட்பதற்கு நான் பிரியப்படுவதில்லை; எங்கோ தொய்வு ஏற்பட்டு மூலத்தில் இருந்து விலகிவிடும். இதுவும் அந்த
வகையே...ஆனால் இப்பாடல் நல்ல சொல்வழமும்;இசை நயமுமுடைய பாடல்.

இலவசக்கொத்தனார் said...

ரவி,

இந்த தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

இந்த பாடல் கல்யாணி ராகத்தை ஒட்டிதான் அமைந்திருக்கிறது. கொஞ்சம் கண் மூடிக் கேட்டால் ஜனனி ஜனனி பாடல் ஞாபகத்திற்கு வருகிறது அல்லவா. அதுவும் கல்யாணி ராகத்தைச் சார்ந்த பாடல்தான்.

நல்ல பாடல் ஆனால் விடியோவில் பாடல் ஆரம்பித்த உடனே அணைக்க வேண்டியதாகப் போயிற்று. அபஸ்வரம்.

அந்த சுட்டியில் கொஞ்சம் பரவாயில்லை. சிசு என்ற சொல்லை எப்படி உச்சரிக்க வேண்டும் போல.

நா.கண்ணன் said...

என்னங்கப்பா இது, நாட்டிலே நிறையாப்படம் விட்டுப் போச்சு போல..படவிறக்கம் எங்கே செய்ய? நல்லா இருக்கும் போல...பவதாரணியை விட்டுடல்லாம். ஸ்ருதியே நிக்கலை. இந்த பெங்காலிப் பொண்ணு என்ன போடு போடுது! இந்தியக் கலவைன்னா இதுதான். ஹிந்தி நடிகை (குஜராத்தி?), பெங்காலி, ஹிந்தி, ஹிந்துஸ்தாணி (மலையாளப் பட்டகர்), தமிழ்க் கவிஞர், தமிழ் இசைஞர். இவர்கள் பாட்டுடைத்தலைவனோ "அறிவின் பயனே அரி ஏறே!" சபாஷ்!

Simulation said...

அருமையான கல்யாணி இராகப் பாடல். கொடுத்தவர் கல்யாணியில் கலக்கிய ராஜாவாயிற்றே (ஜனனீ, ஜனனீ, அம்மாவென்று அழைக்காத உயிரில்லையே, நிற்பதுவே நடப்பதுவே, வெள்ளைப் புறாவொன்று,....)

இந்தப் பாட்டு பாடலாக்கப்பட்டுள்ள விதம் (Picturisation) அமைதியையும், அன்பையும் விரும்பும் அனைவரையும் கவர்ந்திருக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.

அப்புறம் ஒரு குவிஸ். ஸ்ரீக்காந்தின் அப்பாவாக வரும் அந்த தாடிவாலா யார் என்று தெரியுமா?

- சிமுலேஷன்

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//Anonymous said...
oh Mr. Ravi Sankar,
could you please remember me some time back i asked this song//

வாங்க பாஸ்கர்.
நல்லா நினைவிருக்கு! ரெண்டு முறை கேட்டுட்டீங்க...
அதான் நேயர் விருப்பம் :-)
நன்றி பாலராஜன் சாருக்கு சொல்லுங்க! அவர் தான் தக்க சமயத்தில் ஞாபகப்படுத்தினார்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//killi paarthal ada cha naam saathaarana manithan//

பாஸ்கர்...இந்தப் பாட்டில் உங்களுக்கு இவ்வளவு ஈடுபாடா!
ஆகா...மன்னிக்கவும்
உங்கள் நேயர் விருப்பத்தைத் தாமதமாகத் தந்ததற்கு!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ப்ரசன்னா said...
அந்த கச்சேரியை விட படத்தில் வந்ததுதான் அருமையாக இருக்கும். பாடல் காட்சியில் பாடலைத் துவங்கும் நடிகைகளின் expression அருமையாக இருக்கும்//

கரெக்டா சொன்னீங்க ப்ரசன்னா...
நடிகையின் முகபாவம் அருமையா வெளிப்படும்...இசைப்பாட்டு அல்லவா...அதான் அபிநயம் போலும்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
படத்தில் பாடல் கேட்டபின் ; திரையிசைப்படல்களை மேடை நிகழ்சியில் கேட்பதற்கு நான் பிரியப்படுவதில்லை; //

யோகன் அண்ணா...நீங்க சொன்னா மாதிரியே பாருங்க, இந்தப் பாட்டிலும்.. பவதாரிணி மேடையில் மட்டும் லைட்டா சொதப்புகிறார் :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இலவசக்கொத்தனார் said...
இந்த பாடல் கல்யாணி ராகத்தை ஒட்டிதான் அமைந்திருக்கிறது. கொஞ்சம் கண் மூடிக் கேட்டால் ஜனனி ஜனனி பாடல் ஞாபகத்திற்கு வருகிறது அல்லவா.//

தாங்கஸ் தல!
கல்யாணியே தான்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நா.கண்ணன் said...
என்னங்கப்பா இது, நாட்டிலே நிறையாப்படம் விட்டுப் போச்சு போல..படவிறக்கம் எங்கே செய்ய?//

கண்ணன் சார்...
பசங்க அதிகம் download செய்வது
tamiltorrents.com

videoduniya.com இலும் படங்கள் நிறைய உள்ளன். ஆனால் அவை youtube...so no need for any download..

//பவதாரணியை விட்டுடல்லாம். ஸ்ருதியே நிக்கலை.
இந்த பெங்காலிப் பொண்ணு என்ன போடு போடுது!//

:-)

//இவர்கள் பாட்டுடைத் தலைவனோ "அறிவின் பயனே அரி ஏறே!" சபாஷ்!//

ஆமாங்க சார்.
நம்ம கண்ணன் தான் எல்லாரையும் இழுத்து விடும் காந்தம் ஆச்சே!
யார் தான் தப்பினார் அவன் குறும்பிலிருந்து! :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

// Simulation said...
ஸ்ரீக்காந்தின் அப்பாவாக வரும் அந்த தாடிவாலா யார் என்று தெரியுமா?//

வாங்க சிமுலேஷன்...
இசை இன்பம் வலைப்பூவில் உங்களை வரவேற்க எண்ணினோம்...இங்கே கண்ணன் பாட்டில் வரவேற்று விட்டோம்! :-)

தாடிவாலா = தெரிஞ்ச முகமாத் தான் தெரியுது...
KV Prasad ஆ? அவரு எங்க இங்கே?

Simulation said...

ரவி, வரவேற்பிற்கு நன்றி!

ஆமாம். தாடிவாலா, மிருதங்க வித்வான் பாலக்காடு கே.வி.பிரசாத்தேதான்.

- சிமுலேஷன்

Anonymous said...

Mr. KRS thanks for recognition
as you told my special thanks to Mr.Balarajan - i should have thanked earlier - baskar

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP