Tuesday, May 22, 2007

50. குருவாயூருக்கு வாருங்கள்...

கடலூர்ல நான் St.Joseph ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருந்தப்ப ஞாயித்திக்கிழமை காலைல சாமி பாட்டு போடுவாங்க. அதுல கண்ணன் பாட்டு இரண்டு இருக்கும். முதல் பாடல் புல்லாங்குழல் கொடுத்த முங்கில்களே அடுத்து இந்த குருவாயூருக்கு வாருங்கள். அதனாலயே நமக்கு இந்த ரெண்டு பாட்டும் கேட்டால் ஹாஸ்டல்ல இருக்கற மாதிரி இருக்கும்.

அதுல என்ன சந்தோஷம்னா ஒவ்வொரு ஞாயிறும் எங்க அப்பா, அம்மா என்னை பார்க்க வருவாங்க. நான் பத்தாவது படிக்கிற வரைக்கும் தொடர்ந்து 4 வருஷமும் வாரம் தவறாம வருவாங்க... இந்த பாட்டை கேட்டா அந்த நியாபகமெல்லாம் வருது. சரி இப்ப பாட்டை கேக்கலாம்

பி.சுசீலா பாடியதை கேட்க இங்கே சொடுக்கவும்


ராதா வீரமணி பாடியதை கேட்க இங்கே சொடுக்கவும்...

MP3

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்

குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்



(குருவாயூருக்கு...)

கண்ணனின் மேனி கடல் நீலம்
அவன்
கண்கள் இரண்டும் வான் நீலம்
கடலும் வானும் அவனே என்பதை
காட்டும் குருவாயூர் கோலம்

(குருவாயூருக்கு...)

சந்தியா காலத்தில் நீராடி அவன்
சந்நிதி
வருவார் ஒரு கோடி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

சந்தியாகாலத்தில் நீராடி அவன்
சந்நிதி
வருவார் ஒரு கோடி
மந்திர குழந்தைக்கு வாகைசாத்து

மாலைகள் இடுவார் குறை ஓடி


(குருவாயூருக்கு...)

உச்சிக்காலத்தி சிங்காரம் அவன்
ஒவ்வொரு அழகுக்கும் அலங்காரம்

பச்சைக்குழந்தையை பார்க்கும் போதே
பாவையர் தாய்மை ரீங்காரம்

நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

(குருவாயூருக்கு...)

மாலை நேரத்தில் சீவேலி
அவன் மாளிகை முழுவதும் நெய்வேலி

நெய்விளக்கேற்றி பொய் இருள் அகற்று

நித்தம் தருவாள் ஸ்ரீதேவி
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண


சாத்திரம் தந்த கண்ணனுக்கு
ராத்திரி பூஜை ஜகஜோதி
பாத்திரம் கண்ணன் பால் போல் மக்கள்

பக்தியில் பிறந்த உயர்நீதி


குருவாயூருக்கு வாருங்கள் - ஒரு
குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்
உட்கார்ந்திருப்பதை காணுங்கள்

(குருவாயூருக்கு...)

நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண
நாராயண நாராயண ஹரி ஹரி நாராயண நாராயண

22 comments :

CVR said...

அழகான பாடல்!!
எனக்கும் இந்த பாடலும்,"புல்லாங்குழல் கொடுத்த" பாட்டும் மிகவும் பிடிக்கும்.

வாழ்த்துக்கள்! :-)

CVR said...

50-ஆவது பதிவை எட்டியதற்கு வாழ்த்துக்கள்.

ஷைலஜா said...

ஐம்பதிலும் ஆர்வம் வந்து குருவாயூருக்கு வரச் சொல்லிய பாலாஜிக்கு வாழ்த்து+பாராட்டு!(நோ உ.கு):)

குமரன் (Kumaran) said...

பாலாஜி,

நேற்று இரவே இந்த இடுகையை இடப்போவதாகச் சொன்னீர்கள். ஆவலுடன் காலையில் எழுந்து பார்த்தேன். இப்போதாவது இட்டீர்களே. மிக அருமையான பாடல் இது. பாடிக்கொண்டே இருக்கலாம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

(இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அந்தப் பின்னூட்டம் இந்தப் பதிவிலும் 'தேவையில்லாத' பிரச்சனையைக் கிளப்பும் என்று தோன்றியதால் அதனை அனுமதிக்கவில்லை. உங்களுக்கும் இரவிசங்கருக்கும் அதன் பிரதியை அனுப்பியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இன்னொரு இடத்தில் அந்தப் பின்னூட்டத்தை இட்டு அந்தப் பிரச்சனையைப் பேசலாம்).

பாலராஜன்கீதா said...

mp3 வடிவில் :

http://www.coolgoose.com/music/song.php?id=92253

வெட்டிப்பயல் said...

//CVR said...

அழகான பாடல்!!
எனக்கும் இந்த பாடலும்,"புல்லாங்குழல் கொடுத்த" பாட்டும் மிகவும் பிடிக்கும்.

வாழ்த்துக்கள்! :-) //

எனக்கு தெரிஞ்சது அது ரெண்டும் தான்... இங்க வந்து தான் நிறைய பாட்டு தெரிஞ்சிக்கிறேன்

வெட்டிப்பயல் said...

//CVR said...

50-ஆவது பதிவை எட்டியதற்கு வாழ்த்துக்கள். //

மிக்க நன்றி... (அனைவரின் சார்பாக)

வெட்டிப்பயல் said...

//ஷைலஜா said...

ஐம்பதிலும் ஆர்வம் வந்து குருவாயூருக்கு வரச் சொல்லிய பாலாஜிக்கு வாழ்த்து+பாராட்டு!(நோ உ.கு):) //

மிக்க நன்றி அக்கா...

குருவாயூருக்கு எப்ப வேணும்னாலும் போகலாம்... அவன் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம்...

வெட்டிப்பயல் said...

//குமரன் (Kumaran) said...

பாலாஜி,

நேற்று இரவே இந்த இடுகையை இடப்போவதாகச் சொன்னீர்கள். ஆவலுடன் காலையில் எழுந்து பார்த்தேன். இப்போதாவது இட்டீர்களே. மிக அருமையான பாடல் இது. பாடிக்கொண்டே இருக்கலாம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
//
நேத்து திடீர்னு வேலை வந்துடுச்சி... அதனால பதிவை போட முடியல :-(

எனக்கு மிகவும் பிடித்த பாடல்... இது இத்தனை நாள் எப்படி வரலைனு ஆச்சர்யமா இருக்கு

// (இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. அந்தப் பின்னூட்டம் இந்தப் பதிவிலும் 'தேவையில்லாத' பிரச்சனையைக் கிளப்பும் என்று தோன்றியதால் அதனை அனுமதிக்கவில்லை. உங்களுக்கும் இரவிசங்கருக்கும் அதன் பிரதியை அனுப்பியிருக்கிறேன். நீங்கள் விரும்பினால் இன்னொரு இடத்தில் அந்தப் பின்னூட்டத்தை இட்டு அந்தப் பிரச்சனையைப் பேசலாம்). //
நல்லது செய்தீர்கள்!!!

வெட்டிப்பயல் said...

// பாலராஜன்கீதா said...

mp3 வடிவில் :

http://www.coolgoose.com/music/song.php?id=92253 //

பாலராஜன் கீதா,
மிக்க நன்றி...

பதிவிலும் சேர்த்துவிடுகிறேன்!!!

Anonymous said...

எனக்கு புல்லாங்குழல் கொடுத்த பாட்டு மட்டும்தான் தெரியும்.இது தெரியமால் போச்சே :-(

வீட்டிக்கு போய் பாடலை கேட்டுவிட்டு சொல்கின்றேன் அண்ணா
50வது பதிவா?வாழ்த்துக்கள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பாலாஜி

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையிலும் பாசம் வரும்...
ஐம்பதாம் கண்ணன் பாட்டில் ஆசையும் பாசமும் வந்து
நீங்கள் இட்ட குழந்தைக் கண்ணன் அழகோ அழகு!
தஞ்சாவூரில் குருவாயூர் மிளிர்கிறது!

50ஐ உங்கள் கைகளால் இட வேண்டும் என்று நினைத்தோம்! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்து விட்டதே! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எங்க அப்பா, அம்மா என்னை பார்க்க வருவாங்க. நான் பத்தாவது படிக்கிற வரைக்கும் தொடர்ந்து 4 வருஷமும் வாரம் தவறாம வருவாங்க//

ஹூம்...எங்களையும் உங்க ஹாஸ்டலுக்குக் கூட்டிச் சென்று விட்டீர்களே!
அம்மா என்ன சாப்பாடு கட்டிக் கொண்டு வருவாங்கன்னு சொல்லவே இல்லையே!

நீங்க இதைச் சொன்னவுடன் தான் இன்னொன்று நினைவுக்கு வருகிறது!
எங்க ஊரில் உள்ள அனாதைக் குழந்தைகள் விடுதி வாசலுக்கு, பெருமாள் ஒவ்வொரு மாத வளர்பிறை ஏகாதசி போதும் எழுந்தருளுவார்.

கூடவே கூடையில் அதிரசம், லட்டு, புளியோதரைன்னு ஏகப்பட்ட ஐட்டம்!
அம்மா அப்பாவே வந்து பாத்தா மாதிரி இருக்குமோ என்னவோ! ஆனால் எனக்கு அந்த உற்சவம் தான் ரொம்ப பிடிக்கும்!

மெளலி (மதுரையம்பதி) said...

50க்கு வாழ்த்துக்கள், அருமையான பாடலைத்தந்த வெட்டி-பாலாஜிக்கு நன்றிகள் பல.....

G.Ragavan said...

மிகவும் அழகான பாடல். இசையரசியின் குரலின் இனிமையும் குளுமையும் குழைவு..கவியரசரின் தமிழும்..மெல்லிசை மன்னரின் பொருத்தமான இசையமைப்பும் இந்தப் பாட்டை மிகவும் சிறப்பிக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. கிருஷ்ணகானத்தில் எல்லாப் பாடல்களுமே பிடிக்கும் என்றாலும், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே, குருவாயூருக்கு வாருங்கள், கோபியரே கோபியரே ஆகிய மூன்று பாடல்கள் மிகமிகப் பிடிக்கும்.

இன்னொரு தகவல். கிருஷ்ணகானம் பாகம்-2ம் இருக்கிறது. இதற்கும் மெல்லிசை மன்னரே இசை. இதில் தேவதாருவே காமதேனுவே என்ற பாடல் நன்றாக இருக்கும். இந்த இசைத்தொகுப்பில் மெல்லிசை மன்னர் இசையில் இளையராஜா ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்தப் பாடல் என்னிடம் இல்லை. கிடைத்தால் அதையும் போடவும்.

வெட்டிப்பயல் said...

//துர்கா|thurgah said...

எனக்கு புல்லாங்குழல் கொடுத்த பாட்டு மட்டும்தான் தெரியும்.இது தெரியமால் போச்சே :-(

வீட்டிக்கு போய் பாடலை கேட்டுவிட்டு சொல்கின்றேன் அண்ணா
50வது பதிவா?வாழ்த்துக்கள் //

இதுவும் ரொம்ப நல்ல பாட்டுமா... தவறாம கேளு

வெட்டிப்பயல் said...

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பாலாஜி

ஐம்பதிலும் ஆசை வரும்
ஆசையிலும் பாசம் வரும்...
ஐம்பதாம் கண்ணன் பாட்டில் ஆசையும் பாசமும் வந்து
நீங்கள் இட்ட குழந்தைக் கண்ணன் அழகோ அழகு!
தஞ்சாவூரில் குருவாயூர் மிளிர்கிறது!
//
நல்லா நோட் பண்றீங்க... உங்களை தேடித்தான் புதன் கிழமை பதிவிட முடியாம போயிடுச்சி


// 50ஐ உங்கள் கைகளால் இட வேண்டும் என்று நினைத்தோம்! எது நடந்ததோ அது நன்றாகவே நடந்து விட்டதே! :-) //
உங்கள் அனைவரின் பெருந்தன்மையால் தான் இந்த அருமையான பாடலை 10 தடவைக்கு மேல் கேட்க முடிந்தது :-)

G.Ragavan said...

இன்னொரு வெவரம். ரெண்டு பாட்டு குடுத்திருக்கியே..அந்த ரெண்டும் ஒன்னுதான். ரெண்டுமே மெல்லிசை மன்னர் இசையில இசையரசி பாடுனதுதான். நான் ரெண்டையும் கேட்டுப்பாத்துட்டேன். உறுதியாச் சொல்றேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மந்திர குழந்தைக்கு வாகைசாத்து//

வாகை சாத்து-ன்னா என்ன பாலாஜி? விளக்கம் ப்ளீஸ்!

//மாலை நேரத்தில் சீவேலி//

ஸ்ரீவேலி என்பது பலருக்கும் தெரியும்.
அறியாதார்க்கு இது...

கேரளக் கோவில்களில் சுவாமியின் miniature உருவம் ஒன்று தங்கத்திலோ/வெள்ளியிலோ இருக்கும். இது கையடக்கமானது.
இதுவே ஸ்ரீவேலி என்று பெயர்.

மாலை வேளையில் இதை யானையின் மீது இருத்திக் கொண்டு, நம்பூதிரி வலம் வருவார். ஸ்ரீ+வெளி=அதாவது வெளியில் வரும் மூர்த்தி...உற்சவர் என்று பொருள்படும்!

குமரன் (Kumaran) said...

இரவி,

வாகை சாத்துங்கறது சரிதானான்னு பாலாஜி கேட்டுட்டுத் தான் இங்கே இட்டார். நானும் பாடலைக் கேட்டுப்பார்த்துட்டு அது சரின்னு சொன்னேன். நீங்களும் கேட்டுப் பாத்துச் சொல்லுங்க.

வாகை சாத்து மாலைகள் என்று வருவதால் அது குருவாயூரப்பனுக்குச் சூட்டும் ஒரு வகை மாலைகள் என்று எண்ணுகிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

////மந்திர குழந்தைக்கு வாகைசாத்து//

குமரன், பாலாஜி...
இப்ப தான் ஒரு மலையாள நண்பரைக் கூப்பிட்டுக் கேட்டேன்!

வாகைச்சாத்து என்பது முந்தைய நாள் அலங்காரத்தைக் களைந்து, எண்ணெய் (தைலாபிஷேகம்) ஊற்றிய பின், வாகை மரப் பட்டைகளை சுவாமியின் மேல் சார்த்துவார்களாம்.
வாகை மரப் பட்டை ஆயுர்வேத மருத்துவக் குணம் உடையது.

இதையே vakacharthu என்று குறிப்பிடுகிறார்களாம்.
http://www.musicindiaonline.com/p/x/2qp9Ib2RiS.As1NMvHdW

குமரன் (Kumaran) said...

விளக்கத்திற்கு நன்றி இரவி. புதிய செய்தியை அறிந்து கொண்டேன்.

Post a Comment

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP