Tuesday, May 29, 2007

வா... வா.. கண்ணா...வா ...வா

தன்னைக் கொல்ல ஆயுதம் ஏந்தி வருகின்றவனையும் முகமலர்ச்சியுடன் யாராவது வா.. வா.. என்று வரவேற்பவர்கள் உண்டா?
பின்னால் அவனால் கொல்லப்படும் நிலை வந்தும் அவன் தன்னைப் பார்க்க வரும்போது அவனை துதித்து 1000 பெயர்களால் புகழ்ந்து பாடியவர் யார்?ஆமாம் அப்படி வரவேற்றவரும் பாடியவரும் ஒருவர்தான்.
யார் அவர்? மேலே படியுங்கள்.மஹாபாரதத்தில் கண்ணன் ஆயுதம் ஏந்தி போராடமாட்டேன் என்று பஞ்சபாண்டவர்களுக்கு உறுதி அளித்தார். அதன்படியே போர்க்களத்தில் இருந்தும் வந்தார். பாண்டவர்களுக்கும் கௌவுரவர்களுக்கும் பயங்கர யுத்தம் நடந்தது. கௌவுரவர்களின் சேனாபதியான பீஷ்மர் மிகவும் உக்கிரமாக போரிட்டார்.
அவ்ருடைய அம்பு மழைக்கு பார்த்தனால் பதில் சொல்ல முடியவில்லை. இப்படியே விட்டால்அவர் பாண்டவர்களை காலி செய்துவிடுவார் என்று நினைத்த கண்ணன் பார்த்தனிடம் சொன்னார்.
"அர்சுனா தாத்தாவை உடனே எப்படியாவது நிறுத்தப் பார்". தனஞ்ஜயன் சொன்னான் "என்னுடைய முழு முயற்சியும் பலனளிக்கவில்லை. என்னுடைய அம்புகளால் தாத்தாவை ஒன்றும் செய்ய முடியவில்லை.அவருடைய பராக்கிரமம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது" என்றான். (நீங்கள் படித்துக்கோண்டு இருப்பது மஹாபாரதம். வேறு எதையும் நினத்து குழப்பிக் கொண்டால் நான் பொறுப்பல்ல)
பார்த்தனின் சோர்வைப் பார்த்த கண்ணனுக்கு கோபம் வந்து உன்னால் முடியாவிட்டால் இதோ நானே ஆயுதம் எடுக்கிறேன் என்று கூறி தேர்தட்டிலிருந்து இறங்கி தன் சக்கராயுதத்தை பீஷ்மர் கையில் எடுத்துக் கொண்டு பீஷ்மரை நோக்கிச் சென்றார்.
கண்ணனைக் கண்டதும் மலர்ந்த முகத்துடன்ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு வரவேற்றார் பீஷ்மர் "வா.. வா.. கண்ணா..வா...வா...உன்கையால் மரணமடைய காத்திருக்கிறேன்." நீயே ஆயுதம் எடுத்து வந்தபின் எனக்கு என்னகுறை" என்றார். உடனே கண்ணனுக்கு தன் சத்தியம் ஞாபகம் வந்து தேர்தட்டுக்கு வந்து சாட்டையை கையில் எடுத்துக் கொண்டான்.
பின்பு யோசித்து சிகண்டியை பார்த்தனுக்கு முன்னால் உட்காரவைத்து இருவரையும்அம்புகளைஎறியச் சொன்னார். ஆனால் பீஷ்மர் தன் சத்தியத்தை(சிகண்டிக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதில்லை என்பதை) மனதில் நிறுத்தி வில்லையும் அம்பையும் கீழேபோட்டுவிட்டு ,பார்த்தனது பாணங்களை ஏற்றுக்கொண்டு உடம்பெல்லாம் அம்பு பாய்ந்து கீழே விழுந்தார். வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.மரணப்படுக்கையில் மிகுந்த வலியுடன் கஷ்டப்படுகின்ற பீஷ்மரை பார்க்க வந்த கண்ணனை கண்டதும் பீஷ்மர் எந்த விரோதமும் பாராட்டாமல் கண்ணனை 1000 பெயர்களால் துதி செய்தார்.
தன்னைக் கொல்ல வந்த கண்ணனை யுத்தகளத்தில் பீஷ்மர் எப்படி வரவேற்றார் என்பதை ஊத்துகாடு வேங்கட கவியின் பாடல் மூலமாகக் கேளுங்கள்
பாடல் வடமொழியில் இருந்தாலும் சொற்கட்டும் தாளக்கட்டும் வர்ணணையும் மிகுந்தது. நடையும் யுத்தநடை.
ராகம்:- மோஹனம் தாளம்:- ஆதி
பல்லவி
ஸ்வாகதம் கிருஷ்ணா சரணாகதம் கிருஷ்ணா
மதுராபுரி ஸதனா ம்ருது வதனா மதுசூதனா இஹ....(ஸ்வாகதம்)


அனுபல்லவி
போகதாப்த ஸுலபா ஸுபுஷ்ப கந்த களபா
கஸ்த்தூரி திலக மஹிபா மம காந்த நந்த கோப கந்த..(ஸ்வாகதம்)


சரணம்
முஷ்டிகாசூர சாணுர மல்ல
மல்ல விசாரத குவலாயபீட
மர்த்தன களிங்க நர்த்தன
கோகுலரக்ஷ்ண ஸகல ஸுலக்ஷ்ண தேவ
ஸிஷ்ட ஜன பால ஸ்ங்கல்ப கல்ப
கல்ப ஸதகோடி அஸமபராபவ
தீர முனி ஜன விஹார மதனஸூ
குமார தைத்ய ஸ்ம்ஹாரதேவ
மதுர மதுர ரதி ஸாஹஸ ஸாஹஸ
வ்ரதயுவதி ஜன மானஸ பூஜித
இந்தப் பாடலின் மற்றொரு பொருத்தம் பாடலின் நடையும் யுத்த நடையில் உள்ளது.
கண்ணனின் பக்தரான திரு ஜேசுதாஸ் தன் இனிய குரலில் அருமையாக பாடியுள்ளார்.பாடலைக் கேட்க '><"இங்கே">"> கிளிக்

5 comments :

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

திராச ஐயா
கண்ணன் பாட்டில் உங்கள் முதல் இடுகைக்கு எங்கள் ஸ்வாகதம்! நல்வரவு!

ஜேசுதாஸின் சிங்கநடை நல்லா கம்பீரமாவே இருக்கு! ஊத்துக்காடு ஐயாவின் பாட்டுன்னா கேக்கணுமா என்ன?

அப்படியே வரிக்கு வரி, லைட்டா பொருளும் சொல்லுங்க திராச. இன்னும் ரசிக்கலாம்!

//குவலாயபீட மர்த்தன//
- இது ஒரு யானை தானே?

Bharathiya Modern Prince said...

உங்களது பதிவு கொடுத்த உந்துதலில்தான் நானும் எனக்குப் பிடித்த ஒரு கண்ணன் பாட்டை பதித்தேன் :)
http://bharateeyamodernprince.blogspot.com/2007/04/blog-post_10.html

குமரன் (Kumaran) said...

திராச. அடிக்கடி நான் விரும்பிக் கேட்கும் பாடல் இது.

இரவிசங்கர் உங்களுக்காக.

பல்லவி

நல்வரவு கிருஷ்ணா. இங்கே உனக்கு நல்வரவு கிருஷ்ணா
மதுராபுரியில் நிலைத்து வாழ்பவனே. மென்மையான திருமுகத்தை உடையவனே. மதுசூதனனே (மது எனும் அரக்கனை அழித்தவனே)
நல்வரவு கிருஷ்ணா. இங்கே நல்வரவு கிருஷ்ணா.

அனுபல்லவி

போகக்கடலுக்கு எளிதானவனே! நல்ல பூக்களின் நறுமணம் கமழ்பவனே! கஸ்தூரி பொட்டு அணிந்த அரசனே! என்னுடைய காதலனே! நந்த கோபரின் மகனே!

சரணம்

முஷ்டிகாசூரன், சாணூரன் போன்ற மல்லர்களுக்கு மல்லன் போன்றவனே! மல்யுத்தத்தில் சிறந்தவனே! குவலயாபீடம் என்னும் மதயானையைக் கொன்றவனே! காளிங்கன் என்னும் பாம்பின் தலையில் நடனம் செய்தவனே! கோகுலத்தைக் காத்தவனே! எல்லா வித நல்ல குணங்களும் உடைய தெய்வமே! அடியவர்களைக் காக்கும் முடிவுடன் இருக்கும் தெய்வமே! எத்தனை பேர் வந்தாலும் நூறு கோடி பேர் வந்தாலும் நேராகாத வீரத்தை உடையவனே! தீரனே! முனிவர்களால் சூழப்பட்டவனே! மன்மதனைப் போல் அழகுடைய இளைஞனே! தைத்யர்களான அசுரர்களை அழிப்பவனே! தெய்வமே! இனிமையிலும் இனிமையான ரதி போன்ற அழகிய விரஜையில் வாழும் இளம்பெண்களின் மனத்தில் பூஜிக்கப்படுபவனே!

Sri said...

இந்த பேஜ் இல் இருக்கும் பாடல் லிங்க் வேலை செய்ய வில்லை
இதை சரி செய்யுங்கள்.

balaji said...

Sir, superb, one more song requested en palli kondeer aiyah, Arunachala Kavirair song first class............ athuvum Sudha voice la first class...... please antha song........ thank you

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP