Monday, May 14, 2007

திருமால் பெருமைக்கு நிகரேது!!!





திருமால் பெருமைக்கு நிகரேது - உன்றன்

திருவடி நிழலுக்கு இணையேது!
பெருமானே உன்றன் திருநாமம் - பத்து
பெயர்களில் விளங்கும் அவதாரம்

(திருமால்)



கடல் நடுவே வீழ்ந்த சதுர்வேதம் - தனைக்
காப்பதற்கே கொண்ட அவதாரம்
- மச்ச அவதாரம்!

அசுரர்கள் கொடுமைக்கு முடிவாகும் - எங்கள்
அச்சுதனே உன்றன் அவதாரம்
- கூர்ம அவதாரம்!

பூமியைக் காத்திட ஒரு காலம் -நீ
புனைந்தது மற்றொரு அவதாரம்
- வராக அவதாரம்!

நாராயணா என்னும் திருநாமம் - நிலை
நாட்டிட இன்னும் ஒரு அவதாரம்
- நரசிம்ம அவதாரம்!

மாபலிச் சிரம் தன்னில் கால் வைத்து - இந்த
மண்ணும் விண்ணும் அளந்த அவதாரம்
- வாமன அவதாரம்!

தாய் தந்தை சொல்லே உயர் வேதம் - என்று
சாற்றியதும் ஒரு அவதாரம்
- பரசுராம அவதாரம்!

ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் - எனும்
உயர்வினைக் காட்டிய அவதாரம்
- ராம அவதாரம்!

ரகு குலம் கொண்டது ஒரு ராமன் - பின்பு
யது குலம் கண்டது பலராமன்
- பலராமன்

அரசு முறை வழிநெறி காக்க - நீ
அடைந்தது இன்னொரு அவதாரம்
- கண்ணன் அவதாரம்


விதி நடந்ததென மதி முடிந்ததென
வினையின் பயனே உருவாக,
நிலைமறந்தவரும், நெறியிழந்தவரும்
உணரும் வண்ணம் தெளிவாக,
இன்னல் ஒழிந்து புவி காக்க - நீ
எடுக்க வேண்டும் ஒரு அவதாரம்
- கல்கி அவதாரம்!

(திருமால்)

பாடலை கேட்க இங்கே சொடுக்கவும்...


8 comments :

குமரன் (Kumaran) said...

மிக அருமையான பாடல் பாலாஜி.

ஷைலஜா said...

இந்தமாதிரி மனம்வந்து நல்ல பாட்டு அளிக்கும் வெட்டிப்பயலுக்கு நிகர் யாரு?:)

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

மிக அருமையான பாடல் பாலாஜி. //

எல்லா புகழும் கண்ண(தாசனு)க்கே சேரும் ;)

வெட்டிப்பயல் said...

//ஷைலஜா said...

இந்தமாதிரி மனம்வந்து நல்ல பாட்டு அளிக்கும் வெட்டிப்பயலுக்கு நிகர் யாரு?:) //

ஆஹா... ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கொரு தடவை போடறேனு தெரியுது. அதுக்காக இவ்வளவு உள்குத்தா??? ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்தமாதிரி "மனம்வந்து" நல்ல பாட்டு அளிக்கும் வெட்டிப்பயலுக்கு நிகர் யாரு?:)//

Manam Vandathe!
Balaji-kku eppome bakthargal Nyabagam thaan! :-)
Adhan, thannudaya paatukku - kannan paatukku, avarukku time podha villai!
pi.ku
Idhuvum Ulkuthu-aa Balaji? :-)))

ஷைலஜா said...

///வெட்டிப்பயல் said...

ஆஹா... ஆடிக்கொரு தடவை அம்மாவாசைக்கொரு தடவை போடறேனு தெரியுது. அதுக்காக இவ்வளவு உள்குத்தா??? ;)///

அட புரிஞ்சிடிச்சா? ரவி ....இதக் கேட்டீங்களா கேட்டீங்களா?:):)

G.Ragavan said...

மிக அருமையான பாடல். அதிலும் குறிப்பாக விதி முடிந்ததென என்று ஏழிசை வேந்தர் பாடுகையில் ஆகா...என்ன குரல்..என்ன இசை..என்ன பக்தி. இந்தப் படத்தில் இந்தப் பாடலை விட "ஹரி ஹரி கோகுல ரமணா" என்ற பாடல் மிகவும் பிடிக்கும். அதில் நடுவில் இசையரசி

ஞானமலர்க்கண்ணா
ஆயர்குல மணி விளக்கே
வானும் கடலும் வார்த்தெடுத்த பொன்னுருவே
கானத்தில் உயிரினத்தைக் கட்டுவிக்கும் கண்ணா
தானே உலகாகி தனக்குள்ளே தானடங்கி
மானக் குலமதார் மஞ்சள் முகம் காத்து
வாழ்விப்பாய் என்று உன் மலர்த்தாள் கரம் பற்றி
நானும் தொழுவேன் நம்பி பரந்தாமா
உன் நாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே

Joineroxuo said...

மிக அருமையான பாடல் பாலாஜி.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP